எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 9, 2012

தத்தெடுக்க ஒரு பிள்ளை


"பாக்யா" இதழ் வெளி வர ஆரம்பித்தபோது கேள்வி-பதில் பகுதியில் நிறைய குட்டிக் கதைகள் சொல்லி தனது பதிலைச் சொல்வார் பாக்யராஜ்.  அந்த பாணி நன்றாக இருக்கும். சரி அதைப் பற்றிய முன்னோட்டம் இப்போது எதற்கு என்று தானே கேட்கிறீர்கள்?

சமீபத்திய சென்னைப் பயணத்தின் போது  “Vedanta Through Stories” என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கினேன் – ராமகிருஷ்ண மடத்தின் பிரசுரம்.  நிறைய குட்டிக் கதைகள் அதில் இருந்தது. 

அதிலிருந்து எனக்குப் பிடித்த சில குட்டிக் கதைகளை அவ்வப்போது எனது வலைப்பக்கத்தில் தமிழில் பகிர்ந்து கொள்ள எண்ணியிருக்கிறேன். முதல் கதை கீழே….


முதியவர் ஒருவர் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.  அவரிடம் நிறைய பணம், சொத்துன்னு இருந்தாலும் அதை விட அதிக கவலையும் இருந்தது. காரணம் இத்தனை இருந்தும் அவருக்குப் பின் அவைகளை ஆண்டு அனுபவிக்கவும், அதிகமாக்கவும் அவருக்கு வாரிசு இல்லாததே.

அதனால் தான் தத்தெடுக்கப் போவதாக முன்னணி நாளிதழ்களில் ஒரு விளம்பரம் கொடுத்தாராம்.   அந்த விளம்பரம் பார்த்து நிறைய இளைஞர்கள் வந்திருந்தனராம்.  அவர்களுக்கு நடுவே ஒரு எண்பது-வயது முதியவர் தனது மகன், பேரன் மற்றும் கொள்ளுப்பேரனுடன் வந்திருந்தாராம். வந்திருந்தவர்கள் ”எதற்காக இத்தனை வயதானவர் வந்திருக்கிறார்?” என்று யோசித்துக் கொண்டிருந்தார்களாம்.பணம் படைத்த முதியவரும் இவரைப் பார்த்து – “நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்?” எனக் கேட்க, அதற்கு அந்த முதியவர் சொன்னாராம் – “என்னையே நீங்கள் தத்தெடுக்க வேண்டும், அதற்கே நான் வந்திருக்கிறேன்”.  “ வயதான உங்களையா?” என்று திருப்பிக் கேட்டதற்கு அவர் என்ன சொல்லி இருப்பார்னு நினைக்கிறீங்க!

”இங்க பாருங்க, நீங்க, உங்க சொத்தெல்லாம் என்ன ஆகுமோ, அது இன்னும் பெருகணும்னு நினைச்சுதானே தத்தெடுக்க நினைச்சீங்க, என்னை தத்தெடுத்தா, நீங்க உங்களோட சொத்து, பணம் பத்தி மூணு தலைமுறைக்கு பயப்பட வேண்டாம்.  ஏன்னா, என்னை தத்தெடுப்பதன் மூலம், எனக்கே ஏதாவது ஆனாலும் உங்களுக்கு மூணு தலைமுறை கிடைக்குதே!”

என்ன ஒரு யோசனை! பணக்காரர் இந்த எண்பது வயது முதியவரை தத்தெடுத்திருப்பார் என நினைக்கிறீர்களா?  உங்கள் கருத்து என்ன என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

குறிப்பு:  பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி.


தமிழ்மணத்தில் வாக்களிக்க:  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139521

32 comments:

 1. ஏன்னா, என்னை தத்தெடுப்பதன் மூலம், எனக்கே ஏதாவது ஆனாலும் உங்களுக்கு மூணு தலைமுறை கிடைக்குதே!”


  வித்தியாசமான சிந்தனை!

  ReplyDelete
 2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. பெரியவரின் புத்திசாலித்தனத்தை நினைக்கையில் ஆச்சரியாமாக இருக்கிற‌து! இவரைத்தான் அந்தப் பணக்காரர் தத்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது!

  ReplyDelete
 4. பெரியவர் புத்திசாலிதான்.பணக்கார பெரியவரும் கட்டயம் அவரைத்தான் தத்து எடுத்திருப்பார்.

  நல்ல பதிவு வெங்கட்.
  தொடர்ந்து மீதி கதைகளையும் சொல்லுங்கள் படிக்க ஆவலாக இருக்கு.

  ReplyDelete
 5. என்னே சாமர்த்தியம்!!

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு நல்ல குட்டிக்கதை
  பெரியவர் புத்திசாலி...

  ReplyDelete
 7. அப்படிப்போடு!

  செத்தபின் சொத்து என்னாகும் என்று
  இத்துப் போய் தத்தெடுக்க விளைந்த
  பித்தருக்கு கத்துக் கொடுக்க வந்த எண்
  பத்து வயது முத்து.

  ReplyDelete
 8. கதை சிறப்பாக இருக்கு
  உடனடியாக மகன் பேரன் எல்லாம்
  கிடைப்பதெல்லாம் சும்மாவா
  வித்தியாசமான கதைதான்
  தொடர்ந்து தரவும்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. //என்னை தத்தெடுத்தா, நீங்க உங்களோட சொத்து, பணம் பத்தி மூணு தலைமுறைக்கு பயப்பட வேண்டாம். ஏன்னா, என்னை தத்தெடுப்பதன் மூலம், எனக்கே ஏதாவது ஆனாலும் உங்களுக்கு மூணு தலைமுறை கிடைக்குதே!”//

  நல்ல மாறுபட்ட சிந்தனை. பெரியவர் சொல்வது ஒரு விதத்தில் நியாயமாகவே உள்ளது. ஆனாலும் அவர் இவரைத் தத்தெடுக்கத் தயங்கியிருப்பார், அவ்வாறு செய்திருக்கவே மாட்டார் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. புத்திசாலியான முதியவரை தத்தெடுத்திருப்பார்
  என்றே நினைக்கிறேன் நண்பரே.

  ReplyDelete
 11. தத்தெடுத்து “க்ரண்டா” கல்யாணம் செய்ததைத் பார்த்தோம். இங்க “க்ரண்ட் ஃபாதரை”யே தத்தெடுக்க வேண்டுமா?

  ReplyDelete
 12. நண்பரே!ஆவலைத் தூண்டும் விதத்தில் அமைந்த கதை. தத்து எடுத்திருக்க மாட்டார் என எண்ணுகிறேன். முடிவைத் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 13. பெரியவர் புத்திசாலிதான்.பணக்கார பெரியவரும் கட்டயம் அவரைத்தான் தத்து எடுத்திருப்பார்.

  ReplyDelete
 14. அந்த சொத்துக்களை ஒரு அனாதை ஆசிரமத்திற்கு எழுதிவைத்து அந்த ஆசிரமத்திலிருந்து வாழ்க்கையில் உயர்வு பெற்றவர்கள் அந்த மேற்படி சொத்துக்களை வாழையடி வாழையாக பார்த்துக்கொள்வார்கள் என்று உயில் எழுதியிருந்தால் அவர் சூப்பர் க்ராண்ட்பா!! என்னாபா? சரியா? :-)

  ReplyDelete
 15. ஏற்கனவே வாசித்த புத்தகம்...உங்கள் தமிழில் அழகு...

  ReplyDelete
 16. No. The answer was that person withdraw his plan and he given all the property to some homes.

  ReplyDelete
 17. யார் புத்திசாலி. தத்தெடுக்கப் போகிறவரா. தத்துக்கு வந்தவரா:)

  நீங்களே சொல்லுங்கள். நல்ல பகிர்வு.நன்றி வெங்கட்.

  ReplyDelete
 18. @ மனோ சாமிநாதன்
  @ கோவை நேரம்
  @ ராம்வி
  @ மோகன்குமார்
  @ ஹுசைனம்மா
  @ K.s.s.Rajh
  @ ஈஸ்வரன்
  @ ரமணி
  @ வை. கோபாலகிருஷ்ணன்
  @ மகேந்திரன்
  @ வேங்கட ஸ்ரீனிவாசன்
  @ ஈ.எஸ். சேஷாத்ரி
  @ லக்ஷ்மி
  @ ஆர்.வி.எஸ்.
  @ ரெவெரி
  @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்
  @ சந்த்ரு
  @ வல்லி சிம்ஹன்

  கருத்துரையிட்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. தனித்தனியாக பதில் எழுதாமைக்கு வருந்துகிறேன்.

  புத்தகத்தில் அந்தப் பெரியவர் தத்து எடுத்தாரா இல்லையா என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விட்டார்கள்... என்னைப் பொறுத்தவரை தத்து எடுத்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 19. உங்கள் பதிலையும் தெரிந்துகொண்டேன்.நான் நினைத்தேன்,அந்த தாத்தாவின் பேரப் பிள்ளைகளை தத்தெடுத்திருப்பார் என்று.

  ReplyDelete
 20. திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

  ReplyDelete
 22. சொத்துக்காக தத்து எடுக்கறதை காட்டிலும் உயிருடன் இருக்கும்போதே நல்ல தத்துவங்களை பிறருக்கு பரப்ப தத்து எடுத்தல் உயர்வு.சொத்து,தத்தை வளர்க்கவும் செய்யலாம் அழிக்கவும் செய்யலாம்.நல்ல தத்துவங்கள்,தத்தை வளர்க்கும்

  ReplyDelete
 23. வெங்கட்,எனது “விருது” பதிவில் எனக்கு கிடைத்த ஒரு விருதினை,உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

  ReplyDelete
 24. @ ராஜி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் பக்கத்தில் உங்கள் கருத்துரை... கூடவே விருதும் தந்து அசத்திட்டீங்க! மிக்க நன்றி.

  //ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.// நிச்சயம் தொடர்கிறேன்....

  ReplyDelete
 25. @ ராம்வி: அட இன்னோர் விருது.. இப்பதான் சகோ ராஜி ஒரு விருது தந்திருக்காங்க! நீங்களுமா... மிக்க நன்றி ரமா ரவி.. நிச்சயம் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்....

  ReplyDelete
 26. @ ரமணி: மீண்டுமொரு வந்து தமிழ்மண வாக்களித்தற்கு நன்றி சார்.

  ReplyDelete
 27. சிந்திக்க வேண்டிய செய்தி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 28. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....