எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 10, 2013

கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் – ரத்த பூமி பகுதி 6

சென்ற பகுதியில் ஜ்யோதிசர் பற்றி பார்த்தோம். குருக்ஷேத்திரா நகரிலிருந்து இந்த இடத்திற்குச் செல்லும் வழியில் முதலில் வருவது குருக்ஷேத்திரா பல்கலைக்கழகம். அதிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம். இது பற்றி ரத்த பூமி தொடரின் இப்பகுதியில் பார்க்கலாம்.இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான டாக்டர் கல்பனா சாவ்லா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஜுலை மாதம் 24 ஆம் நாள் 2007 ஆம் வருடம் குருக்ஷேத்திராவில் கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் திறக்கப்பட்டது. 120 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய கோளரங்கம், சுற்றிலும் விண்வெளிப் பூங்கா, விண்வெளி பற்றிய சிறப்பான காட்சிப் பொருட்கள் என அனைவரையும் வியக்க வைக்கும் விஷயங்கள் இந்த கோளரங்கத்தில் அமைக்கப்பட்டு உள்ளன.திங்கள் கிழமை தவிர, வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இக்கோளரங்கத்தில் தினமும் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய சிறப்பு காட்சிகள் ஐந்து முறை காண்பிக்கிறார்கள். ஆரம்பிக்கும் நேரம், காலை 11.00 மணி, நண்பகல் 12.00 மணி, மதியம் 01.00, 02.00 மற்றும் 03.30 மணி. எல்லாக் காட்சிகளும் ஹிந்தி மொழியில் தான் என்பதால் ஹிந்தி மொழி தெரியாதவர்களுக்கு, காட்சியைப் புரிந்து கொள்வது கடினம்.காலை 10.00 மணி முதல் மாலை 04.30 வரை திறந்திருக்கும் இக்கோளரங்கத்திற்கு நுழைவுச்சீட்டு உண்டு. அதிகமில்லை நண்பர்களே பெரியவர்களுக்கு 25 ரூபாய் மட்டுமே. கேமரா எடுத்துச் சென்றால் அதற்கும் தனிக்கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கப்படுகிறது.

நாங்கள் இந்த கோளரங்கத்திற்கு வரும்போது கிட்டத்தட்ட நான்கு மணியாகிவிட்டது. அதனால் கடைசி காட்சியான 03.30 காட்சியைக் கூட பார்க்க முடியவில்லை. நிறைய இடங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றை மட்டுமே பார்க்கமுடிந்தது. இங்கே செல்வதாகின் முன்னரே திட்டமிட்டு சென்றால், விண்வெளி பற்றிய நிறைய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ள முடியும்.உதாரணத்திற்கு பூமியில் இருக்கும் உங்களது எடை, மற்ற கோளங்களில் எவ்வளவு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.  உதாரணத்திற்கு பூமியில் உங்கள் எடை 80 கிலோ [என்னோட எடை இன்னும் அதிகம்!, அதை இங்கே சொல்ல மாட்டேன்!], வியாழன் கிரகத்தில் கிட்டத்தட்ட 190 கிலோ! அதே நிலவில் உங்கள் எடை 13.2 கிலோ மட்டுமே! இதையெல்லாம் விட சூரியனில் அதிகம்! 80 கிலோ கொண்ட ஒருவரின் எடை சூரியனில் எவ்வளவு இருக்கும் தெரியுமா? 2165.7 கிலோ இருக்கும்.

நான் இந்த விளையாட்டுக்கு வரலை என நினைப்பவர்கள் அப்படியே மேலே படிச்சுட்டுப் போங்க! இல்லை நம்ம மற்ற கிரகத்திலே எவ்வளவு எடை இருப்போம்னு பார்க்க ஒரு நப்பாசை இருந்தா, ஒண்ணு பண்ணுங்க! இந்த சுட்டியை அமுக்கி, கேட்கும் இடத்தில் உங்க எடையை உள்ளீடு செய்து Calculateஅப்படின்னு பக்கத்துல இருக்க பட்டனை தட்டி விடுங்க! எல்லா கிரகங்களிலும் உங்கள் எடை எவ்வளவுன்னு கணக்கு பண்ணி சொல்லிடும்!

நான் ரொம்ப குண்டு, எங்கேயாவது சாரி கும்பலா ஏறி நிக்காதீங்கஅப்படின்னு பதில் வந்துடுமோன்னு பயப்படவேண்டாம். அப்படியெல்லாம் சொல்லாது இந்த தளம்.

நாங்க போயிருந்தப்ப, ஏதோ கோளரங்கத்தை விரிவுபடுத்தறோம்னு பாதி எடத்துல, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருக்கும் இடங்களில் உள்ளவற்றைப் பார்த்துட்டு வந்தோம். பெரியவங்க ரசிக்கறாங்களோ இல்லையோ நிச்சயம் குழந்தைங்க இந்த இடத்தை நல்லா ரசிப்பாங்க.  எங்களோட வந்த வாண்டுங்க, எல்லாம் ரொம்ப ரசிச்சாங்க!

எங்க, இந்த குருக்ஷேத்திரா தொடர் முழுக்க, ஒரே கோவில், குளம்னு சொல்லி போரடிக்கப் போறேன்னு நீங்க கூட நினைச்சு இருப்பீங்க! அதனால தான் நடுவுல கொஞ்சம் ப்ரேக்! என்ன கல்பனா சாவ்லா கோளரங்கம் பற்றிய குறிப்புகளை ரசிச்சீங்களா! சொல்லிட்டுப் போங்களேன்!

அடுத்த பகுதியில் மீண்டும் சந்திப்போமா? திடீர்னு இது என்ன சாலமன் பாப்பையா நாளை மீண்டும் சந்திப்போமா?ந்னு கேட்கற மாதிரி கேட்டேன்னா, அவரோட நிகழ்ச்சி வீடியோவில் பார்த்த விளைவு தான்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

குறிப்பு: கோளரங்கத்திற்குச் செல்லும் போது கேமராவினை மறந்து பேருந்தில் வைத்துவிட்டபடியால், படங்கள் இணையத்திலிருந்து எடுத்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்! இணையத்தில் இணைத்திருந்த அனைவருக்கும் நன்றி!

44 comments:

 1. கல்பனா சாவ்லா! மறக்க இயலாத வீராங்கனை! கோளரங்கத்தை முழுமையா பாக்கற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டிங்களேன்னு குறை இருந்தாலும் மத்த தகவல்கள் அதைப் போக்கிடுச்சு. என் எடை மத்த கிரகத்துல எவ்வளவு இருந்தா என்ன வெங்கட்? நான் என்ன அங்கல்லாம் போகவா போறேன்? இந்தா இருக்கற டெல்லிக்கு வரவே வருஷக் கணக்கில ப்ளான் பண்ண வேண்டியிருக்கு. ஹி.. ஹி...!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ப்ளான் பண்ணாதீங்க கணேஷ். திடீர்னு ஒரு நாள் கிளம்பி தில்லிக்கு வந்திடுங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..

   Delete
 2. பெரியவங்க ரசிக்கறாங்களோ இல்லையோ நிச்சயம் குழந்தைங்க இந்த இடத்தை நல்லா ரசிப்பாங்க

  ரசிக்கவைத்த கோளரங்கப்பயணப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. ஒரு முறை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது... அப்புறம் எடையும் பார்க்கவேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 4. கல்பனா சாவ்லா! மறக்க இயலாத வீராங்கனை! வாழ்க அவர் புகழ்!

  ReplyDelete
 5. உண்மை தான் ஐயா....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

  ReplyDelete
 6. பயனுள்ளத் தகவல் தெளிவான படங்களுடன் விளக்கமும் நன்று நன்றியும்கூட.வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete

 7. வெங்கட் உங்களுக்கு உலகம் சுற்றிய வாலிபன் என்ற பட்டத்தை தருகிறேன். நீங்கள் பல இடங்களுக்கு சென்றதுமட்டுமல்லாமல் அப்படியே உங்கள் தளம் மூலம் எங்களையும் இலவசமாக அழைத்து சென்று காண்பிக்கிறீர்கள். பாராட்டுக்கள் ,,பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. கல்பனா சாவ்லா கோளரங்ககம்...
  வீரப் பெண்மணியின் கோளரங்கம் பற்றிய செய்தி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 10. நாங்க எப்ப அங்கெல்லாம் வருவோம் என்று சொல்ல முடியாது உங்கள் பதிவால் அந்த இடங்களை சுற்றிபார்த்த மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 11. ரொம்ப வெயிட்டான தகவலகள்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 12. குழந்தை மாதிரி ரசித்தேன் பகிர்வை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. அட! தில்லிக்குப் பக்கத்தில் இவ்வளவு இடம் பார்க்க இருக்கா! நல்ல தகவல்கள்! வாழ்க!

  (//உதாரணத்திற்கு பூமியில் உங்கள் எடை 80 கிலோ [என்னோட எடை இன்னும் அதிகம்!, அதை இங்கே சொல்ல மாட்டேன்!//

  எனக்குத் தெரியும். 81 கிலோதானே!],

  ReplyDelete
  Replies
  1. அட இல்லையே அண்ணாச்சி! சொல்ல மாட்டேனே... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 14. அடுத்தமுறை டில்லி வரும்போது பார்க்க வேண்டிய இடங்கள் கூடிக் கொண்டே போகின்றன. கோளரங்கம் மிகவும் சுவாரஸ்யமான இடம். சென்னையிலும், இங்கு பெங்களூரிலும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

  கல்பனா சாவ்லா மறக்க முடியாத பெண்மணி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 15. ரசிக்கவைத்த கோளரங்கப்பயணப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..! நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 16. உங்க பயணம் தான் எங்க அனுபவம். ரியலி.
  நடுவுல சேர்த்த 'கும்பலா ஏறாதீங்க' ஜோக் சுவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 17. டாக்டர் கல்பனா சாவ்லா பெயரில் கோளரங்கம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. தகவல்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 18. நாங்க தவறவிட்ட இடம் இது!

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   அடடா நீங்க போகலையா....

   Delete
 19. கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் பகிர்வு அருமை.
  கல்பனா சாவ்லாவுக்கு வீர வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 20. kகோளரங்கம் விஷயங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. டெல்லி போனால் போய்ப் பார்க்க வேண்டும்.
  விஷயங்கள் அருமையானவைகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 21. படிக்கும்போதே போய் வரனும்ன்னு எண்ணத்தை தூண்டுது சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 22. பயணக்கட்டுரை இது போல் இருக்க வேண்டும் வெங்கட். இது மாதிரி எழுத முடியாது என்று பயந்து தான் நான் எழுதுவது இல்லை:-)).நன்றி தகவலுக்கு..

  ReplyDelete
  Replies
  1. பயணக்கட்டுரைகள் எழுதுவதில் நிறைய ஸ்பெஷலிஸ்ட் துளசி டீச்சர் தான்! அவங்க மாதிரி எழுதணும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 23. கோளரங்கப்பயணம் தெரிந்துகொண்டோம்.

  நல்லபகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....