செவ்வாய், 7 மார்ச், 2017

சாப்பிட வாங்க – கட்டல் சப்ஜி
சாப்பிட வாங்க பதிவு எழுதி ரொம்ப நாட்களாகி விட்டன. சில நாட்கள் முன்னர் எழுதிய பிறந்த நாள் பார்ட்டி - ரிட்டர்ன் கிஃப்ட் – கட்டல் சப்ஜி!…. பதிவில், பதிவர் ஏஞ்சலின் அவர்கள் ”கட்டல் சப்ஜி ரெசிப்பிக்கு வெயிட்டிங்” என்று பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். கேட்ட பிறகு நான் செய்யும் முறையை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை! இதோ களத்தில் இறங்கி விட்டேன்.  கட்டல் என்ற ஹிந்தி வார்த்தைக்கு பலாக்காய் என அர்த்தம். कटहल என ஹிந்தியில் கட்ஹல் என எழுதினாலும் பெரும்பாலும் கட்டல் எனவே சொல்வது வழக்கமாக இருக்கிறது. வட இந்தியாவில் இந்த பலாக்காயை காய்கறி கடையில் தோல் சீவி சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொடுத்து விடுவார்கள்.  அப்படிக் கொடுப்பதை வாங்கி வந்து சுலபமாக சப்ஜி செய்யலாம்!

தேவையான பொருட்கள்:


துண்டுகளாக நறுக்கிய பலாக்காய்...


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி...

சிறு துண்டுகளாக நறுக்கிய பலாக்காய் – 200 கிராம், பூண்டு – 8 முதல் 10 பல், வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி – கொஞ்சம், பச்சை மிளகாய் – 2, சிவப்பு மிளகாய் – 2, கொத்தமல்லி அலங்கரிக்க! ஜீரா, மிளகு, கரம் மசாலா, தனியா, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு, எண்ணை….

எப்படிச் செய்யணும் மாமு?

தோலுரித்த பூண்டு, இஞ்சி, ஜீரா, மிளகு, தனியா, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் சிறிதளவு எண்ணை விட்டு, கொஞ்சம் ஜீரா போட்டு அது டப் டிப்பிய பிறகு, சிவப்பு மிளகாய் இரண்டையும் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தினைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அரைத்து வைத்த விழுதினில் கொஞ்சமும் சேர்க்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கி எண்ணை விட ஆரம்பிக்கும் பொழுது, மீதி இருக்கும் விழுதினைப் போட்டு, கொஞ்சம் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கும் போதே வாசனை உங்கள் நாசியை அடைந்து சீக்கிரம் சீக்கிரம் எனச் சொல்ல ஆரம்பிக்கும்!

அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் [சுமார் ஒரு டம்ளர்] சேர்த்து, காய்கறிக் கடைக்காரர் துண்டுகளாக வெட்டிக் கொடுத்த பலாக்காயைப் போட்டு குக்கரை மூடி இரண்டு அல்லது மூன்று விசில் விடலாம்! அதிகமாய் விசில் அடித்தால் குழைந்து விடும் அபாயம் உண்டு! இங்கே விசில் அடிக்கப் போவது குக்கர் மட்டுமே….  சந்தோஷத்தில் நீங்களும் விசில் அடித்தாலும் தவறில்லை!

அடுப்பை அணைத்து [சூடா இருக்க அடுப்பை அணைச்சுக்கப் போறீங்க, ஜாக்கிரதை!] Pressure குறைந்த பிறகு குக்கர் மூடியைத் திறக்க, தண்ணீர் அதிகமிருந்தால், மீண்டும் அடுப்பைப் பற்ற வைத்து கொஞ்சம் வதக்கிக் கொள்ளலாம். 

குக்கரிலிருந்து எடுத்து பாத்திரத்தில் போட்டு, கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அலங்கரித்தால் ஆச்சு கட்டல் சப்ஜி!

இங்கே சப்பாத்தி, பூரி, பராந்தா என அனைத்துடனும் உண்ணுகிறார்கள்! நீங்களும் செய்து பார்க்கலாம்!  நல்லாவே இருக்கும்!

செய்து பாருங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

20 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. சாப்பிட்டதில்லை. இந்தியா வந்ததும் செய்து பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 3. Thanks for the recipe .shall try this asap. .We get canned raw jackfruit.don't think it would be as tasty as fresh ones. .shall look for fresh khatal from srilankan shop

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   நீக்கு
 4. அருமையான ரிசிப்பிதான் ஆனால் இங்கே செஞ்சு பார்க்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 5. இதுவரை சாப்பிட்டதில்லை... செய்முறைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. அருமையாக இருக்கிறது.
  பலாபிஞ்சு கிடைக்கும் போது செய்து பார்க்கனும்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 7. எங்கள் பக்கம் இடிச்சக்கைக் கூட்டு என்பார்கள் பலாக்காய் கிடைக்கும் சமயத்தில் மட்டுமே எப்போதாவது செய்வதுண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 8. இது செய்ததில்லை. பலாக்கொட்டை சாம்பார் செய்வார்கள் வீட்டில். அவர்களுக்குப் பிடிக்கும் அது. தக்காளி வெங்காயத் தொக்கில் எது சேர்த்தாலும் சுவைதான் இல்லை?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. கட்டல் சப்ஜி அன்றே வாசித்துவிட்டேன் ஜி மொபைலில் என்பதால் கருத்திட முடியவில்லை...
  பலாக்காய் கேரளத்து ரெசிப்பிஸ் மற்றும் இங்கு வீட்டில் திதியின் போது செய்வதுண்டு. நான் இதனை நீங்கள் சொல்லியிருப்பது போன்று ஆனால் மிளகு, பச்சைமிளகாய்க்குப் பதில் வற்ற மிளாகாய் போட்ட்ச் செய்ததுண்டு. உங்களின் இந்த முறையையும் செய்து பார்த்துடவிட வேண்டும். இப்பொது பலக்காய் நிறைய கிடைக்கிறது....இங்கு சந்தையில்.

  மிக்க நன்றி ஜி பகிர்ந்தமைக்கு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 10. இடிச்சக்க/சக்க துவரன் என்றும் கேரளத்தில் சொல்லிச் செய்வதுண்டு ஜி! கூட்டும் செய்வதுண்டு. இதுஅல்லாமல் பாதிப்பழுத்த சக்கைப் பழ சுளை, கொட்டை எல்லாம் போட்டு காரம், திதிப்பு கலந்து கூட்டும் வீட்டில் செய்வதுண்டு.இதற்குத் தேங்காய் எண்ணை தான் உபயோகிப்பார்கள்...அதுவும் சுவையாக இருக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலாக்கொட்டை குமுட்டி அடுப்பில் சுட்டு சாப்பிட்டதுண்டு... அது ஒரு கனாக்காலம்... குமுட்டியும் இல்லை! செய்து தர அத்தைப் பாட்டியும் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....