வெள்ளி, 15 ஜூலை, 2016

ஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என் அன்பே வா - மருத்துவமனை


இந்த வார செய்தி:

திணறும் தில்லி:

நேற்று அலுவலக நண்பர் ஒருவர் வீடு கிரஹப் பிரவேசம். அலுவலக நாள் என்பதால் மாலையில் அலுவலக நண்பர்களை அழைத்திருந்தார். எங்கள் அலுவலகத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் வீடு வாங்கி இருக்கிறார். தில்லியைத் தொட்டடுத்து இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் Gகாசியாபாத் பகுதியில் இருக்கிறது அவர் வாங்கி இருக்கும் வீடு.  தில்லியினைச் சுற்றி இருக்கும் Gகாசியாபாத், ஃபரிதாபாத், நோய்டா பகுதிகளை National Capital Territory என அழைப்பது வழக்கம்.

தில்லியின் உள்ளே வீடு வாங்குவதென்பது இப்போதெல்லாம் ரொம்பவே கடினமான விஷயமாக இருக்கிறது – One BHK என அழைக்கப்படும் வீடுகள் கட்டுவது குறைவு.  பெரும்பாலும் இரண்டு அல்லது 3 படுக்கை அறைகள் கொண்ட வீடுகளைத் தான் கட்டுகிறார்கள்.  விலையும் லட்சங்களில் இல்லாமல் கோடிகளில்! ஒருவரது சம்பாத்தியத்தில் இப்படி இங்கே வீடு வாங்குவது கடினம். தில்லியை அடுத்த NCR பகுதிகளில் 40-50 லட்சங்களில் வீடுகள் கிடைப்பதால் நிறைய பேர் அங்கே தான் வாங்குகிறார்கள்.

தில்லியை விட்டு வெளியே சென்று பார்த்தால், எங்கே பார்த்தாலும் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போல் ஆயிரக்கணக்கில் வீடுகள். அவற்றில் பெரும்பாலானவை விலை போவதில்லை என்றாலும், வாங்கியவர்களும் அங்கே தங்குவதில் நிறைய பிரச்சனைகள் – சரியான சாலை இல்லாதது, தண்ணீர், மின்சாரப் பிரச்சனைகள், பாதுகாப்பு இல்லாமை, என பிரச்சனைகள் அடுக்கடுக்காய். தினமும் வீட்டிலிருந்து தில்லியில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து செல்வது ஒரு பெரிய யுத்தம் செய்வதற்கு ஈடானது.

நேற்று மாலையில் தில்லியின் பல பகுதிகளிலும் பயங்கர மழை – கூடவே சாலைகளில் தேங்கிய தண்ணீரால் எல்லா இடங்களிலும் வாகன நெரிசல் – தண்ணீருக்குள் புகுந்து வாகனங்கள் செல்ல, பல வாகனங்கள் பழுதாகி நின்றுகொண்டிருக்க, எல்லாவற்றையும் கடந்து நண்பரின் வீட்டிற்குச் செல்ல கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது! பெரும்பாலான சமயங்களில் மழை இல்லாவிடினும் அவர் வீட்டுக்குச் செல்லும் வழியான தேசிய நெடுஞ்சாலை 24-ல் எப்போதுமே வாகன நெரிசல் இருந்து கொண்டிருக்கும்.  தேசிய நெடுஞ்சாலை என்று சொன்னாலும், தில்லியைத் தாண்டிவிட்டால் இரண்டு வாகனங்களுக்கு மேல் செல்ல முடியாத அளவு குறுகிய சாலை தான்!

இன்னுமொரு நண்பரின் வீடும் இதே பகுதியில் தான் இருக்கிறது. 35 மாடிக் கட்டிடத்தில் 20-வது மாடி அவருடையது. அவர் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்த போது மின்சாரம் இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்க, மின்சாரம் வரும் வரை காத்திருப்போம் – Generator Back up இருக்கிறது என்றாலும், நாளொன்றுக்கு 15 மணி நேரத்திற்கு மேல் Generator போட முடியாது என்பதால், Lift-க்கு Generator கனெக்‌ஷன் எல்லா நேரத்திலும் இருக்காது என்கிறார்.

தொடர்ந்து வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் – பல கட்டிய வீடுகள் வாங்க ஆளில்லாமல் இருக்கும் போதிலும்! மூச்சுத் திணறி என்றைக்கு தில்லியின் பூமி கதறப் போகிறதோ என்ற நினைவு அவ்வப்போது வருகிறது! 

நேற்று நண்பரின் வீட்டில் சில மணித்துணிகள் மட்டுமே இருக்க முடிந்தது. ஒன்பது மணிக்கு மேல் என்றால் அந்த சாலைகளில் லாரிகள் போக்குவரத்து ஆரம்பித்து விடும் – காரில் தான் சென்றோம் என்றாலும் என்னை அழைத்துச் சென்ற நண்பர் என்னை வீட்டருகில் விட்டுவிட்டு அவர் வீட்டுக்கு – தில்லியின் மறுபகுதியில் இருக்கும் அவர் வீட்டுக்கு - மொத்தம் 60 கிலோமீட்டர் பயணித்து வீடு திரும்ப வேண்டியிருந்ததால்.

எங்கே சென்று முடியப் போகிறதோ....  திணறினாலும் தில்லியில் தான் இருக்க வேண்டியிருக்கிறது.....  வேறு வழியில்லை!

இந்த வார முகப்புத்தக இற்றை:

பெரும்பாலான மருத்துவமனைகள் இப்படித்தான் இருக்கிறது என்பது சோகமான விஷயம்....

Sangeetha RG

மொக்க போட்டு நாளாச்சு...

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க

விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!

டாக்டர் : ?????

இந்த வார குறுஞ்செய்தி:

காரில் போகிறவனைப் பார்த்து கவலைப் பட்டு நிற்காதே.... கால் இல்லாதவன் உனைக் கடந்து போவதை கண் திறந்து பார்..... அப்போது புரியும் வாழ்க்கை!

இந்த வார ரசித்த பாடல்:

சில்லுன்னு ஒரு காதல் படத்திலிருந்து முன்பே வா என் அன்பே வா பாடல்இந்த வார ரசித்த பாடலாக.... இந்தப் பாடல் எப்போதும் எனக்கும் மனைவிக்கும் நினைவில் இருக்கும் பாடல் – காரணமிருக்கிறது. என் மகள் சில வருடங்களுக்கு முன் வரை Little Hearts Biscuit-ஐ மும்பே வா அன்பே வாBiscuit என்று தான் அழைப்பாள்....  மீண்டும் ஒரு முறை கேட்டு ரசிக்க!



இந்த வார விளம்பரம்:

சில விளம்பரங்கள் மனதை நோகடிக்கும் என்றால் ஒரு சில விளம்பரங்கள் நம் நெஞ்சைத் தொடும். இணையத்தில் உலவும் சமயங்களில் எதிர்பாராத விதமாக சில விளம்பரங்களைப் பார்க்க நேரிடுவதுண்டு. அந்த விளம்பரங்கள் பார்க்கும் முதல் முறையே மனதுக்குப் பிடித்து விடும்.  அப்படி ஒரு விளம்பரம் தான் இந்த விளம்பரம் – பங்க்ளாதேஷ் நாட்டு விளம்பரம். நீங்களும் பாருங்களேன்....




படித்ததில் பிடித்தது:

மகிழ்ச்சி

பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.  எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்பச் சொன்னார்.

இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்துத் தேடினர். ஒருவருக்கொருவர்
நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள் என்றார். அடுத்த ஒரே நிமிடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’. நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 கருத்துகள்:

  1. எல்லாம் அருமை...
    மகிழ்ச்சி குறித்தான பகிர்வு சூப்பர் அண்ணா...
    எது வேண்டாம் என்று நினைக்கிறோமே அதுதான் தொடரும்.. உங்களுக்கு தில்லி வாழ்க்கை... எனக்கு வெளிநாட்டு வாழ்க்கை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  2. பலூன் சொல்லும் பாடம் மிகவும் பொருள் பொதிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  3. சென்னையும் அப்படித்தான் ஹிட் கொண்டிருக்கிறது. மெட்ரோ ரயில் பணிகள் சென்னையை நெருக்கிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

    விளம்பரம் கண்கலங்க வைத்தது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அனைத்தும் அருமை. அதிலும் அந்த பங்களாதேஷ் விளம்பரம் மனத்தைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. மனம் நெகிழ்ந்தது - காணொளியினைக் கண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. டெல்லி வளர்ச்சியை நேரில் கண்டு நானும் பிரமித்துப் போயிருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  8. பலூன் விசயம் ரொம்ப கூல்
    நல்ல தொகுப்பு தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  9. டெல்லி வளர்ச்சி கிலி...
    சரிதான்
    தமா +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. பலூன் கதை நிறையப் படிச்சது. தில்லி வாழ்க்கைக்கு ஒரு காலத்தில் ரொம்ப ஆசைப்பட்டிருக்கேன். நம்ம ரங்க்ஸுக்குப் பிடிக்கலை! இல்லைனா எப்படியேனும் வந்திருப்போம். :) ஆனால் நான் பார்த்த தில்லி வேறே! இப்போ இருக்கும் நரகம் வேறு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி நிறையவே மாறி இருக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. அனைத்தும் அருமை. மகிழ்ச்சி நல்ல பாடம். பங்களதேஷ் காணொளி மனதைத் தொட்டுக் கண்ணில் நீர் வரவழைத்த விளம்பரம்...அருமை ஜி

    துளசி: கேரளம் இன்னும் அப்படி ஆகவில்லை.

    கீதா: டெல்லி மட்டுமல்ல ஜி சென்னையும் பிதுங்குகிறது. வெளியில் சென்று வந்தாலே எரிச்சலாகிவிடுகிறது..யாரையும் பார்க்க போகவேண்டும் என்றால் மனதை மிகவும் ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் புறப்பட வேண்டியிருக்கிறது. இதனால் கூட பல தொடர்புகள் நேரில் இல்லாமல் அலைபேசியில் மட்டுமே என்றாகி விழாக்களில் மட்டுமே என்றாகிப் போகிறது...

    பதிலளிநீக்கு
  13. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....