எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 17, 2017

ஃப்ரூட் சாலட் 197 – மணப்பெண் - ஒப்பீடு நல்லதல்ல - விழித்திரு....

இந்த வார செய்தி:


சமீபத்தில் ஒரு 90 வயது இளைஞரைச் சந்திக்க நேர்ந்தது இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். Seventh Pay Commission Arrears மற்றும் OROP Arrears ஆக கிடைத்த ஐந்து லட்சம் ரூபாயை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதைப் பார்க்க முடிந்தது. போலவே இன்னுமொரு இளைஞரும் – அவருக்கு 70 வயதாம்! அவரும் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தார்.  நல்ல மனம் கொண்ட அந்த இளைஞர்களுக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து!

இந்த வார காணொளி:

கல்யாணப் பெண் தலைகுனிந்துதான் மணவறைக்கு வரவேண்டும் என்பது என்ன கட்டுப்பாடு…. வெளிநாட்டு வழக்கம் போல நடனமாடியபடி கூட வரலாம்…. இங்கே ஒரு மணப்பெண் எப்படி வராங்க பாருங்க!

“என்ன மானமுள்ள பொண்ணு என்னு மதுரையில…..”


இந்த வார குறுஞ்செய்தி:

குறுஞ்செய்தி பகுதியில் வெளியிட்டாலும் இது பெருஞ்செய்தி! எந்த நேரத்திலும் அடுத்தவர்களோடு ஒப்பீடு செய்வது நல்லதல்ல!இந்த வார முகப்புத்தக இற்றை:விழா, விருந்துகளில்..
கூட்டு பொரியலை..
இனி,
வருமோ வராதோ என,
பார்த்து பார்த்து,சாப்பிடுபவர்களுக்கு
திரும்பியே வராது.

ஆனால்...
சோறு வைக்கும் முன்பே...
கூட்டு பொரியலை சாப்பிட்டு தீர்ப்பவர்களுக்கு,
திரும்ப திரும்ப வரும்..!

#இதுதான்..
வாழ்க்கை.
இதுதான்
உலகம்.

     நன்றி: Shanmugapriyan….

இந்த வார WhatsApp தகவல்:


இந்த வார ரசித்த இசை:

வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்கள் பாடிய ஒரு பாடல்.  நிச்சயம் உங்கள் மனதைத் தொடும்…. கேளுங்களேன்!


படித்ததில் பிடித்தது:

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான்.நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.

தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும்,தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.

உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள்.நாம் எப்படி இருந்தோம் எனத் தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள்.நாம் எப்படி இருக்கப் போகிறோம் எனத் தெரியும்.

ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு....புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு...எளிதில் வெற்றி பெறுவாய்.

சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே.சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.

வளமுடன் வாழும் போது நண்பர்கள் உன்னை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுது நண்பர்களை நீ அறிவாய்.

ஒருமுறை தோற்றுவிட்டால் அதற்கு நீ ஒருவரைக் காரணம் சொல்லலாம்.தோற்றுக் கொண்டே இருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம்.

நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும்.மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்.உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர்.மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்:வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நீ ஒருவனை ஏமாற்றிவிட்டால் அவனை முட்டாள் என்று நினைக்காதே.நீ ஏமாற்றியது அவன் உன்மேல் வைத்த நம்பிக்கையையே.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம்.கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை....!அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. அனைத்து அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. நல்ல தொகுப்பு
  சூரியன் சந்திரன் நல்ல செய்தி

  தம

  ReplyDelete
  Replies
  1. சூரியன் - சந்திரன் - எனக்கும் மிகவும் பிடித்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 3. மணமகள் டான்ஸ் இப்படி டான்ஸ் ஆடி வருவது இப்போது உள்ள மக்களுக்கு சினிமா மோகம் தலை விரித்து ஆடுவதால் வந்த விளைவு என்று சொல்லாம் பொதுவாக இப்படி நடப்பது சிங்கப்பூர் மலேசியாவில் உள்ள தமிழ் குடும்பங்களில்தான்

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். சில வருடஙக்ளாகவே இப்படி நடப்பது அங்கே வழக்கமாகி இருக்கிறது. யூவில் இப்படி நிறைய இருப்பதைப் பார்த்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. படித்ததில் பிடித்தது உள்ள முத்துக்கள் உட்பட அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. இன்றைய தொகுப்பு அருமை.. இனிமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. வைக்கம் விஜயலக்ஷ்மியின் எல்லாப் பாடல்களையும் கேட்டதுண்டு ஜி! இந்தப் பாடல் உட்பட...மிகவும் இனிமையான குரல்....அருமையான் பாடல்..மீண்டும் இங்கு கேட்டோம் மிக்க நன்றி ஜி.

  இற்றை, குறுசெய்தி அருமை...வயதான இளைஞர்களுக்கு வாழ்த்துடன் எங்களது பூங்கொத்தும்...

  கல்யாணப் பெண் ஆடி வரும் காணொளி வாட்சப்பில் உலா வருகிறது!!! காலம் மாறி வருகிறது...மாற்றத்தை வர வேற்று எஞ்சாய் செய்வோம்...(கீதா: மாற்றங்களை வர வேற்கலாம். ஆனால் சமீப காலங்களில் திருமணங்கள் நாவல் ஐடியா என்று புதுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக போட்டி கூட போட்டுச் செய்வது போல் இருக்கிறது. மட்டுமல்ல அதீதமான செலவுகள்... திருமணங்கள் வெகு விரைவில் முறிவதும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது...சமீபத்தில் நான் சென்று வந்த 6 திருமணங்களில் 4 முறிவில்...எல்லாமே ஏதேதோ புதுவிதம் என்று நாவல் ஐடியா என்று கொண்டாடினார்கள்...கல்யாணத்திற்கு முன்பே திரப்படங்களுக்கு வருவது போன்று டீசர் அது இது என்று கொண்டாடி...இறுதியில் பிரிதல்...என்பதைக் கேட்கும் போது மனமும் வேதனைப்படுகிறது...திருமண உறவுகள் புற்றீசல் போல் ஆகி வருகிறதைப் பார்க்கும் போது...)

  பபி அருமை!!!

  ReplyDelete
  Replies
  1. வைக்கம் விஜயலக்ஷ்மி எனக்கும் பிடித்த பாடகி... அவரது ஒரு ஸ்ட்ரிங் வீணை இசையும் பிடிக்கும்.

   திருமணங்கள் நாவல் ஐடியாவோடு துவங்கினாலும் விரைவில் முறிந்து விடுவது சோகம் தான். பல திருமணங்களில் முறிவு - விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போவதால் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. Society பற்றிய கார்ட்டூன் ரொம்ப நல்லா இருந்தது. ஹிட்லர் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்பட்ட சம்பவங்களை நினைவுகூற வைத்துவிட்டது.

  மணப்பெண் ஆடிவரும் காணொளி சமீபத்தில் கிடைத்தது. என் பெண்ணின் எண்ணம், வாழ்க்கையில் ஒருமுறை வரும் சந்தர்ப்பத்தை அவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படிக் கொண்டாடுகிறார்கள். Who are we to comment? இது நான் கொண்ட கருத்துக்கு மாறானது, அப்புறம் யோசித்தால் அவள் சொன்னதுதான் சரி என்று தோன்றிற்று.

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்குப் பிடித்ததை செய்கிறார்கள் என்று தான் தோன்றியது எனக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. அந்த மணப்பெண் ஆடி வருவதை மிகவும் ரசித்தேன்...கூடவே... சமீபத்து திருமணங்கள் குறித்த எண்ணங்களும் வந்தது....அதான் அந்த கமெண்ட்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 9. மணப்பெண் ஆடுவதை ஒட்டு மொத்த கூட்டமும் மாப்பிள்ளையும் ஐயரும்கூட ரசிக்கின்றனர் என்ன செய்வது ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. இந்த வார பழக்கலவை வழக்கம்போல் சுவையாய் இருந்தது. வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் பாடல் மிக அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி! முகநூல் இற்றை அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. அந்த வாட்சாப் வீடியோ அனைவருக்குமான சுற்றில் இருக்கிறது போலும்! தனது வருமானத்தை நன்கொடை வழங்கிய இளைஞர்கள் வாழ்க. குறுஞ்செய்தி, இற்றை உட்பட அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் - நல்ல சுற்று தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. நல்ல தொகுப்பு ஐயா
  வயது முதிர்ந்தஇளைஞர்கள் பாராட்டிற்கும்
  போற்றுதலுக்கும் உரியவர்கள்
  போற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அசோகன் ஜி!

   உங்கள் முதல் வருகையோ..... மிக்க மகிழ்ச்சி.

   Delete
 15. அனைத்தும் மிகச் சிறப்பு தோழர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோலச்சி...

   Delete
 16. எதை விட எதைக் கூற எல்லாமே சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 17. மணப்பெண் ஆடிக்கொண்டே வந்தால் பரவாயில்லை. திருமண வாழ்க்கை ஆடாமல் இருந்தால் சரி! இப்போதெல்லாம் ஒண்ணும் சொல்ல முடியலை! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....