வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 62 – கழிவறை - உலக சுற்றுலா தினம் - நடனம்இந்த வார செய்தி:

ரயில் பயணம் செய்யும் போது என்றாவது அதைச் செலுத்தும் ஓட்டுனர் பற்றி யோசித்ததுண்டா? அவருக்கு என்ன வேலை, வேலை செய்யும் சூழல் என்ன என நம்மில் ஒருவரும் யோசித்திருக்க வாய்ப்பில்லை. ரயிலில் பயணம் செய்வதில் ஒரு பெரிய வசதி – தொலைதூர பயணங்களின் போது கழிவறை வசதிகள் ரயிலில் உண்டுஎன்பது தான் என நாம் சொல்வது வழக்கம். இந்த கழிவறை வசதி அந்த தொலைதூர ரயிலினை இயக்கும் ஓட்டுனருக்கு கிடையாது..... 

இந்த ரயில் ஓட்டுனர்கள், தனது இயற்கை உபாதைகளை கழிக்க ஒரே வழி, ஏதாவது ரயில் நிலையம் வந்தால் தான் உண்டு. துரன்ந்தோ, ராஜ்தானி போன்ற ரயில்களில் ஐந்து மணி நேரத்திற்கு ஒரு முறை தான் ரயில் நிலையம் வரும்....  அவர்களின் நிலை எவ்வளவு கடினம். அதுவும் இப்போதெல்லாம் பல ரயில்களில் ஓட்டுனர்கள் பெண்களாக இருக்கின்றபோது ஒரு அடிப்படை வசதி கூட இல்லாதிருப்பது எவ்வளவு கஷ்டம்.....

பல சமயங்களில் நிறுத்தம் இல்லாத இடத்தில் கூட இயற்கை உபாதையை தாங்க முடியாது நட்ட நடு வழியில் ரயிலை நிறுத்தி விட்டு தனது உபாதையை தீர்த்து வந்ததாக சில ஓட்டுனர்கள் சொல்கிறார்கள்.    

இந்த அடிப்படை வசதியை ஏற்படுத்தித் தர இப்போது முடிவு செய்திருக்கிறது. இந்திய ரயில்வே துறை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும், இது பற்றி யோசிக்காத ரயில்வே நிர்வாகம், இப்போதாவது இது பற்றி யோசித்திருக்கிறதே என பாராட்ட வேண்டியிருக்கிறது. இந்த முடிவு எடுத்து அது பயன்பாட்டுக்கும் வந்தால், இந்திய இரயில்வேயில் இருக்கும் எண்ணற்ற ஓட்டுனர்களின் பணிநேர தலையாய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

பயணிகளுக்கு வசதிகள் இல்லை என்று மட்டுமே நினைக்கும் என்னை போன்ற சராசரி ரயில் பயணிகள் இதுவரை ரயில் ஓட்டுனர்களுக்கான வசதிகள் பற்றி என்றுமே யோசித்தது இல்லை!  இனிமேலாவது அவர்களைப் பற்றியும் யோசிப்போம்!
     
இந்த வார முகப்புத்தக இற்றை:தீபாவளி சமயத்தில தத்கல் டிக்கட் கூட கிடைச்சுடும்.. ஆனா பசங்களுக்கு பொண்ணுங்க கிடைக்கிறது தான் கஷ்டம்..... இப்படித் தான் ஜாதகம் பார்த்து, பொருந்தி, வூட்ல உள்ள பெரியவங்களுக்கெல்லாம் புடுச்சி, அல்லாருமா சேர்ந்து... ஒரு நல்ல நாள் பார்த்து, பொண் ணு பார்க்க போலாம்னு, பொறப்படறப்போ.... எவனோ ஒருத்தன் வந்து, 'பாஸ் நாங்க ரெண்டு பேரும்..', ங்கறான்... ங்ஙொய்யால... என்ன பொழப்புடா இது?இந்த வார குறுஞ்செய்திWE LEARN SOMETHING FROM EVERYONE WHO PASSES THROUGH OUR LIVES. SOME LESSONS ARE PAINFUL, SOME ARE PAINLESS. BUT, ALL ARE PRICELESS.ரசித்த காணொளி: சமீபமாக, டாடா டோகோமோ விளம்பரம் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. OPEN UP என்ற அந்த விளம்பரத்தில் வருவது போல நமக்கும் பல சமயங்களில் ஆடத் தோன்றும் – ஆனால் வெட்கம் தடுக்கிறது! :)

ரசித்த பாடல்:திகம்பர சாமியார் என ஒரு தமிழ் படம். நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை! அந்த படத்திலிருந்து ஒரு பாடல் – தீபாவளி வர இருக்கிறதே - ஒரு பட்டாசு பாடல் – இந்த வார ரசித்த பாடலாக.இந்த நாளின் அறிமுகம்:சுற்றுலா என்பது நம் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே....  தொடர்ந்து அலுவலகத்திலும், வீட்டிலும் இருக்கும் வேலைகளின் பதட்டத்தில், “அப்பாடான்னு ஒரு நாலு நாள் எங்கேயாவது போயிட்டு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிக்காதவர்களே கிடையாது. அதிலும் பெண்களில் பலருக்கு இந்த கரண்டி ஆஃபீஸ் உத்தியோகம் இல்லாது, ஹோட்டலிலோ, அல்லது வேறு யாராவது சமைச்சு போட்டு சாப்பிடும் போது கிடைக்கிற குஷி இருக்கே..... :) அதுக்காகவே சுற்றுலா போகலாம்.என்னங்க, உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச விஷயமாச்சே, உங்களுக்காக தானே போறீங்க, அதுக்கு அம்மணியை வேற எதுக்கு இங்கே இழுக்கணும்னு முணுமுணுக்காதீங்க! இன்னிக்கு உலக சுற்றுலா தினம். இந்த நாள்ல உடனே ஒரு முடிவு எடுங்க....  ஒரு நாலு நாளு எங்காவது குடும்பத்தோடு சுற்றுலா போயிட்டு வாங்க!படித்ததில் பிடித்தது!:இன்றைக்கும் ஒரு போஸ்டர் தான் – நீங்களும் படத்தினைப் பாருங்க – உங்களுக்கும் பிடிக்கும்! ஆணின் பார்வைக்கும், பெண்ணின் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு! :)என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


46 கருத்துகள்:

 1. இரயில் ஓட்டுனர்கள் பற்றிய தகவல் எனக்கு புதுசு, ரொம்ப பாவம் சார் அவங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப பாவம் தான்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 2. // இந்த முடிவு எடுத்து அது பயன்பாட்டுக்கும் வந்தால், இந்திய இரயில்வேயில் இருக்கும் எண்ணற்ற ஓட்டுனர்களின் பணிநேர தலையாய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.//

  அவசர அவசிய அத்யாவஸ்ய பிரச்சனைக்கு சீக்கரமாக தீர்வு கிடைக்கட்டும் .... பாவம்.

  PUNCTUATION IS POWERFUL ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 3. PUNCTUATION IS POWERFUL ;)

  சுக்கு , மிளகு , திப்பிலி என்பதை PUNCTUATION இல்லாமல் -
  சுக்குமி ளகுதி ப்பிலி என்று படித்தமாதிரி இல்லாமல் அர்த்தமுள்ளதாக இருக்கிறது..

  சுற்றுலா தினம் பற்றி அருமையான பகிர்வுகள்..பராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. சுற்றுலா தின வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 5. உண்மையில் ரயில் ஓட்டுநர்களுக்கு
  இந்த வசதி இல்லையென்பது கூட
  உங்கள் பதிவைப் படித்ததும்தான்
  தெரிந்து கொள்ள முடிந்தது
  எவ்வளவு சுய நலமாய் இருக்கிறோம் என
  நினைக்க சங்கடமாகத்தான் இருந்தது
  குழந்தைகள் கடைசியாக இட்ட பங்சுவேசன்
  தான் மிகச் சரி.
  காணொளிகள் இரண்டும் அருமை
  மனம் கவர்ந்த அருமையான ஃப்ரூட் சாலட்
  தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 6. அருமையான பாடலுடன் (கேட்டு ரொம்ப நாளாச்சி...!) இன்றைய தினத்திற்கேற்ப பகிர்வும்... ஃப்ரூட் சாலட் மிகவும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.....

   அதே படத்தில் இன்னுமொரு பாடல் நினைவிருக்கிறதா? “பாருடப்பா பாருடப்பா டோய்... உடைடப்பா உடைடப்பா....” என்று வரும்..... :)

   நீக்கு
 7. பங்சுவேஷன் அருமை.
  தகவல்கள் புதிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 8. ”உலகம் சுற்றும் வாலிபன்” வெங்கட் அண்ணாவுக்கு சுற்றுலா தின வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”உலகம் சுற்றும் வாலிபன்” - நமது நாட்டை விட்டு வெளியே போனதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 9. ரயில் வண்டி ஓட்டுனரின் கஷ்டம் இன்னிக்குதான் தெரிந்துகொண்டேன். டாடா டொக்கோமோ விளம்பரம் எனக்கும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 10. //இப்போதாவது இது பற்றி யோசித்திருக்கிறதே என பாராட்ட வேண்டியிருக்கிறது//

  நல்ல தகவல். ரயிலில் போகும்போதெல்லாம் இது பற்றியும் யோசிப்பேன். யாரிடம் கேட்பது என்று கேட்பதில்லை. கம்பார்ட்மெண்டுகளுக்கிடையில் இருக்கும் ‘வெஸ்டிப்யூல்’ வழி, இந்த இஞ்ஜினுக்கும் வைத்தால் நல்லது என்றுகூட நினைப்பேன்.

  தீபாவளி பாட்டை என் சின்னவனோடு கேட்டேன். ‘பழங்காலத்’ தமிழ் புரியாததால், ‘ஹிந்திப் பாட்டா’ என்று கேட்டான்!! அவ்வ்வ்வ்வ்..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமானங்களில் காக்பிட் போக வழியிருப்பது போல, இதிலும் இருந்தால் அவருக்கு வசதியாக இருக்கும். விரைவில் இந்த வசதி கிடைத்தால் நன்று.

   ஹிந்தி பாட்டு! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   நீக்கு
 11. ரூம் போட்டு யோசிக்கிறதுக்கு பதிலா .நாம டோகோமோ ஆட்டம் ஒன்னு போடுவோமா வெங்கட் ஜி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாஜி.

   நீக்கு
 13. ரயில் ஓட்டுனர்களின் இந்த நம்பர் 1 பிரச்னை இவளவுனால் யாராளாலும் உணரப்படாமல் இருந்திருக்கிறது! இற்றை, காணொளி உட்பட எல்லாமே அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. அருமையான ஃப்ரூட் சாலட் .
  பாடல்,, காணொளி , குறுஞ்செய்தி, பகிர்வுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  சுற்றுலா தினத்திற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 16. தொலைதூர டிரெயின்கள்ல ரெண்டு டிரைவர் இருக்கமாட்டாங்களா ஜி ...? கஷ்டம்தான் ...!

  சாலட் சூப்பர் ....!

  // முகப்பு புத்தக//

  என்ன ம்மாத்ரி சம்மூத்தில நாம வாழ்த்ந்துட்டுருக்கோம் ...
  நபருக்கு நய்யாண்டி பாடலை டெடிகேட் பண்றேன் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.

   நீக்கு
 17. இரயில் ஓட்டுநர்கள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படுமென நம்புவோம்.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   தீர்ந்தால் நல்லது.

   நீக்கு
 18. பல்வைகைப் பழச் சுவை! இனித்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 19. முந்திகாலத்துக் கரி இஞ்சின் பற்றி நினைக்கும்போதெல்லாம் எவ்ளோ சூட்டில் நின்னு வேலை செய்யறாங்கன்னு நினைச்சுக்குவேன். ஆனால் இந்த கழிப்பறை சமாச்சாரம் (அவர்களுக்கானது) பற்றி நினைச்சுக்கூடப் பார்க்கலை உங்க பதிவு பார்க்கும்வரை:( ப்ச்...பாவம் இல்லை.

  இங்கே நம்மூர் ரயில்களில் வசதி இருக்கான்னு தேடிப் பார்க்கணும். எங்க ஊரில் ஒரே ஒரு ரயில்தான் இப்போதைக்கு. அதுவும் எக்ஸ்கர்ஷன் ட்ரெய்ன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 20. வழக்கம் போல கலக்கல் ஃப்ரூட் சாலட்... ரயில் டிரைவர்களின் கஷ்டம் தீருவது உண்மையிலேயே மகிழ்வான விஷயம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 21. ரயில் ஓட்டுனர்களுக்கான வசதிகள் பற்றி என்றுமே யோசித்தது இல்லை!

  படித்ததில் பிடித்தது... எங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்....

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....