திங்கள், 17 செப்டம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – அடுத்த பயணம் – ஒரு முன்னோட்டம்படம்-1: ஹிமாச்சலத்து சூரியன்.... 


”ராஜாக்கள் மாநிலம்” பயணத்தொடர் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அடுத்த பயணத்தொடர் ஆரம்பிக்க வேண்டும். அடுத்த பயணம் ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு. கேரளத்திலிருந்து சில நண்பர்கள் கடந்த நவம்பர் மாதம் வந்திருந்த போது அவர்களுடன், ஷிம்லா, குஃப்ரி மற்றும் நார்கண்டா என்ற இடங்களுக்குச் சென்று வந்த போது எடுத்த சில படங்கள் இன்றைக்கு ஒரு முன்னோட்டமாக… வரும் புதன் கிழமையிலிருந்து பயணத் தொடர் ஆரம்பமாகும்! முதலில் படங்களைப் பார்க்கலாம் வாங்க….


படம்-2: ஷிம்லா  நகரின் புகழ்மிகு மால் ரோடு....


படம்-3: ஷிம்லா நகரின் இரயில் நிலையம்.... 


படம்-4: நான் உங்கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன்.... 


படம்-5: முதல் முறையாக மஞ்நு [பனி] பார்த்த மகிழ்ச்சியில் கேரள நண்பர்கள்....  


படம்-6: ஒரு உணவகத்தின் வழியே பார்த்த இயற்கைக் காட்சி....  


படம்-7: ஹாதூ பீக், நார்கண்டா.... 


படம்-8: ஹாதூ பீக் உச்சியில் ஒரு புது ஜோடி....
எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்... சொல்லிட்டேன். 


படம்-9: ஒரு வழிபாட்டுத் தலம்.... 


படம்-10: இன்னுமொரு வழிபாட்டுத் தலம் 


படம்-11: வானுயர்ந்த ஹனுமன், ஜாகூ மந்திர்


படம்-12: இராணுவத்தினர் பராமரிக்கும் பூங்கா.... 


படம்-13: என்னவொரு ஆக்ரோஷம் இந்த இராணுவ வீரர் முகத்தில்.... 


படம்-14: ஹலோ... நீங்க, புழுவா, பூச்சியா, இல்லை செடியா?.... 


படம்-15: காட்சியில் இருந்த ஒரு பொருள்.... 


படம்-16: தன் அழகில் தானே மயங்கிய பூக்கள்.... 


படம்-17: வளைந்து நெளிந்து போகும் பாதை.... 


படம்-18: இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய சில விஷயங்கள் இங்கே நடந்தன..... 


படம்-19: சின்னதா தூக்கம் போடலாம்னா விடறானா பாரு.... கேமராவ தூக்கிட்டு வந்துட்டானே! 


 படம்-20: அப்படியே தாச்சி தூச்சிடலாமா.... 

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? என்னுடன் இந்தப் பயணத்தில் வர உங்களுக்கு விருப்பம் தானே?  பயணம் செய்வோம் வாரீர்…

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 கருத்துகள்:

 1. புகைப் படங்கள் ஒவ்வொன்றும் அழகு ஐயா
  முன்னோட்டமே இப்படியென்றால், பதிவு எப்படியிருக்கும்
  காத்திருக்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னோட்டமே இப்படி என்றால்.... புதன் கிழமையிலிருந்து பதிவுகள் தொடங்க எண்ணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. மலையுச்சியில் நின்ற ஜோடிகளின் படம் ஸூப்பர் ஜி.
  அவர்களிடம் அந்த வார்த்தையை சொன்ன பிறகு இறங்கினார்களா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... அவர்கள் உறவினர்கள் இறங்கச் சொல்லி விட்டார்கள். புதிய ஜோடி - புது உற்சாகம் - அதனால் அந்த உச்சி மீது இருவருமாக ஏறிச் சென்று விட்டார்கள்! சற்றே தொலைவிலிருந்து அவர்களிடம் அனுமதி கேட்டு எடுத்த படம் இது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 3. குட்மார்னிங் வெங்கட். படங்கள் சிறப்பாய் இருக்கின்றன. அழகான இடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   அழகான இடம் தான். ஆனால்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஹாதூ பீக் உச்சி படம் மிரட்டுகிறது. அங்கு இதுபோல நான் நின்றால் எனக்கெல்லாம் தலை சுற்றிவிடும் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாதூ பீக் - அதன் மேலே தட்டுத் தடுமாறி செல்ல முடியும் - ஆனால் செல்வது கொஞ்சம் ரிஸ்க் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அழகிய படங்கள் ஆவலைத் தூண்டுகின்றன. காத்திருக்கிர்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதன் கிழமையிலிருந்து தொடங்க எண்ணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்....ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. கண்கள் ஜில்லுன்னு ஆகிடுச்சு....
  புகைப்படங்கள் அழகு...குளுமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 9. படங்கள் எல்லாம் அழகு.

  ஹாதூ பீக் உச்சியில் ஒரு புது ஜோடி..//
  மலைக்க வைத்தனர், உறவினர் இறங்க அழைத்து விட்டது மகிழ்ச்சி தருகிறது.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. மலை உச்சியில் காணும் ஜோடி படம் வாராய் நீ வாராய் போகுமிடம்வெகு தூரமில்லை நீவாராய் என்னும் பாட்டை நினைவு படுத்தியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 11. மலை உச்சி ஜோடிகள் நல்லபடியா இறங்கினது மகிழ்ச்சி. நசிராபாதில் எங்க பங்களா இருந்ததும் மால்ரோடு தான்! :) ஆனால் அங்கெல்லாம் கடைத்தெருக்கள் அனுமதி இல்லை. ஆஃபீஸர்ஸ் க்ளப், மெஸ் போன்றவையும் தோப்சி திறந்தவெளி சினிமாக் கொட்டகையும் இருக்கும். அங்கே தான் தினம் படங்கள் பார்த்திருக்கோம். எப்படியும் படம் ஆரம்பிக்க ஏழு மணி ஆகும் என்பதால் வீட்டில் எல்லா வேலைகளையும் முடிச்சுண்டு போவோம். குளிர் ஆரம்பித்தால் போவதில்லை. அப்போ நகருக்குள் இருக்கும் தியேட்டர். எங்களுக்கெல்லாம் சலுகை விலையில் டிக்கெட். முன் பதிவும் தேவையில்லை. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நசிராபாத் நினைவுகள் நன்று.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 12. ஆஹா...

  நாங்களும் பார்க்க ஆசை படும் கனவு இடம்..

  இப்பொழுது உங்கள் வழி காண்கிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தபோது சென்று வாருங்கள்..... நல்ல இடம் தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....