எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 18, 2016

ஃப்ரூட் சாலட் – 162 – She Auto – பெருந்தலைவர் – வெளிநாட்டு வாழ்க்கை


She Auto

பணியில் இருக்கும் பல பெண்கள் தங்களது வேலை முடிந்து வீடு திரும்ப இரவு நேரம் ஆகிவிடும்போது வீட்டில் இருக்கும் அவரது பெற்றோர் அல்லது கணவர் அவர்களது பாதுகாப்பு குறித்த கவலை கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.  கேரளாவின் காவல்துறை இதற்காகவே She Auto  என ஒரு வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த வசதி பற்றிய ஒரு காணொளி கீழே…..
நல்ல வசதி இது.  எல்லா ஊர்களிலும் இப்படி இருந்தால், பெண்களுக்கு வரும் தொல்லைகளை தடுக்க முடியும்.  கேரள காவல் துறைக்கு இந்த வார பூங்கொத்து.


பூந்தொட்டி:

மனதை பூந்தொட்டியாய் வைத்திருங்கள்…..  குப்பைகளே வந்து விழுந்தாலும் அவற்றை உரமாக்கி விடும்….

விளையாட்டு:ரசித்த விளம்பரம்: காணொளி

கோதுமை மாவு தான் – அதற்கும் விளம்பரம் உண்டு! ஆனால் இந்த விளம்பரம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்….  ஹிந்தி புரிந்தால் நிச்சயம் ரசிக்க முடியும். பாருங்களேன்.வெளிநாட்டு வாழ்க்கை:

வெளிநாடுகளில் சென்று வேலை செய்யும் ஒருவரைப் பற்றிய கவிதை….  மனதைத் தொட்டது…. அக்கவிதை இதோ உங்களுக்காக…

தொலைந்து போச்சு….

துபாயிலிருந்து அனுப்பிய பணத்தில்
கொட்டகையைப் பிரிச்சு
மச்சு வீடு கட்டியாச்சு.

மலை அடிவாரத்தில்
நஞ்சை ஆறு ஏக்கர்
வாங்கிப் போட்டாச்சு.

வெளிநாட்டுப் பொருளா
வீடு நிறைஞ்சு போச்சு.

எல்லாம் முடிஞ்சு
நரைத்த தலையும்
தங்கப் பல்லுமா
புருஷன் வந்தபோது
இளமையும் தொலைஞ்சு போச்சு!  

ரசித்த கார்ட்டூன்!

இதுவும் ஹிந்தி தான்….  ஹிந்தி படிக்கத் தெரியாதவர்கள் வசதிக்காக கீழே தமிழிலும்…


தேநீரில் துடித்த ஈ:

பெருந்தலைவர் காமராஜ் பற்றிய விஷயம்.  படித்ததில் பிடித்ததாக இதோ….

பெருந்தலைவர் காமராஜ் ஒரு முறை ஒரு கலெக்டரை அழைத்திருந்தார். உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது. ”டீயைக் குடிங்கன்னேன்….” என்றார் காமராஜர். தேநீரைப் பருக சில நொடிகள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.

உடனே காமராஜர் அவரது தேநீர் கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் பெருந்தலைவர்.

பிறகு கலெக்டரிடம், ”டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க, அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே…. உங்களுக்கு டீ தான் பிரச்சனை. அந்த ஈக்கு…? வாழ்வா சாவாங்கறது பிரச்சனை. இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா… மக்களோட சைட்ல இருந்து எப்படி சிந்திப்பீங்க??”

கலெக்டர் தலை குனிந்தார்…

படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜர்.   

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 comments:

 1. பெருந்தலைவர் பெருந்தலைவர்தான்
  கேரள அரசின் திட்டம் போற்றுதலுக்கு உரியது
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. படிக்காத மேதை மிகவும் சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. ப்ரூட் சாலட் சுவையான கலவை. ரசித்தோம்.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 4. இன்று இடம் பெற்ற அனைத்தும் அருமை. நல்ல தேர்வு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. கேரளா ஷி ஆட்டோ பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்ததை நீங்கள் இங்கு அழ்காகக் குறிப்பிட்டுவிட்டீர்கள்.

  பூந்தொட்டி அழகு! விளையாட்டு தற்போதைய நிலையைச் சொல்லும் நறுக்!

  விளம்பரம் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. ரசித்தோம். இதுவரை பார்த்ததில்லை.

  கார்ட்டூன், பெருந்தலைவர் பற்றியதும் ரசித்தோம். தலைவரது வார்த்தைகள் சரிதானே.

  கவிதை மனதைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 6. அனைத்தும் நன்று ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 7. காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன். ஆட்டா விளம்பரம் மனதைத் தொட்டது. கவிதையும்.காமராஜர் நியூஸ் கற்பனையோ, நிஜமோ... நல்ல மெசேஜ்.

  ReplyDelete
  Replies
  1. கற்பனையோ, நிஜமோ - அதே தான் எனக்கும் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. இந்தி காணெளி புரிய வில்லை! மற்றவை சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. கேரளா அரசின் அந்த வீடியோ முகநூலில் பார்த்திருக்கிறேன் நல்ல திட்டம்...
  மற்ற எல்லாம் ரசித்தேன்... கவிதையை ரொம்ப...

  இரண்டு வீடியோவும் ஆட்டோ வீடியோவா இருக்குண்ணா.... வீடியோ சரி பண்ணுங்க...
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இரண்டும் வேறு வேறு காணொளி தான் இருக்கிறது குமார். மீண்டும் பாருங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. பெருந்தலைவரின் பெருமனதறிந்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 11. அனைத்துப் பதிவுமே அருமை. அதிலும் பெருந்தலைவர் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 12. She Auto அரசின் நல்ல திட்டம்தான் ,வருத்தம் என்னவென்றால் ,தொடர்ந்து செயல்படுத்தப் படுவதில்லை என்பதுதான் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. ஃப்ரூட் சலாடில் அனைத்தயும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 14. கேரள அரசின் காவல் துறைக்கு பாராட்டுக்கள்! வெளி நாட்டு வாழ்க்கை பற்றிய கவிதை அருமை. வழக்கம் போல் பழக்கலவை ருசியாய் இருந்தது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. காமராஜர் பற்றிய அனுபவம் அவர் என்றும் பெருமைக்குரியவர் என்பதை மெய்ப்பிக்கும் படி இருக்கின்றது. வெளி நாட்டு வாழ்க்கை கவிதை நச்! காட்டூன் ரசித்தேன்,

  இந்த வார பிருட் சலாட் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 16. கேரள காவல்துறை செயல் பாராட்டுக்குறியது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 17. அதனால் தான் அவர் பெருந்தலைவர்...
  அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா செல்வக்குமார் ஜி!

   Delete
 18. நல்லவங்களா இருந்தா கஷ்டம் தான் போல.
  மற்றவை ஆர்வம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி iK Way!

   Delete
 19. காமராஜர் செய்ததை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. எதுக்கு டீயை வீணாக்குகிறீர்கள் என்று ஈ யை எடுத்துவிட்டுக் குடித்ததாக எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன். (அப்படி எதுவும் படித்தமாதிரியும் இல்லையே என்றும் நினைத்தேன்). அவர் பார்த்த கோணம் மனதைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 20. சுவையோ சுவை. வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய கவிதையை வெகுவாகவே ரசித்தேன். இதை எழுதிய முகமறியா அந்த மூலவருக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....