ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 26
இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 25 பகுதிகளைப்
படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே
அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down
Menu.....
Hotel Blue Bayou-வின் Oasis Restaurant-ல் மதிய உணவினை முடித்துக் கொண்டு அடுத்ததாய் நாங்கள்
சென்ற இடம் கொஹிமாவில் நாங்கள் தங்கிய இடத்திற்கு! கொஹிமா நகரில் ஒரு இரவு ஒரு
பகல் மட்டுமே இருப்பதாகத் தான் எங்களது திட்டம். பகல் நேரத்தில் முடிந்த அளவு
சுற்றுலாத் தலங்களைப் பார்த்து விட்டு அங்கிருந்து அசாம் மாநிலத் தலைநகர் Gகௌஹாத்தி செல்வதாகத் தான் எங்களது திட்டம். கொஹிமா, ஒரு மாநிலத் தலைநகர் என்றாலும், அங்கே
ரயில் நிலையமோ, விமான நிலையமோ இல்லை.
கொஹிமா நகரிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்
நாகாலாந்தின் இன்னுமொரு மாவட்டம் Dதிமாபூர். இந்த Dhதிமாப்பூர் நகரில் தான்
ரயில் மற்றும் விமான வசதிகள் இருக்கிறது.
கொஹிமா செல்ல விரும்புவர்கள் இங்கே வந்து தான் கொஹிமாவுக்கு, தனியார்
வாகனங்களிலோ, அல்லது அரசுப் பேருந்துகளிலோ செல்ல முடியும். நாங்களும் எங்கள் அடுத்த இலக்கான Gகௌஹாத்தி செல்ல Dதிமாபூர் நகரிலிருந்து தான் இரவு 11.00 மணிக்கு
ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம்.
கொஹிமாவில் இருந்த கேரள நண்பர் இதைக் கேட்டவுடன்,
கொஞ்சம் பதட்டமடைந்தார். Dதிமாபூர் நகரில் பதட்ட நிலை இருப்பதைச்
சொன்னதோடு, அதன் காரணத்தினையும் சொல்லி, எவ்வளவு சீக்கிரம் இரயில் நிலையத்திற்குள்
சென்று சேர்ந்து விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கே சென்று விடுவது நல்லது
என்பதையும் சொன்னார். அப்படி என்ன பதட்ட நிலை? என்றும் கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதில் கொஞ்சம் அதிர வைத்தது.
பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் பங்க்ளாதேஷ்
நாட்டவர்கள் வந்து தங்கி இருக்கிறார்கள் – அரசுக்குத் தெரிந்தும் தெரியாமலும்
இப்படி நிறையவே பேர் நமது நாட்டிற்குள் வந்து சேர்ந்து இந்தியப் பிரஜைகளாக மாறி
விடுகிறார்கள். காசு கொடுத்தால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்துமே
கிடைத்துவிட, சுலபமாய் இந்தியர்களாக மாறி விடுகிறார்கள். என்றாலும் தமது
தாய்நாட்டின் மேல் பற்றில்லாமல் போவதில்லை.
அப்படி வந்திருப்பவர்கள் உள்ளூர் வாசிகளின் வேலைகளையும் பறித்துக்
கொள்வதால் இவர்கள் மேல் ஒரு கோபமும் கடுப்பும் எப்போதுமே நிலவும்.
அந்த வருடத்தின் ஃபிப்ரவரி மாதத்தில் நாகா பெண் ஒருவரை
பங்க்ளாதேஷ் இளைஞர் ஒருவர் கற்பழித்த குற்றத்தில் சிறை பிடிக்கிறார்கள். Fast Track Court மூலம் அவர் குற்றம் செய்தது நிரூபணம் ஆக, தண்டனை
விதிக்க முடிவு செய்கிறார்கள். குற்றம்
நிரூபணம் ஆனதும் கொதித்தெழுந்த நாகாலாந்து மக்கள் சிறையில் இருந்த அந்த
குற்றவாளியை, சிறைகளை உடைத்து வெளியே கொண்டு வந்து அடித்தே கொன்று
விடுகிறார்கள். ஒட்டு மொத்த பங்க்ளாதேஷ்
வாசிகள் அனைவர் மேலும் கோபமும் பாய்கிறது. பங்க்ளாதேஷ் மக்கள் நடத்தும் கடைகளும் அடித்து
உடைக்கப்படுகின்றன. நாகாலாந்து முழுவதும்,
குறிப்பாக Dதிமாபூர் நகரில் கலவரம் மூள்கிறது.
போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலவரம் செய்த
கும்பலில் இருந்த ஒருவர் மேல் குண்டடி பட்டு அவரும் இறந்துவிட மேலும் குழப்பமும்
கலவரமும் தொடர்கிறது. Dதிமாபூர் நகரிலும் அதன் சுற்றுப் புறங்களில் 144 தடையுத்தரவு போடப்
படுகிறது. இருந்தாலும் தொடர்ந்து பதட்ட
நிலை நீடித்து வந்தது. இது அத்தனையும் நடந்த ஒரு வாரத்திற்குள் நாங்கள் Dதிமாபூர் நோக்கி பயணிக்கிறோம்.
அதனால் தான் கொஹிமா நகரிலிருந்த எங்களது கேரள நண்பர் பதட்டப்பட்டார்.
நாகாலாந்து வாசிகளைத் தவிர மற்றவர்களைப் பார்த்தாலே
அடையாளம் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எவர்
மீதும் தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் அவர் கொஞ்சம்
பதட்டப்பட்டார். கொஹிமாவிலிருந்து Dதிமாபூர் வரை தூரம் 75 கிலோமீட்டர், அரசுப் பேருந்து என்றால் சுமார் நான்கு
மணி நேரம் ஆகும் என்பதால், கொஹிமா நகரைச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு
கொடுத்திருந்த வாகனத்திலேயே Dதிமாபூர் ரயில் நிலையம் வரை அனுப்பி வைப்பதாகச்
சொல்லி விட்டார்.
அதனால் நாங்களும் தங்குமிடம் சென்று எங்கள் உடைமைகளை
எடுத்துக் கொண்டு தங்குமிடத்தினைக் காலி செய்து அங்கிருந்து மாலையில்
புறப்பட்டோம். நாகா ஓட்டுனர் வெகு விரைவாக வாகனத்தினைச் செலுத்தி எங்களை மாலை ஆறரை
மணிக்குள் ரயில் நிலையத்தில் கொண்டு சேர்த்தார்.
அது மட்டுமல்லாது எங்களது கேரள நண்பர் கொஹிமா ரயில் நிலையத்தில் இருக்கும் RPF அலுவலகத்தில் பேசி அங்கேயே இரவு வரை காத்திருப்பதற்கும் ஏற்பாடு
செய்திருந்தார்.
Dதிமாபூர் நோக்கி பயணம்
செய்யும்போது அன்றைய நாளின் நிகழ்வுகளைப் பற்றி பேசியபடியே பயணித்தோம். நாகாலாந்து
மாநிலத்திலும் நிறைய தண்ணீர் பஞ்சம் போலும். பல இடங்களில் தகர டின்களில் தண்ணீர்
கொண்டு கொடுக்கும் பீஹார் மாநிலத்தவர்களைப் பார்க்க முடிந்தது. வழியில் இருந்த பல
வீடுகள் தகரக் கொட்டகைகளாக இருப்பதையும் காண முடிந்தது. சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே Dதிமாபூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.
RPF அலுவலகத்தில் நண்பர்
பேசி வைத்திருந்ததால் அங்கே செல்ல, எங்களை அவர்களது அதிகாரியின் அறையில் உட்கார
வைத்து விட்டார்கள். அவருடன் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு உடைமைகளை அங்கே பாதுகாப்பாக வைத்து விட்டு,
இரவு உணவு என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள நடை மேடைக்கு வந்து
சேர்ந்தோம். ரயில் நிலையத்திற்கு வெளியே செல்ல வேண்டாம் என நண்பர் சொல்லி
இருந்தாலும் வெளியே சென்றும் பார்த்து வந்தோம்.
பதட்ட நிலை தான் – எங்களைப் பலரும் பார்ப்பது போல ஒரு எண்ணம் மனதில்
தோன்றவே ரயில் நிலையத்தினுள் மீண்டும் வந்தோம்.
நடைமேடை ஒன்றின் எல்லையில் IRCTC நடத்தும் உணவகம் ஒன்றிருக்க, அங்கே சென்று, இரவு உணவு என்ன கிடைக்கும் எனக்
கேட்க, அசைவம், சைவம் இரண்டுமே கிடைக்கும் என்று சொல்லி எங்களது நெஞ்சில் பாலை
வார்த்தார்கள். சரி என நானும் நண்பரும் RPF அலுவலகத்திற்குத் திரும்பி மற்ற மூன்று நண்பர்களையும் சாப்பிட்டு வருமாறு
சொன்னோம். அவர்கள் திரும்பிய பிறகு
நாங்கள் இருவரும் சென்று சாப்பிட்டு வந்தோம். மதிய உணவு போலவே இரவிலும்
சப்பாத்தியும் தாலும் மட்டும். ரயில் நிலையத்தில்
கிடைத்த தேநீர் மஹா கேவலமாக இருந்தது. சூடாக இருந்ததைத் தவிர வேறு எந்தவித
சுவையும் அதில் இல்லை! அதையும் குடித்து விட்டு காத்திருந்தோம்.
இரவு பத்தரை மணிக்கு மேல் RPF அலுவலகத்தில் உள்ளவர்களிடம் சொல்லிக் கொண்டு, எங்கள் உடைமைகளை எடுத்துக்
கொண்டு ரயில் நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம். எங்களை Gகௌஹாத்தி வரை அழைத்துச் செல்லப் போகும் 15604 Intercity Express-க்குக் காத்திருந்தோம். இரவு 11.25க்குப் புறப்பட்டு காலை 04.45
மணிக்கு Gகொஹாத்தி நகருக்குச் சென்று சேரும் ரயில் அது. சரியான நேரத்தில் நடைமேடைக்கு வந்து சேர
நாங்கள் பதிவு செய்திருந்த B1 பெட்டிக்குள் வந்து, எங்களுக்கான இருக்கைகளில்
படுத்து உறங்கினோம்.
விடிகாலையில் Gகௌஹாத்தி நகரம்
எங்களுக்கு எப்படியான வரவேற்பினை ஏற்பாடு செய்திருக்கிறதோ என்ற கனவுகளோடு உறங்கிப்
போனோம். Gகௌஹாத்தி நகரில் கிடைத்த
அனுபவங்கள், தங்கிய இடம் ஆகியவை பற்றிய தகவல்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இதுதாங்க இப்ப உலகநாடுகளில் பெரிய பிரச்சனையா இருக்கு ..... illegal immigrants. நியாயமா வர்றவங்களையே உள்ளூர்வாசிகளுக்குக் கொஞ்சம் ஆகறதில்லை என்னும் போது..... ப்ச்... :-(
பதிலளிநீக்குபல நாடுகளிலும் இந்தப் பிரச்சனை தான்......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
பழைய பதிவுகளுக்கு டிராப் டவுன் மெனு கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதிகிலான பகுதியாய் இருக்கிறது. எல்லாவித அனுபவங்களையும் சந்தித்திருக்கிறீர்கள்.
Drop Down Menu - நன்றி ஸ்ரீராம். பகுதிகள் அதிகமானதால் இப்படி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வங்க தேசிகளின் சட்ட விரோத குடியேற்றம் அரசு அலுவலர்களுக்குத் தெரியாமலா நடக்கின்றது?..
பதிலளிநீக்குநாடு கெட்டுப் போவதற்கு 90% அவர்களே காரணம்..
விவரமான செய்திகளுக்கு நன்றி..
அரசுக்குத் தெரியாமல் நடப்பதில்லை - சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் வாக்கு/அரசியல், என பல விஷயங்களினால் இவை அடிபட்டுப் போகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
உணவுப் பிரச்னை ,அமைதியும் இல்லை ,கலவர பூமி வேறு .
பதிலளிநீக்குஎப்படிப் போக பிளான் பண்ணினீர்கள் ?
பெங்கால் நாட்டவர் தென் தமிழ்நாட்டு எல்லை வரை வசிக்கிறார்கள். குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதால் ஹோட்டல்கள், கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று மொழி புரியாமலேயே வேலை பார்க்கிறார்கள். தஞ்சை வரையிலுமே அவர்களின் நடமாட்டம் உண்டு. அரபு நாடுகளிலுமே அவர்களை வேலைக்கு வைத்தால் விசா செலவுகள் மிகக் குறைவே. அதனால் அங்கும் இவர்கள் பரவலாக உன்டு. ஆனால் கடுமையான சட்ட திட்டங்களுக்குட்பட்டே அவர்கள் நுழைய முடியும். அந்த மாதிரி நிலைமை இங்கில்லை. அரசாங்கங்களின் மெத்தனமே இதற்குக் காரணம். பிரச்சினை நாகாலாந்து போல ஆகாமலிருந்தால் சரி!
நீக்குஉணவுப் பிரச்சனையை எப்படியும் சமாளிக்கலாம் என்று முன்னரே நினைத்தது தான். கலவரம் நாங்கள் திட்டமிட்ட போது இல்லை. எங்கள் ஏழு சகோதரி மாநிலங்கள் பயணத்தில் குறைந்த நேரம் நாகாலாந்தில் தான் - அதிக நேரம்/நாள் அருணாச்சலப் பிரதேசத்தில்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
திருச்சியிலும் நிறைய பேர் வந்து கட்டிட வேலைகள், கூலி வேலைகள் செய்கிறார்கள். பேருந்தில் அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்தது - கொஞ்சம் வங்க மொழி தெரியும் என்பதால்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
கவஹாத்தியில் வங்கதேசத்தவர் பிரச்சனை இன்னும் அதிகம். அதனால் அடிக்கடி கலவரங்கள் மூழ்கின்றன.
பதிலளிநீக்குத ம 5
வட கிழக்கு மாநிலங்கள் அனைத்திலுமே உண்டு. குறிப்பாக திரிப்புராவில்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.
ஸ்ரீராம் சொன்னது போல பழைய பதிவுகளுக்கு டிராப் டவுன் மெனு கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது.பயணப் பதிவும் படிக்க அருமையாக இருக்கிறது...பிரபல தமிழ் வார மாத இதழ்கள் உங்களின் திறமையை இன்னும் பயன்படுத்த முன் வராதது என்னுள் ஆச்சிரியத்தைதான் ஏற்படுகிறது... இது அவர்களின் இழப்பாகவே நான் கருதுகிறேன்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள் வெங்கட்.... நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.
உங்கள் தொடர் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன். எழுதும் வரையும் எழுதிக் கொண்டிருப்போம். பத்திரிகைகளில் வராவிட்டால் என்ன, உங்களைப் போன்ற பதிவுலக நண்பர்கள் இருக்கும் வரை தொடர்ந்து எழுதலாம்.
நீக்குDrop Menu உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. நிறைய பகுதிகள் என்பதால் இப்படிக் கொடுக்க ஆரம்பித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நல்ல ஊர்சுற்றியாகவும், நல்ல பதிவராகவும், நல்ல எழுத்தாளராகவும் எப்படிங்க..? (கொஞ்சம் பொறாமையால்தான்...) தொடர்ந்து எழுதி அடுத்த புத்தகத்தைக் கொண்டுவருக! வாழ்த்தும் வணக்கமும்.
பதிலளிநீக்குநேரம் கிடைக்கும்போது பயணிக்கிறேன். நான்கு நாள் பயணம் செய்வதை முப்பது பதிவுகளாக எழுத வேண்டியிருக்கிறது! இன்னும் சில பயணங்கள் சென்றிருந்தாலும் இதை முடித்த பிறகு எழுத வேண்டும் என கிடப்பில் போட்டிருக்கிறேன். இந்த வருடம் முழுவதும் இனிமேல் எங்கும் பயணிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன்! :) அடுத்த புத்தகம் - விரைவில் வரும் என நினைக்கிறேன்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
payana pathivugalai naangal varum pothu thamathamagi miss seithirunthalum ungal drop down menu romba elithaga irukirathu thodarvatharku.
பதிலளிநீக்குdhillaana anubavamthan illaiya venkatji..niraya thagavalgal....oorin nilaimai ellaam theriyum pothu payanam seivatharkana thittangal, ethirkollum mana nilaiyudan payanikka uthaviyaga irukkum ungal thodar....miga miga arumaiyaaga irukirthu ji. thodargintrom..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குபடிக்கும் பொழுதே திகிலாக இருக்கிறதே, நிஜத்தில் சந்தித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?. அகதிகள் பிரச்சனை மிகவும் சிக்கலான பிரச்னைதான்.
பதிலளிநீக்குதிகில் தான். ஆனாலும் தைரியமாக எதிர் கொண்டே ஆகவேண்டிய நிலை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
சுருக்கமாகச் சொன்னாலும்
பதிலளிநீக்குஎல்லையோர மாகாணங்களிலுள்ள
பிரச்சனைகளுக்கான அடைப்படைக் காராணத்தைச்
சொல்லிச் சென்றவிதம் அருமை
தொடர்கிறோம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஆமாம், மேற்கு வங்கம் என்று சொல்லிக் கொண்டு பல வங்க தேசத்தவர் தென் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் தான். திக் திக் பயணமாக இருக்கிறது. கவனமாகச் சென்று வரவும்.
பதிலளிநீக்கு//கவனமாகச் சென்று வரவும்.... // பயணம் நல்லபடியாகவே முடிந்து திரும்பினோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....