வெள்ளி, 8 ஜூலை, 2016

ஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோகம் – அப்பா...

இந்த வார செய்தி:

மனிதாபிமான போலீஸாக இருக்கும்
அண்ணாதுரை ஏட்டையாவுக்கு ஒரு சல்யூட்கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு வடமாநில வாலிபர் ஒரு நாயை பிடித்து கடித்துவிட்டு அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கி வாகனத்தை பிடிங்கிக் கொண்டார் . இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து கொண்டு காலில் இரத்த காயங்களோடும் உடம்பில் அடிபட்ட தழும்புகளோடு இருந்த அவரை நெருங்கவே ஒரு போலீஸ்காரர் உட்பட பொதுமக்கள் பயந்து பின்வாங்கினர் .

வாகனத்தை பறிகொடுத்தவர் போலீசுக்கு தகவல் கொடுத்தவுடன் அங்குவந்த பி4 காவல்நிலைய ஏட்டையா அண்ணாதுரை என்பவர் லத்தியை தூக்கிக் கொண்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு கோபமாக அந்த இளைஞரை நெருங்கினார் ஆனால் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை புரிந்தவுடன் லத்தியை எறிந்துவிட்டு பழைய சட்டையை அவனுக்கு அணியசெய்து அவருக்கு உணவும் தண்ணீரும் வாங்கிக்கொடுத்தார். காயம்பட்டு ரத்தம் வழியும் காலை பார்த்துவிட்டு அவரை மருத்துவ மனையில் சேர்க்க அழைத்துச் செல்ல முயற்சித்தபோதுஅந்த வாலிபர் அண்ணாதுரை ஏட்டையா வாங்கிக் கொடுத்த தண்ணீர் பாட்டிலாலேயே அவரை தாக்க முயற்சி செய்தார்.

சிறிதுகூட கோபப்படாமல் அந்த வாலிபரை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அந்த வாலிபர் ஏற்கெனவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பக்கத்து பெட்டில் இருந்த நோயாளியை கடித்துவிட்டு தப்பி சென்றவர் என்பதால் கூட ஒரு அட்டெண்டர் இல்லாமல் இவரை அனுமதிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி மறுத்தபோது ''இவரை வெளியவிட்டால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்துமேலும் பொதுமக்கள் தாக்கி இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது' நாளை இவரை மனநல காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்வோம்'' எனக் கூறி அட்மிட் செய்து பார்த்து வருகிறார்.

லஞ்ச போலீசு ரவுடி போலீசு சாதிமதவெறி போலீசு அதிகார போலீசாருக்கு மத்தியில் மனிதாபிமான போலீசாக இருக்கும் அண்ணாதுரை ஏட்டையா வுக்கு ஒரு சல்யூட்.

- முகப் புத்தகத்தில் திரு ஷ்யாம் சுந்தர் ராஜ், தனது பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் ராமலிங்கம் அவர்களுக்கும் நன்றி.

இந்த வார முகப்புத்தக இற்றை:

வாழ்வது எப்படி? எனப் புலம்பாதே..... காலையில் கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு இரை இருக்கும் இடம் தெரிந்தா பறக்கிறது?

இந்த வார குறுஞ்செய்தி:

வாழ்க்கையில் யாரும் கற்றுத் தராத சில பாடங்களை தனிமைகற்றுத் தந்து விடுகிறது, வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்று....

இந்த வார காணொளி:

மொபைல் மோகம்.  மொபைலில் பேசிக் கொண்டிருக்கும்போது உலகத்தையே மறந்து விடுகிறார்கள் பலரும்.  இங்கே ஒருவர் என்ன செய்கிறார் பாருங்கள்....
இந்த வார குறும்படம்:

நாம் அனைவருமே இந்த குறும்படத்தில் வரும் பெண்ணைப் போலவே நடந்து கொள்கிறோம். இல்லை என்று உங்களால் சொல்ல முடிந்தால் வாழ்த்துகள்..... மூன்று நிமிடத்தில் நல்லதொரு Message சொல்லும் காணொளி....  பாருங்களேன்.....


படித்ததில் பிடித்தது:

படித்ததில் பிடித்ததாக கல்யாண்ஜி அவர்களின் கவிதை ஒன்று!

சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளில் பழங்கள்.
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.....

-          கல்யாண்ஜி.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


24 கருத்துகள்:

 1. அனைத்தையும் ரசித்தேன். பாஸிட்டிவ் செய்திகளுக்கு ஒரு செய்தி கொடுத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் சேர்க்கும்போதே உங்களுக்குப் பயன்படும் என நினைத்தேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 4. கல்லுக்குள் ஈரம் என்பது இந்த ஏட்டையாவுக்கே பொருந்தும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   நீக்கு
 6. மொபைல் காணொளி பாக்கிஸ்தானியை ரசித்தேன் கல்யாண்ஜியின் கவிதையும் ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 7. கவிதை அருமை... காணொளி முகனூலில் பார்த்திருக்கிறேன்...
  ஏட்டையா பாராட்டுக்குறியவர்.

  பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 8. அனைத்தும் அருமை.
  காவலருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 9. ஒட்டு மொத்தமாக யாரையும் குறை சொல்லக் கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 10. மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாய் நடந்து கொண்ட ஏட்டையா பாராட்டுக்குரியவர்..

  வழக்கம் போல பதிவு - இனிமை..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 11. இதை எப்படியோ தவற விட்டிருக்கிறோமே...

  போலீஸ்காரர் அண்ணாதுரைக்கு ராயல் சல்யூட்!!

  அப்பா தினம் காணொளி மிக மிக அருமை. நல்ல படிப்பினை..

  கல்யாண்ஜியின் கவிதை அருமை....மொபைல் ஃபோன் பல சமயங்களில் இப்படித்தான்...ஒரு சிலர் கீழே தடுக்கி விழவும் செய்கிறார்கள். ரோடு க்ராஸ் செய்யும் போது வண்டி இடிக்கும் நிலையில்...என்று மொபைலின் அடிமைகளாகித்தான் இருக்கிறார்கள்...

  அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 12. பழக்கலவையில் உள்ள இரண்டு காணொளிகளுமே அருமை. ஏட்டையா அண்ணாத்துரை அவர்களுக்கு ஒரு சல்யூட்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....