சனி, 11 மார்ச், 2017

பயணங்கள் முடிவதில்லை…. – அடுத்த பயணம் போகலாமா?ஏழு சகோதரிகள் பயணத் தொடர் முடிந்ததில் நண்பர்கள் சிலருக்கு வருத்தம் என எழுதி இருப்பதைப் பார்த்தேன். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பது பிடிக்கும் என்றாலும், தொடர்ந்து பயணிப்பதில் சில கஷ்டங்கள் உண்டு. ஒன்று விடுமுறை கிடைப்பதில்லை.  இன்னுமொன்று தொடர்ந்து பயணம் செய்ய போதிய சேமிப்பும் வேண்டும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! அதனால் மூன்று நான்கு மாத இடைவெளியில் சில பயணங்கள் அமையும்படி பார்த்துக் கொள்வது வழக்கம். 
ஏழு சகோதரிகள் பயணம் முடிந்த பிறகு நான்கு அல்லது ஐந்து பயணங்கள் சென்று வந்திருக்கிறேன் – ஹிமாச்சலப் பிரதேசம் – இரண்டு முறை, குஜராத்-டியு ஒரு முறை, ஆந்திரா-ஒடிசா ஒரு முறை, அதைத் தவிர தமிழகத்தில் உள்ள ஒரு மலைப்பிரதேசம் – சிறுமலை! சிறுமலை பற்றிய ஏற்கனவே மனைவியின் தளத்தில் இரண்டு பகுதிகளாக கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.  அதனால் அதைப் பற்றி எழுதவில்லை என்றாலும், மற்ற இடங்கள் பற்றி எழுதலாம் – படிக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால்!சிறுமலை பற்றிய கட்டுரைகள்/புகைப்பட உலா பதிவுகளை படிக்காதவர்கள்/பார்க்காதவர்கள் வசதிக்காக அப்பதிவுகளின் இணைப்புகள் கீழே….


சிறுமலைஒரு த்ரில் அனுபவம்-பகுதி-2

 

சிறுமலை – ஒரு காமிரா பார்வை.....
நெல்லைத் தமிழன் சொல்வது போல, ஒவ்வொரு பயணத்தொடரும் எழுதி முடிக்க/பயணம் சென்று வந்த பிறகு இடைவெளி விட்டு, எழுத நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதால் படிப்பவர்களுக்கு ஒரு தொய்வு வந்து விடுகிறது. பலருக்கு எல்லா பகுதிகளையும் படிக்க முடிவதில்லை – ஏழு சகோதரிகள் பயணத்தொடரில் மொத்தம் 103 பகுதிகள் – முதல் பதிவு எழுதியது 29 ஃபிப்ரவரி 2016! கடைசி பகுதியான 103-ஆம் பகுதி எழுதியது 09 மார்ச் 2017 – கிட்டத்தட்ட ஒரு வருடம் இழுத்திருக்கிறேன்! சராசரியாக வாரத்திற்கு இரண்டு பதிவு மட்டுமே! இத்தனை இழு இழுவென்று இழுத்தால் படிப்பவர்களுக்கு ஒரு தொய்வு ஏற்படுவது இயல்புதானே… பதினைந்து நாட்கள் பயணம் என்பதால், இத்தனை பதிவுகள் எழுத வேண்டியதாகிவிட்டது.  மூன்று நாட்கள் பயணம் எனில் குறைவான பதிவுகளில் எழுதி முடித்து விடலாம். சில சமயங்களில் நேரக் குறைவு காரணமாக எழுதி வைத்துக் கொண்டு பதிவுகள் வெளியிட முடிவதில்லை. அவசர அவசரமாக எழுதி, படங்கள் இணைத்து வெளியிட நேரம் எடுக்கிறது. இம்முறை அப்படி இல்லாமல், பயணம் பற்றிய பாதி கட்டுரைகளையாவது எழுதி வைத்துக் கொண்டு பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வலைப்பூவில் வெளியிட்டு விரைவில் முடித்து விட எண்ணம் இருக்கிறது. எனக்கு அந்த எண்ணம் இருந்தாலும், படிக்கும் உங்களுக்கு, பயணக் கட்டுரைகள் அலுப்பைத் தருமோ என்ற எண்ணமும் தலை தூக்குகிறது. என்னுடைய வலைப்பூவில், பயணக் கட்டுரைகள் தவிர வேறு எதுவும் இல்லையோ என்ற கேள்வி வருமோ என்றும் தோன்றுகிறது. நான்கு பயணங்கள் பற்றி எழுத விஷயம் இருக்கிறது.  மேலே சொன்ன படி அந்த சில இடங்களுக்குப் பயணம் சென்ற நண்பர்கள் குறைவே. இந்த நான்கு பயணங்களுக்காக சில தலைப்புகள் யோசித்திருக்கிறேன்…. முதல் தலைப்பு ”ஹனிமூன் தேசம்”!  அடுத்ததாய் இந்த “ஹனிமூன் தேசம்” பயணத்தொடரை ஆரம்பிக்க உத்தேசம்.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள? அடுத்த பயணத் தொடரை படிக்க நீங்கள் ரெடியா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

உங்களுக்கும் ஆர்வமிருந்தால், விரைவில் தொடங்கலாம்…. பதில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

30 கருத்துகள்:

 1. பயணிக்கும்போதே குறிப்பு எடுத்துக் கொள்வீர்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பும் இந்த கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன் ஐயா.... ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு பயணிக்கும்போது அலைபேசியில் எழுதிக் கொள்வேன். தவிர புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொள்வதும் உண்டு. தங்குமிடம் திரும்பிய பிறகு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை முடிந்தவரை எழுதி வைத்துவிடுவதால் எழுதும் போது வசதியாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 2. தங்களுடன் எங்களையும் அழைத்துச் சென்றீர்கள்..

  காணற்கரிய இனிய காட்சிகள் பலவற்றை உங்களுடன் நானும் கண்டேன்.. மகிழ்ச்சி..

  அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. தங்களது ‘ஏழு சகோதரிகள் பயணத்தொடரை’ பாதிதான் படிக்க முடிந்தது.இடையே இயனியப்பக்கம் வார இயலாமல் போனதால் தொடராய் முழுமையாய் பாதிக்கவில்லை. ஓய்விருக்கும்போது படிக்க இருக்கிறேன். அடுத்த தொடரான ‘தேன் நிலவுத் தேசம்’ தொடரைப்படிக்க காத்திருக்கிறேன். விரைவில் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது விடுபட்ட பகுதிகளையும் படியுங்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 4. தட்டச்சு செய்யும்போது பல தவறுகள் வந்துவிட்டன. இணையப்பக்கம் வர என்பது இயனியப்பக்கம் வார என்றும், படிக்கவில்லை என்பது பாதிக்கவில்லை என்றும் தொடரை என்பது தொடராய் என்றும் பதிவாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்.

   உங்கள் முதல் வருகையோ?

   நீக்கு
 6. பயணங்கள் மனசை லேசாக்கும் பர்ஸையும்தான் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பர்சையும் தான்! :) மனது லேசாவதால் பர்சு லேசாவது பரவாயில்லை!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 7. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே, தங்களால் நாங்களும் ஒவ்வொரு இடமாய் பார்த்துப் பார்த்து ரசிக்கிறோம் ஐயா
  தங்களின் அற்புதப் படங்களைக் கண்டு, நேரில் அக் காட்சிகளைக்கண்டது போல்
  மெய் சிலிர்த்துத்தான் போகிறோம்
  தொடருங்கள்
  கணினி முன் அமர்ந்தவாரே பயணிக்கக் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. உங்களுடன் ஹனிமூன் வர.....இல்லை இல்லை ...ஹனிமூன் தேசம் வர காத்திருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹனிமூன் தேசம் வரக் காத்திருக்கும் உங்களுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. என்ன ஜி இப்படிக் கேட்டுவிட்டீர்கள்! உங்கள் பயணத் தொடரைப் படிக்க போரா??!!!அலுப்பா? உங்கள் தளத்தில் பல சுவைப் பகுதிகள் எழுதுகின்றீர்களே! அப்படி இருக்க என்ன திடீரென்று இப்படி ஒரு கேள்விகளின் பதிவு!!!??? பயணங்களைத் தொடருங்கள் ஜி நாங்களும் உங்கள் பின் தொற்றிக் கொண்டு வருகிறோம்.... அதுவும் எனக்குப் பயணம் என்றாலே மிகவும் பிடிக்கும்! ஒரு நாள் செல்வதையே மிகவும் ரசிப்பேன்! ஆனால் நீண்ட பயணத்திற்கு தற்போது வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை. முன்பு செய்தவற்றிற்கான படங்கள் எலலம் என் மகனின் கணினியில் அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் அவன் இன்னும் அனுப்பியபாடில்லை...

  ஹனிமூன் தேசத்திற்குச் செல்ல ரெடி! உங்கள் வண்டி ரெடியா??!!! ஆன் யுவர் மார்க்...செட்...ரெடி...கோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு முதற்கண் நன்றி. தொடர்ந்து பயணக் கட்டுரைகள் எழுத வேண்டுமா என்ற எண்ணம் வந்ததால் தான் இப்பதிவு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 11. நீங்கள் பல்சுவைப்பதிவர் ஆனாலும் பல ஊர் போகும் வித்தகர் சில பதிவுகளை இழுத்து செல்வதும் பதிவு போட வேண்டும் என்ற நோகத்தில் தான்)) இருந்தாலும் சலிப்பு இல்லாமல் படிக்கிறேன் பின்னூட்டம் போட சோம்பல் ஒருபுறம் இணையச்சதி செய்கின்றது பல நேரத்தில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுகள் எழுத வேண்டுமே என்பதற்காக பயணம் செல்வதில்லை நண்பரே... பயணம் எனக்குப் பிடிக்கும் என்பதால் மட்டுமே பயணம்!

   எனது பதிவுகளை தாங்களும் படிப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 12. இந்தத்தொடரில் முழுமையாக வர அந்த ஹனிமூன் தேசம் கிட்டிய ஊர் இழுக்கட்டும்))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 13. படிக்க ஆவலோடு இருக்கிறோம், தொடருங்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

   நீக்கு
 14. பயணத்தை தொடருங்கள் அண்ணா...
  உங்கள் பயணக்கட்டுரைகள் மூலமாக நாங்கள் பயணிக்காத இடங்களையும் அறிந்து கொள்ள முடிவதில் சந்தோஷமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 15. பயணம் மனதை லேசாக்கும் என்பது உண்மை, அதிலும், பற்வைகள், குழந்தைகள், இயற்கைக் காட்சிகள் மனதை கொள்ளை கொல்லும் என்பது உண்மை.
  பயணம் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....