சனி, 19 செப்டம்பர், 2026

CGV - Vinayaka Chathurthi Celebrations - 14.9.2026 - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



********


CGV - Vinayaka Chathurthi Celebrations - 14.9.2026



CGV யில் பிள்ளையார் சதுர்த்தி விழா சென்ற வருடம் போலவே இந்த வருடமும், 'எல்லோரும் அவரவர்கள் வீட்டுப் பிள்ளையார்களை (மினிமம் 6" உயரம்) கொண்டு வரலாம், இரவு 8 மணிக்கு (முதல் நாள் i.e 13.09.26) Banquet hall இல் decoration ஆரம்பிக்கும், அனைவரும் வந்து அலங்கரிப்பதற்கு தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என்று சொன்னவுடனேயே களை கட்டிவிட்டது...


அவரவரும் ஆசை ஆசையாய் வித விதமான கணபதி பொம்மைகளைக் கொண்டு வந்தனர். ஒரு பெண்மணி paper mesh பிள்ளையாரும் அதன் பின்புலத்தில் தண்ணீர் விழுவது போன்ற (fountain) அமைப்போடு இருந்த அலங்காரமான பிள்ளையாரை கொண்டு வந்தார்.


பல பெண்களும், ஆண்களும் Banquet ஹாலில் கூடினர். பெண்கள் மேடையை அலங்கரிக்க ஆரம்பித்தார்கள்..


மேடை மீது விரிப்பு போடப்பட்டு வரிசை வரிசையாக வித விதமான அழகழகான பிள்ளையார் உருவங்கள் வைக்கப்பட்டு backdrop இல் கரும்பச்சை வண்ண ஜரிகை புடவை கட்டப்பட்டு அதில் பூத்தோரணங்கள் தொங்க விடப்பட்டன.


சுறு சுறு வென்று CGV பெண்மணிகள் பம்பரமாக சுழன்று கையில் கிடைத்த மாவிலை, பிளாஸ்டிக் பூச்சரம், பச்சைப்புற்கள், மலர்கள் போன்றவற்றை அழகாக மேடையைச் சுற்றிலும் அமைத்து அழகு படுத்தினர்.. மேடை மீது இருபுறம் சிறு வெண்கலப் பானைகள் வைக்கப்பட்டு அதன்மீது மாவிலை & பூக்கள் செருகப்பட்டன.

அவை கலசம்போல் traditional touch ஓடு அழகாகக் காட்சி அளித்தன.


வந்திருந்த CGV ஆண்கள் சிலரும் அத்தருணத்தில் comments அடித்து பேசி, சிரித்து, கலாட்டா செய்து தங்கள் பங்குக்கு அவ்விடத்தை கலகலப்பாக்கினர். (சிலர் அலங்கரிப்பதில் உதவவும் செய்தனர் - அதையும் சொல்லணுமே...)


நிகழ்ச்சியில் பஜனைப் பாடல்கள் பாடவிருந்த நாங்கள் 5, 6 பேர் வெளியே போய் சாலையைப் பார்த்துப் போடப் பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து வாகனங்களில் போய்க்கொண்டிருந்த பெரிய பிள்ளையார்களைப் பார்த்துக் கொண்டே rehearsal செய்து கொண்டிருந்தோம்.


பாடல்களைக் கேட்டுத் தெருவிலிருந்து கூட்டம் வந்து கூடிவிடுமோ என்று பயந்தோம்.. (எதுக்கா? கைதட்டி ஆர்ப்பரிக்கத்தான்...🤗) நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.. நாங்கள் அடக்கி வாசித்ததால்..😌.


மறுநாள் மாலை 5 மணிக்கு விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.


முதலில் சிறுமி ஷண்விதாவின் நடனம்..பாடல் பிரபோ கணபதி... அழகான பாடல் அதற்கு மிக அழகான அசைவுகள், பாவத்துடன் அச்சிறுமி சிறப்பாக நடனமாடினாள்.👏🏻👏🏻👏🏻


அடுத்து CGV அடியார்கள் group பெண்களின் கணேச பஞ்சரத்னம் சுலோகம். 


Smt.சசிகலாவும் & Smt லதாவும் தொடங்க நாங்கள் சேர்ந்திசைத்தோம். ஹைபிட்ச் வரும்போது பின்பாட்டிசைத்தோம்...


அடுத்து Smt கவிதாவும் அவருடன் சிறுமிகள் Amyrah & Aadhya வின் நடனம். Smt கவிதா நடனம் பயின்றவர் & பயிற்றுவிப்பவர் என்பது அவர் ஆடலில் தெரிந்தது. தேர்ந்த நளினமான, முகத்தில் புன்னகையுடன் கூடிய அபிநயங்கள் மகிழ்வூட்டியது.

சிறுமிகளும் மிக அழகாக ஒன்றிணைந்து ஆடியது கண்ணுக்கு விருந்து. அதுவும் சங்கர் மகாதேவனின் all time hit ஆன கணநாயகாய பாடலுக்கு அபிநயம் பிடித்தபோது ஹால் முழுவதும் ஒரு தெய்வீகமான அமைதி.. அற்புத உணர்வு...🙏🏻🙏🏻


அச்சிறுமிகள் ஆடும்போது ஒரு வாண்டு அவர்கள் நடுவில் போய் நின்றுகொண்டு ஆடியது அனைவரையும் சந்தோஷப்படுத்தியது..🥰


அடுத்து விநாயகனே வினை தீர்ப்பவனே என்று பெண்கள் குறைகள் களைய இதுவே தருணம் என்று பிள்ளையாரை வேண்ட, அவரும் சம்மதித்தார்...☺️🙏🏻


அடுத்து பெண்மணிகளின் மீண்டும் மறு ஒலிபரப்பாக ப்ரபோ கணபதே ஆரம்பிக்க (முதலில் ஷன்விதா ஆடியது record இல் ஆண் குரலில் ஒலித்த ப்ரபோ க்கு...) இப்போது பெண்களின் இனிய குரலில் அப்பாடலைக் கேட்டதும் ரொம்ப குஷியாகி மேடை மேலிருந்த நடனப் பிள்ளையாரும், ஊஞ்சல் பிள்ளையாரும் ஆட ஆரம்பித்துவிட்டனர்.(நெசம்ம்மா....எங்கள் கண்ணுக்கு தெரிஞ்சுது...😊.)


பின்னர் பலவித பிரசாதங்கள் கொண்டு வரப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டன. நாத விந்து கலாதி நமோ நம என்ற திருப்புகழ் பாடலை பாடல் குழுவினர் பாட கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


Smt. சுமதி அழகாக கோர்வையாக பிள்ளையார் சதுர்த்தி பற்றிய பல அரிய சுவாரசியமான செய்திகளைச் சொல்லியும் ஆடிப் பாடியவர்களை ஊக்குவித்தும் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..👏🏻👏🏻


பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டவை அனைத்தும் மிக ருசியாக இருந்தன. திணைப் பொங்கல் மிளகு வாசனையுடன் அருமை. பிடி கொழுக்கட்டை, இடியாப்பம் போன்றவையும் அதன் side dishes ம் (தேங்காய்ப்பால் உட்பட) அருமை👌🏻👌🏻.


அப்புறம் *கண* நாயகனுக்கு பிரியமான மோதகம் *கன* நாயகமாக மகாகாயரை (பிள்ளையார்) நினைவு படுத்தும் மஹா காயத்துடன் (big size) கம்பீரமாக பிளேட்டில் வீற்றிருந்தது....

mould இல் அழகாக செய்யப்பட்ட மோதகம் என்பதால் மோல்டகம் என்று சொல்லலாமோ??? 


அனைத்து நிகழ்ச்சிகளும் பிரசாதங்களும் புலன்களுக்கு விருந்தளித்தன..


அருமையான பக்திமணம் கமழ்ந்த கணபதி தன் அருளைப் பொழிந்த மாலைப் பொழுது..🙏🏻🙏🏻


இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த CGV கமிட்டி members, மேடை அலங்காரத்தில் கலக்கிய பெண்கள், housekeeping team,சிறப்பாக perform செய்தவர்கள், பிரசாதங்களை sponsor செய்தவர்கள், ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்த CGV வாசிகள் அனைவருக்கும், அனைவரின் சார்பாகவும் என் நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻


CGV வாசியான திரு.கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர முடியாவிட்டாலும் வெளியூரிலிருந்து விநாயகர் மேல் ஒரு பாடல் எழுதி மெட்டுப் போட்டு தானே பாடி record செய்து அனுப்பி வைத்ததும் அதை நிகழ்ச்சியின்போது ஒலிக்க விட்டதும் சிறப்பு. நன்றிகள் Sir🙏🏻


அந்த அழகான எல்லா தனி கவனிப்புகளையும் பிரசாதங்களையும் வாங்கிக்கொண்ட paper mesh fountain பிள்ளையாரின் உரிமையாளர் Smt.Bama சுரேஷ் அவர்களுக்கு நன்றிகள்👍🏻🙏🏻🙏🏻


எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அருமையான சுவையான பிரசாதங்களை வழங்கிய ஸ்பான்சர்கள் பெயர்களை சொல்லாமல் விட்டால் பிள்ளையாரே சொப்பனத்தில் வந்து என்னைத் திட்டுவார்....


Smt.Parvathi (villa23)

Smt.Rajathi(villa 6)

Smt.Divya (villa 48)


Thanks a lot sponsors for the tasty devine prasadams 🙏🏻🙏🏻🙏🏻


ஓம விக்ன விநாயகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்.

1 கருத்து:

  1. சிறப்பான கொண்டாட்டம்தான்.  ஆனால் கொழுக்கட்டை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்பதற்கும், கொழுக்கட்டை படம் கூட போடவில்லை என்பதாலும் அதற்கு என் அன்பான கண்டனங்கள்!!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....