செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வெளியூர் எலி!


[பட உதவி: கூகுள்]

Non-Detailed Story என்ற ஆங்கில பாடத்தை சின்ன வயதில் நாமெல்லோரும் படித்திருப்போம்.  நிறைய கதைகள் அதில் இருக்கும்.  அப்ப தெரிந்ததை எதற்கு திருப்பிச் சொல்லணும்…. காரணம் இருக்கு நண்பர்களே! 

[பட உதவி: கூகுள்]

அந்தக் கதைகளில் “The Pied Piper” என்று ஒரு ஆங்கிலக் கதை நம்மில் பலரும் படித்திருப்போம்.  அந்த “The Pied Piper” இப்ப தில்லி ரயில் நிலையத்திற்குத் தேவை என்று ஒரு விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!

தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளின் போது தில்லி முழுவதும் விதவிதமான ஏற்பாடுகள் நடந்தது, பலகோடிகள் செலவு [செலவு தான்!] செய்யப்பட்டது, அதற்காக “உள்ளே” சென்றது என நிறைய செய்திகளை படித்திருப்பீர்கள்.  அவற்றில் ஒன்றாக புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்த எலிகளை விரட்டி அடித்தார்கள்.  இப்போது அவையெல்லாம் திரும்பி வந்து விட்டன. 


[படம்:  சதீஷ் ஆச்சார்யா அவர்களின் வலைப்பக்கத்தில் இருந்து]

இரயில்வே அதிகாரி ஒருவர் 10 முதல் 12 அங்குல நீளமும் 4-5 அங்குல அகலமும் உள்ள எலிகள் தான் புது தில்லி ரயில் நிலையத்தில்  இருக்கும் பெரிய பிரச்னை என்று சொல்லியிருக்கிறார். இந்த எலிகளின் தொல்லையை நீக்க தொழில்நுட்பமெல்லாம் பயன்படுத்த நினைத்திருக்கிறார்களாம்!  நிலையத்திற்கு வரும் எலிகளில் சிலவற்றைப் பிடித்து அவற்றுக்கு ”Chip” பொருத்தி, அவை தனது வீட்டிற்கு [அதான்பா எலிப்பொந்து!] செல்லும்போது அதன் பின்னால் போய் மொத்த எலிகளையும் அழிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

நிலையத்தின் பார்சல் ஏற்றும் பகுதி, நடைமேடைகள், ரயில் பெட்டிகள் என ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவைகள் நிலையத்தின் அருகிலிருக்கும் ”சதார் பஜார்” [ஒரு கிலோ மீட்டர்], என்ற இடத்திலிருந்து வருகிறது என்று சொல்கிறார். 

அதை மட்டுமே சொல்லியிருந்தால் இந்தப் பதிவு எழுதவேண்டிய அவசியமும் இருந்திருக்காது.  அவர் சொன்ன இன்னொரு விஷயம், “இவைகள் எல்லாம் எங்கள் ஊர் எலிகள் அல்ல!  தென்னிந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் அவைகள் பயணித்து தில்லி ரயில் நிலையத்திற்கு வந்து விடுகிறது" என்றும்  சொல்லியிருக்கிறார்! என்னே அவரது விளக்கம்!  விட்டால் அவைகளிடம் பயணச்சீட்டு கூட கேட்பார் போலிருக்கு!

முப்பது மணி நேரத்துக்கு மேலாக வண்டியில் பயணித்து வர அந்த எலிகளுக்கு தலையெழுத்தா என்ன?  அவைகளுக்கு நம் ஊரில் கிடைக்காத உணவா?  இங்கே வந்து தான் பிழைக்க வேண்டுமா? பிரச்னைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு எலிகள் தென்னிந்தியாவில் இருந்து தான் வருகிறது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்!  புரியவில்லை.

ஒரு பெரிய பெட்டி நிறைய எலிகளை நிரப்பி அவர் வீட்டிற்கு பார்சலில் அனுப்பலாம் என நான் நினைக்கிறேன் :)

நீங்களும்  சொல்லுங்களேன் – வேறு என்ன செய்யலாம் என்று. 

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட், 
புது தில்லி.


50 கருத்துகள்:

 1. அட..
  இதுதான் எதிர்க்கட்சி சதி அப்படின்னு
  சொல்வாங்களா???
  நல்லாத்தான் சொல்றாங்கய்யா..

  பதிலளிநீக்கு
 2. தமிழ் நாட்டு எலிகளின் உணவுப் பழக்கம்
  எப்போது தூங்கும் எப்போது பிடித்தால்
  எளிதாகப் பிடிக்கலாம் எனபதை அறிய
  அடுத்து வல்லுனர் குழு ஒன்றை
  தமிழகத்துக்கு அனுப்ப திட்டமிடுகிறார்களோ என்னவோ

  பதிலளிநீக்கு
 3. “இவைகள் எல்லாம் எங்கள் ஊர் எலிகள் அல்ல! தென்னிந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் அவைகள் பயணித்து தில்லி ரயில் நிலையத்திற்கு வந்து விடுகிறது..

  மதராஸிகளோடு எலிகளும் சேர்ந்துகொண்டது அவர்கள் ஆராய்ச்சிக்கு!

  பதிலளிநீக்கு
 4. @ மகேந்திரன்: உங்களது உடனடி வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 5. @ ரமணி: செய்தாலும் செய்யக்கூடும்.... :(

  தங்களது உடனடி வருகைக்கும், கருத்திற்கும், தமிழ்மண வருகைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

  பதிலளிநீக்கு
 6. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. எலிகளுக்கெல்லாம் டிக்கெட்டெல்லாம் வாங்காம எந்த இடங்களுக்கும் பயணம் செய்ய முடியுதே. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 8. //“இவைகள் எல்லாம் எங்கள் ஊர் எலிகள் அல்ல! தென்னிந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் அவைகள் பயணித்து தில்லி ரயில் நிலையத்திற்கு வந்து விடுகிறது"//

  அவர் பார்த்த எலிகள் எல்லாம் வேஷ்டி கட்டி இருந்திருக்குமோ!

  பதிலளிநீக்கு
 9. அன்பு நண்பரே

  சாதாரனமாக எப்போதும் எதாவது natural calamity ஏற்பட்டால் உடனே ஒரு சென்ட்ரல் டீம் அந்த குறிப்பிட்ட மாநிலத்துக்கு சென்று எவ்வளவு நஷ்டம் என்று மதிப்பீடு செய்யும்.அதேபோல தென் மாநிலத்தில் உள்ள அணைத்து ரயில்வே உயர் அதிகாரிகளை கூப்பிட்டு ஒரு பெரிய மீட்டிங் போடலாமே!!!!!!! அதன் பின்னர் minutes of the meeting தயார் செய்யலாம் எலிகள் தானாக போய் விடும். அதற்க்குள் அடுத்த comonwealth games வந்துவிடும்.

  பதிலளிநீக்கு
 10. //ஒரு பெரிய பெட்டி நிறைய எலிகளை நிரப்பி அவர் வீட்டிற்கு பார்சலில் அனுப்பலாம் என நான் நினைக்கிறேன் :)//

  கட்டயம் அனுப்பி வைங்க வெங்கட்.

  பதிலளிநீக்கு
 11. //10 முதல் 12 அங்குல நீளமும் 4-5 அங்குல அகலமும் உள்ள எலிகள்//

  இந்த சைஸ வ்ச்சுத்தான் சொல்லிருப்பாங்கன்னு நினக்கிறேன். ஏன்னா 2ஜி, 4ஜின்னு “பெரீய்ய” ஊழல் (பெருச்சாளி)களின் பிறப்பிடம் தென்னிந்தியாதானே, அதவச்சு சொல்லிருப்பாய்ங்களோ?

  பதிலளிநீக்கு
 12. "Chip(s)" வாங்க "Lays"-ஆ செலவாகாதே; Uncle (Sam) Chips வாங்க 1,2,3-னு நிறைய conditions போடுவாரே.

  பதிலளிநீக்கு
 13. சோறு போரடிக்குதுன்னு சப்பாத்தி தின்ன வந்த கூட்டமா இருக்குமோ!!!!!

  டெல்லி (ஊழல்) பெருச்சாளிக்களுக்கு புது வகுப்பு எடுக்க வந்துருந்தாலும் வியப்பில்லை. வாட் எவர் யூ ஸே..... மத்ராஸீஸ் அக்கல்மண்ட் ஹை:-)))))

  பதிலளிநீக்கு
 14. எலி கிட்ட ஹிந்தி பேசி பாக்க சொல்லுங்கோ. ஹிந்தி புரிஞ்சதுன்னா அது வடநாட்டு எலி. பே பே!னு நம்பள மாதிரி முழிச்சா நம்மூர் எலி! :))

  பதிலளிநீக்கு
 15. //ஒரு பெரிய பெட்டி நிறைய எலிகளை நிரப்பி அவர் வீட்டிற்கு பார்சலில் அனுப்பலாம் என நான் நினைக்கிறேன் :)

  நீங்களும் சொல்லுங்களேன் – வேறு என்ன செய்யலாம் என்று. //

  http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html
  இந்த இணைப்பில் இராமசுப்பு, கோவிந்தன், ரங்கன் முதலிய எலியுடன் நெருங்கிய அனுபவஸ்தர்கள் உள்ளனர்; அவர்களைக் கலந்து ஆலோசிக்கவும்.

  பதிலளிநீக்கு
 16. @ லக்ஷ்மி: அதானே... டிக்கெட் எல்லாம் நமக்குத்தான்... நம்ம போகும்போது வாங்கும் டிக்கெட் கூடவே அதற்கு ஃப்ரீ போல :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 17. @ ஈஸ்வரன்: //அவர் பார்த்த எலிகள் எல்லாம் வேஷ்டி கட்டி இருந்திருக்குமோ!// தெரியலை அண்ணாச்சி....

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. @ விஜயராகவன்: //அதன் பின்னர் minutes of the meeting தயார் செய்யலாம் எலிகள் தானாக போய் விடும். அதற்க்குள் அடுத்த comonwealth games வந்துவிடும்.// அதானே... இது நல்ல ஐடியா தான். இன்னும் நிறைய சம்பாதிக்கலாம்!

  பதிலளிநீக்கு
 19. @ ராம்வி: நிச்சயம் அனுப்பிட்டுத்தான் முதல் வேலை...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. @ ஹுசைனம்மா: //இந்த சைஸ வ்ச்சுத்தான் சொல்லிருப்பாங்கன்னு நினக்கிறேன். ஏன்னா 2ஜி, 4ஜின்னு “பெரீய்ய” ஊழல் (பெருச்சாளி)களின் பிறப்பிடம் தென்னிந்தியாதானே, அதவச்சு சொல்லிருப்பாய்ங்களோ?// இருக்கலாம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: // Uncle (Sam) Chips வாங்க 1,2,3-னு நிறைய conditions போடுவாரே.// அதானே... கண்டிஷன்ஸ் போடுவார்... அதுக்கு வேற நிறைய கஷ்டப்படணும்....

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

  பதிலளிநீக்கு
 22. எலி அவரிடம் தென்னிந்திய மொழியில் பேசியதோ என்னவோ?!

  பதிலளிநீக்கு
 23. @ துளசி கோபால்: //சோறு போரடிக்குதுன்னு சப்பாத்தி தின்ன வந்த கூட்டமா இருக்குமோ!!!!!// இருந்தாலும் இருக்கும். நிச்சயம் அக்கல்மந்த் தான்!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

  பதிலளிநீக்கு
 24. @ தக்குடு: //ஹிந்தி புரிஞ்சதுன்னா அது வடநாட்டு எலி. பே பே!னு நம்பள மாதிரி முழிச்சா நம்மூர் எலி! :))// அட இது நல்ல யோசனையா இருக்கு தக்குடு.... ஆனா இப்பல்லாம் ஹிந்தி எல்லாம் கத்துக்க ஆரம்பிச்சாச்சு!

  தக்குடுவின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. @ வை. கோபாலகிருஷ்ணன்: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்... உங்க ஐடியா நல்லா இருக்கு! மொத்த கதையினை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்பி வைத்துவிடலாம்!

  பதிலளிநீக்கு
 26. @ சென்னை பித்தன்: //எலி அவரிடம் தென்னிந்திய மொழியில் பேசியதோ என்னவோ?!// இருக்கலாம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 27. ஹையா... நல்ல சான்ஸ் வெங்கட், தென்னிந்தியாவுல இருந்து பூனைங்களைல்லாம் புடிச்சு பார்சல் பண்ணி அனுப்பிடலாம். மனுஷன் சாவட்டும்...

  பதிலளிநீக்கு
 28. @ கணேஷ்: அட இது கூட நல்ல ஐடியாதான் நண்பரே.... பூனையும் சேர்த்து பிடிக்க ஆரம்பிச்சுடுவோம்!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. சென்ற முறை சென்னையிலிருந்து வந்தபோது சென்ட்ரல் ஸ்டேசனில் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் சீட்டுக்கு கீழ் சற்றிய சுண்டெலிகள் அவ்வப்போது தரிசனம் தந்தும்,பயணிகளை தொல்லை செய்துகொண்டும் வந்தவைகள் தில்லி வரைதான் வந்தன.அவைகள்தான் இப்போ பெரிச்சாலிகளாகி,இனவிருத்தி செய்திட்டுங்களோ!!!

  பதிலளிநீக்கு
 30. வீட்டிலும் நாட்டிலும் ஒரே மாதிரி தொல்லை பார்த்தீர்க‌ளா...!

  பதிலளிநீக்கு
 31. முப்பது மணி நேரத்துக்கு மேலாக வண்டியில் பயணித்து வர அந்த எலிகளுக்கு தலையெழுத்தா என்ன? அவைகளுக்கு நம் ஊரில் கிடைக்காத உணவா? இங்கே வந்து தான் பிழைக்க வேண்டுமா? பிரச்னைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு எலிகள் தென்னிந்தியாவில் இருந்து தான் வருகிறது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்!

  ஹா.. ஹா.. இப்பதான் கரப்போட பயணம் பற்றி பதிவு போட்டேன்.. ரயில்வே எப்பதான் மாறுமோ..

  பதிலளிநீக்கு
 32. ஒரு பெரிய பெட்டி நிறைய எலிகளை நிரப்பி அவர் வீட்டிற்கு பார்சலில் அனுப்பலாம் என நான் நினைக்கிறேன்//

  கண்டிப்பாய் செய்யுங்கள்...-:)

  பதிலளிநீக்கு
 33. டெல்லிக்கி தமிழ் நாட்டில் இருந்துதான் இரயில்கள்
  வருகிறதா..?
  வடவரின் வஞ்சகமனம்,தமிழன் என்றால்
  இளக்காரம்! வெட்கக் கேடு!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 34. அடிக்கடி ஷீலாதீக்‌ஷிக் இங்க இருக்கவங்களால ப்ரச்சனை இல்ல வெளீயூர்க்காரங்கன்னு சொல்லி சொல்லி எல்லாரும் அப்படி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களா ? :))

  பதிலளிநீக்கு
 35. வணக்கம்! நல்ல வேளை அவர் உங்களிடம் ” மதராஸி எலிகள் “ என்று சொல்லாமல் விட்டு விட்டார். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 36. நானும் இரண்டு க்ரேட் அனுப்பறேன். கைவசம் இல்லை:(
  துடிக்கிறது மீசை வசனம் நினைவுக்கு வருகிறது.

  கேட்க ஆளில்லாமல்தானே இப்படி எழுதுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 37. who is to bell the cat?

  எலிப் பிரச்சனை குறித்து இப்படி ஒரு விளக்கமளித்த பூனைக்கு?

  பதிலளிநீக்கு
 38. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: சென்னை ரயில்கள் என்றல்ல, இங்கே வட இந்திய ரயில்களிலும், கரப்பு, எலி என எல்லா உயிரினங்களும் உண்டு சகோ... அது இந்திய ரயில்வேயின் சிறப்பு விளம்பரம்... :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. @ நிலாமகள்: உண்மை தான்... எல்லா இடத்திலும் எலித்தொல்லை தான்...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 40. @ ரிஷபன்: ரயில்வே துறை மாறுவதற்கு வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை... நாமதான் மாறணும் போல இருக்கு....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 41. @ ரெவெரி: செய்திடுவோம் நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 42. @ புலவர் சா இராமாநுசம்: தமிழ்நாடு மட்டும் சொல்ல்வில்லை... மொத்த தென்னிந்தியாவையும் சொல்கிறார்கள்... கஷ்டம்தான்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....

  பதிலளிநீக்கு
 43. @ முத்துலெட்சுமி: எல்லா இடத்திலும் இப்படித்தான் - வெளியூர்க்காரர்களால் தான் பிரச்சனை என்று சொல்கிறார்கள்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 44. @ தி. தமிழ் இளங்கோ: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்....

  பதிலளிநீக்கு
 45. @ வல்லி சிம்ஹன்: என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலைதான்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 46. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: ஆமாம் நண்பரே.... பூனைக்கு மணி கட்டுவது யார்!

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 47. போற போக்கைப் பார்த்தா டெல்லியில கொசு கடிச்சாக் கூட அதுவும் தென்னிந்தியாவுலேர்ந்து வந்துதுன்னுதான் சொல்லுவாங்களோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  பதிலளிநீக்கு
 48. @ அமைதிச்சாரல்: அட நீங்க ஒரு புது ஐடியாவை குடுக்கறங்களே அவர்களுக்கு - நல்ல வேளை இவர்களுக்கு தமிழ் தெரியாது! :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 49. இது புது விதமான ஆராட்சியாக இருக்கிறதே:))))))

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....