எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 26, 2017

அபலைகள் – திரு. கல்பட்டு நடராஜன்

திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள் ஒரு மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர். தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது படித்து பல விஷயங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் மறைந்த அவரது ஒரு கவிதை/கதைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் அவரது அபலைகள் கவிதை/கதைத் தொகுப்பை மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அத்தொகுப்பினை வாசித்த அனுபவமும், மின்புததகத்திலிருந்து நான் ரசித்த சில கவிதைகளும் கதைகளிலிருந்து சில வரிகளையும் இப்பதிவில் பார்க்கலாம். "பெண்கள் வாழ்ந்திடும் தியாக வாழ்க்கையினையும், அவர்களுக்கு எதிராய் ஆண்கள் புரிந்திடும் குற்றங்களை எதிர்த்துப் போரிடும் சக்தி அற்ற தன்மையையும் மனதில் கொண்டு அவர்களை அபலைகள் என்று சொல்கிறோம். [அ + பலை = பலம் அற்றவர்]" என்று தனது முன்னுரையில் சொல்கிறார் திரு கல்பட்டு நடராஜன்.

அபலையின் கண்ணீர்-1 கவிதையில் இருந்து சில வரிகள்....

சொரம் ஒண்ணு வந்திருச்சு
சுருண்டேதான் படுத்திருக்கேன்
வந்திருவான் இபபோ மொடாக்குடியன்
காசுக்கு எங்கே போவேன் நான்
குடுக்கத்தான் அவனுக்கு
வாய் கூசாம ஏசிடுவான்
ஆரு கூட நீ படுத்தே
கைதுட்ட கொடுத்திட்டேனே

கொள்ளி கொண்டே போவோணும்
இந்த கள்ளு சாராயம் விக்குற
ஆளுங்களை எல்லாம்.....

என்ன குற்றம் புரிந்தார் இவர்? கவிதையில் இருந்து....

வீதியிலே பலாத்காரம்
ஓடும் பேருந்திலே பலாத்காரம்
இல்லையோ முடிவேதும் இவற்றுக்கே

முக்கண் கொண்டவன் சிவன் என்பார்
எரித்திடுவான் அவன் குற்றங்கள் புரிவோரை என்பார்
மூடினானோ அவனும் தன கண்களையே
காணச் சகித்திடாத இவ்வவலங்களை
என்ன குற்றம் புரிந்தார் பெண்கள்
பெண்ணாய்ப் பிறந்தது
பெரும் குற்றமா அன்றி.....

குமுறுது ஒரு பெண் சிசு....

தாயிற் சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
என்றார் சான்றோர் அன்று.....
ஓதுகின்றார் என் தந்தை
சாவு மந்திரம் இன்று
கோயிலில்லை நீ
கருங் கல்லால் ஆன கல்லறை நீ

கூசாமல் பாலுடன் கலந்தே
போட்டிட முனைகிறாயே
கள்ளிப் பாலினை எனக்கு
அம்மாவா நீ!

இதயத் தீ – சிறு கதையிலிருந்து....


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழு ஆகஸ்ட் பதினைந்து இந்தியர்கள் மறக்க முடியாத தினம். இந்தியா சுதந்திரம் பெற்ற தினம். நானும் ஒரு இந்தியக் குடிமகள் தானே. என்னால் மட்டும் எப்படி மறக்க முடியும் அந்த நாளை? மேலும் அன்று தானே என் சுதந்திரம் பறிபோன நாள்......

அன்று தான் கதையின் நாயகியான சௌந்தர்யாவிற்கு திருமணம் ஆனது. புகுந்த வீட்டிற்குச் சென்ற பிறகு தான் தெரிந்திருக்கிறது தான் அந்த மணமகனுக்கு மூன்றாவது மனைவி என்பது! தோசை ஒழுங்காக வரவில்லை என்று சூடான தோசைக்கல்லில் நாயகியின் கையை வைத்து தேய்த்தாளாம் அவளது மாமியார். படிக்கும் போதே மனசும் கையும் சுடுகிறது நமக்கு! எத்தனை கொடுமைகள்! வயிற்றில் மூன்று மாதக் குழந்தையோடு அப்பா வீட்டிற்கு வந்தவரை திரும்பி அழைத்துப் போகவில்லையாம் – தோசை கூட வார்க்கத் தெரியவில்லை என்பது காரணமாம்! முழுக் கதையும் படித்துப் பாருங்களேன்.....

தப்புத் தாளம் – சிறு கதையிலிருந்து....

சின்ன வயதிலிருந்தே பாட்டில் ஆர்வம் உள்ள பெண். கல்யாணம் வரை பாட்டுக் கற்றுக் கொண்டு பாடியவர்.  பாட்டு கற்றுக் கொண்டபோது கிடைத்த அனுபவங்கள் சுவைபடச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். திருமணத்திற்குப் பிறகு அவரது பாட்டு ஆசைக்கு தடை வருமா? கணவர் பாட அனுமதிப்பாரா? "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"னு பாடினாரே கண்ணதாசன், "கணவன் அமைவதெல்லாம் யார் கொடுத்த வரம்?" என்று சொல்லாமல் விட்டாரே!

ஒரே மின்புத்தகத்தில் கவிதைகள், கதைகள் என இரண்டுமே படிக்கும் வாய்ப்பு! புத்தகத்தினைப் படிக்க விரும்புவர்கள் இங்கே  தரவிறக்கம் செய்து படிக்கலாமே! மொத்தப் பக்கங்கள் 47 மட்டுமே.

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லியிலிருந்து......

38 comments:

 1. அட? கல்பட்டாரை உங்களுக்கு அறிமுகமா? குடும்ப நண்பர். பத்து வருஷங்களுக்கு மேலாகப் பழக்கம். :( திடீர்னு அவர் மறைந்த தகவல் கிடைத்தது! இவை எல்லாவற்றையும் ஏற்கெனவே படித்திருக்கிறேன். எளிமையான எழுத்து, ஆழமான பொருள் கொண்டவை! வெகு இயல்பாகச் சொல்லிப் போவார்.

  ReplyDelete
  Replies
  1. புகைப்படங்கள் பற்றிய அவரது கட்டுரைகள் படித்து சில விஷயங்கள் கற்றுக்கொண்டதுண்டு.... நேரடியாக பார்த்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
  2. ஆம்! வெங்கட்ஜி புகைப்படங்கள் எடுப்பது பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கேமரா பற்றியும் அப்படித் தேடும் போது இவரது புகைப்படக் கட்டுரைகள் வாசித்ததுண்டு. மற்றபடி அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தற்போது உங்கள் பதிவிலிருந்துதான் அறிந்துகொண்டேன்....

   கீதா

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. திரு கல்பட்டு நடராஜன் கதைகள், கவிதைகளும் எழுதவாரா? செய்தி எனக்கு. சிறந்த அஞ்சலி. தம பின்னர் வந்து வாக்களிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் ஸ்ரீராம். உங்களுக்கும் பிடிக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அருமை
  தரவிறக்கம் செய்து கொண்டேன் ஐயா
  தம சம்பிட் , + முதல் வாக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. உங்களுடன் நாங்களும் ரசித்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. கவிதைகளை ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.....

   Delete
 6. #மூடினானோ அவனும் தன கண்களையே#
  நியாயமான கேள்விதானே ?ரசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. கவிதைலாம் நச்... குடிகாரன் கவிதை சூப்பர். சிறந்த புத்தகத்தை அறிமுகம் செய்ததோடு தரவிறக்கம் செய்ய சுட்டியை கொடுத்ததுக்கு நன்றிண்ணே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ராஜி.

   Delete
 9. கவிதைகள் அருமையாக இருக்கிறது! எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்! இவரைப் பற்றி அறிய முடிந்தது பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி!

  கீதா: ஒரு முறை புகைப்படக் கலை பற்றி கூகுளில் தேடிய போது இவரது பக்கம் கிடைத்து பார்த்ததுண்டு. பறவைகளைப் படம் பிடிப்பது பற்றி எழுதியிருந்தார். தையல் பறவை மற்றும் தேன் சிட்டு படம் பிடிப்பின் அனுபவம் என்றெல்லாம் பல நல்ல தகவல்கள். புகைப்படங்கள் அவ்வளவு அழகாக இருக்கும்... இப்போது அவர் இல்லை என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது...அவர் கதைகளும் கவிதைகளும் எழுதுவார் என்பது உங்கள் பதிவிலிருந்துதான் அறிய முடிகிறது. தரவிறக்கிக் கொள்கிறோம் ஜி! மிக்க நன்றி பகிர்விற்கு  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. 'நல்ல புத்தக அறிமுகம். த .ம.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. சிறந்த‌ நூல் விமர்சனம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

   Delete
 12. படித்தேன் சில கவிதைகளை! அருமை!த ம 9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 13. நூலும் தங்கள் பதிவும் அவருக்கான அஞ்சலி. அவரது கதை, கவிதைகளை மின் குழுமங்களில் வாசித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. காலமானவருக்கு ஒரு அஞ்சலியா இருக்கும் போதே படித்துக் கருத்திட்டிருந்தால் மகிழ்ந்திருப்பாரே

  ReplyDelete
  Replies
  1. அன்பின் G.M.B. ஐயா, அவர் இறைவனடி சேர்ந்த நாள் 11 ஜூலை 2017. புத்தகம் வெளியானது 17 ஜூலை 2017. மின்புத்தகத்தினைப் படித்து இன்று அதனைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 15. சிறந்த கவிஞரின் அறிமுகம். படிக்கிறேன்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 16. இதயத்தீ கதைக்கு ஓவியம் வரைந்த சேட்டை என்பது சாட்சாத் நான் தான் என அறிக! கல்பட்டு நடராஜன் அவர்களை நான் கடந்த 10 ஆண்டுகளாக அறிவேன். அவர் ஒரு ஜீனியஸ்! தெரியாத விஷயம் கிடையாது. :-)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் வரைந்தது என்று தெரியும் அண்ணா.... அதனால் தான் அந்த வரிகளோடே பகிர்ந்து இருக்கிறேன். பதிவிலும் அதைக் குறிப்பிட நினைத்திருந்தேன் - விடுபட்டிருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா...

   Delete
 17. கல்பட்டாரின் மறைவுச் செய்தி இந்த ஆண்டில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்று! ஒரு நல்ல நண்பர் மட்டுமல்ல, ஒரு நல்ல ஆலோசகரையும் நான் இழந்து விட்டேன் என்பது இன்னும் ஜீரணிக்க இயலாமல் இருக்கிறது. தமிழ்த்தென்றல் கூகிள் குழுமத்தில் நானும் அவரும் அடித்த லூட்டி சொல்லி மாளாது.

  ReplyDelete
  Replies
  1. பல புகைப்பட நுணுக்கங்களை அவரது பதிவில் பார்த்து தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். அவரது இழப்பு பெரியது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா.

   Delete
 18. நடராஜன் ஐயாவின் மறைவு பற்றி இப்போதுதான் அறிந்தேன். வருந்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....