ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கத்புத்லி – ஹேமமாலினி நடனம் – புகைப்படங்களும் காணொளியும்சென்ற ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் – ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு! அங்கே சென்ற போது பார்த்த கத்புத்லி என்று இங்கே அழைக்கப்படும் பொம்மலாட்டம் பார்க்க முடிந்தது. அப்போது நான் எடுத்த புகைப்படங்களும், குழுவில் இருந்த நண்பரின் மகள் எடுத்த காணொளியும் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.

பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் கத்புத்லி எனும் பொம்மலாட்டம் மூலம் பல கதைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். மாநில அரசாங்கம் கூட இந்த கலைஞர்களைப் பயன்படுத்தி பொம்மலாட்டம் மூலம் அரசின் நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதுண்டு.  அழிந்து வரும் இக்கலையை இன்னும் கட்டிக் காப்பாற்றிக் கொண்டு வருபவர்கள் முதியவர்கள் மட்டுமே. அவர்களுக்கு அடுத்த சந்ததியினர் இக்கலையை தொடர்வது கேள்விக்குறி தான்.

நாங்கள் பார்த்து, ரசித்த காட்சிகளை, புகைப்படங்களாகவும், காணொளியாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. 


ஹேமமாலினி....


ஆணும் பெண்ணும்..... தலையைத் தனியாகக் கழட்டிக் காண்பிக்கும்
ஜாதுகர் எனப்படும் வித்தைக்காரன்...


 ஜாதுகர் எனப்படும் வித்தைக்காரன்..

ஹேமமாலினி நடனம்


ஒரு புறம் ஆண் – மற்றொன்றில் பெண்!


ஜாதுகர் எனப்படும் வித்தைக்காரன்…!


என்ன நண்பர்களே, புகைப்படங்களையும் காணொளிகளையும் ரசித்தீர்களா? உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து….. 


18 கருத்துகள்:

 1. காணொளி ரசிக்க வைத்த்து இதெல்லாம் சின்ன வயதில் பார்த்து இருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. என்ன அழகான கலைத்திறன்... சின்ன வயதில் பள்ளிகளில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளைக் கலைஞர்கள் நடத்திப் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல இதுபோன்ற பாரம்பரியக் கலைகளை வரும் தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. புகைப்படங்களும் காணொளியும் மனம் கவர்கின்றன. நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 3. எங்கள் ஊரில் திருவிழாவில் பொம்மலாட்டம் பார்த்ததுண்டு. சில சமயம் தனியாகவே கூட ஷோ போட ஒரு குழு ஒவ்வொரு கிராமமாகப் போவார்கள். அவர்கள் போட்டது நல்லதங்காள் கதை. அருமையான ஒரு கலை. முன்னாடியும் நீங்கள் ஒன்று பகிர்ந்த நினைவு.....

  இதெல்லாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் நிழற்படங்களால் கூட சில ஷோக்கள் நடக்கிறது என்று நினைக்கிறேன்.சென்னையில் குழ்னதைகளின் பிறந்தநாள் விழாக்களில் இது போன்ற பொம்மலாட்டம் ஈவென்ட் மேஞ்ச்மென்ட் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று வாசித்த நினைவு. நல்ல நல்ல கதைகளைக் குழந்தைகளுக்கு இதன் மூலம் எடுத்துச் செல்லலாம். நீதிக் கதைகள் என்று மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.... கலைஞர்களுக்கும் நல்லதொரு வாழ்வு கிடைக்கும்.

  காணொளிகள் மிக நன்றாக இருக்கின்றன ரசித்தோம் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. ஆண் பெண் மாறி மாறி வருவதும் கடைசி காணொளியும் அசத்தல்!!! வாவ் போட வைத்தது!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண் பெண் மாறி மாறி வருவது எனக்கும் பிடித்த காணொளி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. கைகளும் மனமும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும் நல்ல திறமை தேவை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் - மிகுந்த திறமை தேவை. அழிந்து வருகிறதே இக்கலை என்பதில் மனதில் கொஞ்சம் சோகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. படங்களும் காணொலியும் அருமை ஐயா
  ரசித்தேன்
  இன்று அழிந்துவரும் கலைகளிலு பொம்மலாட்டமும் ஒன்றல்லவா
  காக்கப்பட வேண்டிய கலை
  போற்றபபட வேண்டிய கலை
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. நல்ல கலை,கவனிக்காமல் விடப்பட்டதால் அழிந்து வருகிறது,
  இது போலான கலைகளை தூக்கி நிறுத்த வேண்டும்,அரசுகள்,,,/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

   நீக்கு
 9. நம்ம ஊர் பொம்மலாட்டமும் பார்த்திருக்கேன். ராஜஸ்தானின் உதயப்பூரில் பொம்மலாட்டம் பார்த்தேன். இரண்டுக்கும் பெரிய அளவில் வேறுபாடு உண்டு. இவையும் அருமையாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....