ஞாயிறு, 24 ஜூலை, 2016

கபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....



இரண்டு நாட்களுக்கு முன்னர் ஃப்ரூட் சாலட் பதிவில் தில்லியில் 26 திரையரங்குகளில் கபாலி திரையிடப்படுகிறது என்பதையும், டிக்கெட்டின் விலை 200 ரூபாய் முதல் 1000 வரை என்பதையும் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வெளியிடும்போது பார்க்கப் போகிறேன் என்றும் எழுதி இருந்தேன். வெள்ளிக்கிழமை காலை இந்தப் பதிவு வெளியானது.  மாலையில் நண்பரிடம் இருந்து அழைப்பு.  “சனிக்கிழமை கபாலி போகப் போறோம், உனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணப் போறேன்!”......

நண்பர்கள் அனைவரும் சேர்ந்து போகலாம் என்றதும் சரி எனச் சொல்லி விட்டேன்.  வெள்ளி இரவு பார்க்கும்போது சனிக்கிழமை இல்ல, ஞாயிற்றுக் கிழமை தான் போறோம் – காலைல பத்து மணிக்கு ஷோ – PVR Rivoli என்பதும் அவர் சொன்ன செய்தி! சரி வசதியாகப் போயிற்று – சனிக்கிழமை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் அதுவும் நல்லதற்கே என்று சொல்லி விட்டேன்.

சனிக்கிழமை அலுவலகத்துக்குச் சென்று அங்கேயிருந்து கிழக்கு தில்லியின் தில்ஷாத் கார்டன் சென்று இரவு வீடு திரும்பும்போது மணி 10.  தில்லியின் கேவலமான தட்பவெப்பத்திற்கு ஒரு குளியல் போட்டு தூங்கினால் இன்று காலை எழுந்த போது மணி 8.30.  அட 10 மணிக்கு கபாலி போகணுமே என்பது நினைவுக்கு வர அவசர அவசரமாக குளித்து தயாராகி நண்பரின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தேன்.  அவர் அப்போது தான் நல்ல தாராளமாக ஒரு கிண்ணம் நெய் விட்டு உருளைக்கிழங்கு துண்டங்கள் போட்டு நல்லதொரு சேமியா உப்புமா செய்து கொண்டிருந்ததன் வாசனை வாசல் வரை வந்து சேர்ந்தது.

இரண்டு பேருக்கு செய்த சூப்பரான சேமியா உப்புமாவை மூன்று பேராகச் சாப்பிட்டு, மேலுக்கு ஒரு மசாலா தேநீரையும் உள்ளே செலுத்தி, கொஞ்சம் நெய் ஏப்பம் விட்டு அவர் வீட்டிலிருந்து புறப்பட்டோம். இன்றைக்கு நாங்கள் மூன்று பேர் தவிர எங்கள் நண்பர்கள் குழுவில் கபாலி பார்க்க மற்ற நண்பர்களும் டிக்கெட் புக் செய்திருந்தார்கள். மொத்தம் 20 பேர் தான்! கபாலி பட Gangsters ஐ விட அதிகமாக இருக்குமோ என்று ஒரு எண்ணம். 

PVR RIVOLI எங்கள் வீட்டிலிருந்து வெகு அருகே தான். நடந்தே கூட போகலாம்! ஆனாலும் பேருந்தில் ஆளுக்கு ஐந்து ரூபாய் டிக்கெட் வாங்கி தியேட்டர் எதிரே இறங்கிக் கொண்டோம்.  சமீபத்தில் தான் DTC பேருந்துகளின் கண்டக்டர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் மெஷின் கொடுத்திருக்கிறார்கள். ஆறு ஐந்து ரூபாய் கேட்டால், ஆறு முறை டிக்கெட் தனித் தனியாக கொடுக்கிறார்! ஒரே சமயத்தில் ஆறு டிக்கெட் வராதாம்... பேப்பர் வேஸ்ட்! ஒரே டிக்கெட்டில் 6 X 5 Rs. என்று எடுத்தால் பேப்பர் வேஸ்டேஜ் ஆகாதே என கண்டக்டரை கொஞ்சம் டரியலாக்கினேன்.

PVR Rivoli வாசலில் எங்கு பார்த்தாலும் ஒரே தமிழனம்...  நெருப்புடா, கபாலிடா என படம் பார்ப்பதற்கு முன்னரே ரவுஸ் விடத் துவங்கி இருந்தார்கள். வாயிலில் தடவித் தடவி பாதுகாப்பு சோதனை செய்யும் காவலாளி கைகூப்பி வணக்கம் சொன்ன பிறகு உடல் முழுவதும் வெள்ளை Gloves போட்ட கையால் தடவினார் – சோதனை செய்கிறாராம்.....  கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டியது போல இருந்தது! பேசாம ஒரு மெஷின் கொடுத்துவிட்டால் நல்லது!

இன்னுமொரு ஊழியர் நுழைவுச்சீட்டினை வாங்கி ஒரு மெஷினில் காண்பித்து A1, A2, A3 என்றார்!  கூடவே ஒரு பொய்ப்புன்னகை – Welcome to PVR  Sir… Hope you enjoy the show! என்று ரோபாட்டிக்காக ஒரு வாசகம்! பாவம் ஒரு நாளைக்கு எத்தனை பேரிடம் இப்படிச் சொல்ல வேண்டுமோ. நாள் முழுவதும் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் வீட்டுக்குச் சென்ற பிறகு தூக்கத்திலும் இதனையே சொல்லுவாரோ.....  

ஆன்லைனில் பார்க்கும்போது எல்லா சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது போல காண்பிக்கிறார்கள் – ஆனால் திரையரங்கினுள் சென்ற பிறகு பார்த்தால் பல இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன! எதற்கு இந்த பித்தலாட்டம் எனத் தெரியவில்லை.  ஒரு வேளை நுழைவுச் சீட்டின் விலையை அதிகமாக்கவா?  திரையரங்கில் பல தெரிந்த தலைகள். அனைவருக்கும் கொஞ்சம் புன்னகை அள்ளி வீசி, சில கட்டிப் பிடி வைத்தியங்கள் முடித்த பிறகு இருக்கையில் அமர்ந்தோம். 

படம் ஆரம்பிக்கும் முன்னர் தேசிய கீதம் – கப்பல் படையைச் சேர்ந்த INS கப்பல் ஒன்றின் திறமைகளைத் திரையில் காண்பிக்க அனைவரும் எழுந்து நின்று தேசப் பற்றினை பரை சாற்றினோம்! சில பல விளம்பரங்களைத் தொடர்ந்து எல்லா ரஜினி படங்களின் ஆரம்பம் போல SUPER STAR RAJINI ஒவ்வொரு எழுத்தாய் தெரிய ஆரம்பிக்க விசில் பறந்தது! நல்ல வேளை பால் பாக்கெட் எடுத்து தலைவர் மேல் அபிஷேகம் செய்யக்கூடிய ஆள் யாரும் வரவில்லை! மூன்றாம் நாள் என்பதாலோ! விசில் மட்டுமே பறந்தது – பேப்பர் துண்டுகளோ மற்றவைகளோ பறக்கவில்லை என்பதால் PVR ஊழியர்களும் வாழ்த்துவார்கள்.

பக்கத்து இருக்கைகளில் தனியொருவனாய் வந்து கபாலியை ரசித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு அருகே இன்னும் இரண்டு பேர் – தொடர்ந்து படத்தினைப் பார்த்தபடியே இயக்குனரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள் – இந்த சீன் ஏன் இப்படி எடுத்து இருக்காரு? இந்த இடத்துல Background Score இப்படி இருந்தா நல்லா இருந்துருக்கும்.....  – தொடர் வர்ணனை – பாவம் வருங்கால இயக்குனர் போலும் – அவருக்கு ரஜினியோ, கலைப்புலி தாணுவோ ஒரு preview ஷோ ஏற்பாடு பண்ணி இருந்திருக்கலாம்!

நுழைவு சீட்டு விலையிலேயே சிங்கப்பூர், தாய்லாந்து எல்லாம் காண்பித்து இருந்தார்கள். இடைவேளை சமயத்தில் தட்டு ஏந்திய காரிகைகளும் இளைஞர்களும் நடந்தார்கள் – கூடவே ஒரு பெரிய பாக்கெட்டில் பாப்கார்னும், கோலாவும்! வாங்காது அமர்ந்திருந்த மற்றவர்களை நோக்கி திரையரங்க ஊழியர்கள் கையில் புத்தகத்தோடு அணுகினார்கள் – Would you like to have some food/drinks சார்? பாவம் அவர் வேலை அவருக்கு! டிக்கெட் விலையே அதிகம் அதில் 100 ரூபாய் கொடுத்து 10 ரூபாய் பாப்கார்ன் வேறு வாங்க நாங்கள் தயாராக இல்லை.

படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. நாங்களும் படத்தோடு படமாக ஒன்றியிருந்தோம்.  கபாலி தனது மகள் மற்றும் மனைவியோடு மீண்டும் சேர்ந்து விட்டார். கூட்டம் கூட்டமாக பலரும் பலரையும் சுட்டுக் கொண்டிருந்தார்கள். படம் முழுவதும் நெருப்புடா எத்தனை முறை வருகிறதோ அதனை விட அதிகமான பேர் குண்டுகளுக்கு இரையானார்கள்.... படத்தில் தாங்க! வன்முறை, வில்லன்களின் குண்டுகுண்டான தங்கச் சங்கிலிகள், பெரிய பெரிய மோதிரங்கள் பளபளத்தன! கடைசியாக துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தோடு படம் முடிந்தது! கபாலி – 2 வருவதற்கான ஒரு அறிகுறியோ?

வெளியே வந்தோம். நம்ம ஆளு ஒருத்தர் பாவம் – 100 ரூபாய் பாப்கார்ன் வாங்கினவர் தியேட்டர்ல படம் பார்க்கற ஸ்வாரசியத்துல சாப்பிட மறந்திருந்தார் போலும்.  கையில் பாப்கார்ன் பாக்கெட்டோடு நெருப்புடா, மகிழ்ச்சிடா என்று சொல்லிக் கொண்டே சாலையில் நடந்தபடியே பாப்கார்ன் சாப்பிட்டார்.  என் கவலையெல்லாம், பாப்கார்ன் சாப்பிடும் உணர்வில் சாலையைக் கடக்கும் அவர் சாலையில் சீறி வரும் வண்டிகளைப் பார்க்காமல் நடக்கிறாரே என்பது தான்.....

நாங்களும் சாலையைக் கடந்து கன்னாட் ப்ளேஸில் இருக்கும் சரவண பவனில் மதிய உணவைச் சாப்பிட்டு வீடு திரும்பினோம்.....  என்ன சாப்பிட்டோம்.....  அதை தனியா போஸ்ட் பண்ணாலும் பண்ணுவேன்.....

அதெல்லாம் சரி, கபாலி படம் எப்படி இருந்தது? சொல்லவே இல்லையே? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு......
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....

மகிழ்ச்சி........

படம் பத்தி வேறு என்ன சொல்ல!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

50 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ம்ம்ம்ம்... பார்த்தாச்சு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. மகிழ்ச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  3. கடைசிவரை சீன் காட்டிட்டீங்க படத்தைப் பத்தி எதுவும் சொல்லாமல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்றதுக்கு ஏதாவது இருந்தாத்தான்..!

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

      நீக்கு
  4. In cricket commentary (over the years, particularly Radio-audio), I have heard several times "Wasted Delivery"

    'Kabali' too, echo the same.

    And I was in Delhi last week. Due to hectic schedule I could not talk or meet you. I stayed in Kidvai Nagar (opp. SJ Hospital).
    'Delhi Metro service' is simply great. Uber services was also handy

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes. When you did not ring up, I thought, you must be awfully busy. Anyway, happy to note that you enjoyed our Delhi Metro.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

      நீக்கு
  5. முடிவில் தாங்கள் சொல்லி இருந்த விமர்சனத்தை மூன்று முறை படித்தேன் ஜி மிக்க சந்தோஷம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவில் விமர்சனம் - அட இருக்கா என்ன?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. எப்படியோ நீங்களும் கபாலியை பார்த்துட்டீங்க! மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  7. நீங்க கான்ட்'ரவர்ஷியலாக எதுவும் எழுதமாட்டீர்கள். இதுவும் ஒரு நல்ல உத்தி. தேவையில்லாமல் பிடிக்காதவர்களை உற்பத்திபண்ணவேண்டாம்.

    கதையை சரியாகப் புரிந்துகொள்ள இரண்டாவது தடவையும் பார்த்துவிட்டேன்.

    அனேகமாக நீங்க க்விக் லஞ்ச் (வெரைட்டி ரைஸோட) சாப்பிட்டிருப்பீங்க. மத்யானத்துல தோசைலாம் போடறாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாம் முறை பார்த்தீர்களா? நல்லது. நண்பர் ஒருவர் இதோடு ஆறு முறை பார்த்திருக்கிறார் - கூடவே பல நண்பர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் - ஒவ்வொரு முறையும்.

      வெரைட்டி ரைஸோட க்விக் லஞ்ச் - இல்லை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. ஆறு முறையா? நம்பவே முடியவில்லை. ஒரு சிலருக்கு இந்தப்படம் பிடித்து இருப்பது உண்மைதான் போலும். எத்தனை பெரிய ரசிகனாக இருந்தாலும் ஆறு முறை பார்த்தால் அவருக்கு படம் பிடிச்சு இருக்குனுதான் அர்த்தம்.

      எனக்கு ரஜினி - ராதிகா ஆப்தே கெமிஸ்ட்ரி பிடிச்சது. படத்தில் வருகிற லேடீஸ் கேரக்டர்கள் எல்லாம் மனதில் நிக்கிறாங்க.

      ரஜினி பத்தி சொல்லணும்னா. நீலாம்பரி வசனம்தான் ஞாபகம் வருது. "படையப்பா! வயசானாலும் அந்த ஸ்டைல் உன்னைவிட்டுப் போகலை"..

      மற்றபடி, "மகிழ்ச்சி" ங்க!

      உங்க தளத்தில் நான் முதல் முறை பின்னூட்டம் எழுதுறேனா?

      ---
      ---
      -----

      மகிழ்ச்சி! :)

      நீக்கு
    3. எனது வலைப்பூவிற்கு உங்கள் முதல் வருகை..... முதல் கருத்துரை.... மகிழ்ச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வருண்.

      நீக்கு
  8. வருண் அவர்கள் எங்கோ எழுதியது நினைவில். அநேகமாக எல்லோரும் ரஜினியால் ஈர்க்கப்படவர்களே படம் எப்படி வந்தாலும் அவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள்/ ரஜினியால் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுவார்கள் அதனால்தான் விமரிசனம் நன்றாக இல்லாவிட்டாலும் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  9. தொலைக்காட்சியில் எப்போப் போடுவாங்களோ அப்போ முடிஞ்சா பார்த்துக்கறேன். மூணு நாளா எல்லாரும் மகிழ்ச்சி, மகிழ்ச்சிங்கறாங்களேனு பார்த்தேன். இதானா! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மூணு நாளா எல்லாரும் மகிழ்ச்சி, மகிழ்ச்சிங்கறாங்களேனு பார்த்தேன். இதானா! :)//

      அதே தான்....

      மகிழ்ச்சி..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  10. கபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....
    இந்த படத்தை நானும் என் குடும்பத்துடன் உங்களுடன் பார்த்தேன். நல்ல time pass தான். வேறு ஒன்றும் இல்லை. ரிஷபன் சொன்னபோல நல்லா சீன் காட்டிட்டாங்கப்பா.ரூபாய் 300 இல் மலேஷியாவையும் தாய்லாந்தையும் பார்த்தோமே. மற்றபடி, "மகிழ்ச்சி" ங்க! ஏன்னா இன்னைக்கு 2000 செலவுப்பா
    Vijayaraghavan
    NeW Delhi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வருவதற்குள் நீங்கள் உள்ளே சென்று விட்டீர்கள்..... அதனால் தான் உங்களை அங்கே பார்க்க முடியவில்லை....

      இன்னைக்கு 2000 செலவுப்பா! :) எப்போதாவது ஒரு முறை தான் சினிமாவுக்கு போகிறோம்...... நான் கடைசியாக தில்லியில் படம் பார்த்தது மூன்று வருடம் முன்பு - கண்ணா லட்டு தின்ன ஆசையா படம்..... அந்த அனுபவம் இங்கே....

      http://venkatnagaraj.blogspot.com/2013/01/blog-post_28.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  11. மகிழ்ச்சிங்கிறதை சந்தோஷமாச் சொல்ல விடமால் பண்ணிவிட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  12. நாளை மறுநாளுக்கு டிக்கெட் புக் செய்திருக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... மகிழ்ச்சி.... எஞ்சாய்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி My Mobile Studios.

      நீக்கு
  14. கபாலி விமர்சனத்தை எப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று பார்க்கலாம் என்று படிக்க ஆரம்பித்தால் கடைசி வரை கபாலியைப் பார்த்த அனுபவங்களை மட்டுமே எழுதியிருக்கிறீர்கள்!

    வழக்கமான ரஜினி படங்களிலிருந்து ஒரு வித்தியாசமான படம் என்று துபாயிலிருந்து என் மகன் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான படம்தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  15. கபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி... என்று சொல்லிய பதிவில் நீங்கள் உப்புமாவை பற்றி சொல்லி இருப்பதை பார்க்கும் போது மறைமுகமாக நீங்கள் ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறதே? ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  16. அந்த மாயா நதி பாட்டு பத்தியாவது ஒரு வரி ...

    வழக்கமான ரஜினி யைக்
    காணோமே !!

    என்ற கவலை .உங்களை
    ஒரு தவலை
    ரவா பொங்கலை சாப்பிட வைத்து,

    மகிழ்ச்சி என்று சொல்லத் தூண்டியதோ !

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா...

      பாட்டு இன்னும் சில முறை கேட்க வேண்டும். இன்று முதல் முறையாகக் கேட்டது மனதில் நிற்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

      நீக்கு
  17. அட...படத்தை பார்த்து விட்டீர்களா?
    என்னை பொறுத்தவரை ரஜனியின் பல பழைய படங்கள் ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்... பார்த்தாச்சு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்.

      நீக்கு
  18. எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனார் என்பதைப் போல் உள்ளது,உங்களின் கபாலி விஜயம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  19. 'கபாலி' அனுபவமும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' அனுபவமும் extreme - ஆக இருந்திருக்குமே! ஆனாலும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' அனுபவம் இனி கிடைக்கவே கிடைக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணாச்சி. நம்ம இரண்டு பேர் மட்டுமே பார்த்த மாதிரி அனுபவம் இனிமே கிடைக்காது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

  20. Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart people in TN say that it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***

    Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

    After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

    Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

    Watch more Kabali!

    By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி NEWWORLDORDER - உங்கள் பெயர் சிவா?

      நீக்கு
  21. ஓ! இந்த நியூ வேர்ல்ட் ஆர்டரின் பெயர் சிவா வா??!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது Profile சென்றபோது அவரின் முகவரியாக www.sivawrites.com என இருந்தது. அதனால் தான் இங்கே அப்படி குறிப்பிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  22. வெங்கட்ஜி நானும் பார்த்துவிட்டு ம்ம்ம் மகிழ்ச்சி! வேறு என்ன சொல்ல பழைய ரஜனிதான் நிறைய நினைவுக்கு வந்தார்....

    கீதா: உங்கள் பதிவு படு சுவாரஸ்யம்...நெய் போட்ட உருளைக்கிழங்குடன் சேமியா...மகிழ்ச்சி!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  23. Friends, don't waste time in identifying me! Just focus on comments. We should support good things; forgive and forget the bad things. Then, It will be easy life.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி NewWorldOrder!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....