எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 13, 2017

ஹோலிகா – உருவ பொம்மை எரிப்பும் ஹோலி பண்டிகையும்….மதுராவை அடுத்த பிருந்தாவனத்தில் ஒரு ஹோலி கொண்டாட்டம்.....

இன்றைக்கு ஹோலி பண்டிகை. வட இந்தியா முழுவதுமே இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தில் இருந்தவரை கொண்டாடியதில்லை என்றாலும் தில்லி வந்த பிறகு கொண்டாடியதுண்டு. நண்பர்கள் பலரும் குடும்பத்துடன் எனது வீட்டிற்கு வர, எங்கள் வீட்டு மொட்டை மாடியில், ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகள் தூவி ஹோலி விளையாடி இருக்கிறோம். கலர் பொடிகள் தூவிய முகம்/வண்ணமயமான உடைகளோடு தெருத் தெருவாக சுற்றியிருக்கிறேன்.  இப்போதெல்லாம் ஹோலி கொண்டாடுவதில்லை.பிருந்தானத்தில் வண்ணப் பொடிகள் விற்பனைக்கு!

ஹோலி என்ற பெயரில் நிறைய வம்புகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அழுக்குத் தண்ணீர் நிறைந்த பலூன்களை அடுத்தவர்கள் மீது வீசுவது, தெரியாதவர்கள் மீது கூட, குறிப்பாக தெரியாத பெண்கள் மீது கூட கலர் பொடி பூசுவது அதிகமாகி இருக்கிறது! கூடவே ஒரு வாக்கியமும் சொல்லி விடுவார்கள் – ”Bபுரா நா மானோ! ஹோலி ஹே!” அதாவது, “தப்பா எடுத்துகாதே, ஹோலி!” என்று சொல்லியே தெரிந்தவர் தெரியாதவர் என யார் மீது வேண்டுமானாலும் கலர் பூசுவதை வழக்கமாக்கி விட்டார்கள்! குறிப்பாக தெரியாத பெண்கள் மீது!


வண்ணப் பொடிகள் விற்பனைக்கு!
இதுவும் பிருந்தாவனத்தில் எடுத்த படமே...

இரண்டு நாள் முன்னர் அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்தபோது, வழியில் இருக்கும் வீட்டு Balcony-யில் இரண்டு சிறுவர்கள்…. ஒருவன் கையில் பிச்காரி என அழைக்கப்படும் சாதனம், மற்ற சிறுமி கையில் வண்ணப் பொடி கலந்த தண்ணீர் அடைக்கப்பட்ட பலூன்! அந்த பலூனை அடுத்தவர் மீது எறிய, அவர்கள் மேல் பட்டு உடைய, அவர்கள் மீது அந்த தண்ணீர் முழுவதும் தெறிக்கும்… அதில் பலூன் எறிந்த குழந்தைகளுக்கு மகிழ்ச்சி! சிறுமி கையில் பலூனை வைத்துக் கொண்டே, கேட்ட கேள்வி – “வெளியே போறீங்களா, இல்லை வெளியிலிருந்து வீட்டுக்குப் போறீங்களா?”.


ஹோலி சமயத்தில் நான்! 
ஏன் இப்படி பயமுறுத்தணும்..... :)

பலூனைப் பார்த்த பிறகு வீட்டுக்குப் போறேன் என்று சொல்லவில்லை! சிரித்த படி நடக்க, மேலே இருந்து பறந்து வந்தது பலூன்! வண்ண நீர் அடைக்கப்பட்ட பலூன்! நல்ல வேளையாக என் மேல் படாமல் கீழே விழுந்து உடைந்தது – வண்ண நீர் தெறித்தது சாலை எங்கும்! குழந்தைகள் விளையாடுவதை ஒத்துக் கொள்ளலாம் ஆனால் இந்த இளைஞர்கள் அத்து மீறி செய்யும் செயலை ஒப்புக்கொள்ள முடிவதில்லை! நேற்று பார்த்த ஒரு விளம்பரம் – Gadi என்ற பெயரில் வரும் சலவைத்தூள் விளம்பரம் – “கலர் கறை போயிடும், உங்க மனசுல இருக்க கறை?” எனக் கேட்கும் விளம்பரம்! பாருங்களேன் – மொழி புரியலைன்னாலும்!


சரி ஹோலிகா உருவ எரிப்பு விஷயத்திற்கு வரலாம்….. ஹோலி பண்டிகையின் முதல் நாள் அன்று ஒவ்வொரு சாலை சந்திப்பிலும், பெரிய அளவில் காய்ந்த விறகுகளை நிறுத்தி, கயிறால் கட்டி வைத்திருப்பார்கள்.  சுற்றிலும் ”உப்லா” என அழைக்கப்படும் வரட்டிகளை வைத்திருப்பார்கள். இது ஒரு விதமான உருவ பொம்மை! மாலை நேரத்தில் அதனைக் கொளுத்தி, தங்கள் வீட்டிலிருந்தும் சிறிய அளவில் ஐந்து உப்லாக்களை எடுத்து வந்து அதை எரித்துவிட்டால் தங்களது எல்லா பிரச்சனைகளும் தீரும் என்பதும் ஒரு நம்பிக்கை.  அது சரி எதற்காக இந்த உருவ பொம்மை எரிப்பு!


ஹோலிகா தஹன்...
தயாராக இருக்கும் உருவம்....
நேற்று மொபைலில் எடுத்த படம்!


ஹோலிகா என்பது ஒரு அரக்கி…. ஹிரண்யகசிபுவின் சகோதரி.  பக்தப் பிரகலாதன் கதை தெரியும் தானே…. பக்தப் பிரகலாதன் ஹிரண்யகசிபுவின் மகன். தனது மகன் தன்னைப் போற்றாமல் விஷ்ணுவை மட்டுமே பூஜிக்கிறானே என கோபம் கொண்டு பிரகலாதனை பல விதங்களில் துன்பப்படுத்துகிறான். அப்படி ஒரு முறை தனது மகனை அழிக்க தனது சகோதரி ஹோலிகாவை அழைக்கிறான்.  ஹோலிகாவிற்கு ஒரு வரம் உண்டு! அதுவும் பிரம்மா கொடுத்த வரம்! சும்மாவே இருக்க மாட்டார் போலும் இந்த பிரம்மா! வரவங்க போறவங்க எல்லாருக்கும் எதையாவது வரம் கொடுத்து, அதன் பிறகு திண்டாடுவார்!  ஹோலிகாவுக்கும் இப்படி ஒரு வரம் கொடுத்தார் பிரம்மா….


இன்னுமொரு விளம்பரம் - முதியோர் இல்லம் ஒன்றில் ஹோலி கொண்டாட்டம்...

”நெருப்புக்குள் சென்றாலும் என்னை நெருப்பு ஒன்றும் செய்யக்கூடாது என்ற வரம்! அவரும் ஹோலிகாவுக்கு வரம் ஒன்றை அளிக்கிறார். ”கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்குள் சென்றாலும், நெருப்பு உன்னை ஒன்றும் செய்யாது!” எனக் கொடுத்த வரம்! ஆனால் அதில் இணைத்திருக்கும் Terms and Conditions சொல்வதற்குள் மகிழ்ச்சித் திளைப்பில் ஹோலிகா அகன்றுவிட்டாள். ஹோலிகாவும் நம்மள மாதிரி தான் போல! பல இடங்களில் சின்னதா போட்டு இருக்கும் Terms and Conditions படிக்காமலே கையெழுத்து போட்டுடவேண்டியது! அப்புறம் திண்டாட வேண்டியது!

Fine Print-ல போட்டிருந்த அந்த Terms and Conditions என்னன்னா, நெருப்புக்குள்ள தனியா தான் போகணும்! வேற யாரையும் கூட்டிட்டு போகக் கூடாது!  இது தெரியாத அந்த லூசு அரக்கி ஹோலிகா, பக்தப் பிரகலாதனை அழிக்க நினைத்து, நெருப்பை வளர்த்து, பிரகலாதனை தன்னோடு அணைத்துக் கொண்டு நெருப்புக்குள் போகிறாள்…. பிரகலாதன் தான் வணங்கும் விஷ்ணுவை துதிக்க, பிரகலாதனை நெருப்பிலிருந்து காக்கிறார்.  Fine Print படிக்காத ஹோலிகா நெருப்பில் சாம்பலாகிறாள்! பிரகலாதன் உயிருடன் வெளியே வருகிறான்…. இப்படி ஒரு கதை.


ஹோலி சமயத்தில் இப்படி ஒரு தொப்பி அணிவதுண்டு....

இப்போதும் ஹோலிகாவின் உருவ பொம்மை போல தெரு முனைகளில் அமைத்து எரித்து கொண்டாடுகிறார்கள். கிராமங்களில் ஹோலிகா அரக்கியை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும் உண்டு! ”கட்டல போறவளே, பிரகலாதனை எரிக்க நினைச்சியே, நீயே எரிஞ்சு சாவு….” என்ற Normal திட்டுகளும் உண்டு! எரிந்து முடிந்ததும், ஹோலி ஹே! என்ற கூச்சல்களோடு கலைவார்கள்.  இது அனைத்தும் ஹோலிக்கு முதல் நாள் நடப்பது! அடுத்த நாள் வண்ணப் பொடிகளோடு ஹோலி விளையாடுவார்கள்! இரண்டு விதமான ஹோலி பற்றி சென்ற வருடங்களில் எழுதி இருக்கிறேன். அவற்றுக்கான சுட்டி கீழே….படிக்காதவர்கள் படிக்கலாம்….ஹோலி பண்டிகை அன்று ஸ்பெஷலாக செய்யப்படும் இனிப்பு Gகுஜியா…. நமது ஊர் சந்திரகலா மாதிரி Shape என்றாலும், உள்ளே வைக்கப்படும் விஷயம் வேறு! செய்து பார்த்ததில்லை. கடையில் வாங்கி உண்பதோடு சரி.  இது தவிர Bபாங்க்/தண்டாயி என அழைக்கப்படும் பானமும், அதே இலைகள் வைத்து செய்யப்படும் பகோடாக்களும் உண்டு! தண்டாயி கொஞ்சம் விவகாரமானது – அதிகம் குடித்தால் போதை தான்! தவிர இருக்கவே இருக்கிறது சரக்கு! அதை அடித்து கலர் பொடியோடு நிறைய பேரை வீதிகளில் பார்க்கலாம்! நேற்று மாலை வெளியே சென்ற போதே நிறைய கலர் தலைகளைப் பார்த்து வந்தேன். இன்றைக்கு மாலை வரை வெளியே போக முடியாது!

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகள்….  எல்லோருடைய வாழ்வும் வண்ண மயமாக இருக்கட்டும்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

34 comments:

 1. குஜியாவின் எங்கள் ஊர் பெயர் சந்திரக்கலா,
  முதல் காணொளி பளார் என்றால் இரண்டாம் காணொளி நெகிழ்வு
  ஒரு பதிவுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை உண்மையில் புதிய பதிவர்களுக்கு ஒரு பாடம்.
  வாவ் பதிவு
  ஹோலிகா கதை குறித்து யோசிக்கிறேன்,
  உண்மையில் குழந்தையும் எறிந்துதான் போயிருக்க வேண்டும்
  அதுதான் லாஜிக்
  அப்படி இல்லை என்றால் அரசனை விட சக்திவாய்ந்தவர்கள் ஹோலிகாவை எரித்துக் கொன்றுவிட்டு ஒரு கதையைக் கட்டமைத்திருக்கவேண்டும் ...
  மாற்று மதத்தை அழிப்பதில் கில்லாடிகள் "அரசனை விட செல்வாக்கு மிக்கோர்"

  ஹோலிகாவின் கதைக்காக உண்மையில் உங்களுக்கு நன்றி

  ஐந்து விசயங்களை எரிக்க வேண்டும் என்பது கூட ஏதோ குறியீடுதான் நிறயப் படித்தால் இதுகுறித்து பயணித்தால் புரியும்

  நன்றிகள்
  தம

  ReplyDelete
  Replies
  1. நமது ஊரில் சந்திரகலா என்று அழைக்கிறார்கள் என்பதையும் பதிவில் சொல்லி இருக்கிறேன் மது.

   ஒவ்வொரு கதையிலும் ஏதோ குறியீடு உண்டு. ஆனால் சொல்லிப் புரிய வைக்க யாரும் இல்லை....

   சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி மது.

   Delete
  2. சொல்லப் போனால் வலையுலகிலேயே இல்லை

   தேர்வுக்காலம் இல்லையா ?
   இன்று முதல்தாளுக்கான தயாரிப்புகள் முடிந்தன.
   பார்க்கலாம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என

   Delete
  3. தேர்வுக் காலம்! நான் நினைதது சரிதான்.

   மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!

   Delete
 2. எவ்வளவு விடயங்கள் அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. அறியாத ஹோலிகா கதை...

  இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துகள் ஜி…

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. சுவாரஸ்யமான விஷயங்கள்தான். அவரவர்கள் கலாச்சாரம். ஆனாலும் தவறானவர்கள் அவற்றைத் தவறாகவே உபயோகிக்கிறார்கள். ஜல்லிக்கட்டைத் தடை செய்ய நினைத்தவர்கள் முதலில் இது மாதிரி அந்நியர்கள் மீது பூசப்படும் கலரைத் தவிர்க்கச் சட்டம் கொண்டுவரவேண்டும். குறிப்பாக ஆண்கள் பெண்கள் மீது.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் தடை செய்யப்பட்ட பல விஷயங்கள் இங்கே நடந்து கொண்டு தானே இருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்....

   Delete
 6. பல புதிய தகவல்களுடன் ..அருமையான பகிர்வு...

  ...happy holi...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 7. பிரகலாதன் கதையில் இந்த ஹோலிகா கதை கேட்டதில்லை. நாங்கள் அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்த போது வந்த முதல் ஹோலி அன்று விடிகாலையில் உறங்கிக் கொண்டிருந்தஎங்கள் மீது வண்ணக்கலவைப் பொடிகளும் நீரும் இறைத்துஎங்களை எழுப்பினார்கள் அது ஒரு ப்ரிமிடிவ் செய்கை என்று தோன்றியது

  ReplyDelete
  Replies
  1. பல விஷயங்கள் ப்ரிமிடிவ் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 8. பிரகலாதன் கதையில் இந்த ஹோலிகா கதை கேட்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete


 9. ஈஸ்மண்ட் கலரில் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் ஆனால் ஏன் மிகவும் விரைப்பாக இருக்கீறீர்கள் நம்ம மீது கலர் பொடி தூவிவிட்டார்களே என்ற கோபமா?

  ReplyDelete
  Replies
  1. கோபம் இல்லை! நேற்று ஏதோ படத்தில் சந்தானம் பேசிய வசனம் ஒன்று கேட்டேன். இப்படத்தினை, நேற்று பார்த்த போது அந்த வசனம் தான் நினைவுக்கு வந்தது! என்ன வசனம்....

   குரங்குக்கு குங்குமம் வெச்ச மாதிரி! :) அப்ப சிரிக்கலைன்னாலும் இப்படம் பார்த்து நேற்று சிரித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  2. :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 10. ஹோலிபற்றிய தகவல்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. ஹோலிகா கதை அறிவோம். பல விஷயங்கள் சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.

  ஒவ்வொரு பண்டிகையும் கொண்டாடப்படுவதும் அதற்கானச் செய்தியும் ஏதேனும் சொல்லுகிறது என்றாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் அதை விளக்கிச் சொல்லுவோர் இல்லை.

  மொத்தத்தில் கலர்ஃபுல் வெங்கட்ஜி!!! உங்கள் படத்தையும் சேர்த்துத்தான்!!!)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.

   Delete
 13. இரண்டு காணொளிகளும் அருமை.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 14. இரண்டு காணொளிகளையும் இரசித்தேன்! ஹோலிகா தீயில் மடிந்ததன் காரணம் இன்றுதான் அறிந்தேன். தகவலுக்கு நன்றி! புதில்லியில் இருக்கும்போது வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை. ஆனாலும் அடுக்ககத்தில் இர்ந்த வட இந்தியா நண்பர்கள் வீட்டிற்கு வந்து வண்ணப் பொடிகளைத் தூவாமல் நெற்றியில் குங்குமத்தை இட்டு செல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தில்லி வந்த புதிதில் நானும் இப்படித்தான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சித்ரா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....