எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 22, 2016

ஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணின் உடை

இந்த வார செய்தி:கபாலி இன்றைக்கு தில்லியிலும் ரிலீஸ் ஆகிறது – சும்மா இருக்க முடியாமல் PVR Cinemas இணையதளத்தில் கபாலி [தமிழ்] இங்கே திரையிடுகிறார்களா, டிக்கெட் விலை எவ்வளவு என்று பார்க்க பயங்கர அதிர்ச்சி! தலைநகர் தில்லி மற்றும் NCR பகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட 26 PVR திரையரங்குகளில் கபாலி தமிழ் மொழியில் திரையிடுகிறார்கள். இது தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் சில திரையரங்குகளில் திரையிடுகிறார்கள்.  PVR திரையரங்குகள் தவிர வேறு சில திரையரங்குகளும் கபாலி திரையிடுகின்றன.

ரூபாய் 200 முதல் ரூபாய் 1000 வரை டிக்கெட்டுகள் – திரையிடப்படும் நேரம், திரையரங்கு மற்றும் வசதிகள் பொறுத்து டிக்கெட் விலை மாறுபடுகிறது – எனது வீட்டின் அருகே இருக்கும் PVR திரையரங்கில் பார்க்கலாம் என்றால் 300 ரூபாய் டிக்கெட் – அதன் பிறகு Convenience Fee, போக்குவரத்து செலவு என எல்லாம் சேர்த்தால் ஒரு ஆளுக்கு 400 ரூபாய். அங்கே ஒன்றும் சாப்பிடாமல் திரும்பினால் இவ்வளவு – ஏதேனும் சாப்பிட்டால் இன்னும் சில நூறுகள் பழுக்கும்!

1000 ரூபாய்க்கு அப்படி என்ன வசதி இருக்கும் என்று பார்த்தால் Recliner Normal Seat என்று போட்டிருக்கிறது. படுத்துக்கிட்டே சினிமா பார்க்கலாம்!

நெருப்புடா.....  தொட்டால் சுடும்டா என்று சொல்லியபடியே PVR இணைய தளத்திலிருந்து வெகு விரைவில் வெளி வந்தேன்! இங்கே அலுவலக நண்பர்கள் – வட இந்திய நண்பர்கள் – “நெருப்புடா....  நெருங்குடாஎன்றெல்லாம் வித்தியாசமாக உச்சரித்து, அதன் அர்த்தம் என்ன எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் – ரஜினி படத்தினால் சில வட இந்தியர்களுக்கு சில தமிழ் வார்த்தைகள் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனக்கு! தமிழ் வளர்க்க வாய்ப்பளித்த ரஜினிக்கு வாழ்த்துகள்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு கணவன் மனைவிக்கு ஃபோன் பண்ணினான்! அவள் ஃபோனை எடுத்ததும் கேட்டான்...

"எங்க இருக்க?"

"நானா... ம்ம்ம்... வராண்டாவுல இருந்து அடுப்படி போற வழில, ஹாலுக்கு இந்தப்பக்கம் இருக்குல்ல ஒரு பெட்ரூம்... அந்த கதவுக்கிட்ட நிக்கிறேன்!" - என்றாள் மனைவி!

"லூஸா நீ... வீட்டுல இருக்கேன்னு ஒரு வார்த்தைல சொல்லாம உளறிட்டு இருக்க?"

"நீ தான்யா லூஸு! லேண்ட் லைனுக்கு ஃபோன் பண்ணிட்டு எங்க இருக்கேன்னு கேட்டா... இப்படிதான் சொல்லமுடியும்!"

இந்த வார காணொளி:

Be positive….  இந்த மனிதருக்கு 37 வயது. மொத்த உயரம் 91 செ.மீ. மட்டுமே.  பேச முடியாது. ஆனால் என்னவொரு தன்னம்பிக்கை இவருக்கு....  மனதைத் தொட்ட காணொளி.... பாருங்களேன்....
இந்த வார கவலை:

இத்தனை பேரு "கபாலி" முதல் நாள் ஷோக்களுக்கு டிக்கெட் வாங்கிட்டாங்க என்பதை விட அம்புட்டு பேரும் படம் பார்த்துட்டு இங்க விமர்சனம் எழுதுவாய்ங்களேன்னு நினைக்கும் போது தான் டரியலாகிறது கவலைப்படுவது வெங்கடேஷ் ஆறுமுகம்!

இந்த வார விளம்பரம்:

தாய்லாந்து விளம்பரங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.  பல விளம்பரங்களை இப்படி இணையத்தில் தேடித்தேடி பார்ப்பதுண்டு.  தாய் இன்ஸூரன்ஸ் ஒன்று இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக இங்கே... நிச்சயம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதையும் தொடும்.... பாருங்களேன்...

படித்ததில் பிடித்தது:

சேலை அணிந்தால்
காற்றில் பறந்த மாராப்பினால்
இடை தெரிந்து தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பாய்...
பேன்ட் சட்டை அணிந்தால்
உடலோடு ஒட்டிய
ஆடை தான்
என் உணர்ச்சியை தூண்டியதென்பாய்...
பாவாடை சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்தது தான்
என் உணர்ச்சியை தூண்டியதென்பாய்...
முழுதாய் முக்காடிட்டால் கைவிரலும்,கால்விரலும் தெரிந்து தான் என் உணர்ச்சியை தூண்டியதென்பாய்...
பழங்காலம் போல் அடுக்களையிலேயே பெண்ணை விட்டு வைத்தாலும்
பெண் என்பவளை நான் பார்த்ததே இல்லை அது தான் என் உணச்சியை தூண்டியதென்பாயோ..??
உணர்வுத் தூண்டல்
உடை எம் தவறெனில் மன்னிப்பு கோருவேன்...
வணங்கும் உடை ஒன்று சொல்..?
நான் தரிக்கிறேன்
அதை மீறி எனை தப்பர்த்தம் கொண்டால் உன் தோலுரிக்கிறேன்...
உணர்வுகளின் தூண்டல்
மனித இயல்பு
மறுக்கவில்லை நான்...
மனசொன்று எமக்கும் உண்டு
மறுப்பாயா..நீ..?
நான்
என் செய்தால்
உனை ஈன்றவளுக்கீடாய்
எனை பார்ப்பாய்...
ஆண்மகனே..???

எழுதியது யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். அவருக்கு இந்த வாரப் பூங்கொத்து!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


26 comments:

 1. காணொளிகள் தவிர மற்ற அனைத்தையும் ரசித்தேன். காணொளிகள் சுற்றுகின்றன! தம சாபமிட்ட ஆனபிறகு வந்து வாக்களிக்கிறேன்!

  ReplyDelete
 2. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். தமிழ்மணம் சில சமயங்களில் வரமல்ல - சாபம் தான்! :)

  ReplyDelete
  Replies
  1. முன்னால் எல்லாம் sabmit என்று டைப் அடித்தால் சப்மிட் என்று வரும். இப்போ சம்பந்தமே இல்லாமல் வருகிறது. எனவே நான் சொல்லவருவது என்னவென்றால் நான் சொல்ல வந்தது சப்மிட் தானே தவிர சாபமிட்ட அல்ல!!!

   தம வாக்கிட்டு விட்டேன். (vaakkittu என்று டைப் செய்தால் வாங்கிட்டு என்று வருகிறது)

   Delete
  2. பல சமயங்களில் இந்த Transliteration மாற்றி மாற்றி Option தருகிறது!

   தங்களது மீள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Replies
  1. உங்களது முதல் வருகையோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வினோத் சுப்ரமணியன்.

   Delete
 4. எங்கு பார்த்தாலும் கபாலி... முடியலை...
  மற்றவை அருமை...
  தன்னம்பிக்கைக்காரரின் வீடியோ முன்பு பார்த்ததுதான் என்றாலும் மீண்டும் பார்த்தேன்.

  கவிதை அருமை...
  எல்லாமே அருமை அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்....

   Delete
 5. ஜோக்..நல்ல ரசனை

  காணொளி.....ஆஹா


  கவலை....உண்மை...

  விளம்பரம்....உணர்வுகளின் தொகுப்பு

  கவிதை....மிக மிக அருமை


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 6. கபாலி பரவாயில்லை ரகம். Similar to Billa2 to some extend. கதை பிடிக்காவிட்டாலும். ரஜினியின் கரிஷ்மாக்காக ஒரு தடவை பார்க்கலாம். B & C ரசிகர்கள் ரசிக்கமுடியாது் நிறைய கேரக்டர்கள் சிலபல இடங்களில் நெளியவைக்கிறார்கள். மரட்டுக்காளை, பாட்ஷா போல் மாஸ படமும் இல்லை. படையப்பா மாதிரி ஸ்டோரியும் இல்லை. கேங்ஸ்டர் படம். ஆனாலும் லிங்கா பாபா வகையறா படமில்லை. எதிர்பார்க்காமல் போனால் ரொம்ப ஏமாற்றமில்லை. திரையில் எழுத்து வரும்போதே விசிலடிக்க ஆரம்பிக்கும் ரசிக்க்குஞ்சுகள் பெரும்பாலும் எமாற்றமடைவார்கள். ஆரம்பத்தில் விசிலடிச்ச ரசிகர்கள் பெரும்பான்மையான சமயம் அமைதி. படம் முடிந்தபின் ரஞ்சித் படம்னு பார்த்தா நல்லாருக்கு என்ற ஆறுதல் விமரிசனம். விகடன் மார்க் 44 தாண்டாது (ரஜினி ரஞ்சித்துக்காக)

  ReplyDelete
  Replies
  1. கபாலி - ஓ நீங்க பார்த்தாச்சா... நல்லது..... பொதுவா சினிமா போறதில்லை என்றாலும் ஏனோ ரஜினி படம் போகணும்னு தோணும்... நாளைக்கு போனாலும் போகலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. மொத்தமாகப் பெண்களே ஆண்களின் உணர்வுத்தீண்டல் என்கிறதோ கவிதைஎனக்கும் கபாலி விமரிசனம் பற்றிய பயம் உண்டு. ஏற்கனவே ஒன்று வந்தாய்விட்டது படித்தும் ஆயிற்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. படிச்ச கவிதை எனக்கும் பிடிச்சது. இந்த வாரக் கவலை எனக்கு ஒருவாரமாகவே இருக்கு! :) கபாலி படத்தினாலும் நற்செயல்கள் நடந்தது குறித்து சந்தோஷம். தமிழ் அப்படியானும் வளரட்டும். ரொம்ப வளராமல் இருக்குனு சொல்லிட்டு இருக்காங்களே! :)

  ReplyDelete
  Replies
  1. கவலை ஒரு வாரமாவே இருக்கா.... ஹாஹா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 9. என் சார்பாகவும் அந்த கவிஞருக்கு ஒரு பூங்கொத்து :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. அனைத்தும் சுவை.
  பெண்ணியக் கவிதை அருமை என்றாலும் மிகையாகத் தோன்றுகிறது.
  உண்மையில் ஈன்றவளுக்கீடாக பெண்ணைப் பார்த்தால் அவர்கள் விரும்புவார்களா என்ற ஐயம் உண்டு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 11. தூணிலும் இருப்பார்..துரும்பிலும் இருப்பார்..இவர் யார் எனக் கேட்டால், கபாலிடா என்பான் இன்றைய இளைஞன்.முடை நாற்றம். சகிக்க முடியவில்லை ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி ஜி!

   Delete
 12. கபாலி ஜுரம் குறைந்திருக்கும் ...ஓ நாங்களும் விமர்சனம் வெளியிட்டு அதில் ஒருவராகிவிட்டோம்!!! ரஜனி படம் பார்க்கலாம் என்று தோன்றியது உண்மைதான் ஆனால் அவரது பழைய படங்கள் போல இல்லை...இனி அவருக்கு ஓய்வு தேவை என்றே தோன்றுகிறது.

  காணொளி அருமை.

  கவிதை பிடித்திருந்தது....

  அனைத்தும் அருமை வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. இந்த வார கண்ணொளி மிக அருமை
  இந்த வார விளம்பரம் மிக மிக அருமை
  படித்ததில் பிடித்தது கவிதை அதை விட அருமை
  கலக்கிட்டப்பா

  விஜயராகவன் டெல்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....