வெள்ளி, 29 ஜூலை, 2016

ஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்ணம் கொண்ட.... – தாய்க்குணம்!


இந்த வார செய்தி:

பெங்களூருவில் உள்ள ஒரு 36 வயது ஓவியர் பாதல் நஞ்சுண்டஸ்வாமி. திறமையுள்ள இந்த ஓவியருக்கு பொதுநலத்திலும் அக்கறை உண்டு. வடக்கு பெங்களூருவில் உள்ள சுல்தான்பாளையா சாலையில் 12 அடி அளவிற்கு சாலையில் நீண்ட பள்ளம்.  பெங்களூரு நகராட்சியோ, குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியமோ இதை நீண்ட நாட்களாகவே கண்டு கொள்ளவில்லை. அங்கே தான் நஞ்சுண்டஸ்வாமி தனது திறமையை பயன்படுத்துகிறார்.


இப்படி இருந்த சாலை....


இப்படியாக.....  கவனைத்தினை ஈர்க்க.....

9 அடி நீளமும், 18 கிலோ எடையும் கொண்ட ஒரு முதலை பொம்மையை, ஆறாயிரம் ரூபாய் செலவில் தயாரித்து, அந்த 12 அடி நீள் பள்ளத்தில் வைத்து, கூடவே பச்சைக் கலர் பொடிகளையும் தூவி வைத்து, நகராட்சி மற்றும் வாரியங்களின் கவனத்தினை ஈர்க்க முயன்றிருக்கிறார். 

மற்றுமொரு கவன ஈர்ப்பு....

பெங்களூருவின் நயந்தஹள்ளி ஜங்ஷனில் அமைத்த The Frog Prince காட்சியில் கன்னட நடிகை சோனு கௌடாவும் இவருடன் சேர்ந்து கொள்ள அந்த இடம் இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது!

திறந்திருக்கும் சாக்கடை.....
எமதர்மன் வாய் போல!

அதே போல திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை ஒன்றினை எமதர்மன் வாயைப் போல வரைந்து வைக்க, அதனை ஒரே நாளில் சரி செய்திருக்கிறது மாநகராட்சி.  இப்படி தொடர்ந்து அவரது திறமையால் மாநகராட்சியை ஈர்த்து பிரச்சனைகளை தீர்க்க வைக்கும் திரு நஞ்சுண்டஸ்வாமி அவர்களை வாழ்த்துவோம்.

அவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே!  நீங்களும் வாழ்த்தலாமே.....


இந்த வார முகப்புத்தக இற்றை:

வீட்டுக்கு வந்த விருந்தாளிட்ட போகும்போது பாத்து பத்திரா போயிட்டு வாங்கன்னு சொன்னா அது கிராமம்.
...
...
...
அதுவே போறப்ப கேட்ட சாத்திட்டு போங்கன்னு சொன்னா அது நகரம்!

இந்த வார காணொளி:

மனதைத் தொட்ட காணொளி.....  Robin Hood Army செய்யும் நற்செயல்...  பாருங்களேன்.
இந்த வார குறுஞ்செய்தி:

The best thing about speaking the truth is you don’t have to remember what you said!

ஒரு பொய் சொன்னா பரவாயில்லை நினைவில் வைத்துக் கொள்ளலாம்! பல பொய்கள் சொல்லும்போது அவை, அனைத்தையும் நினைவில் வைத்து, மேலும் மேலும் பொய் சொல்ல வேண்டியிருக்கும்!

இந்த வார ரசித்த பாடல்:

சிகரம் படத்திலிருந்து.....  “வண்ணம் கொண்ட வெண்ணிலவே!” பாடல்.படித்ததில் பிடித்தது:

தாய்க்குணம்கரப்பான் பூச்சி
மயிர்க்கொட்டிப் புழு
பல்லி எனப் பார்த்து
அம்மா பயந்து கொள்ளும் பட்டியலில்
பூனையும் உண்டு
நேற்றிரவு பக்கத்து வீட்டுப் பூனையின்
பிரசவத்தின் போது
அம்மா கூடவே இருந்தாள்.
எங்க வீட்டு நாயின் பசி வேட்டைக்கு
பூனைக்குட்டிகள் ஆளாகிவிடக்கூடாது
என்பதற்காய்

***ஜே. ஃபிரோஸ்கான். என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி....கவிதைத் தொகுப்பிலிருந்து....

திரு ஜே. ஃபிரோஸ்கான் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்
வெங்கட்.

புது தில்லி.

22 கருத்துகள்:

 1. அனைத்துமே அருமை. கிராமம், நகரம் வேறுபாடு சுட்டிக்காட்டிய விதம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 2. திரு நஞ்சுண்டஸ்வாமிக்கு வாழ்த்துகள். அனைத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. சாலடில் எப்போதும் போல் நிறைவான ருசி. சிகரம் பாடல் வெகு சுகம். நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 4. வணக்கம்,

  கவன ஈர்ப்பு ஓவியம்,, கவிதை என அனைத்தும் அருமை,,
  ஓவியருக்கு எம் வாழ்த்துக்கள்,, சமூக அக்கறை வாழ்த்துக்கள்,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 5. இப்படியும் கவனத்தை ஈர்க்க முடியும்
  பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று சாதித்த இவர்கள்
  பாராட்டிற்குரியவர்கள்
  வாழ்த்துவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. பாதல் நஞ்சுண்டச்வாமி போற்றுதலுக்குரிய கலைஞன். உங்கள் ரசனை நன்று. இமையம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மீண்டும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   நீக்கு
 7. நஞ்சுண்டசுவாமி என்றாலே அதிகாரிகளுக்கு நஞ்சுண்ட மாதிரி இருக்குமே !
  வண்ணம் கொண்ட வெண்ணிலவு எனக்கும் மிகவும் பிடிக்கும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 8. திரு. பாதல் நஞ்சுண்டஸ்வாமி பாராட்டுக்குறியவர் ஜி
  கரப்பான் பூச்சி கவிதை நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. கிராமம்.. நகரம் - வேறுபாட்டினை உணர்த்திய விதம் அருமை..

  திரு.நஞ்சுண்டஸ்வாமி அவர்கள் பாராட்டுக்குரியவர்..

  இனிய பதிவு.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. பெங்களூரில் இந்த பாட் ஹோல்களுக்கு பூசை செய்து கவன ஈர்ப்பு செய்தார்கள்குறுஞ்செய்தி ரசிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட் ஹோல்கள் பற்றி மேலே எழுதி இருப்பதும் பெங்களூரில் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. நஞ்சுண்ட சுவாமி பிரமிப்புதான்...கண்டிப்பாக அவரை வாழ்த்திப் பாராட்ட வேண்டும்.

  வண்ணம் கொண்ட வெண்ணிலவே ...அருமையான பாடல் ரசிக்கும் பாடல்...

  குறுஞ்செய்தியை ரசித்தோம் இறையையும்...

  இணையம் அவ்வப்போதுதான் வர முடிகின்றது. எனவே வரும் போது அனைத்தையும் வாசித்து விடுகிறோம் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....