வியாழன், 5 ஏப்ரல், 2018

கதம்பம் – கேழ்வரகு கூழ் – முட்டாள்கள் தினம் – அப்பள பஜ்ஜிகேழ்வரகு கூழ்களி, கஞ்சி, அடை என்று சுவைத்திருந்தாலும் கூழ் இதுவரை குடித்ததில்லை. தோழியிடம் கேட்டதில் தகவல்கள் கிடைத்தன. இன்று செய்தாச்சு. மகள் கம்பெனி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்! அவளுக்கு தோசையை வார்த்து கொடுத்து விட்டு, நானே நானாக ஒரு கடி! ஒரு குடி!! என கூழை காலி செய்தேன். சுவையும் ஜோர். வயிறும் நிறைந்தது.


முட்டாள்கள் தினம்:

சென்ற வருடத்தின் முட்டாள் தினத்தில் இப்படி எழுதியிருப்பதை மிஸ்டர் மார்க் நினைவு படுத்தினார்! பல்பு வாங்கறதே பொழப்பா போச்சு! நல்ல வேளை இந்த வருஷம் பல்பு வாங்கல!

ஏப்ரல்-1, 2017இன்றைக்கு வாங்க வேண்டியது வாங்கியாச்சு:)))

"என்ன பண்ணிண்டிருக்க?”

இப்போ தான் வேலையெல்லாம் முடிஞ்சது. கொஞ்சம் ஃபேஸ்புக் பார்த்துண்டு இருக்கேன்.

ஓ!! அப்படியா!! நான் ஆக்ரால இருக்கேன்!!

ஓ!!! யார் கூட???

ஃப்ரெண்டு கூப்பிட்டார்... அதான்!

ஓ!! சரி. சரி.

( இந்த வெயில்ல ஆக்ராவா!!! அதுவும் ஷாஜஹான விட உனக்கு தான் என் மேல எவ்வளவு பாசம்!!! என்று மும்தாஜே சொல்லலாம்..:))) அந்தளவு, ஒன்றா!! இரண்டா!! 45 (அ) 48 முறையாவது சென்றிருப்பாரே???)

என்று மனதுள் நினைத்தபடி…

இப்போ தான பதிவு ஒண்ணு பப்ளிஷ் ஆனதே?? லைக் போட்டேனே!!! என்றதும்...

லூசு!! இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு!!! என்றதும்...

ஆஹா!! சரியா நிரூபிச்சிட்டனே!!!

இன்னும் கொஞ்ச நேரம் ஓட்டியிருப்பேன், பாவம்!! போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்... என்கிறார்…

அம்மாவும் அப்பள பஜ்ஜியும்!அம்மா சனிக்கிழமையில் தான் இந்த பஜ்ஜி, சேவை, குணுக்கு எல்லாம் செய்வார். அப்பாவுக்கும் எங்களுக்கும் விடுமுறை என்பதால் காலை 10 மணி போல சாப்பாட்டை போட்டு விடுவார். அப்பா தூங்கி எழுந்த பின் மாலைச் சிற்றுண்டிக்குத் தான் இந்த வகையறா எல்லாம்.

பஜ்ஜி என்றால் எல்லோருக்குமே பிடிக்கும் இல்லையா!! எல்லோரும் சாப்பிட்ட பின் பார்த்தால் பஜ்ஜிக்காக நறுக்கிய காய்கறிகள் தீர்ந்திருக்கும். அப்போது அம்மா தனக்காக மீந்த மாவில் இந்த பஜ்ஜியை செய்து சாப்பிடுவார். அதிலும் எங்களுக்காக கொஞ்சம். இப்படி பஜ்ஜியில் ஆரம்பித்து எங்களுக்காக அம்மா செய்த தியாகங்கள் எவ்வளவோ!!!

அப்படி செய்து தந்ததில் எனக்குப் பிடித்ததில் இதுவும் ஒன்று. மகளிடம் இதைச் சொன்னதிலிருந்து அவளுக்கும் பிடித்துப் போனது. இன்று அம்மாவை நினைத்துக் கொண்டே இந்த உளுந்து அப்பள பஜ்ஜியை செய்தேன்.

பொதிகையில் “ழகரம்” நிகழ்ச்சி:

இந்த வாரம் பொதிகைத் தொலைக்காட்சியில் "ழகரம்" என்ற நிகழ்ச்சியை காண நேர்ந்தது.

முற்றிலும் தமிழில் தொகுத்து வழங்கினர். கல்லூரியில் பயிலும் மாணவமணிகள் இரு அணிகளாக நிற்க, அவர்களிடையே பலதரப்பட்ட போட்டிகள். வார்த்தை விளையாட்டுகள், ஒரு நிமிட கவிதைப் போட்டி, புகைப்பட புதிர், பாடல்களில் வரும் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் உள்பட பல.

தமிழ்மொழியைப் பற்றி அரிய தகவல்கள். தமிழுக்குச் சேவை செய்தவர்களைப் பற்றிய தகவல்கள். இன்று வ.உ.சியைப் பற்றி. அவரை கப்பலோட்டியத் தமிழன் என்றும் செக்கிழுத்தச் செம்மல் என்றும் அறியலாம். ஆனால் அவர் சிறையில் இருந்த சமயம் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியதாகவும் அவரின் படைப்பாற்றல் பற்றியும் தகவல்கள்.

பலதரப்பட்ட சேனல்களை பார்க்கும் நமக்கு வித்தியாசமான நிகழ்ச்சியாக இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. முடிந்தால் நீங்களும் பாருங்களேன்.

பிறந்த நாள் ஸ்பெஷல்!நேற்று செய்த பாதாம் ஹல்வா!

நேற்று எங்கள் அன்புமகளின் பிறந்தநாள்!! பதினான்காம் வயதில் அடியெடுத்து வைக்கும் அவளுக்கு கடவுளின் அருளோடு உங்கள் ஆசிகளும் கிடைக்கட்டும்.

ஏதோ இன்று நடந்தது போல் உள்ளது..வருடங்கள் வேகமாய் நகர்கின்றன..அன்பும், அனுசரணையும் உள்ள குழந்தை.. எதற்காகவும் அடம்பிடித்தது கிடையாது.. சேமிக்கவும் தெரிந்தவள். ஓவியமும், கைவேலைகளும் அவளுக்குப் பிடித்தமானது.

எல்லா வளமும் நலனும் கிடைக்கப் பெற்று, மேன்மேலும் உயர அவளின் ப்ரிய கணேஷா அருள்புரியட்டும்..


மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்

40 கருத்துகள்:

 1. கேப்பைக் கூழ் ரொம்பப் பிடிக்கும்..முந்தைய நாள் கலந்து வைத்து மறுநாள் கொஞ்சம் புளிப்புடன் செய்து மோர் கலந்து உப்பிட்டு சி வெ போட்டு என்று வாவ்!! அவ்வப்போது செய்வதுண்டு...மகனுக்கும் ரொம்பப் பிடிக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூழ் - அவ்வப்போது குடித்ததுண்டு. தில்லி வாசத்தில் கிடைக்காதது இது போன்ற பல விஷயங்கள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. ரோஷினிக் குட்டிக்கு எங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் மீண்டும்!! என்றும் வாழ்த்தலாமே!! எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் பிரார்த்தனைகள்! பாதாம் ஹல்வா வெகு அருமை!! யும்மி!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதாம் ஹல்வா - :) நானும் படம் மட்டுமே பார்க்க முடிந்தது! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. குட்டிக் குழந்தையாக ரோஷினி அப்படியே வெங்கட்ஜி!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அம்மா மாதிரி என்றும் சொல்வார்கள்! :) இப்போது மகள், தனது அம்மா மாதிரி இருக்கிறார் என்று சொல்கிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. கூழ் ஒருமுறை சுவைத்திருக்கிறேன். காலை வணக்கம் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் சில சமயங்கள் சுவைத்திருக்கிறேன்.

   மாலை வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. ழகரம் நிகழ்ச்சி அவ்வப்போது கண்டதுண்டு...

  சென்ற வருடத்து பல்பு இன்னும் ஃப்யூஸ் ஆகலை போல அதான் இந்த வருடன் வாங்கலையோ!! ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொலைக்காட்சி நிகழ்வுகள் - தில்லியில் பார்ப்பதே இல்லை. ஊருக்கு வந்தால் அப்படியே Channel Surfing செய்வதுண்டு!

   பல்பு - :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. மார்க் சொல்லியிருப்பதை ரசித்தேன். #ஏப்ரல் 1 எளிமையான ஏமாற்றல் வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எளிமையான ஏமாற்றல்.... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பஜ்ஜி என்றில்லை, அனைத்திலும் தியாகம் செய்பவர் அம்மா. "அரைச்சவளுக்கு அம்மி" என்பார் என் அம்மா. அதுதான் மிஞ்சுமாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்திலும் தியாகம் செய்பவர் அம்மா.... உண்மை.

   அரைத்தவளுக்கு அம்மி - இதுவும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. நான் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை ஸ்ரீராம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. ரோஷ்ணிக்கு மறுபடியும், இங்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. கேப்பைக்கூழ் சேர்த்துக்குறது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

  எல்லாமே முகநூலில் ரசித்தது. அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. குட்டிப்பாப்பா அழகு.
  பாதாம் ஹல்வா ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 14. அனைத்தும் அருமை.
  குட்டிப்பாப்பா அழகு.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 15. சிறு குழந்தைகளுக்கு ராகிக் கூழ் கொடுப்பார்கள் இப்போதெல்லாம் நாக்கு அத ஏற்க மாட்டேன் என்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாக்கு ஏற்க மறுப்பது - பலருக்கும் இந்தப் பிரச்சனை உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. பாதாம் ஹல்வா சூப்பர். ரோஷிணிக்கு மீண்டும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

  ரோஷினி பாப்பா ரொம்ப அழகாக இருக்கிறார்.

  ஏப்ரல் ஃபூல் பல்பு ஹா ஹா ஹா ஹா...

  கேழ்வரகு கூழ் தமிழ்நாட்டில் இருந்த போது குடித்ததுண்டு. கேரளம் சென்ற பிறகு சாப்பிட்டதில்லை.

  அனைத்தும் நன்று

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 17. ரோஷிணிக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  கூழ் குடித்ததில்லை. கேள்வரகு கூழும் கஞ்சியும் ஒரே செய்முறைதானே... இல்லையா? தங்கள் குழந்தைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாதாம் அல்வா வெகு ஜோர். டி. வி பார்ப்பதேயில்லை.
  அனைத்தும் அருமை.. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 19. குழந்தை எனக்கு உங்கள் (வெங்கட்) முகத்தை ஞாபகப்படுத்தியது.

  பாதாம் அல்வா... பார்க்கவே அழகு. என் 'இனிப்பு உண்ணா விரதம்' போச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதாம் அல்வாவால் உண்ணாவிரதம் போச்சா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 20. கேழ்வரகுக் கூழ் கொஞ்சம் புளிக்க வைக்கணும் என்பாங்க! நாங்களும் சின்ன வயசில் நிறையக் குடிச்சிருக்கோம். தொட்டுக்கச் சின்ன வெங்காயம், (அப்போல்லாம் பெரிய வெங்காயம்னு ஒண்ணு உண்டுனே தெரியாது!) பச்சை மிளகாய், உப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய வெங்காயம் - பெல்லாரி என்றே அழைத்துப் பழகியிருக்கிறோம் நாங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....