ஞாயிறு, 31 டிசம்பர், 2017

குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு?


சில வருடங்களாகவே “குஜராத் மாடல்” ரொம்பவே பிரசித்தி பெற்ற இரு வார்த்தைகள்! யாரைக் கேட்டாலும் குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று தான் பேசுகிறார்கள் – சிலர் உயர்த்தியும் சிலர் தாழ்த்தியும்! அப்படி என்னதாங்க இருக்கு இந்த ‘குஜராத் மாடல்’ல! இந்தப் பதிவுல கொஞ்சம் குஜராத் மாடல் பத்தி பார்க்கலாம்!

என்னுடைய இரண்டு பயணங்களில் இந்த குஜராத் மாநிலத்திற்குச் சென்று இருக்கிறேன். ஒரு பயணம் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் – அப்பயணத் தொடர் ”பஞ்ச துவாரகா” என்ற தலைப்பில் புஸ்தகா தளத்தில் மின்புத்தகமாகவும் வெளிவந்தது நினைவிலிருக்கலாம். இரண்டாவது முறையாக குஜராத் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இந்த ஞாயிறில் ஒரு மாடலாக – குஜராத் மாடலாக இங்கே! குஜராத் மாடல்-னு தலைப்பு பார்த்து அரசியல் பதிவென வந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கும்! நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரங்கோ!

இரண்டாவது குஜராத் பயணத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் ஒரு புகைப்பட உலாவாக, முன்னோட்டமாக, மாடலாக! பயணக் கட்டுரைகள் விரைவில் வெளிவரும்!


படம்-1: ஒரு குளமும் படித்துறையும்....


படம்-2: ஒரு சிற்பம் - கீழே மனிதன் மரத்தினை ஆட்ட, மரத்தில் குரங்குகள்....


படம்-3: ஒரு ஒரு தூண் சிற்பம் - இசைக்கலைஞர்கள்....


படம்-4: மோதேரா சூரியனார் கோவில் - ஒரு பகுதி....


படம்-5: பாடண் நகரில் இருக்கும் ராணி கி வாவ்....


படம்-6: பாடண் நகரில் இருக்கும் ராணி கி வாவ் சிற்பங்கள்.... 


படம்-7: பாடண் நகரில் இருக்கும் ராணி கி வாவ்....
தூண்களிலும் நுண்ணிய வேலைப்பாடுகள்...


படம்-8: பாடண் நகரில் இருக்கும் ராணி கி வாவ்....
அழகிய சிற்பங்கள்.....


படம்-9: மரங்கொத்தியே மரங்கொத்தியே....


படம்-10: ஒரு நீர்நிலையும் சூரியனும்....


படம்-11: நாங்களும் ஊர்வலம் போவோமே....படம்-12: கிராக்கி வந்தா தான் உனக்கு சாப்பாடு... எனக்கும்!படம்-13: ஒரு ரவுண்டு போலாம் வாங்களேன்....படம்-14: கட்ச் பகுதியில் சூரியன்....படம்-15: த்வாரகாதீஷ் கோவில் - வெளிப்புறத் தோற்றம்....படம்-16: ருக்மணி தேவியின் கோவில்...படம்-17: என் கடல் வீட்டிலிருந்து நான் கடத்தப்பட்டேன்....  படம்-18: ருக்மிணி கோவில் வாசல் - யாசகம் வாங்கக் காத்திருப்பவர்கள்....படம்-19: முதிய படகோட்டி - கண்களில் ஒரு தேடலோ....படம்-20: கடலில் சீகல் பறவைகள்.... எத்தனை இருக்கும்னு எண்ணுங்க பார்க்கலாம்!படம்-21: சுடச் சுட வேர்க்கடலை....


படம்-22: மாலை நேரத்தில் சோம்நாத் கோவில்....


படம்-23: தியுவில் இருக்கும் நாகாவ் கடற்கரை...


படம்-24: கடல் அலைகள் தொடர்ந்து அபிஷேகம் செய்யும் கோவில், தியு....


படம்-25: ஒரு குகைக்குள்....  தியு


படம்-26: கடலுக்குள் ஒரு அரண்....


படம்-27: எங்களுக்குள் ஊடல் இருக்கலாம்... அதுக்காக பக்கத்தில வந்த மவனே! நாங்க சும்மா இருக்க மாட்டோம்! கிர் வனத்தினுள்...


 படம்-28: ஒண்டிக்கு ஒண்டி வரியா? பார்த்துடலாம்!


படம்-29: இது கருப்பு வெள்ளைப் படமா? 


படம்-30: என்னால 180 டிகிரி தலையைத் திருப்ப முடியும் எனச் செய்து காட்டும் ஆந்தையார்....


படம்-31: அட இருங்கப்பா, நான் சாலையைக் க்ராஸ் பண்ணிக்கிறேன்!


 படம்-32: வெரசா போடா...  வீடு போனா தான் வைக்கோல்!


படம்-33: நான் சிவனேன்னு இங்கே உட்கார்ந்துருக்கேன். என் தலையை ஏன்பா உருட்டறீங்க!


படம்-34: அடலஜ் கி வாவ், அஹமதாபாத்...


படம்-35: அடலஜ் கி வாவ், அஹமதாபாத்...


படம்-36: அடலஜ் கி வாவ், அஹமதாபாத்..
உப்பரிகையோ?


என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

36 கருத்துகள்:

 1. அருமை படங்கள், துவாரகை, சோம்நாத் பார்த்த இடங்கள். கிர் காடு போக முடிந்ததில்லை! தியூ காட்சிகள் அருமை! ஒவ்வொன்றுக்கும் கொடுத்திருக்கும் வர்ணனைகள் நிறைந்த தலைப்புகள் மிக மிக அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிர் காடுகள் - தவற விட்டீர்களே.... நல்ல இடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 2. மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும் படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. குஜராத்மாடல் என்ற தல்சைஇபு சரியில்லையோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 5. திகட்டத் திகட்டப் படங்கள்
  அற்புதம் ஐயா
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு@நொரண்டு.

   நீக்கு
 7. வெங்கட்ஜி வாவ்!!! அழகான படங்கள்...மிகவும் ரசித்தேன்....என்ன ஒரு அழகு!! காத்திருக்கிறோம் பயண அனுபவங்களுக்கு...

  நானும் மூன்று கட்டுரைகள் எழுத நினைத்து அப்படியே இருக்கிறது அதுவும் ஒரு இடம் சென்று வந்து ஒரு வருடம் ஆகிறது...மற்றொன்று இந்த வருடம் ஏப்ரல் மாதம்...மூன்றாவது சென்ற வாரம்...ஏதோ ஒரு சுணக்கம்...எழுத வேண்டும்...

  ராணி கி வாவ் படம் முன்னாடி ஷேர் செய்திருக்கீங்களோ?!! அந்த சீகல் படமும் பார்த்த நினைவு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராணி கி வாவ் - ஹாலிடே நியூஸ் இதழில் வெளி வந்தது - அதை என் பதிவிலும் வெளியிட்டு இருந்தேன்.

   சீகல் - ஒரு காணொளி வெளியிட்டு இருந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. கல்லிலே கலைவண்ணம் பிரமிக்க வைத்தது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. ஜி இப்பத்தான் படங்கள் அழகாகத் தெரிகிறது மீண்டும் பார்த்துவிட்டேன்...m=0 போட்டு பார்க்க முடிந்தது ஜி ...நகாவ் கடற்கரையும் முன்னர் வேறு ஒரு படம் உங்கள் பதிவில் கொடுத்திருந்தீர்கள்...பார்த்த நினைவு...அது போல் ஒட்டக ஊர்வலமும்...இதே போன்று வேறு படம்...பார்த்த நினைவு..அழகு படங்கள் ஜி...எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சில படங்கள் முன்னரே பார்த்திருக்கலாம்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 10. படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். அதிலும் ராஜா/ராணிகளுக்குரிய நீர் நிலைகளில் இருக்கும் சிற்பங்கள்.

  நம்ம ஊர் சிங்கம், பூனை அளவிற்கு ஆகிவிட்டதே. காட்டில் உணவுக்குப் பஞ்சமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம ஊர் சிங்கம் பூனை அளவிற்கு ? :) இருக்கலாம். இயற்கையான சூழலில் தான் விட்டிருக்கிறார்கள்.

   ராணி கி வாவ் சிற்பங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். படங்களில் காண்பித்ததை விட நேரில் சென்று பார்ப்பது நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. அப்பப்பா எவ்வ்ளவு படங்கள் அழகாய் குஜராத் பகிர்ந்ததற்க்கு நன்றி ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே எடுத்த படங்களில் மிகவும் குறைந்த அளவில் தான் வெளியிட்டிருக்கிறேன்! மற்ற படங்கள் பயணக்கட்டுரைகளில் வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே!

  கண்களுக்கும் மனதிற்கும் தீனியானது காட்சிப் பதிவு!
  அத்தனை சிறப்பு! திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தேன்.

  இனிய பகிர்வு! உளமார்ந்த நன்றி சகோ!

  ஆங்கிலப் புத்தாண்டு அனைத்தும் வளமாக நலமாக இருக்க என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி....

   நீக்கு
 13. ஆஹா என்ன அழகிய சிற்ப வேலைப்பாடுகள்.. அனைத்தும் அருமையான படங்கள்.. காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....

   நீக்கு
 14. நல்ல கலைநயத்துடன் செதுக்கப்பட்ட தூண்கள்.அருமையான பயண அனுபவம்,புகைப்படங்களில் © இல்லாமல் இருக்கிறது!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. copy right - என் பெயர் படங்களில் இருக்கும்! எப்படி இருந்தாலும் காபி செய்பவர்களை இங்கே ஒன்றும் செய்ய முடிவதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி வாசன்.

   நீக்கு
 15. படங்களும் அதன் விளக்கங்களும் ரசிக்க வைத்தது.. அருமையான பகிர்வு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யுவராணி தமிழரசன் ஜி!

   நீக்கு
 16. படங்களும் அதன் விளக்கங்களும் ரசிக்க வைத்தது.. அருமையான பகிர்வு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட இரண்டாவது தடவையும் வந்திருக்கே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யுவராணி தமிழரசன் ஜி!

   நீக்கு
 17. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....