எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 13, 2011

”மும்தாஜ் வந்துவிட்டால்….” - ஆக்ரா பயணம்ஆக்ரா பயணம் என்றவுடன் இது ஒரு பயணக் கட்டுரை என்று நினைக்க வேண்டாம். இது நான் சென்ற பல ஆக்ரா பயணங்கள் பற்றியது.  தில்லியில் இருப்பதால், ஆக்ராவுக்கு ஒன்றிரண்டு முறை சுற்றுலாவாகச் சென்று வரலாம்.  ஆனால் பல முறை சென்றால்

திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே நான் தில்லியில் இருப்பதால் குடும்ப நண்பர்களோ, உறவினர்களோ, அல்லது தெரிந்தவர்களோ இங்கு சுற்றுலாவாக  வரும்போது, “எங்களுக்கு ஹிந்தி தெரியாது, கஷ்டப்படுவோம் அதனால எங்க கூட நீங்களும் வாங்க!” என்று அழைப்பார்கள்.  நானும்ஐயோ பாவம்ன்னு ஒவ்வொரு முறையும் சென்று வருவேன்.

இப்படி கடந்த 20 வருட தில்லி வாழ்க்கையில் நான் சுமார் 30 முறையாவது ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறேன்எனக்காக இரு முறையும், மற்றவர்களுக்காக மீதியும்

எல்லோர் கண்களுக்கும் அழகாய், உலக அதிசயமாய் தெரியும் தாஜ்மஹாலை இப்போது என்னால் பார்க்கவோ, ரசிக்கவோ அவ்வளவாகப்  பிடிக்கவில்லைஅதற்குக் காரணம் இருக்கு...

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்னர் சிலரை அழைத்துக் கொண்டு ஆக்ரா சென்று வந்த பிறகுஒரு நாள் தூக்கத்தில் திடீரென அலறி எழுந்து, பேந்தப்  பேந்த முழித்திருக்கிறேன். கனவில் மும்தாஜ் [உங்க கற்பனையை கன்னாபின்னான்னு ஓட விட வேண்டாம், சத்தியமா சினிமா நடிகை மும்தாஜ் இல்லீங்க, ஷாஜஹான் மனைவி மும்தாஜ் தாங்க!]  வந்து, ”ஷாஜஹான் கூட இவ்வளவு முறை என்னைப் பார்க்க வந்திருப்பாரா என்று தெரியவில்லை! உங்களுக்குத்தான்  என் மேல் எவ்வளவு ஆசை!!” என்று காதலுடன்  என்னைப் பார்த்துக் கூறுவது போல இருந்தது…”

அந்த அதிர்ச்சியில் எழுந்த என்னைப் பார்த்து அறை நண்பர்கள்   ”என்னடா  ஏதாவது ஆயிடுச்சா! ஆக்ராவுக்கு அழைச்சுட்டுப் போகணுமா?” என்று கேட்டனர்.  

நம் தமிழகத்தில் மன நிலை சரியில்லையெனில் கீழ்பாக்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லவா, அது போன்ற மருத்துவமனை ஒன்று வட இந்தியாவில் அதுவும் ஆக்ராவில் இருக்கிறது.  அதற்குத் தான் அவர்கள் என்னை ஆக்ராவிற்கு அழைக்க, நான் இன்னும் அதிகமாய் அலறினேன்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு யார் தில்லிக்கு வந்துஆக்ரா போகணும், எங்களுக்கு ஹிந்தி தெரியாது, நீங்க வந்தா சௌகரியமாய் இருக்கும்!"-ன்னு  கேட்டாலும், ' கனவில் திரும்பவும் மும்தாஜ் வந்துவிட்டால்'…. என்ற பயத்தோடு "எனக்கு முன்பே ஒப்புக் கொண்ட வேலை இருக்கிறது" என்று நாசுக்காக ஒதுங்கிக் கொண்டு,  ஒரு தமிழர் நடத்தும் சுற்றுலா நிறுவனத்தினை கை காண்பித்து விடுகிறேன்.

"என்னது உங்களுடன் ஆக்ராவை சுற்றிப் பார்க்க நான் கூட வரணுமா?” அடப் போங்க, நீங்க கோடி ரூபா கொடுத்தாலும்  நான் வரலப்பா  இந்த விளையாட்டுக்கு

வேறொரு பதிவில் மீண்டும் சந்திப்போம்

வெங்கட்.


44 comments:

 1. ஆஹா, உங்களை நம்பி, ஹிந்தி தெரியாத நான், டெல்லி வந்து, உங்களுடன் தாஜ்மஹால் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேனே! போச்சே! போச்சே!

  அதுபோகட்டும், கனவில் வந்த மும்தாஜ் எப்படியிருந்தாங்க? அவங்க அழகை வர்ணித்து ஒரு தனி பதிவு எதிர்பார்க்கலாமா?

  voted in both TM & Indli

  ReplyDelete
 2. இதுபோல நீங்க பதிவு எழுதுவது சகோதரிக்கு தெரியுமா? என்னா தைரியம்!! ;-))

  ReplyDelete
 3. கனவுக்குள்ள வந்தா . '''அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி '' அன்பே அன்பே ஜீன்ஸ் பட பாட்டை பாட வேண்டியது தானே வெங்கட்ஜி . இன்னமும் பார்க்காத உலக அதிசயம் ..... நீங்க முடியாதுன்னு சொல்லிட்டிங்க .. அந்த சுற்றுலாக்காரர் முகவரியாவது கொடுங்க ...

  ReplyDelete
 4. ஆகா!மும்தாஜ் கனவில் வரக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! நான் மூன்று ஆண்டுகளில் ஏழெட்டு முறை போயிருப்பேன்.அதே சம்மர்,அதே பணிக்கர்,அதே சுட்டெரிக்கும் உச்சி வெயிலில் தாஜ்மஹால்!கொடுமை!

  ReplyDelete
 5. RVS said...
  "இதுபோல நீங்க பதிவு எழுதுவது சகோதரிக்கு தெரியுமா? என்னா தைரியம்!! ;-))"

  உள்ளேன். உள்ளேன்.

  மும்தாஜ் கனவில் வந்தாரா! ரொம்ப சந்தோஷம்.

  ஒரு முறை சென்றதே போதும் என்றாகி விட்டது.

  ReplyDelete
 6. எங்க சித்தப்பா ஒருத்தர் நாசிக்ல இருக்காரு. ஊருக்கு வர்றவங்க கூட எல்லாம் ஷிரடி, திர்யம்பகம்னு பாவம் அலுக்காம கூட்டிகிட்டு போவாரு. ஒரெ இடத்துக்கு அடிக்கடி போவதும் கஷ்டம் தான்.

  ReplyDelete
 7. ஷாஜஹான் அரசவையில் அன்பருக்கு என்ன தண்டனையோ??
  தாஜ்மஹாலை பார்ப்பதில் இத்தனை பிரச்சனைகள் உள்ளதா
  அப்புறம் நண்பரே ஹி ஹி ..........
  எனக்கும் கூட ஹிந்தி தெரியாது
  ஒருமுறை எனக்காக ..............

  நல்ல சுவையான பதிவு

  ReplyDelete
 8. அடடா, அடுத்த முறை டெல்லி வரும்போது உங்களோடு ஆக்ராவுக்கு போகலாம்னு இருந்தேனே?

  ReplyDelete
 9. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு Feeling!..visit my page at least once today if u have time.

  ReplyDelete
 10. பத்து நாள் ஊரில் இல்லை. வந்து பார்த்தால் படபடன்னு ஏழு பதிவுகள்!!!!!!

  இது வெறும் ஆஜர்தான். இன்னும் வாசிக்கலை. முதலில் இருந்து ஆரம்பிச்சுட்டு வர்றேன்.

  ReplyDelete
 11. போன ஜென்மத்து ஞாபகம் ஏதும் வரவில்லையே?!!...ஏனெனில் இப்பொழுது வந்திருக்கும் ஒரு தெலுகு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு 400 வருடத்திற்கு முந்தய ஞாபகம் வந்து விட்டது!!

  ReplyDelete
 12. அட எங்க கூட நீங்க இன்னும் ஆக்ரா வரலையே....அடுத்து எப்போ ஆக்ரா போலாம்???

  ReplyDelete
 13. என்ன வெங்கட் இப்படி ஜகா வாங்கறீங்க. நான் வரப்ப கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க

  ReplyDelete
 14. நான் இங்கு வண்டலூருக்கு இப்படி தான் ஒரு 25 முறையாவது போயிருபேன். இப்ப போகவே கூடாது என்று சபதம் செய்து இருக்கிறேன்.

  ReplyDelete
 15. ஹை.. ஏமாத்தாதீங்க.. ஆக்ரா போக ஏதாச்சும் ஒரு சாக்கு கிடைக்காதான்னு தானே இப்படி வரமாட்டேன்னு எழுதி எங்களைத் தூண்டி விடறீங்க..

  ReplyDelete
 16. ஆயிரம் சொல்லுங்கள், ஆக்ரா ஆக்ராதான்....தாஜ்மஹாலின் கம்பீர அழகு என்னை வெகுவாய்க் கவர்ந்தது. ஆங்...அந்த நேரத்தில் உதயமானது ஓர் அசட்டு கவிதை...

  காதலை முறித்துப் போட்டு
  என் இதயத்திலும் எழுப்பியிருக்கிறேன்
  ஒரு தாஜ்மஹாலை...  அங்கு போனபோது என்னை தாஜ்மஹாலின் முகப்பு கிரானைட் பெஞ்சில் அமர வைத்து ஃபோட்டோ எடுத்து கருமசித்தையுடன் அனுப்பிவைத்த லோக்கல் புகைப்படக்காரரின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

  ReplyDelete
 17. அட மும்தாஜ் உங்க கனவுல வந்தாங்களா? உங்க கண்ண கொஞ்சம் குடுங்க...கும்புட்டுட்டுத் தரேன்!

  ReplyDelete
 18. ம்ம்.. ஒருத்தரின் அதிசயம் இன்னொருவருக்கு சலிப்பு தரலாம். சுற்றுலாத் தலங்களில் இருப்பவர்களுக்கு இது ஒரு சங்கடம்தான். சில ஊர்களில் அடிக்கடி வரும் விருந்தினர்களால் ஏற்படும் செலவுகளும், சங்கடங்களும் உண்டு. வெளியே சொல்லாட்டாலும் புரியும்.

  ReplyDelete
 19. பாவம் வந்த மும்தாஜோ 300/400 வருடம் முன்பு பிறந்தவர் [Reliance data card ad-ல் வரும் முதியவரைப் போல]. அலறலுக்கு காரணம் அதுதான் என்பது என்னைப் போன்ற்வர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். யாரும் படித்து விடாதீர்கள்

  ReplyDelete
 20. //இன்று நல்லதாக ஒன்று

  சில சமயங்களில் மிகவும் சலிப்பூட்டுகிற, எரிந்து விழுகின்ற நண்பந்தான் உங்களது நண்பர்களில் சிறந்தவனாக இருக்கலாம்//.

  நான் இதை இப்பொழுது தான் பார்த்தேன். முதல் முறை (R.A)பத்மநாபன் அவர்களை சந்தித்த பொதே எங்கள் இருவருக்கும் பெரிய வாக்குவாதம் தான். ஆனால், பின்னர், அவர் என்னு(நம்மு)டைய ஒரு சிறந்த நண்பராக இருந்தார்.

  பழைய நிகழ்வுகளை நினைவூட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 21. @ வை. கோபாலகிருஷ்ணன்:

  //உங்களுடன் தாஜ்மஹால் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேனே! போச்சே! போச்சே!// அதுக்கென்ன இன்னும் ஒரு முறை உங்களுடன் வந்தால் போயிற்று...

  // கனவில் வந்த மும்தாஜ் எப்படியிருந்தாங்க? அவங்க அழகை வர்ணித்து ஒரு தனி பதிவு எதிர்பார்க்கலாமா?//

  அட மும்தாஜ் கனவுல வந்தத இப்படி சொன்னதற்கே நல்ல எஃபெக்ட் இருந்தது... இன்னும் அழகை வர்ணித்து வேறு ஒரு பதிவு போடணுமா.... நான் வரல விளையாட்டுக்கு...

  ReplyDelete
 22. # ஆர்.வி.எஸ்.:

  //இதுபோல நீங்க பதிவு எழுதுவது சகோதரிக்கு தெரியுமா? என்னா தைரியம்!! ;-))//

  தெரியும்.. அதனால் தான் தைரியம்.. எழுதின உடனே படிக்கச் சொல்லி பிறகு தான் போஸ்ட் பண்ணேன்... மேலே சொன்ன மாதிரி ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கிடைச்சது... :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மைனரே...

  ReplyDelete
 23. @ பத்மநாபன்: ஜீன்ஸ் படம் கனவு கண்டப்ப வரலையே பத்துஜி.... சரி எப்ப வரீங்க தில்லிக்கு.... ஒரு நடை போயிடலாம்... :)

  @ சென்னை பித்தன்: கொடுத்து வைத்தவன் :))) அது சரி.... அதே சம்மர்... அதே மண்டை பிளக்கும் உச்சி வெய்யில்... பாதம் எரிய எரிய ஓடும் மக்கள்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா...

  @ கோவை2தில்லி: அதானே.... ஒரு முறை சென்றதே போதும் என்று ஆகிவிட்டதா :) எனக்குத் தெரியும் காரணம்... :) நன்றி...

  @ புதுகைத் தென்றல்: அட நாசிக்லயும் நம்ம ஆள் ஒருத்தர் இருக்காரா? சரிதான்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  @ ஏ.ஆர். ராஜகோபாலன்: அட அவங்க வேற தண்டனை தருவாங்களா? பயமுறுத்தாதீங்க நண்பரே.... உங்களுக்கும் ஹிந்தி தெரியாதா... சரி உங்களோட போயிடுவோம்... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

  @ கே.பி.ஜனா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார். எல்லாரும் ஆக்ரா போகணும்னு சொல்றீங்க... அதனால ஒரு ட்ரிப் அடிச்சுடுவோம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு...

  ReplyDelete
 24. # குணசேகரன்: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே... உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்...

  # துளசி கோபால்: அப்படியா? முழுசா படிச்சு உங்க கருத்தினைச் சொல்லுங்க.... கருத்திற்கு வெயிட்டிங்.....

  # ச. குமார்: மும்தாஜ்-ஏ பல வருடங்களுக்கு முன்னவர் தானே... நல்ல வேளை நீ சொல்ற மாதிரி போன ஜென்மத்து நினைவு வரலை... கருத்திற்கு நன்றி நண்பா...

  # கலாநேசன்: அட சரவணன், உங்களுக்கும் ஆக்ரா போகணுமா... சரி போயிடுவோம்....

  # எல்.கே. : ஆக்ரா போகணுமா கார்த்திக்? போயிடுவோம்.. பயந்துட்டா முடியுமா... போய்ப் பார்த்திடுவோம்....

  # அமுதா கிருஷ்ணா: அட வண்டலூர் 25 முறை போனீங்களா? நல்ல விஷயம்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  # ரிஷபன்: அடடா, கண்டுபிடிச்சிட்டீங்களே சார்... வாங்க ஒரு ட்ரிப் அடிக்கலாம்.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

  # எல்லென்: ஐ கவிதை நல்லாத்தான் இருக்கு. பல புகைப்படக் கலைஞர்களை உங்களை மொய்த்துக் கொள்வார்கள்... அதில் சில ஏமாற்றுப் பேர்வழிகளும் கலந்திருப்பது தான் கவலை.... உங்களுக்குக் கிடைத்தவர் நல்லவர்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 25. @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அட கண்ணு எடுத்து எல்லாம் தர முடியாது. அதனால அடுத்த முறை திருச்சி வரும்போது ஆரண்ய நிவாஸ் வந்து விடுகிறேன்... :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ அமைதி அப்பா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ ஹுசைனம்மா: தங்களது வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ சீனு: அட இப்படி பொது மைதானத்தில் ரகசியத்தினைச் சொல்லிட்டியே... சரி பரவாயில்லை விடு... :)

  //அவர் என்னு(நம்மு)டைய ஒரு சிறந்த நண்பராக இருந்தார். ///

  இருந்தார் என்னடா? இப்பவும் நண்பர் தான். சில நாட்கள் முன்பு கூட தொலைபேசினேன்.... :)

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 26. இந்த அனுபவம் எனக்கும் உண்டு
  எத்தனையோ முறை ,தொட்டபெட்டா மலைச்சிகரம்,ஊட்டி பூங்கா,எலிஃபெண்டாகேவ்,கேட் வே ஆஃப் இண்டியா....சித்திவிநாயகர் கோவில், ஃபாஷன் ஸ்ட்ரீட்,என்று பலமுறை வலம் வந்து
  நிறையவே புண்ணியம் கட்டிக்கொண்டேன்

  ReplyDelete
 27. @ கோமா: உங்களது முதல் வருகையோ? முதலில் உங்களுக்கு எனது நன்றி. இந்த அனுபவங்கள் பெரும்பாலோருக்கு இருக்கிறது போல....

  ஊட்டி பூங்கா என்றதும் எனது ஊட்டி பயணம் பற்றிய நினைவுகள் வந்து போயின.... :)

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 28. வெ.நா. பதினைந்து நாள் வலை பக்கம் வராம சுத்திகிட்டிருந்தேன்.ஆயிரம் சொல்லுங்க.. தாஜ்மகாலும், தஞ்சைகோவிலும் பார்க்கப்பார்க்க அலுக்காத பொக்கிஷங்கள்.

  ஆனாலும் கைடுவேலை சள்ளை தான் ! நம்ம கைப்புள்ள கணவர் கழகம் ஆபீஸ் ஒண்ணு ஆக்ரால போட்டுறுவோம் பாஸ்!

  ReplyDelete
 29. // தாஜ்மகாலும், தஞ்சைகோவிலும் பார்க்கப்பார்க்க அலுக்காத பொக்கிஷங்கள்.///

  தஞ்சை கோவில் - பார்க்கத் திகட்டாதது. தாஜ்மஹால் ஏனோ அலுத்துவிட்டது. முதல் முறை பார்க்கும்போது இருந்த உணர்வு 30-வது முறை பார்க்கும்போது இல்லை மோகன்ஜி!

  கை.க.க. ஆரம்பிக்காம விடமாட்டீங்க போல... சரி ஆரம்பிச்சுடலாம்... ஜமாயுங்க....

  ReplyDelete
 30. // கனவில் திரும்பவும் மும்தாஜ் வந்துவிட்டால்'…. //

  ஹா ஹா ஹா...சிரிச்சு சிரிச்சு... எங்கூர் அம்மணிகிட்ட சொல்லி வேப்பிலை அடிக்க சொன்னா எல்லாம் சரியா போய்டும்... அநேகமா இந்த போஸ்ட் படிச்சுட்டு அவங்களே அதை செஞ்சு இருப்பாங்கனு நினைக்கிறேன்...:)))

  ReplyDelete
 31. //ஹா ஹா ஹா...சிரிச்சு சிரிச்சு... எங்கூர் அம்மணிகிட்ட சொல்லி வேப்பிலை அடிக்க சொன்னா எல்லாம் சரியா போய்டும்...//

  அட நம்மள போட்டுக் கொடுக்கறதுக்குன்னே ஒரு கும்பல் காத்திருக்கு போல.... ஊர்க்காரங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டாங்கப்பா...

  சரிசரி... ரசித்தமைக்கு நன்றி அப்பாவி! :)

  ReplyDelete
 32. ஆகா கனவில்கூட அம்மணி வரலையா. ஏனுங்க அம்மணி இதெல்லாம் என்னான்னு கேட்கமாட்டீங்களா?
  பதிவு ரசிக்கவைத்தது வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 33. @ அன்புடன் மலிக்கா: தங்களது வருகைக்கு நன்றி சகோ. இந்த கனா கண்டது கல்யாணத்திற்கு முன்பு.... அதுனால தப்பிச்சேன்....

  எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ஸ்.... அப்பா...

  பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 34. முப்பது தடவை பார்த்துவிட்டீர்களா...விரைவில் வைரவிழாவையும் கொண்டாடிவிடுங்கள் :)

  ReplyDelete
 35. @ மாதேவி: அட அதுக்கு இன்னும் 20 தடவை போகணுமே… நம்மால முடியாது… ஆனா பின்னூட்டம் இட்ட நிறைய பேர் கூட கூப்பிட்டு இருக்காங்க… இப்படியே போனா 50 என்ன 100 கூட கொண்டாடலாம்…. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 36. அருமையான நகைச்சுவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?..
  வாழ்த்துக்கள் மென்மேலும் எழுதுங்கள் பார்த்து ரசிப்போம் .நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 37. # அம்பாளடியாள்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி. முடியும் போது எழுதி வருகிறேன்... தங்களது ஊக்கம் தரும் கருத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 38. romba courage ungalukku veetla intha visayam theiriyuma?

  ReplyDelete
 39. @ அருள்: தெரியுமே.... :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருள்.

  ReplyDelete
 40. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete

 41. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!

  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr
  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  (இன்றைய எனது பதிவு
  "இந்திய குடியரசு தினம்" கவிதை
  காண வாருங்களேன்)

  ReplyDelete
 42. தகவலுக்கு நன்றி புதுவை வேலு.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....