எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 1, 2018

ஹுனர் ஹாட் – புகைப்படம் எடுத்து என்ன செய்ய – மசாலா பால்
சென்ற வருடத்தின் ஃபிப்ரவரி மாதத்தில் ஹுனர் ஹாட் என்ற பெயருடன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இருந்தாலும், இல்லை என்றாலும், பதிவின் சுட்டி கீழே தருகிறேன். மீண்டும் படிக்கலாம்! ஹுனர் என்ற ஹிந்தி/உருது வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Skill என்ற அர்த்தம். மத்திய அரசின் Ministry of Minority Affairs, சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஃபிப்ரவரி மாதத்தில் தலைநகரில் ஹுனர் ஹாட் அங்காடிகளை தலைநகரின் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் ஒரு வார காலத்திற்கு நடத்தினார்கள்.  இந்த வருட ஹுனர் ஹாட் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக….


இலை அடை - லிட்டி சோக்கா - ஹுனர் ஹாட்


புகைப்படங்களைப் பார்ப்பதற்கு முன்னர், இந்த வருட ஹுனர் ஹாட் சென்றபோது கிடைத்த ஒரு அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புகைப்படங்களை எடுத்தபடியே நடந்த போது அங்கே ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்னை அழைத்தார். ஏதோ கேட்கப் போகிறார் என நானும் அருகில் சென்றேன்.

“நீங்க எந்தப் பத்திரிகையில வேலை பார்க்கறீங்க?”

பத்திரிகைல இல்லை.

“பின்ன எதுக்காக இவ்வளவு பெரிய கேமரா வச்சு படம் எடுக்கறீங்க? எங்க வேலை செய்யறீங்க? இந்தப் படங்களை வச்சு என்ன பண்ணுவீங்க? என வரிசையான கேள்விகள்.

அவருக்கு வலைப்பூவில் எழுதுகிறேன் எனச் சொன்னால் புரியுமோ, புரியாதோ என இணையத்தில் எழுதுவேன், புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன் எனச் சொன்னேன்.  உடனே அடுத்த கேள்வி!

அப்படி எழுதுனா என்ன கிடைக்கும்? எவ்வளவு பணம் கிடைக்கும்! “பணமே கிடைக்காதுன்னா, எதுக்கு இவ்வளவு மெனக்கெடனும்? வேற வேலை இல்லையா உனக்கு? விதம் விதமான கேள்விகள்…. அதற்கு என் ஒரு வார்த்தை பதில்கள்!

பலருக்கும் ஒரு எண்ணம் – சும்மா பகிர்ந்து கொள்வதற்காகவா இத்தனை ஈடுபாடு என்று! கடைசியில் ஒரு மந்தகாசப் புன்னகையோடு – மனதுக்குள் “இவன் சரியான லூசா இருப்பான் போல!” என்ற நினைப்புடன் இருந்தாரோ என்னமோ – ”போயிட்டு வாங்க, உங்க நம்பர் இருந்தா குடுங்க! ஏதேனும் படம் எடுக்கணும்னா சொல்றேன்” என்று சொன்னார். அதற்கும் ஒரு புன்னகையோடு நகர்ந்தேன் – வேறு என்ன செய்ய. இவர்களைப் போன்றவர்களுக்கு சொல்லிப் புரியவைப்பது கடினமான விஷயம்!

சரி படங்களைப் பார்க்கலாம் வாங்க!


என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 comments:

 1. "தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி" என்றொரு பி சுசீலா பகுதி பாடலின் ஆரம்ப வரி உண்டு. அது நினைவுக்கு வருகிறது. பணத்தில் மட்டுமா சந்தோஷம்? பணம் இல்லாமல் வரும் இது போன்ற விருப்பக் காரியங்களை செய்வதில் கிடைக்கும் சந்தோஷம் தரும் நிம்மதி அவர் போன்ன்றவர்களுக்குத் தெரியாது போலும்!

  ReplyDelete
  Replies
  1. பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. என்ன செய்ய முடியும்.... புரியும் போது வாழ்க்கைப் பயணத்தின் எல்லை வரை வந்திருப்பார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அழகிய கலைநயம் மிக்க படங்களை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Fine picture selection. Nice to watch.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகையோ ராமன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. படங்கள் அனைத்தும் அழகோ அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி

  இப்படி கேள்வி கேட்கும் சகடைகளுக்கு ரசனை தெரியாது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. படங்கள் அழகோ அழகு
  ரசித்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 7. படங்கள் அனைத்தும் அழகோ அழகு...என்ன கலைநயம்!!! வியப்பு...ரசனை என்று அழகோ அழகு!!!

  .லிட்டி சோக்கா, வித விதமான பூட்டுகள் நினைவிருக்கிறது. உங்கள் புகைப்படப் புதிர் தொப்பி இல்லை என்பதும் லேட்டாகத் தெரிந்து கொண்டேன்...தேங்காய் என்பது...ஆச்சரியம்!!!

  //அப்படி எழுதுனா என்ன கிடைக்கும்? எவ்வளவு பணம் கிடைக்கும்! “பணமே கிடைக்காதுன்னா, எதுக்கு இவ்வளவு மெனக்கெடனும்? வேற வேலை இல்லையா உனக்கு? விதம் விதமான கேள்விகள்….//

  ஜி என் உறவினர்கள், நட்பு வட்டம் (பதிவர்கள் அல்லாத நட்பு வட்டம்!!!!) அனைவருமே கேட்கும் கேள்வி இதுதான்....அவர்களைப் பொருத்தவரை பணம் வரவு இல்லாமல் எதுவும் செய்வது வேஸ்ட்.
  நமக்குப் பிடித்ததை செய்கிறோம். ஆத்மதிருப்தி. எல்லாவற்றிலும் பணம் என்ற ரீதியில் பலரும் பார்ப்பதால்தான் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்...நமக்கு இதில் கிடைக்கும் சந்தோஷம், திருப்தி பற்றி அவர்களுக்குச் சொல்லவா முடியும்...சில விஷயங்கள் சொல்லித் தெரிவதில்லை...அனுபவைத்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்...ரசனையற்றவர்கள் என்று நானும் உங்களைப் போன்றே புன்னகையுடன் கடந்து விடுவேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. புன்னகையுடன் கடப்பதே நல்லது. அவர்களுக்குப் புரிய வைப்பது நேர விரயம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 8. படத்திலிருக்கும் பொம்மைகள்லாம் செம அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 9. அனைத்துப்படங்களும் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. கலைநயம் மிக்க படங்கள்.

  //அவருக்கு வலைப்பூவில் எழுதுகிறேன் எனச் சொன்னால் புரியுமோ, புரியாதோ என இணையத்தில் எழுதுவேன், புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன் எனச் சொன்னேன். //

  எனக்கும் இந்த அனுபவம் உண்டு. வலைத்தளம் (BLOG)என்றால் நிறைய பேருக்கு புரிவதில்லை;தமிழில் 'இணையம்' என்றாலும் புரிவதில்லை. Facebook அல்லது Internet என்று சொன்னால்தான் தெளிவடைகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டிருப்பது புரிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 11. நமது கலாச்சரத்தை பிரதிபலிக்கும் கலைநயமிக்க படங்களை பார்க்க வேண்டுமென்றால் உங்கள் வலைத்தளம் வந்தாலே போதும் அனைத்தும் அருமை குட்

  ReplyDelete
  Replies
  1. நான் செல்லும் இடங்களில் படம் எடுத்தால் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 12. வணக்கம் சகோதரரே

  ஒவ்வொன்றும் தங்களது தெளிவான கேமராவில் படமாக்கப்பட்ட அழகான படங்கள். மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது. அருமை. நேற்று பார்க்க இயலவில்லை. இப்போதுதான் ரசித்தேன்.
  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 13. எல்லாப் படங்களும் கொள்ளை அழகு. அதிலும் நம்மாள் பிள்ளையாரும், கடிகாரங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....