ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

பின் பக்கமாக நடப்பது நல்லதா?



படம்: இணையத்திலிருந்து....

காலையில் நடைபயில தால்கட்டோரா பூங்கா செல்லும் போது, சில மனிதர்கள் பின் புறமாக நடப்பதைப் பார்க்கிறேன். முன்பு தலைநகரின் ராஜ்பத் என அழைக்கப்படும் ராஜபாட்டையில் இப்படி பின் புறமாகவே நடந்து செல்லும் ஒரு மனிதரைப் பற்றி எனது பதிவில் எழுதி இருப்பதாக நினைவு. அந்தப் பதிவினைத் தேடினால் கிடைக்க வில்லை – என்ன தலைப்பு கொடுத்திருப்பேன் என யோசிக்க வேண்டும்! பின் புறமாக நடப்பதில் ஏதேனும் உபயோகம் உண்டா? இப்போதெல்லாம், எதையாவது ஒன்றைச் சொன்னால், அதனால் என்ன பலன் என்று கேள்விகள் வருகின்றன. முன் நோக்கி நடக்காமல், பின்னோக்கி நடப்பதால் அப்படி என்ன பெரிய பலன் இருந்து விடமுடியும்? பலன் உண்டு என்கிறது இணையம் – நீங்கள் பின்னோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு 100 அடியும், முன் நோக்கி எடுத்து வைக்கும் 1000 அடிக்குச் சமம் என்கிறது இணையம்!





முட்டி வலி இருப்பவர்கள், முட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இடுப்பு சதைப் பகுதியில் வலி உள்ளவர்கள் என பலரும் இப்படி பின்நோக்கி நடப்பதில் பலன் அடைய முடியும் என விவரம் சொல்கிறது ஒரு இணைய தளம். இது எந்த அளவு உண்மை, தளத்தில் சொல்லி இருப்பது உண்மையிலேயே பலன் உடையதா, இல்லையா என்பதை எல்லாம் நிபுணர்கள் சொல்லட்டும். இப்படி நடப்பதில் வேறு சில பலன்களும் உண்டு என்று இந்த காணொளி மூலம் சொல்கிறார் – பாருங்களேன்!



எங்கள் பிளாக் ஸ்ரீராம் கூட அவரது முகநூல் பக்கத்தில் பின் நோக்கி நடப்பது பற்றி ஒரு தகவல் - தினமலரிலிருந்து எடுத்து வெளியிட்டிருந்தார். அது கீழே... நன்றியுடன்!

மூட்டு, கணுக்கால் தசைகள் வலுவடையும்!
பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை கூறும், பிசியோதெரபிஸ்ட், ஸ்ரீநாத் ராகவன்:

"அனைவராலும் செய்ய முடிந்த, எளிமையான பயிற்சி, நடை பயிற்சி.

இதயம், நுரையீரலை வலுப்படுத்தவும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தவிர்க்கவும், நடை பயிற்சி மிகவும் அவசியம்.

நடை பயிற்சி என்றதும், முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்கு தெரியும்.

அதை மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் செய்து வருகிறோம்.
ஆனால், பின்னோக்கி நடந்து பயிற்சி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

முன்னோக்கி நடப்பதை விட, பின்னோக்கி நடப்பதில், அதிக நன்மைகள் இருக்கின்றன.

பின்னோக்கி நடப்பதால், நம் உடலின் சமநிலை மேம்படுகிறது.

நடை பயிற்சியின் மீதான, நம்பிக்கையை அதிகரிக்கும்.

முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடக்கும் போது, காலை வீசி நடக்கும் அளவு குறைவாக இருக்கும்.

இதனால், மூட்டு மற்றும் கணுக்கால் தசைகள் வலுவடையும்.தொடைக்குப் பின் உள்ள தசை நார்கள் சீராக இயங்க உதவும்; முதுகுவலியைக் குறைக்கும்; மூளையின் செயல் திறனை மேம்படுத்தும்; உடல் எடையைக் குறைக்க உதவும்.

வாரத்தில் நான்கு நாட்கள், 15 நிமிடம் என, நான்கு வாரம் தொடர்ந்து செய்தால், இதற்கான பலன்களை அடையலாம்.

சில உடல் நல பாதிப்புகள் உள்ளோரை தவிர, மற்ற அனைவரும் இந்தப் பயிற்சியை செய்யலாம்.

நரம்பு கோளாறு உள்ளோர், முன்னோக்கி நடக்கவே சிரமப்படுபவர், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சில நாட்களுக்கு பின்னோக்கி நடக்கக் கூடாது.
பின்னோக்கி நடக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துணைக்கு ஒருவரை வைத்து மட்டுமே, இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

தவறும்பட்சத்தில் ஏராளமான ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமலரிலிருந்து....

இன்றைக்கு எதற்காக இந்த Retro Walking அல்லது Walking Backwards பற்றிய சிந்தனை? இந்த Retro Walking என்னால் செய்ய முடியுமா? என்று யோசிக்கும் போது முடியாது என்று தான் தோன்றுகிறது. பின் நோக்கி நடக்க முடிகிறதோ இல்லையோ, கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்ற யோசனை – குறிப்பாக வலையுலக நினைவுகளை, என் பதிவுகளை… கீழே என் சில பதிவுகளும், அந்தப் பதிவுகளிலிருந்து சில வரிகளும் கொடுத்திருக்கிறேன். பதிவுகளைப் படிக்க விருப்பமிருந்தால் படிக்கலாம்! எதற்காக இப்படி ஒரு Retro Walk through my posts…. கடைசியில் சொல்கிறேன்.

3 மார்ச் 2018 – பிஜோரா

அந்த இனிப்பு ஊறுகாயின் பெயர் Bபிஜோரா! Bபிஜோரா என்பது நம் ஊரில் கிடைக்கும் நார்த்தங்காய் தான்! ஆனால் அதில் வெல்லம் சேர்த்து ஊறுகாய் செய்கிறார்கள்.  நன்றாகவே இருந்தது. ரோட்லி என அழைக்கப்படும் ரொட்டியுடன் இந்த Bபிஜோரா சேர்த்து சாப்பிடப் பிடித்திருந்தது.


”நாங்கள் ஏற்கனவே திருமணம் புரிந்து கொண்டோம். இந்த ஜன்மத்தில் இவரைத் தவிர வேறு யாரையும் நான் மணம் முடிக்க மாட்டேன்” என்று என் மனைவி கண்டிப்பாகச் சொல்ல, வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்கள்.

9 ஜூலை 2016 – நாய் நேசன்

தொடர்ந்து தெரு நாய்களுக்காக செலவு செய்வது என்பது – அதுவும் தனி ஒருவராய் இப்படிச் செலவு செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்.  சேமிப்பு எல்லாம் செலவாகிவிட, நாய்களுக்கு இறைச்சி வழங்குவதற்காகவே அவர் வங்கிகளில் கடன் வாங்க ஆரம்பித்தார் – அதுவும் Personal Loan


மகன்களின் நலனுக்கு மட்டும் தான் விரதமா? மகள் என்ன பாவம் செய்தாள்? அவள் நலனுக்கும் விரதம் கூடாதா என எனக்குத் தோன்றியது.  மகன்கள் மட்டும் என்ன ஸ்பெஷல்?

5 ஃபிப்ரவரி 2014 – தொடர்ந்து வந்த பேய்….

சுடலைமாடனுக்கு நிச்சயம் கட்டுப்படும், ஆகவே இன்னும் வேகமாக நடப்போம் எனச் சொல்லிக் கொண்டே, ”திரும்பி மட்டும் பார்க்காதலே, ஒரே அப்பு அப்பினா, ரத்தம் கக்கிடுவோம்!” என நடந்தோம் – அதாவது நடப்பதாக நினைத்து ஓடினோம்.


கஸ்தூரி பாட்டிங்கறது அவங்களோட உண்மையான பேர் இல்ல. நாங்க வைச்ச பேருதான். தொடர்ந்து “கஸ்தூரி” சீரியல் நேரத்துக்கு கரெக்டா பெரியம்மா வீட்டுக்கு வந்து பார்த்ததனால என்னோட துணைவி அவங்களுக்கு வெச்ச பேரு தான் கஸ்தூரி பாட்டி. அவங்களோட உண்மையான பேரு என்னன்னு நானும் இது வரைக்கும் கேட்கல, அவங்களும் சொல்லல!


“மாதாஜி ரொம்ப நேரமா இங்கே உட்கார்ந்து இருக்கீங்களே, ஏதாவது உதவி வேணுமா?”ன்னு கேட்டார். அட பழைய நினைவுகளில் மூழ்கியதில் நேரம் போனதே தெரியலையேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டே, “என் பையனோட நியூயார்க் போகக் காத்திருக்கேன்,


நான் தேடும் கனவு ராணி எங்கே இருக்காங்க என்பதே தெரியவில்லை. சில வீடுகளின் நடுவில் சின்னஞ் சிறிய வீடுகளும் இருந்தது. இரண்டு மூன்று வீடுகளில் சென்று கேட்டபோது ”போ போ, இங்க சப்னா இல்லை” என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான்.

21 ஜூன் 2010 – விருந்து

என்ன ஆச்சோன்னு பதறியபடி நாங்களும் சமையலறைக்கு ஓடினா, சமையலறைக் கதவைப் பிடித்தபடி நின்னுட்டு அழுதுட்டு இருந்தாங்க.. சமையலறை முழுவதும் சாதமும் பருப்பும் இறைந்து கிடக்கிறது. கீழே மட்டும் இல்லாம, அந்த அறையோட சீலிங் முழுதும் சாதம் ஒரு டிசைன் போட்ட மாதிரி ஒட்டிட்டு இருக்கு.

15 அக்டோபர் 2009 - எதிர் வீட்டுதேவதை

கதிருக்கு அந்த கூந்தல் அழகியின் மேல் காதல் வர எப்படியாவது அந்த அழகியைப் பார்த்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்று இரவு யாருக்கும் தெரியாமல் எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று….

என்ன நண்பர்களே, Retro walk எப்படி இருந்தது? எதற்காக இந்த Retro Walk என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறேன் – இந்தப் பதிவு இந்த வலைப்பூவில் 1600-வது பதிவு! 30 செப்டம்பர் 2009-ல் துவங்கிய இந்த பயணத்தில் 2018-ஆம் ஆண்டு 1600-வது பதிவினைத் தொட்டிருக்கிறேன். எழுதி இருக்கும் அனைத்து பதிவுகளுமே ஏதோ விதத்தில் ஒருத்தருக்காவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து பயணிக்க விருப்பம் – பார்க்கலாம்!

வேறொரு பதிவுடன் மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி! நடைப்பயிற்சியா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி! இதுவும் ஒரு வித நடை தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. 2012 மற்றும் அதற்கு முன்னான பதிவுகளை வாசித்ததில்லை வாசிக்க வேண்டும்...

    1600 வது பதிவு!! வாவ்!!! வாழ்த்துகள்! ஜி! மேலும் நிறைய படைப்புகளைத் தொடர்ந்து படைப்பதற்கும் வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசிக்கலாம் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. காணொளி பின்னர்தான்....அருகில் திருப்பதி சேனல் ஓடிக் கொண்டிருக்கிறது மாமியார் பார்த்துக் கொண்டிருப்பதால் 12 மணி வரை போகும் அதன் பின் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது காணொளி பாருங்கள் - குறைவான நேரம் கொண்டது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட். பின்னோக்கி என்று ஒரு பதிவர் இருந்தாரே.. நினைவிருக்கோ....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பதிவர் பின்னோக்கி நினைவிருக்கிறது. அவரது சில பதிவுகள் படித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இதன் பலன்கள் என்று சொல்லும்போது என்னுடைய முகநூல் பின்னோக்குநடைப் படத்திவையும் இணைத்திருந்தால் பலன்களை டெக்ஸ்டிலும் மக்கள் படித்திருப்பார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /படத்திவையும் //

      தப்பு செய்யறதே எனக்குத் தொழிலாச்சு! 'பதிவையும்' என்று படிக்கவும்.

      நீக்கு
    2. லாம்! பதிவினை முன்னரே Schedule செய்து வைத்திருந்தேன். நீங்கள் இப்போது சொன்னதும் சேர்த்திருக்கலாமே என்று தோன்ற, இணைத்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. //தப்பு செய்யறதே எனக்குத் தொழிலாச்சு!” ஹாஹா... இப்படியும் நடப்பது சகஜம் தானே! படிக்கும்போதே இப்படித்தான் இருக்கும் என மாற்றிக் கொள்வதுண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. //நீங்கள் இப்போது சொன்னதும் சேர்த்திருக்கலாமே என்று தோன்ற, இணைத்து விட்டேன். //

      Thank you Venkat.

      நீக்கு
    5. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. உங்கள் பழைய பதிவுகளை மெல்ல அசைபோட வேண்டும்.. லேசாகத் திறந்து பார்த்தாலே பிடித்ததா இல்லையா என்று தெரிந்துவிடும். என்னுடைய கமெண்ட் அங்கு என்ன என்று பார்த்து விட்டு வந்து விடலாம். அப்புறம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்ததா என்று அடித்தால் பிடித்ததா என்று வருகிறது... மறுபடியும் பிழை.

      நீக்கு
    2. என்னுடைய பெரும்பாலான பதிவுகள் நீங்கள் படித்தவையாகத் தான் இருக்கக் கூடும். பழைய பதிவுகள் தவிர்த்து! முடிந்த போது படித்து, ”பிடித்ததா” என்று சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. அடடா.... இன்னிக்கு ரொம்பவே குளறுதே! :) இப்படி ஒரு வடிவேலு வசனம் இருக்கோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. நடை பயிற்சியே நல்லது,அதிலும் பின்னோக்கி செல்லுதல்
    என்பது இன்னும்நல்லது என்றுதான் நினைக்கத்தோனுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னோக்கி நடப்பதிலும் சில நல்ல விஷயம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

      நீக்கு
  8. ஆஹா 1600-க்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி.

    திரும்பி நடந்தீர்களோ... இல்லையோ... திரும்பி பார்த்தீர்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேராகவே இப்போது தான் நடக்க ஆரம்பித்திருக்கிறேன் - ஹாஹா.... பின்னோக்கி நடந்து பார்க்க வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. பின்னோக்கி நடப்பது எளிதா என்பது புரியவில்லை. பதிவுகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள். பல பழையனவற்றைப் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பின்னோக்கி நடப்பதின் பலன் குறித்தும் பின்னோக்கிய பதிவுகள் குறித்தும் அலசிய நல்ல பதிவு. நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பதிவுகளை நான் இதுவரை படித்ததில்லை. நிதானமாக படித்து கருத்துரை இடுகிறேன் தங்களது பதிவுலக சாதனைகளுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது முந்தைய பதிவுகளை முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. Lஸ்வாரஸ்யமான பதிவு.
    என்னது, ஒரு முறை பின்னோக்கி நடந்தால் 1000 முறை சாதாரணமாக நடந்தது மாதிரியா? Let me try.
    உங்களுடைய பழைய பதிவுகளை படித்து விட்டு கருத்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு பின் நோக்கி நடப்பது நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  12. இது எல்லாமே சீசனல் விஷயங்கள் என்று தோன்றுகிறது. முதலில், எட்டு வடிவத்தில் வடக்கே நோக்கி (அதாவது 8ன் தலைப் பகுதி வடக்கு நோக்கி இருக்கணும். ஒரு 20 அடிக்கு இந்த 8 வரைந்துகொண்டு) நடந்தால் சாதாரண நடையைவிட வெகு வேகமாக கலோரி குறையும் என்று வந்தது. இப்போ நீங்க பின்னோக்கி நடக்கச் சொல்றீங்க. கால் மாறி கீழே விழாமல் இருந்தால் சரிதான்.

    என் யோகா மாஸ்டர், தரையில் இரண்டு கைகளையும், கால்களையும் அகலப் பரப்பி வைத்துக்கொண்டு (நாலுகால் பிராணி போல ஆனால் கைகள் கால்கள் முடிந்த அளவு அகற்றி வைத்துக்கணும். தலையை முடிந்த அளவு மேல் நோக்கி நேராப் பார்க்கணும்) முன்னால 50 அடி, அதேபோல் ரிவர்சுல 50 அடி என்று 4-5 தடவை செய்வது பல மைல் நடப்பதற்குச் சமானம் என்று சொன்னார்.

    உங்கள் பழைய பதிவுகளில் சில, படித்த ஞாபகம் வருது. மீண்டும் புரட்டிப் பார்க்கிறேன். உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... சீசனல் விஷயங்களாக இருக்கலாம். இப்படித்தான் அவ்வப்போது ஏதாவது வந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லையே.

      முடிந்த போது பழைய பதிவுகள் படித்துப் பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. நல்லதொரு பயனுள்ள தகவல்...

    1600...!!! வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. பின் நோக்கிய நடைப்பயிற்சி பற்றிய தகவலோடு பின் நோக்கிய பார்வையும் நன்று. 1600_க்கு வாழ்த்துகள்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. துளசி: பழைய பதிவுகள் வாசித்ததில்லை நாங்கள் வந்தது 2013ல்தானே அதனால்...வாசிக்கிறோம். அட இது என்ன புதுசாக இருக்கிறதே பின்பக்கம் நடப்பது என்று...தலை சுத்தல் வராதோ?

    கீதா: பின்புறம் காணொளி பார்த்தேன் ஜி உங்கள் தகவலும்...இது பற்றிக் கேள்விப்பட்டதுண்டு என்றாலும் முயற்சி செய்ததில்லை. ஆனால் நீச்சலில் மல்லாக்கப் படுத்துப் பின்பக்கம் போகத் தெரியும். செய்ததுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீச்சலில் மல்லாக்கப் படுத்துப் பின்பக்கம் - எனக்குத் தெரிந்த ஒரே நீச்சல் - தரை நீச்சல் தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  16. 1600 வது பதிவிற்கு வாழ்த்துகள் வெங்கட்ஜி. இன்னும் நிறைய நீங்கள் எழுதிடவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  17. பின்னோக்கி நடப்பது கஷ்டம்னு நினைக்கிறேன். பார்ப்போம். இந்தப் பதிவின் மூலம் பல பழைய பதிவுகளையும் மறுபடி படிக்க முடிந்தது. என்னடா ச்ரீராம் பழசுக்கெல்லாம் இப்போக் கருத்துச் சொல்லி இருக்காரேனு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....