எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 23, 2016

பூ மழை பொழியும் ஹோலி!நாளை வட இந்தியா முழுவதும் ஹோலி கொண்டாடப் போகிறார்கள்.  வட இந்தியாவில் குளிர் காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்க இருக்கும் தினங்களில் தான் ஹோலி கொண்டாடுவார்கள்.  தில்லி வந்த புதிதில், குளிர் பற்றி சொல்லும் போது, தீபாவளிக்கு அடுத்த நாள் குளிர் ஆரம்பிக்கும், ஹோலி அன்று குளிர் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள் – தீபாவளிக்கு அடுத்த நாள் குளிர்கால உடையைப் போட்டால் ஹோலி அன்று தான் கழற்றுவார்கள் என கிண்டல் செய்வதும் உண்டு! சாதாரணமாக ஹோலி என்றால் வண்ண வண்ணப் பொடிகளை தூவியும், தண்ணீரில் கலந்தும் விளையாடுவது என்ற எண்ணம் தான் வட இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு இருக்கும். ஆனால் இந்த ஹோலியில் நிறைய பண்டிகைகள் உண்டு. ஹோலி வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே இந்த ஹோலி பண்டிகைகள் ஆரம்பித்து விடும் – குறிப்பாக ப்ரஜ் பூமி என அழைக்கப்படும் மதுரா, பிருந்தாவன், பர்சானா போன்ற இடங்களில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த ஹோலி திருவிழாவாகவே கொண்டாடப்படுவது வழக்கம். சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஹோலி சமயத்தில் அவரது ஊருக்கு அழைத்துச் சென்று இந்த கொண்டாட்டங்களில் என்னையும் பங்கு பெறச் செய்தார்.  அந்த சமயத்தில் சில வித்தியாசமான நிகழ்வுகளை நானும் பார்த்ததோடு, அவற்றில் பங்கும் பெற்றேன்.  வித்தியாசமான அனுபவம் அது!பர்சானா கிராமம் – மதுரா, விருந்தாவன் அருகே இருக்கும் அழகிய கிராமம் – ராதையின் பிறந்த ஊர் அது! இங்கே ஹோலி சமயத்தில் “லட் மார் ஹோலி” என்பது மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள்.  லட் மார் ஹோலி பற்றி 2012-ல் எனது பக்கத்தில் ”அடி வாங்கும் கணவர்கள்[மஞ்சள் வண்ண எழுத்தில் சுட்டினால் பர்சானாவில் அடி வாங்கும் கணவர்கள் பற்றிய பதிவினை படிக்கலாம்!]எனும் தலைப்பில் எழுதி இருக்கிறேன். அதிலிருந்து சில வரிகள் இங்கேயும்!

ஹோலிப் பண்டிகை. ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகரின் அருகில் இருக்கும் “பர்சானா என்ற இடத்தில் இதற்கான தயாரிப்புகள் ஆரம்பித்து விடும்.  எதுக்குன்னா “லட் மார் ஹோலி விளையாடத்தான்.  ஹிந்தியில் “லட் என்றால் பெரிய குச்சி. “மார்” என்றால் அடிப்பது. பெரிய குச்சிகளால் அடித்து, கலர் பொடி தூவி விளையாடுவது தான் இந்த ”லட் மார் ஹோலி.
 கிருஷ்ண பகவான் அவருடைய காதலி ராதாவின் கிராமமான பர்சானாவிற்கு வந்து அவரை கிண்டல் செய்ய, பர்சானாவில் உள்ள பெண்கள், அவரைத் துரத்தியடித்தார்களாம்.  அன்றிலிருந்து இன்று வரை கிருஷ்ண பகவானின் ஊரான ”நந்த்காவ்ன் கிராமத்திலிருந்து ஆண்கள் எல்லாம் பர்சானாவிற்கு வர, அந்த ஊர் பெண்கள் அவர்கள் மீது கலர் பொடி தூவி அடித்து அனுப்புவார்கள்.


 முன்பெல்லாம் சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டதுஉத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான ஹரியானாவில் கூட இந்தலட் மார் ஹோலிநடக்கிறதுகிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள்அவருடன் கல்யாணம் ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள்ஆனாலும் அடி விழுந்து விடும்!
 
என் அலுவலகத்தில் இருந்த நண்பர்ஆசாத் சிங்ஒவ்வொரு லட் மார் ஹோலி முடிந்தபின்னும் அலுவலகம் வரும்போது கை-கால்கள் வீங்கியபடி வருவதைப் பார்த்துஎன்ன இப்படி வீங்கியிருக்கே?”ன்னு கேட்டால் சந்தோஷமாய் பதில் சொல்வார் – “என் மனைவியும் மற்ற முறைப்பெண்களும் துரத்தித் துரத்தி அடித்தனர்எவ்வளவு நேரம் தான் தடுக்க முடியும்சில அடிகள் விழத்தானே செய்யும்!”.  சில கிராமங்களில் முறைப் பெண்கள் மட்டுமல்லாது எல்லாப் பெண்களும் ஊரில் உள்ள ஆண்களை துரத்தி அடிக்கிறார்கள்!லட் மார் ஹோலி சரி, தலைப்பில் சொன்ன விஷயம் பற்றி ஒன்றுமே சொல்லவே இல்லையே என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்.  இந்த சமயத்தில் பூக்களால் ஹோலி விளையாடுவதும் ஒரு வழக்கம். ஹோலிக்கு முன் வரும் ஏகாதசி அன்று விருந்தாவன் பாங்கே பீஹாரி மந்திர் [மஞ்சள் வண்ண எழுத்தில் சுட்டினால் அக்கோவில் சென்று வந்த அனுபவம் பற்றிய பதிவினை படிக்கலாம்!] என அழைக்கப்படும் கோவிலில் பல நூறு கிலோ பூக்களைத் தூவி ஹோலி கொண்டாடுவார்கள். காலை நான்கரை மணிக்கு கோவில் திறந்தவுடன் இந்த பூ மழை பொழியும் ஹோலி ஆரம்பித்து சுமார் அரை மணி நேரம் நடக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரது மேலும் கோவிலின் உள்ளே இருந்து பூக்களை மேலிருந்து தூவியபடியே இருப்பார்கள்.  பார்க்கவே அத்தனை அழகாய் இருக்கும்.  அத்தனை பூவும் வீணாகப் போகிறதே என்ற எண்ணம் மனதுக்குள் வந்தாலும், இதுவும் ஒரு வித வித்தியாசமான அனுபவம் தான்! தில்லி வந்த புதிதில் இப்படி ஒரு பூ மழை பொழியும் ஹோலியில் நானும் கலந்து கொண்டதுண்டு. அந்த நாட்களில் என்னிடத்தில் கேமிராவும் இல்லை – புகைப்படம் எடுக்கவும் தெரியாத நாட்கள் அவை! இன்றைக்கு காமிராவும் இருக்கிறது.  ஏதோ சுமாராக புகைப்படம் எடுக்கவும் தெரிந்திருப்பதாக எனக்குள் ஒரு நினைவும் உண்டு…. ஆனாலும் இருக்கும் பணிச் சூழலில் அலுவலக நாட்களில் வெளியே செல்வது கடினமாக இருக்கிறது.  விடுமுறை என்றால் வெள்ளி இரவு புறப்பட்டு திங்கள் காலைக்குள் வருவது போலத் தான் செல்ல வேண்டும்! அடுத்த ஹோலி சமயத்தில் செல்ல முடியுமா என்று பார்க்கலாம்!

நேற்று விருந்தாவன் நண்பர் ஒருவர் பூமழை பொழிந்த ஹோலி பண்டிகையில் கலந்து கொண்ட அனுபவத்தினை விவரித்த போது எனக்கு மீண்டும் எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று ஏக்கம் வந்தது உண்மை! 

நீங்கள் செல்ல முடிகிறதோ இல்லையோ, இந்தப் பதிவின் மூலம், இதில் கொடுத்திருக்கும் படம் மூலம் உங்களுக்கும் பூமழை பொழியும் ஹோலியில் கலந்து கொண்ட அனுபவம் கிடைக்கட்டுமே என்பதற்காகவே இப்பதிவு. 

இங்கே பூக்களால் ஹோலி விளையாடுகிறார்கள் என்றால் வாரணாசியில் இருக்கும் மணிகர்ணிகா [g]காட்- மயானபூமி - அங்கே கொண்டாடப்படும் ஹோலி மிகவும் வித்தியாசமானது.  பொதுவாக காசியில் [வாரணாசி] இருக்கும் சாதுக்கள் மயானபூமியில் இருக்கும் சாம்பலை தூவி ஹோலி கொண்டாடுவார்கள். பொதுவாக ஹோலி கிருஷ்ணர் - ராதா விளையாடியதாக சொல்லப்பட்டாலும் இந்த ஹோலி ஷங்கர் மகாதேவ் விளையாடுவதாக சொல்கிறார்கள்.  இந்த ஹோலி மயானபூமியில் என்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை!


படம்: இணையத்திலிருந்து...

“மசானே மே ஹோலி” என்று பெயரும் ஒரு பிரபலமான பாடலும் உண்டு.  பல பாடகர்கள் இதைப் பாடுகிறார்கள்.  அதில் பிரபலமான ஒரு பாடகர் - பண்டிட் சன்னுலால் மிஷ்ரா - அவரது பாடல் கேட்க விருப்பமிருந்தால் கேளுங்கள்! ஹிந்தி புரிந்தால் புரியும்..... சற்றே நீண்ட காணொளி என்பதையும் சொல்லி விடுகிறேன். பாடலிலேயே எப்படி விளையாடுவார்கள், யார் விளையாடுவார்கள் என்பதையும் சொல்வார் கேளுங்கள்!

பதிவினை ரசித்தீர்களா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

Photo Credit: Divyakshi Gupta.  Photos taken from the website: www.photogiri.com. Thanks Divyakshi. 

46 comments:

 1. பூமாரி பொழியும் ஹோலி... அடடா.... எவ்ளோ நல்லா இருக்கு! அந்த சமயங்களில் கூட்டம் அதிகம் என்பதால் பயணம் போகும் எண்ணம் நிறைவேறாது எனக்கு :-(

  சூப்பர் பாட்டு! ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. மதுரா கோயிலுக்கு ஒரு முறை சென்றுள்ளேன். இவ்விழா பற்றி தங்களது பதிவு மூலமாக நன்கு அறிந்தேன். 16 வயதினிலே படத்தில் வரும் மஞ்சக்குளிச்சி.... பாடலை நினைவுபடுத்தின சில புகைப்படங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. இதுவரை கேள்விப்படாத அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 4. ஒவ்வொரு படமும் மகிழ்சியை வாரி வாரி இறைக்கின்றது
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. #அத்தனை பூவும் வீணாகப் போகிறதே என்ற எண்ணம் மனதுக்குள் வந்தாலும், இதுவும் ஒரு வித வித்தியாசமான அனுபவம் தான்! #
  சில வருடங்களுக்கு முன் ,நானும் இந்த வித்தியாசமான நேரடியாக உணர்ந்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 8. ஹோலி குறித்து அறியாதன நிறைய அறிந்தோம்
  இந்த அடி விஷயம் இப்போதுதான் தெரியும்
  நல்ல வேளை நம்ம ஊரில் மஞ்சத் தண்ணீர்
  ஊத்துவதோடு முடிந்து போகிறது
  இல்லையெனில் கஷ்டம்தான்
  சுவாரஸ்யமான அருமையான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. அட, ஹோலியில் இத்தனை வகைக் கொண்டாட்டங்களா... மிகவும் சுவாரசியமாக உள்ளதே.. லட் மார் ஹோலி பற்றி அறிந்து வியந்தேன். இதுதான் சாக்கு என்று பெண்கள் தங்கள் கணவன்மார்களை விளாசித்தள்ளிவிடுகிறார்கள் போலும். :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 10. ஹோலி'யில் இத்தனை விதங்கள் இருக்கா !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 11. இன்றைய தினசரியில் மேல் நாட்டில் உள்ளது போல் தக்காளி எறிந்து ஹோலி கொண்டாடினால் தக்காளி விவசாயிகளுக்காவது பலன் கிடைக்கும் என்னும் ரீதியில் ஒரு செய்தி எனக்கு இந்த ஹோலிபண்டிகைகளில் சிலர் சில சமயம் வரம்பு மீறுகிறார்களோ என்றும் தோன்றும்

  ReplyDelete
  Replies
  1. பல சமயங்களில் வரம்பு மீறுகிறார்கள்..... அடிதடி தகராறும் வருவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. இதுவரை Holi Day என்றால் அதுவும் ஒரு Holiday என நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. வண்ணத் திருவிழா பற்றி வித்தியாசமான தகவல்கள். புதிய தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. பூ மழை தூவிய ஹோலிப்பண்டிகை அசத்தல்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 15. அனைத்தும் அழகிய படங்கள் ஜி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. படங்கள் எடுத்தவருக்கே உங்கள் வாழ்த்துகள் சென்றடையட்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. படங்களுடன் பகிர்வை ரசித்தேன் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே. குமார்.

   Delete
 17. ஹோலியில் இத்தனை வகையா ...ஆஹா ..அருமை ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 18. அருமை அருமை ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி எனப் பாடத் தோன்றியது. என் பிள்ளைகளுடன் டெல்லி கரோல்பாகில் பிச்காரி என்னும் குழல் வைத்து கலர்தண்ணீர் அடித்து மகிழ்ந்ததும் எங்கள் மேல்வீட்டு மீத்து ராபின் ரஜிதா திலிப் ஷர்மா குடும்பத்துடன் கலர்ப் பொடிகளை பூசிக் கொண்டதும் வண்ணமயமாய் நினைவில் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 19. ஹோலி ஏதோ கலர் பவுடர் தூவிக் கொள்வாங்க என்று மட்டும்தான் ஹீரியும் அதில் இத்தனை விஷயம் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன். படங்கள் வண்ண மயம்.அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 20. பூமழை பொழிந்த ஹோலி பண்டிகை அருமை.
  ஹோலி பற்றிய செய்திகளும் படங்களும் மிக அருமை.
  பாடல் பகிர்வும் அற்புதம். பாடலை ரசித்தேன் மொழி தெரியவில்லை என்றாலும்.(மசானே மே ஹோலி”)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 21. பண்டிகை விவரங்கள் ரசித்தேன்.
  மிக்க நன்றி சகோதரா.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

   Delete
 22. படங்கள் அசத்தல் வழக்கம் போலவே
  மது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது. படங்கள் எடுத்தது நான் அல்ல. பதிவின் கடைசியில் குறிப்பிட்டு இருக்கிறேன்!

   Delete
 23. படங்களும் பல சுவாரஸ்யமான தகவல்களும் வெங்கட்ஜி. ஹோலி பற்றி பல அறிந்திராத் தகவல்களை அறிந்து கொண்டோம்ஜி. மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....