வெள்ளி, 29 டிசம்பர், 2017

லாலுவுக்கும் புதிருக்கும் சம்பந்தம் - புகைப்படப் புதிர் – இரண்டு – விடைகள்….நேற்று காலை நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அவை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்த படங்களில் இருப்பவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்!


புதிர் படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?

விடை: இந்த இயந்திரத்திற்குப் பெயர் chசாரா குட்டி! வட இந்திய கிராமங்களின் பெரும்பாலான வீடுகளில் இந்த இயந்திரத்தினை பார்க்க முடியும். chசாரா, Bபூசா என அழைக்கப்படும் மாடுகளுக்கு வழங்கும் புல், வைக்கோல் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்க இந்த இயந்திரத்தினை பயன்படுத்துவார்கள். புல்/வைக்கோலை அதற்கான இடத்தில் வைத்து, சக்கரத்தினைச் சுற்ற, சிறு சிறு துண்டுகளாக்கும் இந்த இயந்திரம். இப்போதெல்லாம் மின்சார மோட்டார் கொண்டும் இயக்கப்படுகிறது என்றாலும் கொஞ்சம் அபாயமானது – கிராமத்தில் பலருக்கும் கை விரல்கள் வெட்டுப்பட்டிருக்கின்றன! இந்த chசாரா Gகோட்டாலா [Fodder Scam]-ல் தான் லாலு பிரசாத் யாதவ் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!


புதிர் படம்-2: இது என்ன?விடை: பார்ப்பதற்கு வழிபாட்டுத் தலம் போல இருந்தாலும், இது அப்படி அல்ல! கிணற்றின் மேலே நான்கு பக்கங்களிலும் இப்படிச் சுவர் எழுப்பி, அதில் நான்கு புறத்திலும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வழி செய்திருப்பார்கள். முதலில் கொடுத்த படம் தவிர, தண்ணீர் எடுக்க வசதி செய்திருக்கும் படமும் கொடுத்திருக்கின்றேன்.புதிர் படம்-3: இந்த இடம் என்ன இடம், எங்கே இருக்கிறது. ஒரு Clue – முன்னரே இப்படம் எனது பதிவில் வந்திருக்கலாம்!

விடை: கோனார்க் என சிலர் பதில் சொல்லி இருந்தாலும் இது கோனார்க் அல்ல! ஆனால், இதுவும் சூரியனார் கோவில் தான்! குஜராத் மாநிலத்தில் உள்ள Modhera எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இது. முன்பு பிரம்மாண்டமாக இருந்திருந்தாலும், இப்போது இருப்பது இவ்வளவு தான்! இந்த இடம் பற்றி விரைவில் எழுதுகிறேன்.படம்-4: இந்த முதியவரின் பக்கத்தில் ஒரு கருவி இருக்கிறது... அது என்ன கருவி!

விடை: இந்த மாதிரி கருவியை நம் ஊரில் நிச்சயம் பார்த்திருக்க முடியாது! இந்த கருவியின் பெயர் DHதூனி. இயக்குபவர் DHதூனியா! வட மாநிலங்களில் குளிர் அதிகம் என்பதால் ரஜாய் பயன்படுத்துவது வழக்கம். ரஜாயில் இருக்கும் பஞ்சை சுத்தம் செய்ய, மீண்டும் பயன்படுத்தத் தகுந்த வகையில் ஆக்குவதற்கு இந்தக் கருவி பயன்படுகிறது! குளிர் காலங்களில் இக்கருவியைச் சுமந்து கொண்டு வருவார்கள். இந்தக் கருவியில் இருக்கும் String-ஐ மீட்ட வித்தியாசமான ஒரு இசை வெளியாகும்! அந்த String எதிலிருந்து செய்கிறார்கள் என சமீபத்தில் கேள்விப்பட்டேன் – அது ஆட்டுக் குடலிலிருந்து செய்யப்படுகிறது என்பது தான் அந்த விஷயம்! கருவியை எப்படி இயக்குவார்கள் என பார்க்க விரும்பினால் இங்கே பார்க்கலாம்!


புகைப்படங்களைப் பார்த்து புதிர்களுக்கு விடை சொல்ல முயற்சித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.

முடிந்த போது வேறு சில புகைப்படங்களுடன் வருவேன் – உங்களுக்கும் விருப்பமிருந்தால்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


16 கருத்துகள்:

 1. ம்ம்ம்... இதுதான் விடைகளா! பக்கத்தில் கூட வரமுடியவில்லை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்தில் கூட வர முடியவில்லை - அதான் இப்போது வந்து விட்டீர்களே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. Superdi.....இரண்டாவது படம் உங்கள் பதிவில் பார்த்த நினைவு இருந்தது...ஆனால் டக்கென்று நினைவுக்கு வரலை....

  சன் டெம்பில் என்று தெரிந்தது...கோனார்க் என்று நினைத்துவிட்டேன்....கிட்டத்தட்ட அதே போன்று....

  கடைசிப்படம்....தூனியா வாக இருக்குமோ னு நினைச்சு..பஞ்சு சுத்தம் செய்ய எனவது தெரியாது......ஒரு string இருந்தார் போல் இருந்ததால் இசைக்கருவியாக இருக்குமோ..என்று நினைத்தேன்....

  நன்றி ஜி புதியவை நிறைய அறிய முடிகிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது படம் இது வரை வெளியிடவில்லையே! மூன்றாவது படம் தான் வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. // படம்-4: இந்த முதியவரின் பக்கத்தில் ஒரு கருவி இருக்கிறது... அது என்ன கருவி!// Many times wondered to see that instrument @ delhi.. and most likely during winter, as you have said. Couldn't know what it is.. And thank you for making me to know what it is.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

   நீக்கு
 4. அப்பாடா விடையை போட்டுட்டீங்களா இப்பதான் நிம்மதி எல்லாம் கேள்வி படாதாக இருந்தது சுத்தமா தெரியலை சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப தான் நிம்மதி! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   நீக்கு
 5. ம்ம்ம்ம் சூரியன் கோயில் குஜராத் என்பது தெரிந்திருந்தது, என்றாலும் பதில் கொடுக்க மறந்துட்டேன், மயிரிழையில் பரிசைத் தவற விட்டுட்டேன். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரிந்தும் மறந்தீர்களா :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 6. பிரயாணத்தில் இருப்பதால் பதிவுகளை பார்க்க முடியவில்லை. வித்தியாசமான புதிரும் தகவல்களும். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரயாணத்தில் - மகிழ்ச்சி. சென்று வந்ததும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. பஞ்சு சுத்தம் செய்யும் கருவியை பார்த்திருக்கிறேன் பழைய பஞ்சு படுக்கைகளை சீர் செய்ய உபயோகித்தது உண்டுஎன் சிறிய வயதில் பார்த்தது சட்டென்று நினைவுக்கு வரவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....