எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 13, 2016

பொங்கல் கோலங்கள் - 2016


இம்முறை பொங்கலுக்கு முதல் நாள் தான் திருவரங்கத்திற்குச் செல்ல முடிந்தது. பொங்கலன்று காலையிலேயே “பொங்கலோ பொங்கல்” என்று வீட்டில் கொண்டாடிய பிறகு நானும் மகளுமாக பொங்கலுக்காக வீடுகளின் வாசலில் போடப்பட்டிருக்கும் வண்ண வண்ணக் கோலங்களைப் பார்ப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் புறப்பட்டோம்.  சென்ற வருடமும் அதற்கு முன்னரும் இப்படி புகைப்படம் எடுத்து அவற்றை எனது வலைப்பூவில் பகிர்ந்து கொண்டதுண்டு.  இம்முறை பொங்கல் முடிந்து இத்தனை நாட்கள் ஆனபிறகு தான் இங்கே பகிர்ந்து கொள்ள சமயம் கிடைத்திருக்கிறது!

நான் பார்த்த கோலங்களை நீங்களும் பார்க்க வேண்டாமா?  பாருங்களேன்!

கோலம் - 1 


கோலம் - 2


கோலம் - 3


கோலம் - 4


கோலம் - 5


கோலம் - 6


கோலம் - 7கோலம் - 8


கோலம் - 9


கோலம் - 10கோலம் - 11


கோலம் - 12 கோலம் - 13


கோலம் - 14


கோலம் - 15

கோலங்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வரிசையில் எந்த கோலம் உங்களுக்குப் பிடித்தது என்பதையும் சொல்லுங்களேன்!

வேறு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

தொடர்புடைய பதிவுகள்:46 comments:

 1. ரசித்தேன் நானும்! அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. கோலம் போடத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
  குறைந்து கொண்டே வரும் காலம் ஐயா இது.
  இக்காலத்திலும் இக்கோலங்களை வரைந்தவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்
  ரசித்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. ரசித்தோம் வெங்கட்ஜி! என்ன அழகாக ஷேட் எல்லாம் கொடுத்து...கண்ணைக் கவரும் விதத்தில் அழகான கோலங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. அலங்கோலமில்லா அழகுக்கோலம் ! ஒவ்வொன்றும் அழகோ அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 6. கோலக்கலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இப்பதிவு வாயிலாய் அறிவதில் மிகவும் மகிழ்ச்சி. கலைவண்ணம் காட்டிய கரங்களுக்கும் பதிவு செய்த கரங்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. கோலம் வரையும் பழக்கம், அதுவும் விஸ்தாரமாக வரையும் பழக்கம் தென் பகுதியில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதில் முகம் தெரியாப் பெண்களின் கலைத்திறனும், ஊக்கமும் அடங்கியிருக்கிறது. நீங்கள் சிலவற்றை எடுத்துப்போட்டது நன்றாக இருக்கிறது.

  அனைத்தும் அழகு. 5ம், 12ம் இன்னும் நன்றாக இருக்கிறது. 12ல் 3டி எஃபெக்ட் வந்ததுபோல் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லத் தமிழன்.

   Delete
 9. ஆர்வமுடன் கோலம் போட்டவர்களூக்கும் அதைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 10. கோலம் வரைவதும் ஒரு கலை சார்ந்த
  விஷயமே என்பதை நாம் இன்னும்
  ஏற்றுக்கொள்ளவில்லை.கோலங்கள்
  அனைத்தும் அருமை,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. எவ்வளவு பொறுமை! பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 13. கோலங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 14. ஏதோ போட்டிக்கு வந்த கோலங்கள் போல் தெரிகிறதேவரைந்தவர்கள் பெயர் கிடைக்க வில்லையா. உங்கள் வீட்டுக் கோலம் எது ரங்கோலிக்கும் கோலத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா

  ReplyDelete
  Replies
  1. போட்டி எல்லாம் இல்லை! அவரவர் வீட்டு வாசலில் போட்ட கோலங்கள் தான்! எங்கள் வீட்டு கோலம் இதில் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. தேவகோட்டை வீதிகள் நினைவில் ஆ(ஓ)டியது ஜி அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. கண்ணை கவரும் கருத்து மிக்க கோலங்கள் அழகோ அழகு, பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 17. எல்லாவ் கோலமும் அழகு தான். இதில் திருமதி ஆதி வரைந்த கோலம் எது?

  ReplyDelete
  Replies
  1. ஆதி போட்ட கோலம் இதில் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. அழகழகான வண்ணக் கோலங்கள்! முதலில் இருப்பது தஞ்சாவூர் பொம்மை போல, வித்தியாசம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 19. எதைச் சொல்ல எதை விட? அத்தனையும் அழகு. கோலமிட்ட மங்கையருக்குப் பாராட்டுகள். காணத் தந்த உங்களுக்கு நன்றி.

  அச்சு போல அமைந்த கோலம் 11 சற்று அதிகமாகப் பிடித்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. கோலம் - 11 - அவர்கள் வீட்டில் தினமும் இது மாதிரி கோலங்கள்..... எத்தனை உழைப்பு எனத் தோன்றும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 20. அழகான கோலங்கள் ....எனக்கும் தஞ்சாவூர் பொம்மை உள்ள கோலம் வித்தியாசமாக தெரிகிறது ....அழகு ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   Delete
 21. வண்ணக் கோலங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 22. கோலம் ஆறு ரொம்பப் பிடித்தது வெங்கட்.
  எல்லாக் கோலங்களும் கடும் உழைப்பின் பயன். அனைத்தும் அழகு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 23. அனைத்தும் அருமை,,
  1. நல்லா இருக்கு, வித்தியாசமான உருவத்தில் தலையாட்டுபொம்மைப்போல்,,,
  2,3 நல்லா இருக்கு,
  4 கலர் அருமை,
  9 எனக்கு பிடித்தது,,
  எல்லாம் ஓகே,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....