எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 17, 2016

பூ பூக்கும் ஓசை.....


இந்த ஞாயிறில் சில மலர்களின் அணிவரிசை...  சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட பயணங்களில் எடுத்த பூக்களின் புகைப்படங்கள்....  இதோ உங்கள் ரசனைக்கு.... கூடவே படித்ததில் பிடித்த சில வாசகங்களும் உங்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...


ஒரு நண்பனை இழப்பதை விட ஒரு நகைச்சுவையை இழக்கலாம்!மனிதன் வீழ்வது தோல்வியல்ல.... வீழ்ந்த இடத்தில் நின்றுவிடுவதே தோல்வி....


கடவுள் எவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ, அதை மனிதன் பிரித்து விடாமல் இருக்க வேண்டும்...


கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை.


இயற்கை, நேரம், பொறுமை – இவை மூன்று தான் மிகச் சிறந்த மருத்துவர்கள்......


ஒரு நீண்ட வாழ்க்கை சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சிறந்த வாழ்க்கை நீண்டு நிற்கக் கூடியது...


மனித இதயத்திலேயே புனிதமான விஷயம் உண்மையாக இருப்பது தான்...


மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நல்ல உடல் நலம் இருக்க வேண்டும்..... மோசமான ஞாபக சக்தி இருக்க வேண்டும்! 


கடுமையாக உழைக்கும் ஒரு மனிதனின் தூக்கம் இனிமையானது.


நல்லது என்பது ஒரே ஒரு விஷயம் தான் – அது அறிவு. கெட்டது என்பதும் ஒரே ஒரு விஷயம் தான் – அது அறியாமை!


என்ன நண்பர்களே....  பூக்களையும் வாசகங்களையும் ரசித்தீர்களா?

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

14 comments:

 1. ஸ்ரீராம். has left a new comment on your post "பூ பூக்கும் ஓசை.....":

  படங்களையும் ரசித்தேன். வரிகளையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தவறுதலாக உங்கள் கருத்து Delete ஆகிவிட்டது! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படங்களும் வாசகங்களும் அருமை ஜி ரசித்து படித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. அழகான படங்கள். அருமையான வாசகங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 4. படங்களை 'வாசித்தேன்' ,முக்கியமாய் அந்த மூன்று என் கண்ணில் பட்டது ,ரசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 5. பூக்களும் பொன்மொழிகளுமாக - இன்றைய பதிவு அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. எல்லாப்பூக்களுமே அழகு. அதுவும் வெள்ளைச் செம்பருத்தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   எனக்கும் அந்த வெள்ளைச் செம்பருத்தி பிடித்த படம். இதை எடுத்த இடம் - கோனார்க் சூரியனார் கோவில்....

   Delete
 7. அருமையான அழகான படங்கள் ஜி! வரிகளும் அருமை..

  கீதா: வெள்ளைச் செம்பருத்தி அவ்வளவு அழகு அதன் கீழே இருக்கும் வரிகளும் அருமை குறிப்பாக மோசமான மறதி...ஆம் உண்மைதான். எனக்கு மிகவும் மோசமான மறதி ஜி! நான் நல்லது என்பேன்...ஆனால் வீட்டில் திட்டு வாங்குவேன் அதற்காக..ஹ்ஹ

  ReplyDelete
  Replies
  1. மோசமான ஞாபக மறதி - பல சமயங்களில் தேவையானது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....