ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

புகைப்பட புதிர் – ஐந்து – விடைகள் - பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
நேற்று காலை ஐந்தாவது புகைப்படப் புதிராக இரண்டே இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். அந்த இரண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம், அவை என்ன என்பதை இன்றைக்குப் பார்க்கலாம்.


படம்-1: பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?


முன்பெல்லாம் கல்யாண ஊர்வலம் என்றால் பெட்ரமாக்ஸ் லைட் பிடித்துக் கொண்டு போவதைப் பார்க்க முடியும். “பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?” எனும் கவுண்டமணி ஜோக்கை யாரால் மறக்க இயலும். இப்போதெல்லாம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. வட இந்தியாவில் Bபராத் என அழைக்கப்படும் மாப்பிள்ளை அழைப்பில் இப்படியான விளக்குகளை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு குடையின் ஓரங்களில் அலங்காரத் தோரணங்களாக விளக்குகள் – அவற்றுக்கான பேட்டரி தூக்கிக் கொண்டு வருபவரின் பையில் – அதை இயக்குவதற்கான ஸ்விட்ச் அவர் கையில்! கல்யாண ஊர்வலத்திற்காக இந்த விளக்குகளைத் தூக்கிக் கொண்டு செல்பவர்கள் காத்திருந்த போது எடுத்த படம்! விளக்குகளோடு படம் எடுக்க முடிந்தால் எடுத்துப் பகிர்ந்து கொள்கிறேன்.


படம்-2: யூகலிபட்டக்ஸ் ஆயில்!

இந்தப் பூ யூகலிப்டஸ் மரத்தினுடைய பூ. தால்கட்டோரா பூங்காவில் இந்த மரங்கள் இருக்கின்றன. ரொம்பவும் ம்ருதுவான பூ – தொட்டாலே உதிர்ந்து விடும் இந்தப் பூவை நடைப்பயணத்தின் போது படம் பிடித்துக் கொண்டு வந்தேன். சிறு வயதில் யூகலிப்டஸ் என சரியாகச் சொல்ல வராமல் யூகலிபட்டக்ஸ் எனச் சொன்னது எத்தனை பேர்! பொய் சொல்லாம சொல்லணும்!

என்ன நண்பர்களே, சரியான விடைகளைத் தெரிந்து கொண்டீர்களா? விடை சொன்ன, சொல்ல முயற்சித்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

12 கருத்துகள்:

 1. ஆஹா ஜி! முதல் விடையில் ஏதோ ஒரு அலங்கார விளக்கு குடையின் டாப்பில் இருக்கு என்று தெரிந்தது ஆனால் சரியான விடை தெரிந்தது...இப்போது..

  இரண்டாவது எனது கெஸ் சுத்தமா பக்கத்துல கூட வரலை...

  யூகலிபட்டக்ஸ் என்று சொல்ல சான்ஸேஎனக்குக் கிடைக்கலையே பின்ன யூக்கலிப்ட்ஸ் என்பது எல்லாம் அப்போது தெரிந்திருந்த நினைவே இல்லை ஜி!!

  மிக்க நன்றி ஜி புதியதாகத் தெரிந்துகொள்ள முடிந்தது!! இன்னும் இப்படி நிறைய புதிர்கள் போடுங்கள் அவ்வப்போது..ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூகலிப்டஸ் மரங்கள் நெய்வேலியில் பார்த்ததுண்டு - அதனால் தெரியும்.

   முடிந்த போது புதிர்கள் வெளியாகும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. சுவாரஸ்யமான விடைகள். யூகலிப்டஸ் சரியாகவே சொல்வேன். ஏனென்றால் அது எனக்கு அறிமுகமானதே தாமதமாகத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமாக அறிமுகம் ஆனதால் தப்பித்தது யூகலிப்டஸ்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நான் அலைபேசி மூலம் விடை சொன்னேன் இடம் பெறவில்லையா?
  இரண்டு கேள்விக்கும் சரி பாதி விடை சொல்லி இருக்கிறேன்.
  குடை திருவிழா, திருமணத்தில் பயன் படுத்துவார்கள் என்றேன்.
  பெட்ரமாக்ஸ் விளக்கு என்று சொல்லவில்லை.
  பூ காம்புடன் மரத்தட்டில் வைத்து இருக்கிறார்கள் என்றேன் , என்ன பூ என்று சொல்லவில்லை.

  அலைபேசியிலிருந்து பின்னூட்டம் போட்டால் உங்கள் பதிவில் இடம்பெறகிறதா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசியிலிருந்து பின்னூட்டம் போட்டால் - பார்க்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 4. அலைபேசியிலிருந்து பின்னூட்டம் போட்டால் உங்கள் பதிவில் இடம்பெறகிறதா என்று தெரியவில்லை.//

  இதற்கு முன் அலைபேசியிலிருந்து போட்டேன் வரவில்லை மடிகணினியிலிருந்து போட்டேன் வந்து விட்டது. (தெரிந்து கொண்டேன்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசியிலிருந்து நான் போடும் கருத்துகள் வருகின்றன.... சிலர் கணினியிலிருந்து மட்டுமே கருத்துரை போட முடிகிறது.... என்ன பிர்ச்சனை என்பது கூகிளாண்டவருக்கே வெளிச்சம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 5. முதலாவது கண்டுபிடிக்கவே முடியவில்லை... இன்று தெரிந்து கொண்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. நல்லவேளையா மாட்டிக்கலை, பிழைச்சேன்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....