கடையில் வாங்கிய [ch]சுக்[kh]
படம்: இணையத்திலிருந்து.....
என்னங்க
இது [ch]சுக்[kh] – இஞ்சி காய்ஞ்சா சுக்கு என்பதில் “கு” வை மட்டும் எடுத்துட்டு அதைச் சாப்பிட வேற கூப்பிடறீங்களே? என்று கலக்கமடைய
வேண்டாம். “கடவுள் பாதி மனிதன் பாதி,
கலந்து செய்த கலவை நான்” என்ற பாடல் போல சட்னி பாதி, ஊறுகாய் பாதி கலந்து செய்த
கலவை தான் இந்த [ch]சுக்[kh].....
ஹிமாச்சலப்
பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று [ch]சம்பா......
ஹிமாச்சலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மலைப்பிரதேசமாக இருக்க, இந்த மாவட்டம்
சமவெளியில் இருக்கும் ஒரு மாவட்டம். [ch]சம்பா என்றவுடன் அங்கே மூன்று விஷயங்கள் மிகவும் பிரபலம் என்று
சொல்வார்கள் வட இந்திய மக்கள்.... அந்த மூன்று விஷயங்கள், கைக்குட்டைகளில் வரையும்
இயற்கை ஓவியங்கள், செருப்புகள் மற்றும் இந்த [ch]சுக்[kh]....
சாதம்,
சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் இந்த [ch]சுக்[kh] வைத்து
சாப்பிடலாம். ஹிமாச்சலப் பிரதேசத்தின் [ch]சம்பா மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது அனைத்து உணவகங்களிலும் இந்த
[ch]சுக்[kh] தருவது வழக்கம். அங்கே சாப்பிட்டபோது
பிடித்திருக்கவே எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டு வந்தேன். அங்கேயிருந்து தில்லி திரும்பும்போது கடைகளில்
கிடைக்கும் [ch]சுக்[kh] வாங்கியும் வந்தேன். சரி எப்படி செய்வது, என்னென்ன பொருட்கள் தேவை
என்பதைப் பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
ராய் [அ] கடுகு – 2 ஸ்பூன், வெந்தயம் – ½ ஸ்பூன், பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன், ஓமம் – 1 ஸ்பூன், பெருங்காயம் –
கொஞ்சமாக, சீரகம் – 2 ஸ்பூன், கொத்தமல்லி விதை 1 ஸ்பூன், சமையல் எண்ணை – 1 கப்,
பச்சை மிளகாய் கொரகொரவென அரைத்தது – 1 கப், இஞ்சி-பூண்டு – கொரகொரவென அரைத்தது – ½ கப், ஆம்சூர் பொடி – 2 ஸ்பூன், மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், மிளகாய் பொடி – 1
ஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு!
அப்பாடி எவ்வளவு பெரிய பட்டியல்!
எப்படிச் செய்யணும் மாமு?
கடுகு, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், சீரகம்,
கொத்தமல்லி விதை, பெருங்காயம் ஆகியவற்றை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக்
கொள்ளுங்கள்.
வறுத்து வைத்ததை சூடாறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு
அரைத்துக் கொள்ள வேண்டியது அடுத்த வேலை!
வாணலியில் எண்ணை விட்டு, அடுப்பில் வைத்து சூடாக்க
வேண்டும். எண்ணை சூடான பிறகு அரைத்து வைத்த கலவையைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வரை
வதக்க வேண்டும்!
அதன் பிறகு பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டு
அரைத்து வைத்ததை வாணலியில் சேர்த்து, மிதமான சூட்டில் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவை நன்கு பதமாக வெந்து விடும்.
பிற்கு, உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், ஆம் சூர்
பொடி ஆகியவற்றையும் கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். அடுப்பினை நிறுத்தவும்.
வாணலியில் இருப்பது நன்றாக ஆறியவுடன் ஒரு பாட்டிலில்
எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதன் மேலே எலுமிச்சை சாறையும் ஊற்றி வைத்து விட
வேண்டும். சப்பாத்தி, பூரி, சாதம் என
எதனுடனும் இந்த [ch]சுக்[kh] தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். கொஞ்சம்
காரம் அதிகமாகத் தான் இருக்கும் என்பதை முன்பே சொல்லி விடுகிறேன். இந்த [ch]சுக் [kh]இன்னும் சில வேறுபாடுகளுடனும் கிடைக்கிறது.
பச்சை
மிளகாய்க்கு பதிலாக சிவப்பு மிளகாய் சேர்த்து செய்யும் ஒரு வகையும், பச்சை-சிகப்பு
மிளகாய் கொஞ்சமாகவும், இஞ்சி அதிகமாகவும் சேர்த்து செய்யும் ஒரு வகையும்
உண்டு. காரம் அதிகம் என நினைப்பவர்கள்
கொஞ்சம் முந்திரி, பாதாம், அக்ரூட் போன்றவற்றை கொஞ்சமாக பொடித்துச் சேர்த்துக்
கொள்ளலாம்!
எல்லாமே
நம்ம ஊரிலும் கிடைக்கும் பொருட்கள் என்பதால் அனைவருமே செய்து பார்க்கலாம்! என்ன
செய்து பார்க்கப் போகிறீர்கள் தானே?
நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை...
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வித்தியாசமான ருசியில் இருக்குமோ?
பதிலளிநீக்குகார சாரமாக இருக்கும் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
சுக் சுக் சுக் அரே பாபா சுக் .....
பதிலளிநீக்குசெஞ்சுருவோம். நல்லவேளை எல்லாப் பொருட்களும் கைவசம் இப்போதைக்கு இருக்கு! மிளகாய்தான் குறைக்கணும்.
காரம் தான் கொஞ்சம் அதிகம்.... வாங்கி வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இன்னும் பாதிக்கு மேல் அப்படியே இருக்கு.... அதை பக்கத்துல வைச்சு பார்த்தபடியே சாப்பிட்டாலே காரம் ஏறுவது போல உணர்வு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
ஆஹா... இவ்வளவு அயிட்டங்கள் பார்க்கும் போதே வித்தியாசமாய்த் தோணுது...
பதிலளிநீக்குஒரு பார்சல் அனுப்புங்க அண்ணா.
அனுப்பிட்டா போச்சு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
//காரம் அதிகம் என நினைப்பவர்கள் கொஞ்சம் முந்திரி, பாதாம், அக்ரூட்..........// பரவாயில்லை! நான் காரமாகவே சாப்பிட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....
நீக்குசென்னையில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஸ்ரீராம் நீங்களே எக்ஸ்பேர்ட் செய்யறதுல இதுல எதுக்குச் சென்னைல கிடைக்குதானு அதான் வெங்கட்ஜி ரெசிப்பி கொடுத்துருக்காரே...
நீக்குபொறுமை இல்லை கீதா. ஆம்சூர், பீம்சூர்(ணம்!!) என்றெல்லாம் ஏதோ இருக்கு. அதுக்கு ஈக்வலண்ட் இங்க வேற ஏதோ கிடைக்கும்பாங்க! எதுக்கு அதெல்லாம்? நம்ம இஷ்டத்துக்கு கைக்கு கிடைச்சதைத் தூக்கிப் போட்டு செய்யறது வேற, அடுத்தவங்க அளவுல கஷ்டப்படறது வேற.. அதுதான் ரெடிமேடா கடைல வாங்கிடலாம்னு.. நீங்க வேற செய்யப் போறீங்க போல! நீங்க எனக்கு கொஞ்சம் தர மாட்டீங்களா என்ன! ஆனாலும் கடைல வாங்கி எப்படி இருக்குன்னும் பார்த்துடுவோம்!
நீக்கு:))))
அதானே... அவரே செய்வார்னு பார்த்தா, சென்னையில் கிடைக்குதா பார்க்கணும்னு எழுதி இருக்காரே.... :) இப்ப பதிலும் போட்டு இருக்காரு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
ஆம்சூர் இப்பல்லாம் தமிழகத்திலும் கிடைக்கிறது ஸ்ரீராம். திருச்சியில் கூட பார்த்தேன். கீதாஜி செய்யும் போது உங்களுக்குத் தர மாட்டேன்னு சொல்வாங்களா என்ன?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வடமாநிலங்களில் சப்பாத்திக்கு அச்சார் என்பது போல் இருக்கிறதே. காரம் நமக்கு சுத்தமாக ஒத்துக்காது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....
நீக்குஆகா... படிக்கும் போதே மிளகாய் காரம்...
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் பச்சை மிளகாய் வற்றல் மிளகாய் - ஒத்துக் கொள்வதில்லை..
கைவசம் சமையலுக்கு மிளகுதான்!..
கார சாரமான பதிவு.. வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஅடுத்த முறை எனக்கு ஒரு பாட்டில் சார்
பதிலளிநீக்குவாங்கி அனுப்பிட்டா போச்சு.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.
இது உடம்புக்கு நல்லது போல் இருக்கே :)
பதிலளிநீக்குரொம்ப நல்லது :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
வித்தியாசமான அச்சார்தான்.
பதிலளிநீக்குசட்னியும் ஊறுகாயும் கலந்த கலவை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
சுக்கு இல்லாத சுக் ! இங்கே கடையில் தேடிப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.
நீக்குவெங்கட்ஜி இது சுவைத்திருக்கிறேன். ஆனால் செய்ததில்லை. புதுவிதமான ரெசிப்பி நிச்சயமாக ஒரு பாட்டில் ரெடி பண்ண வேண்டும். மிக்க நன்றி ஜி!
பதிலளிநீக்குகீதா
செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.... ஸ்ரீராம் வேற கேட்டு இருக்காரே... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
காரம் என்றவுடன் செய்ய பயம்.
பதிலளிநீக்குகொஞ்சமாய் செய்து பார்க்கிறேன்.மாங்காய் பொடி நிறைய சேர்த்து செய்யலாம், காரம் கொஞ்சம் குறையும் தானே!
காரம் கொஞ்சம் அதிகம் தான்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
காரசாரமாக நீங்கள் செய்யுங்கள் .நான் பார்த்து ரசிக்கிறேன். சிங்கத்துக்கு மிகப் பிடித்த ஊறுகாய். தில்லி சம்பந்தி செய்து அனுப்புவார். நன்றி வெங்கட்.
பதிலளிநீக்கு