வெள்ளி, 14 ஜூலை, 2017

ஃப்ரூட் சாலட் 201 – Back Again – Big Boss – GST – பல்பு!


மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஃப்ரூட் சாலட்! ஏப்ரல் ஏழாம் தேதி அன்று ஃப்ரூட் சாலட் 200-வது பகுதி எழுதி, இத்துடன் இந்தப் பகுதியை நிறுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தேன். தொடர்ந்து ஐந்து வருடங்களாக வாரத்திற்கு ஒன்றாக எழுதி வந்த பகிர்வுகள் – ஒன்றிரண்டு வாரங்கள் தவிர மற்ற எல்லா வாரங்களிலும் இந்தப் பெயரில் பல விஷயங்களைத் தொகுத்து வந்திருக்கிறேன். கடைசி என்று சொன்னபோதே பதிவில் கருத்திடும் நண்பர்கள் – நிறுத்த வேண்டாமே, கொஞ்சம் ப்ரேக் விட்டு பிறகு தொடரலாமே என்றும் எழுதி இருந்தார்கள்.  மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இதோ மீண்டும் ஃப்ரூட் சாலட்!  இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்கிறது!

இந்த வார செய்தி:வட இந்திய திருமணங்களில் குதிரை மீது மணமகன் வருவதும், அவருக்கு முன்னால் பலரும் ஆடுவதும் பற்றி முன்னரே எனது பதிவுகளில் எழுதி இருக்கிறேன். இந்த மாதிரி நடனம் ஆடும்போது ஆணோ, பெண்ணோ, “நாகின்” Dance அதாவது பாம்பு போல நடனம் ஆடுவது ரொம்பவே பிரபலம்! குறிப்பாக கிராமப் புறங்களில், பாம்பாட்டியின் மகுடியின் வாசிப்பிற்கு பாம்பு படமெடுப்பது போல, இங்கே ஆணோ, பெண்ணோ பாம்பு நடனம் ஆட ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை பார்க்கவில்லை என்றால் கூகிளில் Nagin Dance in Marriages என்று தேடிப் பாருங்கள்.

ஆடுவது போலவே, கல்யாண ஊர்வலங்களில் [Barat] பலரும் குடிபோதையில் இருப்பதும் வழக்கம்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் உத்திரப்பிரதேசத்தின் சஹரான்பூர் பகுதியில் நடந்த ஒரு திருமண ஊர்வலத்தில் குடிபோதையில் இருந்த ஒரு நபர் இப்படி ஆடிக்கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நிலப்பகுதியிலிருந்து பாம்பு வர அதைப் பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு பாம்பு நடனம் ஆடி இருக்கிறார். “அட நீ தான் ஏற்கனவே பாம்பு நடனம் ஆடற, என்னை வேற எதுக்குப் பிடிச்சுக்கற” என்று தப்பித்து ஓட முயன்ற பாம்பை மீண்டும் பிடித்து தோளில் போட்டுக்கொள்ள, பாம்பு வேறு வழியின்றி அந்த நபரை பல முறை கொத்தி விட்டதாம்! இரண்டு மூன்று மணிநேரத்திற்குள் அந்த மனிதர் இறந்து போக, அவரைப் பெற்றவர்கள் சோகத்தில்!

இரண்டு வாரத்திற்கு முன்னரும் இதே போன்று வேறு ஒரு திருமணம் – மணமகனே குடித்து விட்டு பாம்பு நடனம் ஆடுவதைப் பார்த்த மணப்பெண், “நீ பாம்போடவே குடும்பம் நடத்து, உனக்கும் எனக்கும் ஒத்துவராது” என்று சொல்லி திருமணத்தினை நிறுத்தி விட்டார்! இது நடந்ததும் உத்திரப் பிரதேசத்தில் தான்!

இந்த வாரம் பாம்பு வாரம் போல – உத்திரப் பிரதேசத்தில்!

இந்த வார காணொளி - GST

வரிகள் முன்பும் உண்டு, இப்போதும் இருக்கிறது. எதற்கு வரி, எதற்கு வரி கிடையாது என்பதைப் பற்றி நிறைய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு விஷயம். இந்தச் சமயத்தில் இது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி இங்கே பேசப்போவதில்லை! சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பாருங்களேன்.

A Period – Short Film – Bharat Mata in New India…..


இந்த வார புகைப்படம்:

அலுவலகத்திலிருந்து திரும்புகையில் பார்த்த ஒரு காட்சி!யானை மீது மனிதர்கள் மட்டும் தான் உட்கார வேண்டுமா என்ன? நாங்களும் உட்காருவோம்…..

இந்த வார முகப்புத்தக இற்றை:

கோவை2தில்லி எனும் வலைப்பூவில் எனது இல்லத்தரசி எழுதிக் கொண்டு இருந்தார். இப்போதெல்லாம் வலைப்பூ பக்கம் வருவதே இல்லை. அவ்வப்போது முகநூலில் எழுதுவதோடு சரி. அவர் வலைப்பூவில் எழுதாததால், முகநூலில் எழுதிய ஏதாவது ஒரு பகிர்வு ஃப்ரூட் சாலட் பக்கத்தில் வரும்…..  இந்த வாரம் அவர் பல்பு வாங்கிய விஷயம்!இந்த நாள் இனிய நாள்!!

காலை நேர பரபரப்பில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு!!!
ஹலோ!!
புவனாவா??
ஆமாம்! நீங்க??
நான் சித்தப்பா பேசறேன் மா!!!
( ஆச்சரியம்!!! ..ஏனென்றால் யாரும் என்னை அழைக்கமாட்டார்கள்.. சொந்தங்களிடம் நானாக பேசினால் தான்... என் எண் கூட அவர்களிடம் இருக்கிறதா என்பது சந்தேகம்!:) )
செளக்கியமா சித்தப்பா, சித்தி செளக்கியமா??....
இப்ப தான் எழுந்தியாம்மா???
இல்ல சித்தப்பா, வேலை பரபரப்பா பண்ணிட்டிருக்கேன்.. சொல்லுங்கோ...
போன வாரம் எலெக்ட்ரிக் ட்ரெயின்ல உன் ஓர்ப்படியோட தம்பியாம்.. கண்ணன் என்று சொன்னார்.. பார்த்து பேசினோம்.
ஓர்ப்படியா!!!!!
எனக்கு ஓர்ப்படியே இல்லையே சித்தப்பா... இவர் ஒரே பிள்ளை..:) இரண்டு நாத்தனார் தான் இருக்கா!!
இரு! இரு!! நீ புவனா தானே??
ஆமாம்.. :)
எங்கிருந்து பேசறே???
ஸ்ரீரங்கம்!!
ஓ!! நீ ஸ்ரீரங்கம் புவனாவாம்மா??
நான் பெங்களூர்ல இருந்து பேசறேன்..:) ( பெயர் சொன்னார்)
மும்பை தோழியின் அப்பா...:)
வெங்கட் செளக்கியமா?? பொண்ணு எப்படி இருக்கா??
இப்போ சித்தப்பா மாமாவாகிப் போனார்...:)
சொல்லுங்கோ மாமா , மாமி செளக்கியமா..:)
மாமி குளிச்சிண்டிருக்கா... நான் அப்புறமா பேசறேன்... என்று சிரித்துக் கொண்டே வைத்தார்...:)
குரலும் எப்படி அப்படியே இருந்தது??
பல்பு வாங்கியதை நினைத்து சிரித்துக் கொண்டே சமையலைத் தொடர்ந்தேன்...:)
- 
   ஆதி வெங்கட்

இந்த வார WhatsApp:

When you are in the light, everything follows you.  But when you enter into the dark, even your own shadow doesn’t follow you! சொன்னவர் ஹிட்லர்!

Big Boss!

ஹிந்தியில் பல சீசன்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் Big Boss தமிழில் வந்தாலும் வந்தது, தொடர்ந்து அதைப் பற்றியே பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  முகநூலில் இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், கிண்டல் செய்தும் வரும் காணொளிகள் எத்தனை எத்தனை. ஒரே ஒரு காணொளியைப் பார்த்து அலறி அடித்து மூடினேன்! அனைவரும் சேர்ந்து நிகழ்ச்சியை பரபரப்பாக ஆக்கி, TRP ஏற்றுவதில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்….  எப்போதான் இந்த நிகழ்ச்சி முடியுமோ? ஒரே அக்கப்போரா இருக்குதுப்பா….

மீண்டும் உங்கள் அனைவரையும் ஃப்ரூட் சாலட் பதிவில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.  வாரா வாரம் வரும் என்று உறுதியாகச் சொல்லாவிட்டாலும், அவ்வப்போது எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்!

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

38 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தமிழ்மணத்தில் பதிவினை இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. சுவை..

  பாம்போடு விளையாடும் அளவுக்கு போதை.. ஹ்ம்ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

   நீக்கு
 4. சித்தப்பா, மாமாவானது நல்லகூத்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 5. காணொளியைக் கண்டு மனம் கலங்கியது..

  சில தினங்களுக்கு முன் Fb ல் வந்தது.. இன்னும் எத்தனை எத்தனை இன்னல்கள்.. தீர்த்து வைப்பவர் யாரோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி - ம்ம்ம்... பார்த்தபோது எனக்குள்ளும் கலக்கம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 6. அருமை...

  மீண்டும் தொடர்ந்தது குறித்து மகிழ்ச்சி ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 8. மீண்டும் ஃப்ரூட் சாலட் மகிழ்ச்சி.
  காணொளி மனது கனத்து போனது.
  ஆதியின் பல்பு படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. பாம்பு நடனச் செய்தி இப்படியுமா என்று தோன்றியது.

  காணொளி...ஜிஎஸ்டி பற்றி இன்னும் தெளிவான விளக்கம், புரிதல் இல்லையே. காணொளி அதை இன்னும் அதிகமாக்கியது...வேதனை...(கீதா: நான் ஜிஎஸ்டி நல்லாருக்கேனு நினைச்சேன். ஆனால் இது சொல்லும் செய்தி பயப்படுத்த வைக்குதே! காண்டம் னோ டாக்ஸ் ஆனா நாப்கின் டாக்ஸ்...என்ன கொடுமை சரவணா இது?)

  பல்பு ஹஹஹ் இப்படி எங்களுக்கும் நிகழ்ந்ததுண்டு...

  கீதா: பிக் பாஸ் அதெல்லாம் ஒரு ப்ரோக்ராமா ஜி! டிஆட் பி ரேட்டை எல்லோரும் ஏற்றி உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்....

  அனைத்தும் அருமை வழக்கம் போல் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 13. குடித்துவிட்டால் எதுவும் தெரிவதில்லை தனுயிர் உட்பட

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். குடி அனைத்தையும் மறக்கடிக்கிறது போலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 14. திரும்பவும் வெள்ளிக்கிழமையன்று தரும் பழக்கலவையைத் தரத் தொடங்கியமைக்கு நன்றி! அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 16. அனைவரும் சேர்ந்து நிகழ்ச்சியை பரபரப்பாக ஆக்கி, TRP ஏற்றுவதில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்….///////////////உண்மை. வேண்டாத குப்பையென ஒதுக்கித்தள்ளாமல் அது சொத்தை இது சொட்டை என சொல்லியே அந்த நிஜழ்ச்சி பிரபலயமாகிவிட்டது.

  ப்ருட் சாலட் அனைத்துமே அருமை பலப் வாங்கிய அனுபவம்எல்லோர் வாழ்விலும் ஒரு தடவையேனும் நடந்துருக்கும் போலவே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
 17. பாம்பு டான்ஸ் ஆடலாம் ,பாம்போடு ஆடலாமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 18. பிக் பாஸ் உங்க வீட்டுலயும் இடம் பிடிச்சுட்டாரா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 19. வட இந்திய திருமணங்களின் ‘பாராத்’ குறித்து வாசித்ததும் எனது ‘யாதோன் கி பாராத்’ ஆரம்பித்து விட்டது. :-)

  உ.பியில் வசித்த சில வருடங்களில் பல வேடிக்கையான மணமகன் ஊர்வலங்களைக் கண்டதோடு, கடந்து போகையில் அவர்களது இசைக்குழு பாடுகிற சினிமாப்பாடல்களையும் கேட்டு வாய்விட்டுச் சிரித்ததுண்டு.

  உதாரணமாக, ‘நகீனா’ படத்தில் இடம்பெற்ற ‘ மே தேரி துஷ்மன் துஷ்மன் து மேரா’ என்ற பாடல். ‘நான் உனக்கு எதிரி; நீ எனக்கு எதிரி’ என்ற பொருள்வருகிர அந்தப் பாடலைப் போயும் போயும் திருமணத்தன்றா பாடவேண்டும் என்று எண்ணியதுண்டு. அதைவிட மோசமானது...

  ‘ஷான்’ படத்தில் வரும் ‘யம்மா யம்மா’ பாடல். அதில் வருகிற ‘பஸ் ஆஜ் கீ ராத் ஹை ஜிந்தகி; கல் ஹம் கஹா தும் கஹா’ ( இன்று இரவோடு வாழ்க்கை முடியும்; நாளை நீ எங்கே நான் எங்கே?’ என்ற பொருள்படும் வரிகள்.

  அடப்பாவிகளா, கல்யாணத்தன்று இரவு பாடுகிற பாட்டா இது என்று எண்ணி விழுந்து விழுந்து சிரித்ததுண்டு.

  சூப்பர்! ஃப்ரூட் சாலட் ஏக்தம் படியா ஹை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை.... மகிழ்ச்சி.

   வட இந்திய திருமணங்களில் பாட்டு - :) நானும் பலமுறை சிரித்ததுண்டு! எப்படி இந்த பாடல்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் யோசித்ததுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....