எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 12, 2017

சூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்!


சூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும் வந்தார்களா? என்று கேள்வி கேட்கக் கூடாது… அவர்கள் நேரில் வந்தார்களா, எந்த உருவத்தில் வந்தார்கள் என்று கேள்வி கேட்டு நேரத்தை எதற்கு வீணாக்குவது! மிகவும் சுலபமாக, எந்த வடிவத்திலும், எப்பொருளிலும் கலைஞர்கள் செய்யக் கூடிய ஒரு விஷயம் பிள்ளையார் பொம்மை. பிள்ளையாரை கார் ஓட்டச் செய்யலாம், கிரிக்கெட் விளையாட வைக்கலாம், எப்படிச் செய்தாலும் அவர் ஒன்றும் கோபிக்கப் போவதில்லை! 


ஒவ்வொரு முறை பயணம் செல்லும்போதும், இது போன்ற மேளாக்களுக்குச் செல்லும் போதும் வித்தியாசமான வடிவங்களில் இருக்கும் பிள்ளையார் சிலை/பொம்மைகளை படம் எடுப்பதுண்டு.  அப்படி எடுத்த சில புகைப்படங்கள் இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக…..  இந்த வாரத்தின் புகைப்படங்களைப் பார்க்குமுன்னர், இதற்கு முன்னர் வெளியிட்ட சூரஜ்குண்ட் மேளா – 2017 புகைப்படங்களுக்கான சுட்டிகள் தருகிறேன்.

இந்த வருடத்தில் சூரஜ்குண்ட் மேளா சென்ற போது எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை முந்தைய ஞாயிறுகளில் புகைப்படப் பகிர்வாக உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இது வரை பார்க்காதவர்கள் வசதிக்காக, இங்கே அப்பதிவுகளின் சுட்டிகள்…..சரி இந்த ஞாயிறின் புகைப்படங்களைப் பார்க்கலாமா…..


என்னை ரொம்பவே படுத்தறீங்கப்பு....  கொஞ்சம் நிம்மதியா தூங்கவிடுங்கடே..... நிஜக் கிருஷ்ணன் பார்த்தால் கொஞ்சம் வேதனைப்படுவான்...  என் பெயர் சொல்லி ஏன் இந்த வேலை! 


மண்ணிலும் இருப்பேன்... வெள்ளை கல்லிலும் இருப்பேன்....


வேலைப்பாடு அழகாவே செய்திருக்கப்பா...  
உனக்கு நல்ல விற்பனை நடக்கட்டும்.


நீங்க போடற தாளம் போதாதா...
என்னையும் தாளம் போட வெச்சுட்டீங்களே....


கொஞ்சம் நேரம் ஹாயா ஊஞ்சல் ஆடறேன்....  
தொந்தரவு பண்ணா மெர்சலாயிடுவேன்....


தில்லி மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் மயில்களை இறைச்சிக்காகவும், இறகுக்காகவும் கொன்று குவிக்கிறார்கள்...
தவிர பயிர்களைக் காக்கவும்..... 
இப்படியே போனால் உங்களுக்கு பேப்பர் மயில் மட்டுமே மிஞ்சும்டா....


தயிர் கடையும் ஹரியான்வி பெண்மணி....
விதம் விதமாய் Wind Chimes.....
சத்தம் கேட்குதா!


ஜார்க்கண்ட் முகமூடிகள்!


தவறென் செய்தோம்....  தொங்கவிட்டீர்களே....கருப்பு வெள்ளை.... 
பிள்ளையார் மட்டும்தானா என்று கேட்டதற்காக, எடுத்த படங்கள்...


தேங்காய் சிரட்டையைக் கூட விடுவதில்லை...
அதிலும் கலை!


ஒரு நாட்டியக் கலைஞர்....

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறின் புகைப்படங்களை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

26 comments:

 1. நல்லாருக்கு. அதுவும் சிரட்டையை வைத்துச் செய்திருக்கும் கலைப்பொருள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. அது வெளிநாட்டிலிருந்து வந்த கலைப்பொருள்... எந்த நாடு என்பதைப் பார்த்து சொல்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 2. படங்கள் அனைத்தும் அட்டகாசம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   Delete
 4. ரசிக்க வைத்த புகைப்படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. முதல் படம் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. படங்கள் அனைத்தும் ஆஹா!! போட வைத்தன! உங்கள் கமென்ட் சிரிப்பை வரவழைத்தது அதுவும் அந்தப் படுத்திருந்த பிள்ளையாருக்கான கமென்ட் !!

  கீதா: மேற்சொன்ன கருத்துடன்... தயிர் கடைவதைப் பார்த்ததும் நான் சின்ன வயதில் எங்கள் வீட்டில் இப்படித்தான் கடைவதுண்டு. வெண்ணை எடுத்த மோர்தான்...மத்து போட்டு கயிறு இட்டுக் சுவற்றில் இருந்து இப்படி வரும் ஸ்டாண்டில் மத்திட்டு கடைந்து விட்டுத்தான் பள்ளி செல்ல வேண்டும். வெண்ணை எடுத்த மோர்தான் உடலுக்கும் நல்லது என்பார்கள்.

  வெங்கட்ஜி என்னது இது மயிலும் இறைச்சியா! அடப்பாவிகளா? கொடுமையிலும் கொடுமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. சிரட்டைக் கலை அருமை!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. படங்கள் எல்லாமேசூப்பர் .குறிப்பாக படுத்த நிலையில் உள்ள விநாயகர் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 10. ரசித்தேன் மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. ஒருமுறை கொச்சின் சென்றிருந்தபோது எங்களுடன்வந்திருந்த அமெரிக்காவில் வாழும் நண்பர் அந்த மாதிரி சிரட்டைபொம்மையைப் பார்த்து வாங்கினார் படங்களும் தேர்வும் அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 12. படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 13. படங்களும் அருமை! கவிதை நயம் மிக்க தலைப்புகளும் அருமை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....