வியாழன், 16 பிப்ரவரி, 2012

அன்பின் விருது


சென்ற ”விருது வாங்கலையோ விருது” என்ற பகிர்வில் சந்தோஷமாக எழுதிய எனக்கு இன்னுமோர் அன்பின் விருது கிடைத்துள்ளது.  அதைப் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. 
விருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் என்று மதிப்புரிக்குரிய திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவிட்டு அந்த பதிவில் எனக்கு Leibster Blog என்ற இன்னுமொரு விருதினை அளித்திருக்கிறார்.  அவருடைய நல்ல உள்ளத்திற்கு நன்றி. 


இப்போது வலைப்பூக்களில் விருது வழங்கும் நேரம்.  பெரும்பாலான வலைப்பூக்களில் விருது மழை பொழிந்து கொண்டு இருக்கிறது.  Leibster என்றால் என்ன என்று பார்க்கலாம் என அதன் அர்த்தத்தினை தேடினேன்.  Leibster என்பது ஒரு ஜெர்மனி மொழி வார்த்தையாம்.  அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு Dearest என்று சொல்லியிருக்கிறார்கள். 

இந்த விருதினை 200-க்கும் குறைவான தொடர்பவர்களை பெற்றிருக்கும் ஐந்து பதிவர்களுக்கு வழங்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். இந்த விருதினை பெற்றவர்கள் செய்ய வேண்டியது:

·         விருது வழங்கியவர்களுக்கு நன்றி சொல்லி அந்த பதிவின் சுட்டியை தமது பதிவில் அளிக்க வேண்டும்.
·         தனக்குப் பிடித்த, 200-க்கும் குறைவான தொடர்பவர்களைப் பெற்றிருக்கும் ஐந்து வலைப்பூக்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கும் அதைத் தெரியப்படுத்த வேண்டும்.
·         இந்த விருதினை அவரது வலைப்பூவில் சேர்க்க வேண்டும்.

மற்றவர்களது தவறுகளை உடனே சுட்டிக்காட்டும் குணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.  ஆனால் மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் பாராட்டத் தவறி விடுகிறோம்.  நம்மை யாராவது பாராட்டினால் எவ்வளவு மகிழ்ச்சி பெறுகிறோம்.  அதுபோலவே நாமும் அடுத்தவரின் நற்செயலைப் பாராட்டி மகிழ்ச்சியைப் பரப்புவோம்…

எனக்கு கிடைத்த மகிழ்ச்சியை, இந்த ஐந்து நபர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…


பொறுமை அவசியம் தேவை எனச் சொல்லும் அமைதி அப்பா

நான் அறிந்தது கையளவு என்று அடக்கத்துடன் சொல்லும் எனது நெடுநாள் நண்பன் வேங்கட ஸ்ரீனிவாசன்.

புதுவை சந்திரஹரி என்ற பெயரில் நல்ல சிறுகதைகளை பத்திரிக்கைகளில் எழுதி வரும் திரு ஹரிதாஸ்.

கனவுகளைக் காதலிக்கும் நண்பர் கார்த்திக் பாலா.


மீண்டும் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

49 கருத்துகள்:

 1. விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்ட தங்களுக்கு என் நன்றிகள்.

  விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

  தங்களால் இன்று விருது பெரும் ஐவருக்கும் என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 2. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது உடனடி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  தங்களது தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
 3. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. விருது பெற்றதற்கு வாழ்த்துகள் வெங்கட் ...

  பெற்ற ஐவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 5. @ ரெவெரி: வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 6. விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.உங்களால் விருது வழங்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. நம்மை யாராவது பாராட்டினால் எவ்வளவு மகிழ்ச்சி பெறுகிறோம். அதுபோலவே நாமும் அடுத்தவரின் நற்செயலைப் பாராட்டி மகிழ்ச்சியைப் பரப்புவோம்…//

  பாராட்டி மகிழ்ச்சியை பரப்புவோம்.

  வெங்கட் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  உங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 9. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 10. விருது பெற்ற தங்களுக்கும்
  தங்களால் விருது பெற்ற அனைவருக்கும்
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள்! பாராடுக்கள்! நன்றி நல் விருதுகளை வழ்ங்கியமைக்கு! விருது பெற்ற அனைவருக்கும் பாரட்டுக்கள்! விரைவில் மீண்டும் வலைப்பூவில் சந்திப்போம்!

  பதிலளிநீக்கு
 12. மகிழ்ச்சியைப் பெற்று மகிழ்ச்சியைப் பரப்பிய அன்பு நண்பருக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. விருதுகளுக்கு மேல் விருதாகப் பெற்றுவரும் உங்களுக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 14. எல்லாருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 15. @ சே. குமார்: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 16. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 17. @ இராமன். இ.சே.: தங்களது வருகையும் வாழ்த்தும் எனை மகிழச்செய்தது ஐயா.... மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. @ கணேஷ்: தங்களது தொடர் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.....

  பதிலளிநீக்கு
 19. @ MANO நாஞ்சில் மனோ: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 20. @ கலாநேசன்: வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 21. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
  உன் 'Dearest' நண்பர்களின் பட்டியலில் என் பெயர் நிச்சயமாக இருக்கும் என்பது தெரியும். இப்பொழுது, 'Dearest' வலைஞர்களில் என்னையும் சேர்த்துள்ளதற்கு நன்றிகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 22. விருது பெற்றதற்கு வாழ்த்துகள் வெங்கட்

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள் :-)

  இந்த மழைக்கு குடையே தேவை இல்லை,ஜாலியா நனையலாமாக்கும்.

  பதிலளிநீக்கு
 24. விருதுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்,விருதை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. வாழ்த்துக‌ள் ச‌கோ...! த‌ங்க‌ளால் அங்கீக‌ரிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்குமாக‌!!

  பதிலளிநீக்கு
 26. @ அமைதிச்சாரல்: வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 27. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: வருகைக்கும் விருதினைப் பெற்றுக் கொண்டதற்கும் மிக்க நன்றி சீனு....

  பதிலளிநீக்கு
 28. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 29. @ ராஜி: //இந்த மழைக்கு குடையே தேவை இல்லை,ஜாலியா நனையலாமாக்கும்.//

  நிச்சயம்... :)

  தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 30. @ ஜிஜி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜிஜி.

  பதிலளிநீக்கு
 31. @ ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்திய நல்லுள்ளத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  பதிலளிநீக்கு
 32. நல்ல பகிர்வு.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 33. தாங்கள் விருது பெற்ற்றமைக்கு
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
  தொடர்ந்து தங்கள் அருமையான
  பதிவுகளை தொடர்ந்து தர வேணுமாய்
  அனபுடன் வேண்டுகிறோம்

  பதிலளிநீக்கு
 34. ஹை... Thank you soooooooo much... எனக்கு விருது வழங்கியதற்கு நன்றிங்க. விருது வாங்கியவங்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 35. @ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 36. @ ரமணி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 37. @ சாதாரணமானவள்: பதிவினைப் படித்து, விருதினைப் பெற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 38. எனக்கு விருதளித்த தங்களுக்கு என் நன்றி. விருது பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 39. @ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....