வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஹேப்பி பர்த்டே கணேஷாமகள் வரைந்த ஓவியம் 
 
நேற்றைய பிள்ளையார் சதுர்த்திக்காக மகள் ஒரு நாள் முன்னதாக, அதாவது 12-09-2018 அன்று வரைந்த ஓவியம் இன்றைய பதிவின் முதலாவது படமாக..... அன்றைக்கு கடைத் தெருவிற்குச் சென்று பிள்ளையார், குடை, பூ, பழங்கள் ஆகியன வாங்கி வந்தோம். இந்த முறை ஒரு இடத்தில் மட்டும் அழகான குடைகள் கிடைத்தன. அவரையும் குடைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, குடையும் வாங்கியாச்சு.

கடந்த நாலு வருஷமா வினாயகரை பூஜை செய்த பிறகு எங்களுடனேயே வைத்துக் கொண்டேன் - ஒரு பிரார்த்தனைக்காக. அப்படி வைத்துக் கொள்ளலாமா என்று கூட நினைத்ததுண்டு… :) இந்த வருடம் ஏனோ மனதை தளர விட்டு, நேரம் வந்தா எல்லாம் தானா நடக்கும், என்று புது வினாயகரை வாங்கியாச்சு.

பூஜை சிறப்பாக ஆச்சு. பாயசம், சுண்டல், கொழுக்கட்டையுடன் நம்ம வீட்டு வினாயகர் திருப்தி அடைந்திருப்பார்.

பூஜை முடிந்த கையோடு ஒரு சஷ்டியப்தபூர்த்திக்கு (60-ஆம் கல்யாணம்) சென்று வந்தோம்.

எங்க குடியிருப்பில் குடித்தனம் வரப் போகிறவர். பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தார். முகூர்த்தம் பத்து மணிக்கு மேல் தான். உங்க வீட்டு பூஜையை முடித்து விட்டு வரலாம் என்று சொல்லியிருந்தார்.

ஐந்து மணிக்கு எழுந்து வீட்டுக்காரியங்கள், நைவேத்தியங்கள், பூஜை எல்லாம் முடித்து விட்டு கிளம்பினோம். கொழுக்கட்டை, பாயசம், சுண்டல் எல்லாம் சிறிது எடுத்துக் கொண்டோம். அங்கே மதிய விருந்து. ஐஸ்கிரீம் மற்றும் பீடாவுடன்!

அன்பளிப்பு கொடுத்து விட்டு தம்பதியை நமஸ்கரித்தோம். சென்ற கதம்பம் பகிர்வில் சொன்னது போல, மகளின் உயரத்தை வைத்து "சீக்கிரமே விவாக ப்ராப்திரஸ்து" சொல்லி விட்டார்.

பிள்ளையார் சதுர்த்தி இனிதே நடந்து முடிந்தது. அடுத்தது நவராத்ரி கொண்டாட்டங்கள் வர இருக்கு. நிறைய வேலைகள் இருக்கு – பார்க்கலாம்!

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

ஆதி வெங்கட்

30 கருத்துகள்:

 1. ஓவியம் படம் நடன தோற்றத்தில் நன்றாக இருக்கிறது. மணமக்களை வாழ்த்த இயலாது.

  மற்ற படங்கள் இன்னும் திறக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 2. ஆகா...
  காலைப் பொழுதில் இனிய தரிசனம்...

  எங்கும் மங்கலம் தங்கட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. விநாயகர் சதுர்த்தி கண்டோம். நவராத்திரிக்காக காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 4. அனைத்தும் அருமை.
  ரோஷ்ணி வரைந்த பிள்ளையார் ஓவியம் பயங்கர சுட்டி , நீங்கள் செய்த மோதகம் அவருக்கு மட்டும் தான் என்று கண் சிமிட்டி சொல்கிறாரோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. ரோஷினிக் குட்டியின் படம் அருமை கண்ணடித்துக் கொண்டு டான்ஸ் ஆடும் பிள்ளையார்.

  கீதா: அக்கருத்துடன், ஆதி உயரமாக இருப்பதால் இப்படி வாழ்த்தினார் என்பதை வாசித்ததும் அப்படினா ச்சே நான் குள்ளமாச்சே!!! என்னை எல்லாரும் சின்னப் பொண்ணுனே நினைச்சிருக்கலாமோ ஹா ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 7. நீங்க ஒருத்தர்தான் அழகான கொழுக்கட்டைகளின் படங்களைப் போட்டிருக்கீங்க. எடுத்துக்கோங்க என்று சொல்லாததால், பார்க்க மட்டும் செய்தேன்.

  என் உறவினர் (40+ வருடங்கள் அமெரிக்காவில் இருந்தவர்), என் அண்ணன் பெண் அவர் காலில் விழுந்ததும் (சிறிய பெண்), 'தீர்க்க சுமங்கலீ பவ' என்று ஆசீர்வதித்தார். ஹாஹா. உங்கள் பெண்ணுக்கு வாழ்த்தைக் கேட்டு, 'கர்கர்கர்' என்று முகம் போனதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடுத்துக்கோங்க என்று சொல்லாததால்..... ஆஹா கேட்கவேண்டாம், நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 9. அழகான படம். எந்தபடம் வரைந்தாலும் அழகு அள்ளிக்கொண்டு போகும்படிதான் வரைகிராள். அக்கரையாக அழகுற நிவேதனங்கள் செய்து பூஜை செய்யும் அழகு. அம்மாவும்,பெண்ணும் அழகான பெண்கள்தான். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  அழகான படங்கள். பிள்ளையார் குடைகளுடன் கூடிய படங்களும் தெளிவாக அழகாக இருக்கிறது.
  தங்கள் மகளின் ஓவியம் மிக அற்புதமாக உள்ளது. அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
  கொழுக்கட்டை பிரசாதங்களுடன் கணபதியின் அழகு மனதை கவர்ந்தது. தங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 11. மகள் வரைந்த பிள்ளையார் ஓவியம் அருமையாக இருக்கிறது.

  பூஜை சிறப்பாக முடிந்தது என்று தெரிகிறது.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. ரோஷிணி கைவண்ணம் சூப்பர்

  எங்க வீட்டில் பாயாசம் செய்வதில்லை.

  உங்க வீட்டு பிள்ளையார் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 14. புதுப் பிள்ளையார் வீட்டுக்கு வந்ததும் கல்யாண சாப்பாடு, மகளுக்கு கல்யாண வாழ்த்து. அப்போ வந்தது கல்யாண விநாயகராகத்தான் இருக்கும். மகிழ்ச்சியும் மங்களமும் நிறையட்டும்.

  ரோஷ்ணி வரைந்த அந்த ப்ரியா வாரியர் பிள்ளையார் சூப்பர். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....