எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 6, 2016

நாங்களே நாளைய பாரதம்…..


நாளைய பாரதம் – பகுதி 8

புகைப்படக் கருவியை எடுத்துக் கொண்டு எங்கே சென்றாலும் பல படங்களை எடுத்துத் தள்ளுவது வழக்கமாகி இருக்கிறது. சென்ற வாரத்தில் பிள்ளையார் படங்களை பகிர்ந்து இருந்தேன்.  பிறகு தான் நீண்ட நாட்களாகவே நான் எடுத்த சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடவே இல்லை என்பதைப் பார்த்தேன்.  செல்லும் இடம் எதுவானாலும் அங்கே இருக்கும் சிறுவர்களைப் படம் எடுத்து அவர்களிடம் காண்பிப்பது எனக்கு வழக்கமாக இருக்கிறது. சிறுவர்களைப் பார்க்கும்போதே நமக்கும் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.  வாழ்க்கை முழுவதுமே அப்படியே குழந்தைகளாகவே இருந்து விட்டால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைப்பது நம் அனைவருக்கும் வழக்கம் இல்லையா!

குழந்தைகளாகவே இருப்பது நிச்சயம் சாத்தியமில்லை என்பதால் குழந்தைகளைப் பார்த்தாவது மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வோம்! 


இந்த ஒற்றுமை என்றும் நிலைத்திருக்கட்டும்….


தலையில் பூ, கழுத்தில் பாசிமணி…. முகத்தில் புன் சிரிப்பு….. 
இன்பமும் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்கட்டும்….


மூவர் அணி!
எங்களைப் புகைப்படம் எடுக்கல…..  உங்க தோள்ல துண்டு போட்டுடுவேன்!


கோபம் ஏனோ?…..


என்னை ஒரு மாமா ஃபோட்டோ புடிக்கிறாரு! நீ என்னடான்னா மொபைல நோண்டிட்டு இருக்கே! என்று அப்பாவிடம் கேட்பாரோ?


 இது விஷமப் புன்னகை!


 நான் குல்ஃபி சாப்பிடும் போது ஃபோட்டோ புடிச்சா எப்படி?


ஒண்டிக்கு ஒண்டி வரீங்களா?


இந்த சிரிப்பு போதுமா?

என்ன நண்பர்களே, இன்று வெளியிட்ட புகைப்படங்களை ரசித்தீர்களா?  இக்குழந்தைகளின் சிரிப்பில் நம் குழந்தைப் பருவத்தினை நினைத்து மகிழ்ச்சியடைவோம்!

இதற்கு முன்னர் நான் இதே தலைப்பில் வெளியிட்ட பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்க்காதவர்கள் வசதிக்காக இங்கேயும் தருகிறேன்.

“நாளைய பாரதம்” என்ற தலைப்பில் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே…..
வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.
36 comments:

 1. ஆஹா யதார்த்தமான அழகு...எளிமையான அழகுக்குழந்தைகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. அருமையான புகைப்படங்கள். அழகு! //சிறுவர்களைப் பார்க்கும்போதே நமக்கும் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது. வாழ்க்கை முழுவதுமே அப்படியே குழந்தைகளாகவே இருந்து விட்டால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைப்பது நம் அனைவருக்கும் வழக்கம் இல்லையா!//

  உண்மைதான் வெங்கட்ஜி. அவர்களின் கள்ளமில்லா உள்ளம்தான் நம்மை மகிழ்விக்கும் சக்தி.
  அத்தனைக் குழந்தைகளும் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துவோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. அத்தனையும் அழகு.. கொள்ளை அழகு..

  என்ன ஒரு சந்தோஷம்,, வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி!

   Delete
 4. அருமையான படங்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. குழந்தைகளைப் பார்ப்பதே மகிழ்ச்சி. என்னிடம் டிஜிடல் காமிரா இல்லாதிருந்தபோது ஒரு இரட்டையர்களை ஃபில்ம் சுருளில் படமெடுத்தேன் படம் எடுத்தவுடன் அவர்கள் என்னிடம் வந்து படத்தைக் காட்டச் சொன்னார்கள்; ஃபில்ம் சுருளை டெவலப் செய்துதான் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது அவர்கள் மகிழ்ச்சி வற்றி விட்டது நினைவுக்கு வருகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. கவலை இல்லாத இளம் தளிர்கள். நாளைக்கு ஒவ்வொருவர் வாழ்க்கையும் எப்படி அமையப் போகிறதோ... உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தைகள் அனைவரும் வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. அனைத்தும் அழகோ அழகு,,, நம் குழந்தைப் பருவமும் ,,, அப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அருமை சகோ, தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 8. இளைய மலர்களை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. அருமை ஐயா.குழந்தைகளுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பது எவ்வளவு உண்மை இரசித்தேன் நன்றி ஐயா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

   Delete
 10. குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. Mika arumaiyaana padangaL. intha mukangalaip paarththaalE kavalai paranthOdividum. Thanks Venkat.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 12. கவலை என்றால் என்ன என்பதை அறியாப் பிஞ்சுகள்
  படங்களைப் பார்க்க பார்க்க மனம் மகிழ்கிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 13. புகைப்படங்கள் அனைத்திலும் குழந்தைகள் இயல்பாக சிரித்துக் கொண்டு இருக்கின்றது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது.பகிர்வுக்கு நன்றி ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 16. அழகான குழந்தைகள். கள்ளம் கபடம் இல்லா அழகு.பகிர்வுக்கு நன்றி.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 17. அழகான குழந்தைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 18. படங்களில் எதார்த்த அழகு அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....