எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 20, 2016

சிலம்பு நடனம் – உத்திரப் பிரதேசத்திலிருந்து…..


தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் ஒன்று சிலம்பம்.  நமது கிராமங்களில் இன்று சிலம்பம் சொல்லித் தருபவர்களும், சிலம்பம்  பயன்படுத்துபவர்களும் அருகி வருகிறார்கள்.  சில மாதங்களுக்கு முன்னர் தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் கைகளில் குச்சி வைத்துக் கொண்டு நடனம் ஆடினார்கள் – உத்திரப் பிரதேசத்தின் “அவத்[dh]” பகுதி நடனம் அது. நடனத்தின் பெயரை அங்கே சொன்னாலும் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. 

நமது சிலம்பாட்டத்தினை ஒத்திருந்தாலும் ஏதோ நடனம் போல ஆடுகிறார்கள்.  நமது சிலம்பம் பற்றி இணையத்தில் தேடிய போது சிலம்பம் கற்றுத் தரும் பள்ளி பற்றிய இணையதளம் ஒன்றினைப் பார்க்க முடிந்தது.  அதில் சிலம்பம் பற்றி எழுதி இருந்ததில் ஒரு பகுதி கீழே…  [நன்றி – சிலம்பம் ஆறுமுகம் தளம்]

இந்தியா வளமிக்க நாடு பலவகையான கலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள தன்நிகரற்ற நாடு. தமிழ்நாடு மனித இனத்தோன்றலின் முன்னோடியாகவும் பல கலைகளின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. சிலம்பக்கலை ஓர் தற்காப்புக்கலையாகும். தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் முன்னோடியாகும். சங்ககாலத்திற்கு முன்பிருந்தே சிலம்பக்கலையானது நடைமுறையில் இருந்து வருகிறது. சங்ககால பலமையான தமிழ்ச்சொற்கள் சிலம்பக்கலையில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவது ஓர் சான்றாகும்.
 ஓடையில் ஓடுகின்ற தண்ணீரால் ஏற்படுகின்ற ஓசைக்கு சிலம்பல் என்று பொருள் காற்றில் மர இலைகள் ஆடும்பொழுது ஏற்படுகின்ற ஓசைக்கு சிலம்பல் என்று பொருள். அதுபோல சிலம்பக் கம்பை சுழற்றும்பொழுதும் ஓசை ஏற்படுவதால் சிலம்பல் என்ற வார்த்தை மறுவி சிலம்பம் என்றானது. சிலம்பத்தில் பல தற்காப்பு முறைகளும் சிறப்பான நுணுக்கங்களும் உள்ளதால் கலைவடிவம் பெற்று சிலம்பக்கலை என்றானது. சிலம்பக்கலை ஓர் போர்கலையாகும் இக்கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் முக்கால தமிழர்களின் வீரத்தினை தெளிவுபடுத்துகிறது. எனவே இதனை போர்சிலம்பம் என்று அழைத்தனர். பன்னிரண்டு ஆயுதங்களான தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு, வேல், இவற்றை அரசர்கள் போர்காலங்களில் பயன்படுத்தினர். வாளோடு சிலம்பத்தையும் ஏந்தி போர்காலங்களில் வீரர்கள் போரிட்டனர். மாவீரன் ஊமைத்துரை சுருள்பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். சிலம்பக்கலையில் வீரம் பற்றியும், குருபக்தி பற்றியும், ஒழுக்கநெறி பற்றியும் இன்றும் பழமை மாராமல் போதிக்கப்பட்டு வருகிறது.

நம் சிலம்பம் பற்றி நான் இங்கே அதிகம் சொல்லப் போவதில்லை.  உத்திரப் பிரதேசத்தின் சிலம்பு நடனம் பற்றிய பதிவு இது!  சுமார்  பத்து ஆண்கள் – அவர்களை விட உயரமான கழிகளை கைகளில் வைத்துக் கொண்டு குட்டைப் பாவாடை போன்ற உடையில் மேடையில் தோன்ற பார்த்துக் கொண்டிருந்த என் போன்ற பார்வையாளர்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பு – “இவர்கள் கழிகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?”  மேடையில் வட்டமாகச் சுற்றி வந்தபடியே தங்களது கையில் இருக்கும் கழிகளை தரையில் குத்தி ஒலி எழுப்புகிறார்கள்.  பத்துப் பதினைந்து சுற்றுகள் வந்தபிறகும் தொடர, அடுத்தது என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. 

டாண்டியா ஆட்டத்தில் இருக்கும் இரு சிறு குச்சிகளை வைத்துக் கொண்டு ஆடுவது போல இவர்கள் பெரிய குச்சிகளை வைத்துக் கொண்டு டாண்டியா ஆடவும் செய்தார்கள்.  சில மணித்துளிகள் இப்படி தொடர்ந்து ஆட, நம் சிலம்பாட்டம் எவ்வளவு வேகமாகவும் வீரத்தினை பிரதிபலிப்பதாகவும் இருக்கும் என்ற நினைப்பு வராமல் இல்லை! சிறிது நிமிடங்களுக்குப் பிறகு கொஞ்சம் சூடு பிடித்தது! வேகவேகமாக கழிகளைச் சுற்றி இரண்டு இரண்டு பேராக நடனம் ஆடத் துவங்கினார்கள்.  கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருந்தது.

வித்தியாசமாக ஒரு நடனம் பார்த்து வந்த உணர்வு இருந்தாலும், மனதில் தோன்றிய ஒரு விஷயத்தினை இங்கேயும் சொல்லி விடுகிறேன் – அவர்கள் அணிந்திருந்த உடை ஏதோ கவர்ச்சி நடனம் ஆடுபவரின் உடை போல இருந்தது!  சிகப்பு வண்ணத்தில் ஒரு மேல் சட்டை, தொடை தெரிய ஒரு கீழாடை – அதன் மேலே சில குஞ்சலங்கள்! முட்டி வரையாவது அணிந்திருக்கலாம் J என்று பக்கத்தில் இருந்தவரும் சொல்லியது கேட்டது!

நடனத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

புகைப்படங்கள் மற்றும் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

22 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. உத்தர பிரதேசத்தின் சிலம்பாட்டத்தை ஆடியவர்களை அருமையாய் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! சிலம்பாட்டம் ஆடும்போது இடுப்புக்கு கீழே அணியும் ஆடை நீளமாக இருந்தால் குச்சியை சுழற்றும்போது அசௌகரியமாக இருக்கும் என்பதால் குட்டையாக அணிந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. இந்த கலிகாலத்திலும்,அந்த கழி ஆட்டத்தைக் காண ஆட்கள் இருக்கிறார்களா :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. படங்கள் அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. ஒவ்வொரு ஊரிலும் ஒருவிதம் கலைகள் இன்னும் பராமரிக்கப் படுகிறதே என்று திருப்தி அடைய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 7. உத்திரபிரதேச சிலம்பாட்டம் அருமை.
  சிலம்பு நடனம் பேர் நல்லா இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 8. புகைப்படங்கள் அனைத்தும் அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 10. புதிய தகவல்களுடன் அழகிய படங்கள்..
  இனிய பதிவு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி!

   Delete
 11. படங்களே பதிவை விளக்கிடுது அண்ணா.... அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....