எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 5, 2017

சூரஜ்குண்ட் மேளா – 2017 – ஒரு காமிரா பார்வை….தில்லியை அடுத்த சூரஜ்குண்ட் [ஹரியானா] பகுதியில் வருடா வருடம் 15 நாட்களுக்கு மேளா நடக்கும் – பெரும்பாலும் 1 ஃபிப்ரவரி முதல் 15 ஃபிப்ரவரி வரை நடக்கும் இந்த மேளாவிற்கு நான் நண்பர்களோடு சென்று வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த வருடம் சென்றபோது எடுத்த சில புகைப்படங்களை அவ்வப்போது எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.  இன்றைக்கு இன்னும் சில புகைப்படங்கள்……


ஆம் கா பன்னா என ஒரு பானம் – மாங்காய் கொண்டு தயாரிக்கப்படுவது – அதை விற்பவர் அணிந்திருந்த தொப்பி…. தொப்பி எதைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று புரிந்தால் சொல்லுங்களேன்….


சுவர் அலங்காரத்திற்கு பொம்மைகள்….  டெரகோட்டா பொம்மைகள்!


வாயிற்காப்போன்….  ராஜஸ்தானிய பொம்மைகள்….


பிள்ளையார் – ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மை.


தேவி - ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மை.


சிவன் - ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மை.


சிங்கமும் தேவியும் - ஜார்க்கண்ட் மாநில மண் பொம்மைகள்.


யோசனையில் புத்தர்….


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


ஒரு ஓவியம்.....


விதம் விதமாய் கதவுக்கான கைப்பிடிகள்...


அழகிய சிற்பமொன்று.... யானைச் சிற்பத்திலும் சிறு சிற்பங்கள்.... 


கம்பிகளில் விளக்கு...  Lamp Shade!


மற்றுமொரு ஓவியம்... 


மற்றுமொரு ஜார்கண்ட் மாநில Dhokra Craft....


நான்கடி உயர சக்கரத்தில் பிள்ளையார் சிலைகள்....


கொட்டட்டும் முரசு....

கீதோபதேச காட்சிகள்....

என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

28 comments:

 1. தொப்பி…. தொப்பி...

  சூப்பர் தொப்பி...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. // அதை விற்பவர் அணிந்திருந்த தொப்பி…. தொப்பி எதைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று புரிந்தால் சொல்லுங்களேன்///


  Grass

  ReplyDelete
  Replies
  1. புல் மாதிரி ஆனால் புல் இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
  2. Artificial grass turf 😃😃😃😃

   Delete
  3. Could be wheat grass ..it's a guess because he is a juice vendor

   Delete
  4. புல் போலவே மிதியடி இருக்குமே அதைத் தான் இப்படி தொப்பி போல அணிந்திருந்தார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
  5. தலைக்கு மட்டுமல்லாது, வண்டியைச் சுற்றிலும் இதை மாட்டி வைத்திருந்தார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின் .

   Delete
  6. ஹா ஆஹா :) இப்போ கொஞ்சம் நேரமுன்னாடி பவுண்ட்லாண்ட் கடையில் இந்த செயற்கை turf வச்சிருந்தாங்க அப்போ இதை நினைச்சேன் :) நன்றி artificial turf னு சொல்லிட்டு திடீர்னு கோதுமை புல்லுக்கு தாவியிருக்க கூடாது :)

   Delete
  7. ஹாஹா...

   தங்களாது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
 3. படங்கள் நல்லா இருக்கு. யானைச் சிலையும், புத்தர் சிற்பமும் கண்ணைக் கவர்ந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. அனைத்துப் படங்களும், தெளிவு, துல்லியம், அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   Delete
 6. அழகான ஒவியங்கள். அழகான கைவினை பொருட்கள்.
  அத்தனை படங்களும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 7. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. படங்கள் அனைத்தும் அருமை. அந்த விற்பனையாளர் அணிந்திருக்கும் தொப்பி Christmas tree யின் ஊசிபோன்ற இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஐயா. மேலே ஏஞ்சலின் அவர்களுக்கு விடை சொல்லி இருக்கிறேன். புல் போன்ற பிளாஸ்டிக் மிதியடியை தொப்பியாக வைத்திருந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. இந்தமாதிரி மேளாக்கள் கைவினைக் கலைஞர்கள் அவர்களது உற்பத்திகளை வியாபாரம் செய்ய உதவும் எத்தனை எத்தனை வேலைப்பாடுகள் கலைஞர்கள் வாழ்க

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். இவை அவர்களுக்கு ஊக்கம் தருபவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. அனைத்தும் அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. அனைத்துப் படங்களும் மிக அழகு மிகவும் ரசித்தோம் ஜி!

  கீதா: தொப்பி தொப்பி ப்ளாஸ்டிக்கில் புல் போன்று செய்த தொப்பி. ஒரு சில பறவைகள் உட்கார்ந்திருப்பது போன்று இப்படியான புல் செய்து அதில் பறவைகளை வைத்திருப்பார்கள் அது போன்று உள்ளது.

  ஜார்கன்ட் தோக்ரா க்ராஃப்ட் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. சக்கரப்பிள்ளையாரும் அழகு!! அனைத்துமே!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....