ஒவ்வொரு
முறை தமிழகம் வரும்போது ஒரு நாள் பயணமாக குடும்பத்துடன், திருச்சியின் அருகே
இருக்கும் ஏதாவது ஒரு இடத்திற்குச் செல்ல முடிவு செய்து, சில சமயங்களில் அந்த
முடிவினை செயலாக்குவதும் உண்டு! பல சமயங்களில் செல்ல முடிவதில்லை. சென்ற மே மாதம் தமிழகம் வந்திருக்கும் போது இப்படி
ஒரு நாள் பயணமாக எங்கே செல்லலாம் என்று யோசித்தபோது கிடைத்தது இரண்டு இடங்கள் –
ஒன்று கொல்லி மலை, மற்றது சிறுமலை. கொல்லி
மலை பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் இம்முறை சிறுமலை என்று முடிவானது.
இம்முறை
எனது அப்பாவும், அம்மாவும் வருவதாகச் சொல்ல கூடுதல் மகிழ்ச்சி. காலையில் நான், மனைவி, மகள், அப்பா, அம்மா என
ஐந்து பேரும் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஓட்டுனர் கார்த்திக் உடன்
பயணித்தோம். இந்த சிறுமலை என்பது திண்டுக்கல்
நகரிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் பயணித்து சிறுமலை பிரிவில் திரும்பி
பயணிக்க, மொத்தம் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சாலையின் இரு புறமும் புளிய மரங்கள் இருக்க,
இனியதான பயணமாக இருந்தது.
18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது சிறுமலை. கடல்
மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. சிறுமலையில் பழையூர், புதூர் என்று இரு இடங்களும்,
அந்த கிராமத்து மனிதர்களும் தான்.
ஊரின் மக்கள் தொகை 8000 என்பது தகவல். வெள்ளிமலை உச்சியில் சிவன் கோவில் ஒன்றும்,
மலையடிவாரத்தில் சிவசக்தி ரூபிணி கோவில் ஒன்றும் படகுத் துறையும் தவிர வேறு ஒன்றும்
பெரிதாக இல்லை. இயற்கையை ரசிக்க மட்டும் நினைப்பவர்கள் அங்கே சென்று வரலாம்.
கழிப்பறை வசதிகள் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்!
சிறுமலையின்
இயற்கை எழில் பற்றியும், அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் ஏற்கனவே மனைவி அவரது வலைப்பூவில் எழுதி
இருக்கிறார். இதுவரை படிக்கவில்லை என்றால்
படித்து விட வசதியாக, இரண்டு பகுதிகளின் சுட்டியும் கீழே தந்திருக்கிறேன்.
இந்த
இரண்டு பதிவுகளிலும், அந்தப் பயணத்தில் நான் எடுத்த புகைப்படங்களைச் சேர்த்திருந்தாலும்,
இந்த ஞாயிறில் மேலும் சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த புகைப்படப்
பகிர்வு. வாருங்கள் அங்கே எடுத்த படங்கள்,
இதோ உங்கள் ரசனைக்கு!.....
18 கொண்டை ஊசி வளைவுகளில் ஒன்று....
Watch Tower-லிருந்து எடுத்த படம்
வெள்ளை நிறத்தில் இட்லிப் பூ....
கிராமத்துப் பாதை.....
சிறுமலை கிராமத்தின் வருங்காலம்......
வெள்ளிமலை....
பார்க்கத் தான் சிறிது... மேலே செல்லச் செல்ல தெரியும்.....
மலைப்பாதையிலிருந்து வெள்ளிமலை தோற்றம்.....
மலைக்குச் செல்லும் கரடுமுரடான பாதை....
மலைப்பாதையிலிருந்து அடிவாரம் - ஒரு காட்சி....
பாதையில் பூத்திருந்த சிறுபூக்கள்....
மழை வருது மழை வருது....
மலைகள்..... மலைகள்....
பாதையிலிருந்து எடுத்த மற்றுமோர் புகைப்படம்....
இங்கேயே நின்று காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கலாமா....
இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?....
ஸ்பீக்கர் பூக்கள் கொத்துக் கொத்தாய்.....
ஒரு வீட்டில் தரைப் பகுதி முழுவதும் இந்தப் பூ....
கண்களைக் கவர்ந்த பூக்கள்....
இலையே பூவாய்.... வாழை வகைகளில் ஒன்று
நான் அழகா இருக்கேனா?....
மழைத்துளி மழைத்துளி பூவில் சங்கமம்....
சிகப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு.......
ஊதா ஊதா ஊதா ....
என்ன
நண்பர்களே, சிறுமலையில் எடுத்த புகைப்படங்களை ரசித்தீர்களா? நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
iniya kaalai poluthil alagu niritha pookal anithum arumai.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி My Mobile Studios நண்பரே.....
நீக்குசுற்றுப் பயணங்கள் சுகமானவை. அழகிய படங்கள்.
பதிலளிநீக்குசுற்றுப் பயணங்கள் சுகமானவை.... ஆதலினால் பயணம் செய்வீர்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அழகான காட்சிகள்.. போகத் தூண்டுகின்றன
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஅழகிய படங்கள் மனதைக் கவர்கின்றன..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குமனம் கவர் படங்கள் ஐயா
பதிலளிநீக்குஅவசியம் ஒரு முறை செல்ல வேண்டிய இடம்
குறித்து வைத்துக் கொண்டேன்
நன்றி
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவழக்கம்போல அசத்தலான புகைப்படங்களைக் கண்டோம், அழகான விளக்கங்களோடு. நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குநானும் சென்று இருக்கிறேன் என்றாலும் உங்கள் கேமிரா கண் வழியே பார்ப்பது வெகு அழகு :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குபடங்களை பார்க்கும்போதே சிறுமலையின் குளுமை புரிகின்றது. வயிறு உபாதை உள்ளவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்பது ஒரு முக்கியமான தகவல்தான்.
பதிலளிநீக்குகிராமத்தில் உள்ள பல வீடுகளில் கூட கழிப்பறை வசதி இல்லை. எல்லாம் திறந்த வெளியில் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி.
நானும் திருச்சியில் 12 வருடங்கள் இருந்திருக்கிறேன் கேள்விப் பட்டதே இல்லை . இப்பெல்லாம் அடிக்கிற வெய்யிலில் ஏற முடியாது . போட்டோக்கள் அழகாக உள்ளன .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
நீக்குஇயற்கையென்னும் இளைய கன்னியின் அழகை ரசித்தோம். படங்கள் அழகு.
பதிலளிநீக்குசுதா த்வாரகாநாதன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!
நீக்குபுகைப் படங்கள் அருமை! ஒரு முறை செல்ல வேண்டும். தங்கும் வசதிகள் எப்படி?
பதிலளிநீக்குகழிப்பறை வசதிகளே இல்லாத இடம். தங்குமிடம் எனப் பெரிதாக ஒன்றுமில்லை. திண்டுக்கல்லில் தங்கிச் செல்வது நல்லது. 18 கொண்டை ஊசி வளைவுக்கு அருகே ஒரு தங்குமிடம் இருக்கிறது. சில ரிசார்ட்களும் இருக்கிறது என்றாலும் அத்தனை வசதிகள் கொண்டதாகத் தெரியவில்லை. நாங்கள் காலை சென்று மாலை திரும்பி விட்டோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
அழகிய காட்சிகள் கண்ணைக் கவர்ந்தன ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குமுன்பெல்லாம் சிறுமலைப்பழம் ரொம்பப் பிரசித்தம்.
பதிலளிநீக்குஉங்கள் பகிர்வு கண்ணுக்கு விருந்து
இப்போதும் சிறுமலை பழம் கிடைக்கிறது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
கண்ணைக் கவரும் காட்சிகள் தலத்திற்கு அழைக்கிறது! அருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஅழகிய படங்கள் . இயற்கை எழில் சூழ்ந்தகாட்சிகள். மலர்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குஇயற்கை எழிலும் வண்ணப் பூக்களும் மனதைக் கொள்ளை கொள்கின்றன!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅடுத்த முறை இந்தப்பக்கம் வரும்போது, எங்கள் ஊர்ப்பக்கமும் வரவேண்டுகிறேன். திருமயம் கோட்டை, சித்தன்னவாசல், ஆவுடையார் கோவில், கொடும்பாளுர் என எங்கள் ஊரிலும் பார்க்கப் பல இடங்கள் இருக்கின்றன. (உங்கள் கேமிராவில் எங்கள் ஊரை இன்னும் அழகாகப் பார்க்க ஆசை)
பதிலளிநீக்குசித்தன்ன வாசல், திருமயம் கோட்டை ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. குடும்பத்துடன் ஒரு முறை வர வேண்டும். வரும்போது நிச்சயம் சொல்கிறேன் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
சிறுமலை...
பதிலளிநீக்குநத்தம் பக்கத்திலா...
ஆஹா... படங்களைப் பார்க்கும் போது பார்க்க வேண்டிய இடம்தான்...
பார்க்கலாம் அடுத்த முறை....
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
திண்டுக்கல்லில் இருந்து அருகே. நத்தம் - லிருந்து திண்ட்டுக்கல் வரும்போது சிறுமலை பிரிவு என்ற இடம் வரும் - அதிலே இடது புறம் திரும்ப வேண்டும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
படங்களையும் கருத்துக்களையும் இரசித்தேன் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅருமையான புகைப்படங்கள் ஜி மனதை அள்ளுகின்றன...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குதங்கும் வசதி உள்ளதா HOTEL
நீக்குஒன்றிரண்டு தனியார் தங்கும் இடங்கள் உண்டு. இணைய வழி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிறுமலையில் உங்கள் காமிராவின் பார்வையிலிருந்து எதுவும் தப்பிவிடவில்லை போலும் படங்கள் அருமை. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதாங்கள் ‘இலையே பூவாய்.... வாழை வகைகளில் ஒன்று’ என்று குறிப்பிட்டிருப்பது வாழை வகை அல்ல. அதனுடைய தாவரப்பெயர் Heliconia rostrata ஆகும். அதனுடைய ஆங்கிலப்பெயர் Hanging Lobster Claw or False Bird of Paradise. இது கேரளாவில் மிக அதிகமாக காணப்படும்.
தங்கள் துணைவியாரின் வலைப்பூவிற்கும் சென்று சிறுமலை பயணம் பற்றிய அவரது அருமையான தொடர் கட்டுரையையும் படித்தேன். மிக அருமையாக எழுதியிருக்கிறார்கள். அவருக்கு எனது பாராட்டுகள்!
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஐயா. அந்தப் படம் எடுக்கும்போது அங்கே ஒரு முதியவர் அமர்ந்திருக்க, அவரிடம் கேட்டதற்கு சொன்னது தான் வாழை வகை. அங்கேயே இருப்பவர் என்பதால் அப்படியே எழுதி விட்டேன். மேலதிகத் தகவலுக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
இன்று சிறுமலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
பதிலளிநீக்குஆஹா... சிறுமலைக்கு நீங்கள் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி முருகபூபதி ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.