எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 10, 2017

ஃப்ரூட் சாலட் 196 – உணவு – இந்த நாள் இனிய நாள் – கழுதை இழுத்த கார்…

இந்த வார புகைப்படம்:

இந்த பைக்ல ஒரு ரவுண்டு போலாம் வாரீகளா?


இந்த வார காணொளி:

ஒவ்வொரு முறை உணவை வீணாக்கும்போதும் இந்த காணொளியை நினைவு கொள்ளுங்கள். விவசாயின் உழைப்பில் உருவாகும் உணவை வீணாக்க உங்களுக்கு உரிமை இல்லை….


இந்த வார குறுஞ்செய்தி:

ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு. அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு!

இந்த வார முகப்புத்தக இற்றை:

இட்லிக்கு நாலு விதமான சட்னி கிடைப்பது வரம்…..
ஆனால் அது ஃப்ரிட்ஜிலிருந்து கிடைப்பது சாபம்!

இந்த வார WhatsApp தகவல்:Skoda Octavia – 25 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கார் – இரண்டு வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனை – கார் விற்பனை செய்யும் நிறுவனம் பிரச்சனைகளைத் தீர்க்காததால் இரண்டு கழுதைகளை வைத்து காரை இழுக்க வைத்திருக்கிறார் – இது நடந்தது லுதியானாவில்! வித்தியாசமாய் ஒரு போராட்டம்!


ராஜா காது, கழுதை காது:

தலைநகரின் ஒரு பள்ளியின் வெளியே – தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க வந்திருக்கும் பெற்றோர்கள் இரண்டு பேருக்கும் வாக்குவாதம்…. தங்கள் மகனின் பிறந்த நாளைச் சொல்லக் கேட்க, இரண்டு பேருக்கும் ஒழுங்கான தேதி நினைவில் இல்லை! – தங்கள் மகனின் பிறந்த நாள் நினைவில் வைத்துக் கொள்ளவே இல்லையே என இருவருக்கும் வாக்குவாதம்! ‘நீதானே பெற்றுக் கொண்டாய், உனக்கு நினைவில் இருக்க வேண்டாமா….” என கணவன் கேட்க, “ஏன் உனக்கும் தானே பிள்ளை இவன், உனக்கு நினைவிலிருக்க வேண்டாமா” என மனைவி கேட்க, பள்ளியின் வாசல் அருகே இருந்த காவலாளி, Birth Certificate-ல இருக்கும் பார்த்து சொல்லுங்கடே….” 

இனிதே முடிந்தது விவாதம்! நல்ல அம்மா, நல்ல அப்பா!

இந்த நாள் இனிய நாள்:

மகளிர் தினக் கொண்டாட்டங்கள் அதிகமாக இல்லாத சில வருடங்களுக்கு முன்னர் இதே மகளிர் தின நாளில் [8-ஆம் தேதி] தான் நான் வாழ்க்கையில் முதன் முதலாய் ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்த மூன்றாம் நாள் அதாவது 10-ஆம் தேதி என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள துணையாக வர நிச்சயிக்கப்பட்ட நாள்! நாட்கள் தான் எத்தனை வேகமாக ஓடுகின்றன…..

பொதுவாக இது மாதிரி முக்கியமான நாட்கள் ஆண்களுக்கு நினைவில் இருப்பதில்லை என்ற குறை எல்லாப் பெண்களுக்கும் உண்டு. என் மனைவிக்கும்! இந்த முறை நினைவில் வர இங்கேயே எழுதிவிட்டேன்! [ஆனால் 8-ஆம் தேதி அன்று சுத்தமாக நினைவில் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்!].

இந்த வார ரசித்த பாடல்:

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாடல் பார்க்க/கேட்க வாய்த்தது.  அந்தப் பாடல், “கண்ணம்மா, கண்ணம்மா” என்ற பாடல்.  கேட்ட முதல் முறையே ஏனோ பிடித்தது.  இதோ நீங்களும் கேட்க....


படித்ததில் பிடித்தது:

பயணங்கள்....

பேருந்துப் பயணங்கள் சுகமானவைதான்
எத்தனை நெரிசலானாலும்!

பரிச்சயமில்லா குழந்தைகளின்
பொய் பூசாத புன்னகைகள்…

விரோதம் கலந்திடாத
புதிய மனிதப் பார்வைகள்…

தர்மவானாய், துரையாய்…
பிச்சையளித்த நொடியில் கிடைக்கும்
பதவி உயர்வுகள்….

ஜன்னலோர இருக்கை கிடைத்தால்
முகத்தை வருடும் இலவசக் காற்று….

சுகமானவைதான்
சிறிது நேரமேயானாலும்
பயணங்கள்….
சிரமமான நீண்ட வாழ்வைக்காட்டிலும்!

-    லோகமாதேவி, பொள்ளாச்சி…..

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 comments:

 1. வணக்கம்
  ஐயா

  மோட்டர் சைக்கில் படம் தகவல்கள் குறுஞ்செய்திகள் யாவும் அருமை பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. குறுஞ்செய்தி, முகநூல் இற்றை, பயணம் பற்றிய வரிகள் அனைத்தும் அருமை... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்திமணி....

   தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி....

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   Delete
 5. கண்ணம்மா கண்ணம்மா குறும் படத்தை மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 6. எல்லாவற்றையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. காணொளி ஆழ்ந்த கருத்து. இந்த நாள் இனிய நாளில் உங்க நேர்மையை பாராட்டனும். பயணக்கவிதை அருமை. பாடல் இதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

   Delete
 8. மோட்டார் சைக்கிளில் பயணிக்க.
  தனித் தில் வேண்டும்
  காணொளியும் பாடலும் அருமை
  தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. ஒவ்வொன்றும் அருமை ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. பைக் ரொம்ப அழகா இருக்கு!

  இற்றை அருமை என்றால் குறுஞ்செய்தி ஹஹஹ..

  பாடல் மிக மிக அருமை!!

  உணவை வீணாக்குவது என்பது இப்போது ஃபேஷனாகியும் வருது...

  குழந்தையின் பிறந்த நாள் மறக்குமா பெற்றோருக்கு? அதுவும் இந்தக் காலத்தில்...வியப்புதான்!.. அனைத்தும் அருமை! ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. காரை கழுதையை இழுக்க வைத்து ஹஹஹஹ் வித்தியாசமான போராட்டம்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. பைக் மிரட்டுது! பெற்றோருக்குக் குழந்தை பிறந்ததாவது நினைவில் இருக்கே! அதுக்கே சந்தோஷப்படணும் போல! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....