புதன், 24 ஜூலை, 2013

ஸ்தானேஷ்வர் கோவிலும் குருத்வாராவும் – ரத்த பூமி பகுதி 8

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....


சென்ற பகுதியில் பார்த்த ஷேக் சஹேலியின் கல்லறையிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றால் இருப்பது ஸ்தானேஷ்வர் மஹாதேவ் மந்திர்.  குருக்ஷேத்திரா நகரின் தானேசர் கிராமத்தில் இருக்கும் இக்கோவில் மிகவும் தொன்மையானது. ஷேக் சஹேலியின் கல்லறை அருகில் இருக்கும் காலி இடத்தில் வண்டியை விட்டுவிட்டு கிராமத்து தெருவின் வழியே சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

குறுகிய சாலையின் இரு மருங்கிலும் வீடுகள். அவற்றில் பெரும்பகுதி இடத்தினை மாடு கட்டும் இடம் அடைத்திருக்க, எல்லா பக்கத்திலிருந்து எருமைச் சாணி வாசம்! தெருவிலும் மாட்டுச் சாணம் ஆங்காங்கே இருக்க, அதை மிதிக்காது தாண்டிச் செல்வது உங்கள் சாமர்த்தியம். இதில் வாகன ஓட்டி வேறு, செருப்பை வண்டியிலே விட்டுப் போங்க என்று சொல்லவே, பலர் வண்டியிலேயே விட்டுவிட்டு சாலையில் தத்தக்கா பித்தக்கா நாலு காலுஎன நடனமாடியபடியே வந்தார்கள்.  நல்லவேளை எனது காலில் செருப்பு போட்டுக்கொண்டே சென்றேன்!

ஆங்காங்கே சில கடைகளிலிருந்து – “பூ வாங்கிட்டு போங்க சார், சிவனுக்கு வில்வ இலை வாங்கிட்டு போங்க சார், பூஜைப் பொருட்கள் வாங்கிட்டு போங்க சார்குரல்கள் [குருக்ஷேத்திரத்தில் எங்கே தமிழ்க்குரல் என கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது...... உங்க சௌகரியத்துக்காக ஹிந்தியில் கேட்டவற்றை தமிழில் எழுதி இருக்கிறேன்]. எருமைச் சாண வாசத்தில் பூக்களின் வாசம் நாசி வரை வரவேயில்லை! சாதாரணமாகவே வடக்கில் பூக்கள் வாசமில்லா மலரிதுரகம் தான்! இவற்றையெல்லாம் தாண்டி கோவில் சென்று சேர்ந்தேன். முதலில் உங்களை வரவேற்பது ஒரு பெரிய குளம். நான்கு பக்கங்களிலும் படித்துறை கட்டி குளத்தின் நடுவே ஒரு பெரிய சிவன் சிலை வைத்திருக்கிறார்கள்.



குளத்தின் நடுவே சிவன்.....


இந்தக் குளத்தின் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ராஜா பான் என்பவருக்கு குஷ்டரோக நோய் இருந்ததாகவும் பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் தீராத அவரது நோய், இந்தக் குளத்தின் புனித நீரில் சில துளிகள் பட்டதுமே குணமடைந்ததாகவும் சொல்கிறார்கள்.  இன்னும் ஒரு கிளைக்கதையாக, இந்த குளத்தில் கர்ப்பிணிகள் குளித்தால், குளத்தில் இருக்கும் மீன்கள் எல்லாம் இறந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். இப்போது குளத்தின் படிகளில் பாசி மண்டிப்போய் இருப்பதால், யாரும் இங்கே குளிப்பதாகத் தெரியவில்லை.



ஸ்தானேஷ்வர் சிவன் கோவில்-வெளிப்புறத் தோற்றம்

குளத்திலிருந்து சற்றே படிகளில் ஏறி மேலே செல்வோமா? கீழிருந்து பார்க்கையிலேயே கோவிலின் கோபுரம் தெரிகிறது. கோபுரம் என்றதும் நமது ஊர் கோவில்கள் போலவோ, அல்லது வட இந்திய கோவில்கள் போலவோ கோபுரம் இல்லை. இக்கோபுரம் குவிமாடமாக நெல்லிக்காய் வடிவில் உள்ள கோபுரம். உள்ளே இருக்கும் சிவ லிங்கம். மிகவும் தொன்மையானது. படைக்கும் கடவுளான பிரம்மா இப்பூவுலகில் முதன் முதலில் வைத்த சிவலிங்கம் இது தான் எனவும், வாமன புராணத்தில் இதைப் பற்றிய குறிப்புகள் இருக்கிறது எனவும் அங்கேயுள்ள ஒரு பதாகையில் எழுதியிருக்கிறது.

 
குளமும் குருத்வாராவும்....

இதைத்தவிர, ராமேஸ்வரத்தில் எப்படி ராமர் ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து சிவனுக்கு பூஜைகள் செய்தாரோ, அது போலவே கிருஷ்ணரும், இந்த சிவலிங்கத்தினை பூஜித்தார் எனவும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்த யுத்தத்தின் போது தங்களுக்கு வெற்றி கிடைக்கவேண்டுமென பாண்டவர்கள் இங்கே பிரார்த்தனை நடத்தியதாகவும் இக்கோவிலின் புராணகதைகளைச் சொல்கிறார்கள். 



குருத்வாரா.....
 


மீண்டும் குளத்திற்கே வருவோம். குளத்தின் ஒரு பக்கத்தில் சிவன் கோவில் இருக்கிறதென்றால் குளத்தின் மறுபக்கத்தில், சீக்கியர்களின் வழிபாட்டு ஸ்தலமான குருத்வாரா இருக்கிறது. அங்கேயும் சென்று வர விருப்பமிருந்தால் நீங்கள் சென்று வரலாம். தில்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாரா மற்றும் பங்க்ளாசாகிப் குருத்வாரா ஆகியவற்றுக்கு அவ்வப்போது சென்று வந்திருப்பதால் இங்கே நான் செல்லவில்லை. சீக்கியர்களின் குருமார்களில் ஒருவரான குரு தேக்[GH] பகதூர் தில்லி செல்லும் வழியில் இங்கே வந்து சென்றதாகவும், வந்த நாள் ஒரு சூரிய கிரகண நாள் என்றும், அதிலிருந்து இங்கே சூரிய கிரகண நாட்களில் இந்த குருத்வாரா பகுதிகள் திருவிழாக் கோலம் கொள்ளும் என்றும் சொன்னார்கள்.

தொன்மையான கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கி சில பல புகைப்படங்களை எடுத்துவிட்டு அங்கிருந்து மீண்டும் குறுகிய சாலை வழியே எருமைச்சாண வாசம் பிடித்து பேருந்தினை அடைந்தேன்.  அட சொல்ல மறந்து விட்டேனே, கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க கண்டிப்பாக அனுமதியில்லை! அப்படி மீறி எடுத்துவிட்டால் கேமரா பறிமுதல் செய்யப்படும் என கோவிலின் உள்ளே எழுதி வைத்திருக்கிறார்கள்! அதனால் கேமராவினையும் எனது ஆவ[வா]லையும் சுருட்டிக்கொண்டு வெளியே மட்டுமே புகைப்படங்கள் எடுத்தேன்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது சூரியன் மறையத்துவங்கி விட்டான். நான் போக நினைத்திருந்த இன்னுமொரு இடத்திற்குச் செல்ல முடியவில்லை என மனதில் வருத்தம் தான். அது என்ன இடம் என்று உங்கள் மனதில் கேள்வி பிறந்திருக்குமே? அதற்கு நல்ல பதில் அடுத்த பதிவில் கிடைக்கும்! அதுவரை “கேள்வி பிறந்தது அன்று....  நல்ல பதில் கிடைத்தது இன்றுபாட்டை கேட்டுக் கொண்டு இருங்களேன்! :)

ரத்த பூமி தொடரின் அடுத்த பகுதியில் சந்திப்போமா?

மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்.....

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. அங்கேயெல்லாம் எப்பவும் நல்ல குளிராக இருக்குமோ வெங்கட் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை மனோ..... :)))))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஸ்தானேஷ்வர் சிவன் கோவில் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. கோவிலின் சிறப்பு தகவலுக்கு நன்றி...

    உங்களின் அடுத்த பகிர்வு : http://engalblog.blogspot.in/2013/07/2.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      ஆஹா நம்மையும் களத்துல இறக்கிவிட்டுட்டாங்களா.... ம்ம்ம்ம்....

      நீக்கு
  4. கொசுவத்தி ஏத்துனதுக்கு நன்றி:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட கொசுவத்தி ஏத்திட்டேனா.... :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.....

      நீக்கு
  5. படமும், பயணக்கட்டுரையும் அருமை...

    ரத்த பூமியை பார்க்கவேண்டும் போல இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கலாமே....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு
  6. படங்களும் விளக்கங்களும் அருமை. பாரட்டுக்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  7. குளத்தின் நடுவே இருக்கும் சிவனில் இன்னும் கொஞ்சம் ஜீவன் இருந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே வட இந்திய கோவில்களில் இருக்கும் சிலைகளில் நுட்பமான வேலைப்பாடோ, நீங்கள் சொன்னது போல ஜீவனோ இருப்பதில்லை.....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கோவில் வரலாற்றைக் கொஞ்சம் அறிந்தேன்.
    படங்களும் அருமை. நன்றி நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  9. தகவல்கள் நன்றாக உள்ளன. வாழ்க.

    (சாணவாசம் சம்சாரிக்கு நல்லது. எருமைச் சாண வாசம் எண்சாண் உடம்புக்கு நல்லது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாப சித்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  10. தென்னாடுடைய சிவனே போற்றி!அழகான படங்களுடன் அற்புதமான பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  12. ஸ்தானேஷ்வர கோவிலும், அருகே உள்ள குருத்வாராவும் இவற்றின் பின்னணியும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
    தகவல்களும் புகைப்படங்களும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  14. அருமையான கோணங்களில் படங்களும், பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

  15. முந்தைய பதிவுகள் படிக்கவில்லை. ஆனாலும் சீக்கிய பூமி ரத்த பூமிதான். அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குப் போயிருக்கிறேன். அங்கு ஒரு ஃபோடொ காலரியில் இருக்கும் புகை படங்களில் முக்கால் வாசிரத்தம் தோய்ந்தே இருக்கிறது. வட இந்தியாவில் கோயில் சுற்றுப் புறங்கள் அசுத்தமாகவே காணப் படுகிறது. இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம். அனுபவம் புதுமை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இடம் ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரா...

      வட இந்திய கோவில்கள் மட்டுமல்ல, இப்போது எல்லா இடங்களிலும் அசுத்தம் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  16. ஸ்தானேஷ்வர் மஹாதேவ் மந்திர் தர்சனம் கிடைத்தது. சிவனாரும் குளமும் நன்றாக இருக்கின்றது. கோயிலின் வெளிப்பகுதி படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....