எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, June 11, 2011

வலைப்பூவில் எழுதும் தில்லி தமிழர்கள்

[தில்லியிலிருந்து வெளி வரத் தொடங்கியுள்ள தினமணி இதழில் நான் எழுதி வெளிவந்த அறிமுகம்]
உலகெங்கிலும் வாழும் தமிழர்களில் பலர் ப்ளாக் [Blog] என்று சொல்லப்படும் வலைப்பூக்களில் கதை, கவிதைகள், சுவையான நிகழ்வுகள் போன்ற பல தரப்பான விஷயங்களைப் பற்றி எழுதி வருகின்றனர். தில்லி வாழ் தமிழர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? தில்லியில் வசிக்கும் சில தமிழர்களின் வலைப்பூக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் சுசீலா, தற்போது தில்லியில் இருந்து கொண்டு http://www.masusila.com/ என்ற வலைத்தளத்தில் சங்க இலக்கியம், ஆன்மீகம், சமூகம் போன்ற தளங்களில் பல நல்ல கருத்துகளை எழுதி வெளியிடுகிறார். இதுவரை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் [பருவங்கள் மாறும், புதிய பிரவேசங்கள், தடை ஓட்டங்கள்], நான்கு கட்டுரை நூல்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவலும் [பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்] வெளிவந்துள்ளன. தற்போது இன்னுமொரு மொழிபெயர்ப்பு நாவலும் அச்சில் இருக்கிறது.

எல்லா பெரிய வெற்றியும் ஒரு சிறுமுயற்சி-யில் தானே தொடங்குகிறது. இதை உண்மையாக்கும் விதமாய் திருமதி கயல்விழி முத்துலெட்சுமி என்ற தில்லி பதிவர் நவம்பர் 2006 முதலாகவே தன்னுடைய படைப்புகளை http://www.sirumuyarchi.blogspot.com/ என்ற வலைப்பூவில் வெளியிட்டு வருகிறார். தில்லியில் இருந்து எழுதும் வலைப்பதிவர்களில் நீண்ட காலமாக எழுதி வருபவர். இந்த வலைப்பூவில் மட்டுமல்லாது வலைச்சரம், சாப்பிட வாங்க, தேன் கிண்ணம் போன்ற வேறு பல வலைப்பூக்களிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது.

“நீர்க்கோல வாழ்வை நச்சி” என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ள லாவண்யா சுந்தரராஜன் தில்லியிலிருந்து வலைபூவில் எழுதிக்கொண்டு இருக்கும் இன்னுமொருவர். இவரது வலைப்பூ முகவரி http://www.uyirodai.blogspot.com/. நல்ல தமிழில் கவிதைகள் பல எழுதி அதை தனது வலைப்பூவிலும், அகநாழிகை, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பினை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.

அனிமேஷன் துரையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துக் கொண்டு இருப்பவர் திரு சந்திரமோகன். இவரது பல ஓவியங்கள் வடக்கு வாசல், உயிர்மை போன்ற இதழ்களைச் சித்தரிக்கின்றன. மேலும் இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். இவர் தனது http://chandanaar.blogspot.com/ என்ற வலைப்பூவில் ஓவியங்கள், கதை, கவிதை, இசை பற்றிய இவரது கோணம் என்று பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

தனியார் துறையில் பணிபுரிந்து கொண்டே தனது பெயரிலேயே http://www.vigneshwari.blogspot.com/ என்ற வலைப்பூவில் சுவையான பல விஷயங்களைப் பற்றி எழுதி வருபவர் திருமதி விக்னேஷ்வரி. கவிதை, சினிமா விமர்சனம் என்ற பல தளங்களில் எழுதி வருபவர். இவர் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

கலாநேசன் என்ற புனைப் பெயரில் கருத்துமிக்க கவிதைகளை எழுதும் ஒரு தில்லி வாழ் தமிழர் திரு சரவணன். இவர் http://www.somayanam.blogspot.com/ என்ற வலைப்பூவில் நிறைய கவிதைகள் வெளியிட்டு வருகிறார். சில கதைகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது எழுதும் இவர் கவிஞர் வைரமுத்துவின் ரசிகர்.

வார்த்தைகளால் சித்திரம் வரைந்து கொண்டிருப்பவர் திருமதி ஜிஜி. தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வந்து தில்லியைப் பற்றியும் அவரது ஊர் பற்றியும் எழுதிக் கொண்டு இருப்பவர். இவர்து வலைப்பூ முகவரி http://www.vaarthaichithirangal.blogspot.com/. இவரது வலைப்பூவில் பயணக் கட்டுரைகள், மழலைப் பட்டாளம் பற்றிய அனுபவங்கள் என்று பல்வேறு சுவையான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை பெரிய மாற்றத்தினை உண்டாக்குகிறது? திருமணத்திற்கு முன் கோவையில் வசித்து வந்த ஆதி வெங்கட் என்ற பதிவர் திருமணத்தினால் தில்லிக்கு இடம் பெயர்ந்து விட தனது வலைப்பூவின் பெயரையே கோவை2தில்லி என வைத்துக் கொண்டு, சமையல் மற்றும் மருத்துவ குறிப்புகள், அனுபவங்கள், பயணக் கட்டுரைகள் போன்றவற்றை தனது வலைப்பூவான http://www.kovai2delhi.blogspot.com/ –ல் எழுதி வருகிறார்.

கடந்த 20 வருடங்களாக தில்லியில் வசித்து வரும் வெங்கட் நாகராஜ் என்பவர் தான் சந்தித்தவை மற்றும் சிந்தித்தவையாக http://www.venkatnagaraj.blogspot.com/ என்ற வலைப்பூவில் இதுவரை 140 பதிவுகளுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவரது ”தலைநகரிலிருந்து” என்ற தொடரில் இந்திய தலைநகராம் தில்லியில் பார்க்க வேண்டிய இடம், உணவு வகைகள், தெரிந்து கொள்ளவேண்டிய சில ஹிந்தி வார்த்தைகள் என்ற விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

தில்லியின் சுற்றுப் புறங்களில் இருக்கும் சிறு நகரங்களிலும் சில தமிழர்கள் வலைப்பூவில் எழுதி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது தில்லியிலும் தமிழர்கள் வலைப்பூக்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதற்கு இதை விட வேறு ஏது சாட்சி…

டிஸ்கி: இது நான் எழுதி அனுப்பியது. இதிலிருந்து நண்பர் சந்திரமோகன் மற்றும் என்னுடைய வலைப்பூ பற்றிய குறிப்புகள் தில்லி சிறப்பு மலர்-இல் ”காக்கா உஷ்” ஆகிவிட்டது.
 

35 comments:

 1. அருமை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரம்...


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

  ReplyDelete
 2. நம்மாட்களுக்கு எப்பவுமே பக்கத்தோட இடம் தான் முக்கியம். கடைசியா இருக்குறத எடுத்துடுங்க அப்படின்னு யாராவது எடிட்டோரியல்ல சொல்லியிருப்பாங்க. உங்க பெற மொதல்ல போட்டு ஆரமிச்சிருந்தீங்கன்னா தப்பிச்சிருப்பீங்க... பரவாயில்லை தலைவரே! உங்களை நாடறியும்!! ;-)))

  ReplyDelete
 3. தில்லி வலைப்பதிவாளர்கள் எல்லாம் கில்லிகளாக இருக்கிறார்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  நீங்க எழுதுனலதுல உங்கள் பத்தி எழுதியது மிஸ் ஆனாலும் முக்கிய மான ஒருத்தரோடது மிஸ் ஆகாம பிரசூரமானதால தப்பிச்சிட்டிங்க.. (எங்கூர்கார அம்முணிக்கு சிறப்பு பாராட்டுக்கள் )

  ReplyDelete
 4. தினமணி அறிமுகத்தில் மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பரே. ஆனால் உங்கள் பெயரும் நண்பர் சந்திர மோகன் பெயரும் வராதது வருத்தமளிக்கிறது.

  ReplyDelete
 5. நண்பர் விட்டலன் பற்றிய தகவலையும் காணோமே!

  ReplyDelete
 6. நல்ல பயனுள்ள அறிமுகங்கள்.
  தலைநகர் டெல்லியின் வாழும், தலைசிறந்த தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  [Voted 3 to 4 in Indli]

  ReplyDelete
 7. அமர்க்களமான
  அட்டகாசமான
  அசத்தலான
  அருமையான
  அற்புதமான
  ஆனந்தமான
  தில்லி வாழ்
  தமிழர்களின்
  வலைப்பூவின்
  பதிவர்களை
  பற்றிய
  பிரமிப்பூட்டும்
  பிரகடனம்
  அதுவும்
  வசிஷ்ட்டர்
  வாயால்
  பிரம்ம பதிவர்
  வாழ்த்துக்கள்
  அனைத்து பதிவர்களுக்கும்

  ReplyDelete
 8. உங்களுக்கெல்லாம் எதுக்கு விளம்பரம்னு விட்டு இருப்பாங்க

  ReplyDelete
 9. //தில்லி வலைப்பதிவாளர்கள் எல்லாம் கில்லிகளாக இருக்கிறார்கள்//
  பத்துஜி கில்லி கமென்ட். ;-))

  //உங்களுக்கெல்லாம் எதுக்கு விளம்பரம்னு விட்டு இருப்பாங்க//


  எல்.கே. எப்புடி இப்படியெல்லாம்.. ;-))

  ReplyDelete
 10. அருமை பகிர்வுக்கு மிக்க நன்றி

  அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. "தில்லி வலைப்பதிவாளர்கள்" அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. டில்லி தமிழ் பதிவுலகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. இந்திய தலைநகரில் இருந்து கொண்டு தமிழ் பரப்பும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்

  ReplyDelete
 15. தில்லி வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் ஒரு ஓ போடலாம்

  ReplyDelete
 16. விட்டுப் போனால் என்ன? உங்களைத் தான் எல்லாருக்கும் தெரியுமே...
  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை இல்லையா?

  ReplyDelete
 17. தில்லி வாழ் த‌மிழ்ப்ப‌திவ‌ர்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்திய‌ நேர்த்தியை ர‌சிக்கிறேன். த‌ங்க‌ள் புகைப்ப‌ட‌ம் காண‌க்கிடைத்த‌மைக்கு ம‌கிழ்கிறேன். இனி தின‌ம‌ணி தில்லி ப‌திப்பில் த‌ங்க‌ளின் ப‌ங்க‌ளிப்பை அடிக்க‌டி காண‌லாமா ச‌கோ... இருட்டிப்பு செய்தாலென்ன‌... ந‌ம‌க்கு இருக்க‌வே இருக்கு வ‌லைப்பூ.

  ReplyDelete
 18. ரொம்ப நல்ல பதிவுங்ணா! நானும் டெல்லியில் (அது என்ன தில்லி?) இருந்திருந்தா என் பதிவைப் பத்தியும் போட்டிருப்பீங்கதானே? ஹூம்... எனக்குக் கொடுத்து வெச்சது அவ்ளோதான்! :)

  ReplyDelete
 19. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  ReplyDelete
 20. தினமணிக்கு நன்றி..அனைவரையும் அறிமுகம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி...

  ReplyDelete
 21. சிறப்பான அறிமுகங்கள்!

  ReplyDelete
 22. டில்லிவாலாக்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. நல்ல அறிமுகம், வாழ்த்துக்கள் நண்பரே.
  http://winmani.wordpress.com

  ReplyDelete
 24. என்னையும் தினமணியில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார். ஆனால் உங்கள் பெயரும் ,சந்திர மோகன் சார் பெயரும் வராதது வருத்தமளிக்கிறது. நான் ஊரில் இருப்பதால் இப்போதுதான் உங்களுடைய பதிவை படிக்க நேர்ந்தது.மன்னிக்கவும்.

  ReplyDelete
 25. வெங்கட்,

  layout நன்றாக உள்ளது. ஆனால், font colour (குறிப்பாக light blue), சற்று contrast சரியாக இல்லாமல் படிக்க கடினமாக உள்ளது. முடிந்தால் சரி செய்யவும்.
  இது ஒரு முழுமையான அட்டவணைப் போல இல்லையே? தில்லியில் மொத்தம் இத்தனை வலைஞர்கள் தானா? அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் அட்டவணையா?

  ReplyDelete
 26. @ ம.தி. சுதா: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..

  @ ஆர்.வி.எஸ்.: உங்கள் குழுமத்தின் பத்திரிக்கை தானே... அதான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது... எனக்குத் தெரியவில்லை.... நாடறியும்...? :) இது கொஞ்சம் ஓவர் மைனரே.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @ பத்மநாபன்: பத்துஜி - தில்லி - கில்லி கலக்கறீங்க உங்கள் கமெண்டில்.... அட ஊர்க்காரங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டாங்கப்பா... அவங்கள விட்டுட முடியுமா... விட்டுத் தான் இருக்க முடியுமா.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜி...

  @ கலாநேசன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரவணன்... விட்டலன் அவர்களுடைய தளம் சில நாட்களாய் காணவில்லை. அதனால் குறிப்பிடவில்லை...

  ReplyDelete
 27. @ வை. கோபாலகிருஷ்ணன்: வாழ்த்திய உங்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும்....

  @ A.R. ராஜகோபாலன்: அட்டகாசமான, அமர்களமான கருத்துரை. மிக்க நன்றி நண்பரே...

  @ எல்.கே.: ஆஹா அதானே... மிக்க நன்றி கார்த்திக்.

  @ ஆர்.வி.எஸ்.: “எப்பூடி?” அதான் எனக்கும் புரியல.....:)

  @ இராஜராஜேஸ்வரி: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ...

  ReplyDelete
 28. # வேடந்தாங்கல் கருன்: மிக்க நன்றி நண்பரே.

  # மாதேவி: வாழ்த்தியமைக்கு நன்றி சகோ.

  # கூடல் பாலா: தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நண்பரே..

  # தென்றல் சரவணன்: மிக்க நன்றி சகோ.

  # மோகன்குமார்: வாழ்த்திய உங்களுக்கு எனது வணக்கங்கள்...

  # ரிஷபன்: ஓ போடலாம்... ஓ...ஓ....

  # ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: வாழ்த்தியமைக்கு நன்றி சார். என்ன ஒரு ஒப்புமை.....

  ReplyDelete
 29. @ நிலாமகள்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  “நமக்கு இருக்கவே இருக்கு வலைப்பூ” அதானே... எதுக்குக் கவலை. :)

  @ கிருபாநந்தினி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி... இப்பவும் ஹிந்தியில் தில்லி என்றும், தெஹ்லி என்றும் எழுதுகிறார்கள் :))))

  @ உலக சினிமா ரசிகன்: வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே... உங்கள் தளத்தில் வந்து படிக்கவேண்டும்... வருகிறேன்...

  @ கீதா ஆச்சல்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  @ சென்னை பித்தன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

  @ அமுதா கிருஷ்ணா: தில்லி வாலாக்களுக்கு வாழ்த்துச் சொன்ன சென்னை வாசிக்கு மிக்க நன்றி :))))

  @ வின்மணி: தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  @ ஜிஜி: ஓ, திரும்பவும் தமிழகம் அழைத்து விட்டதோ?..... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி காயத்ரி...

  @ சீனு: அட திரும்பவும் கமெண்ட் போட ஆரம்பிச்சாச்சா? நல்லது.... மேலே உள்ள லைன் மட்டும் தான சொல்ற? மாத்திடறேன்.. மற்ற இடங்களில் கருப்பு கலர் தான் இருக்கு...:) வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடா....

  ReplyDelete
 30. @ சீனு: இது எனக்குப் பிடித்த தில்லி பதிவர்களின் பட்டியல் அல்ல. இதுவரை எனக்குத் தெரிந்த தில்லி பதிவர்களின் வலைப்பூக்கள். இன்னும் சிலர் இருக்கலாம்....

  ReplyDelete
 31. நன்றி நன்றி.. வெங்கட்
  தொகுப்பில் உங்களிருவர் பற்றி வராதது மிக்க வருத்தமளிக்கிறது.
  அது என்ன தொகுப்பு உங்களுடையது என்றும் பெயர் வரவில்லையா.. பத்திரிக்கைகள் என்றாலே இந்த மாதிரி நடப்பது வழக்கமான ஒன்று ..ஆனால் தகவல் தொடர்பு அதிகமான இந்த காலத்திலும் தவறு நடப்பது :(...

  ReplyDelete
 32. @ முத்துலெட்சுமி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. தவறு என்று அவர்கள் உணர்ந்து விட்டால் சரிதான்... நமக்குத்தான் நம் வலைப்பூ இருக்கிறதே.... ஒன்றும் வருத்தமில்லை....

  ReplyDelete
 33. சில பழைய முகங்கள் எனினும் நல்ல அறிமுகங்கள். நன்றி. "http://www.chandanar.blogspot.com/" இயங்கவில்லையா? 'பிலாக் காணோம்' என்று வருகிறதே?

  ReplyDelete
 34. @ அப்பாதுரை: தங்களது கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.. தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கும். நண்பர் சந்திரமோகனின் வலைப்பூ முகவரி கீழே இருக்கிறது.

  http://www.chandanaar.blogspot.com/

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....