அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*********
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
********
ஐ என் காலடியா இது? வெள்ளை வெளேர்னு smooth ஆ அழகா இருக்கு!... super.... so வெண்ணெய சிந்திட்டு அது மேல நடக்கணும்... simple... என்ன, கொஞ்சம் வழுக்குது... பாத்து மெதுவா நடக்கணும், அம்மாக்குத் தெரியாம.....😊
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
என்ன நாதா அப்படி பார்க்கறிங்க? ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கு???
ஒண்ணுமில்ல லக்ஷ்மி, ரோஜாப்பூ மாலைக்கு தங்கத்துல கனமா டாலர் கோர்த்து போட்டுக்கிட்டிருக்கியே மாலை தாங்குமா? உனக்கு இடது பக்க பானை எப்போ ரொம்பும்? வலது பக்க பானையிலிருந்து ஒரு காசு கூட கீழ விழலையே எப்படி? அப்புறம் கால் விரல்கள்ல ரெண்டை ஏன் விட்டு வெச்சுட்ட மெட்டி போடாம???
இவ்வளவுதானா, இல்ல இன்னும் இருக்கா நாதா, கேள்விகள்? நீ நல்லா இருக்கே ன்னு ஒரு வார்த்தை சொல்லத் தெரியல..😏
உன் அழகுல சொக்கிப் போயி உன்னை உத்துப் பாத்துக்கிட்டிருந்தேனா? இதெல்லாம் கண்ணுல பட்டுது... வேற ஒண்ணுமில்ல...😊
ஓம் ஶ்ரீ மஹா லக்ஷ்ம்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*********
ஏன் கிருஷ்ணா at a time ஒரு பானையிலிருந்து மட்டும் வெண்ணெய எடுத்து சாப்பிட்டா போறாதா, மூணு பானையிலயும் கைய விடணுமா? என்ன பிள்ளையோ....
இல்லம்மா, எது புதுசு எது பழசுன்னு சாப்டு பார்த்தாத்தான தெரியும்.. நீ பேசாம பானை மேல date போட்டுடு... ok? (கூடவே expiry date ம்)
(அது ஒண்ணுதான் பாக்கி...😏)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
அம்மா வராங்க, நாம பண்ணின சேட்டை எல்லாம் தெரிஞ்சு போச்சு, அண்ணா போட்டுக் குடுத்துட்டான்.... ஓடுங்க சீக்கிரம்.....
முடியல முருகா, இறைக்குது.... (சே நம்மளாலதான் பறக்க முடியுமே... அதுவே மறந்து போச்சு, இவன் அடிக்கற கூத்துல....😕)
ஓம் சண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
********
என் மடி கிடைச்சா போதும், நிம்மதியா தூங்க ஆரம்பிச்சுடுவா ராதா.... (இப்படித் தண்ணி பக்கத்துல ஜில்லுனு எத்தனை நேரம் உக்காந்திருக்கிறது! கால் வேற மரத்துப் போச்சு.... பேசாம flute எடுத்து வாசிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான் - நீலாம்பரியத் தவிர...🙁.)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*********
மயில் bro, வாய ஆ காமி வெண்ணைய ஊட்டி விடறேன்.. super ஆ இருக்கும்....
பரவால்ல கிருஷ்ணா நீ சாப்பிடு.... நான் diet ல இருக்கேன்... flute ஐ விடாம வலது கையில புடிச்சிண்டே உன் வேலையையும் பாத்துக்கற பாரு... அதான் நீ👌🏻👏🏻... (வலது கையால எடுத்து ஊட்டி விட்டா வேண்டாம்னா சொல்லப் போறேன்... ஹ்ம்ம்ம்.... வெண்ணை போச்சே...🙄)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
அப்பாடா சீடை முறுக்கு டப்பா எல்லாம் ஒருவழியா காலி ஆயிடுச்சு (நாம தான chief distributor 🫣🤫). இனிமே நாளைக்கு கொழுக்கட்டை challenge தான். அது பல்லை 😬 ஒண்ணும் பண்ணாது.... harmless..
நிம்மதியா தூங்கலாம்....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
20-09-2026








படங்கள் அழகு. வரிகள் ரசனை/
பதிலளிநீக்கு