எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 5, 2017

கேக் வாங்கலையோ கேக்….. – இணையத்தில் உங்கள் தகவல்கள்!வலையுலகம் பக்கம் வராததால் இங்கே எனது பிறந்த நாளுக்கு முன் தினம் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. பிறந்த நாள் – அது வருடா வருடம் வரும் ஒரு நாள் என்பதாகத் தான் எனக்குத் தோன்றும். சிறு வயதிலிருந்தே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை. பிறந்த நாள் அன்று கோவிலுக்குச் சென்று வரச் சொல்வார்கள். அம்மா முடிந்தால் ஒரு பாயசம் வைத்துக் கொடுப்பார் அல்லது மைசூர்பாக் செய்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடுவோம்! வெளியே யாருக்கும் இனிப்பு கொடுத்ததாகவோ, கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியதாகவோ நினைவில்லை.
 
இருபது வயதில் வேலை நிமித்தமாக தலைநகர் வந்த பிறகும் பிறந்த நாள் என்பது மிகவும் சாதாரணமாகவே இருக்கும் – சில சமயங்களில் எனக்கே எனது பிறந்த நாள் என்பது நினைவில் இருக்காது! வந்த புதிதில் தொலைதொடர்பு வசதிகளும் அத்தனை இல்லாத காரணத்தினால் தொலைபேசி மூலம் வாழ்த்துகளைச் சொல்பவர்கள் இல்லை! ஏதோ ஒன்றிரண்டு வாழ்த்து அட்டைகள் வந்தால் பெரிது! – அதுவும் நான் எவரிடமிருந்தும் எதிர்பார்ப்பத்ததும் இல்லை! தில்லி வந்த புதிதில் எனது நட்பு வட்டம் மிகச் சிறியது!

தொலைதொடர்பு, அலைபேசி வசதிகள் வந்தபிறகு பிறந்த நாள் அன்று நான்கு ஐந்து அழைப்புகள் வரும் – பெரும்பாலும் குடும்பத்தினராகத் தான் இருக்கும் - வாழ்த்துகள் சொல்லி “இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” என்று கேட்க “ஒன்றுமே இல்லை! எல்லா நாள் போலவே இன்றும்!” என்பது தான் என்னுடைய நிரந்தர பதிலாக இருக்கும். இப்போது கூட அதே தான்.  அழைப்புகள் தவிர இப்போதெல்லாம் ஃபேஸ்புக், மின்னஞ்சல் மூலம் நிறையவே வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள் நண்பர்கள். அனைத்தும் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது! அனைவருக்கும் நன்றி சொல்வதற்கே நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

இப்படி ஃபேஸ்புக்கில், நமது பிறந்த நாளை பதிவு செய்திருப்பது போலவே, வேறு சில தளங்களிலும் நமது பிறந்த தினம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தத் தகவல்கள் எந்த அளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி! போலவே நமது அலைபேசி எண்ணும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது சந்தேகம் தான். பல தளங்கள் இந்த மாதிரி தகவல்களைச் சேகரித்து தனியார் நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றிற்கு விற்று விடுகிறார்கள். மின்னஞ்சல்கள் கூட வருவதுண்டு – File Containing 2 lakh address with telephone numbers and details available – send money! என்று!

சரி பிறந்த நாளுக்கு முன் தினம் பற்றிய விஷயத்திற்கு வருவோம்! அன்று அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு. எனது அலைபேசியில் சேமிக்காத எண் என்றால் பொதுவாக அழைப்பினை ஏற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே எடுத்தாலும் யார் அழைக்கிறார், என்ன விவரம் என்பதை முதலில் கேட்பது வழக்கம். அழைப்பினை ஏற்று, “ஹலோ” சொல்ல, எதிர் முனையில் தேனைக் குழைத்தது போன்ற குரலில் கொஞ்சலாக, “ஹலோ, நான் பேசுவது திரு வெங்கட் அவர்களுடனா?” என்று கேள்வி! கொஞ்சம் கறாராகவே “Yes” என்று சொல்ல, மீண்டும் தேன் குரல்! ”நாளைக்கு உங்கள் பிறந்த நாள் தானே, உங்கள் பிறந்த நாளைக் கொண்டாட, கேக் ஆர்டர் செய்து விட்டீர்களா?” என்று கேள்வி!

”கேக் ஆர்டர் செய்யறது ஒரு புறம் இருக்கட்டும், நீங்க யாரு, எங்கே இருந்து பேசுகிறீர்கள்?” என்பதைக் கேட்க, ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, ”நாங்கள் கேக் தயாரிப்பில் புகழ்பெற்றவர்கள், உங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான கேக்கை நீங்கள் ஆர்டர் செய்து விடலாம். உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம், இத்தனை விழுக்காடு தள்ளுபடி..  Blah Blah Blah” என பதிவு செய்யப்பட்ட டேப் ரெக்கார்ட் போல பேசித் தள்ளினார்! ”கொஞ்சம் மூச்சு விடும்மா, நான் சொல்ல வருவதையும் கொஞ்சம் கேள்!” என்று சொல்லி, ”எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கமே இல்லை” என்பதைச் சொல்ல, ”இந்த பிறந்த நாள் முதல் கொண்டாட ஆரம்பிக்கலாமே!” என்று குழைகிறார்! நல்ல வேளை ”The beginning is now!” என்று சொல்லாமல் விட்டார்!

ஆளை விடு பெண்ணே…. பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் எனக்கில்லை, புதிதாக ஆரம்பிக்கும் எண்ணமுமில்லை, என்பதைச் சொல்லி தொடர்பினைத் துண்டித்தேன். இத்தனை வருடங்களாக இல்லாத பழக்கம் இனி எதற்கு!

நாம் இணையத்தில் பகிரும் தகவல்களை பலரும் இப்படி பார்க்க முடிகிறது என்பதை, இந்த மாதிரி நிறுவனங்கள் தினம் தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா!

நாளைய பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

42 comments:

 1. மாடர்ன் வொர்ல்ட் லே ப்ரைவஸியே இல்லாமப் போயிருச்சு.

  ஃபேஸ்புக்கில் கூட தினமும் ஒரு பத்துப் பதினைஞ்சு பேருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்றோம். சில சமயம் சில பெயர்களைப்பார்த்தால் பொழுதன்னிக்கும் இவுங்களுக்குப் பிறந்தநாள் வந்துக்கிட்டு இருக்கேன்னு தோணுது. இப்பத்தானே ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னே வாழ்த்தினோம்..... ஙே....

  ReplyDelete
  Replies
  1. இப்பத்தானே ரெண்டு வாரத்துக்கு முன்னே! :) என் நண்பர் ஒருவருக்கு வருடத்தில் இரண்டு முறை பிறந்த நாள் வாழ்த்துகள் வருகிறது - ஒண்ணு ஒரிஜினல், மற்றது டூப்ளிகேட்! ப்ரைவஸி - இல்லவே இல்லை இப்போது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. விஞ்ஞான (முன்னேற்ற) விபரீதங்கள்!

  ReplyDelete
  Replies
  1. விபரீதங்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ஆமாம் இப்போ நம்ம தகவல்களெல்லாம் கிட்டத்தட்ட பொதுவெளியில் எல்லாருக்கும் தெரிந்துவிடுகிறது. படம், தயார் பண்ணினதா அல்லது ஆர்டர் செய்த கேக்கா? த ம

  ReplyDelete
  Replies
  1. இணையத்தில் இப்படி கேக் மேல் பெயர் எழுதி படத்தினை தரவிரக்கம் செய்து கொள்ளும் வசதி உண்டு! :) அப்படி சேமித்த படம் இது! Virtual Cake!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் ஜி!

   Delete
 4. எனக்கும் மெயிலில் தங்கள் தயாரிப்பை வாங்க சொல்லி வருகிறது , யார் கொடுத்து இருப்பார்கள் நம் மெயில் முகவரியை என்று நினைத்துக் கொள்வேன்.
  விழிப்புணர்வு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. இப்போதாவது கேட்கிறார்கள் ,இன்னும் சில நாட்களில் கேக்கைக் கொண்டு வந்து வாங்கிக்கச் சொல்வார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. அன்பின் பகவான் ஜீ!..

   அதாவது பரவாயில்லை.. வீட்டுக்கே வந்து நம்மைப் போன்றவர்களுக்கு (!) இளம் பெண்கள் கையால் ஊட்டி விடும் சேவையை கூடிய விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகக் கேள்வி!?..

   வீட்டுக்குள் :-
   இங்கே தானே வைச்சிருந்தேன்.. பூரிக் கட்டையைக் காணோமே!..

   ஐயையோ... நானில்லை.. ஆளை விடு.. சாமீ..ய்ய்ய்!..

   Delete
  2. கேக்கைக் கொண்டு வருவார்கள், ஊட்டி விடுவார்கள்! :)))) ஹாஹா.. நடந்தாலும் நடக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
  3. ஆஹா பூரிக்கட்டையை தேட ஆரம்பிச்சிட்டாங்க! சீக்கிரம் தப்பிக்கற வழியைப் பாருங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. நமது அடையாளங்கள் அனைத்தும் பொதுவெளியில் இருக்கும் பொழுது இப்படித்தானே... ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. பிறந்த நாள் – அது வருடா வருடம் வரும் ஒரு நாள் என்பதாகத் தான் எனக்குத் தோன்றும். சிறு வயதிலிருந்தே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை. பிறந்த நாள் அன்று கோவிலுக்குச் சென்று வரச் சொல்வார்கள். அம்மா முடிந்தால் ஒரு பாயசம் வைத்துக் கொடுப்பார் அல்லது மைசூர்பாக் செய்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடுவோம்! வெளியே யாருக்கும் இனிப்பு கொடுத்ததாகவோ, கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியதாகவோ நினைவில்லை.//

  இருவருக்குமே பழக்கம் இல்லை. உங்களைப் போன்றே பிறந்தநாள் கூட நினைவில் இருப்பதில்லை. உங்கள் கருத்த்துகள் அனைத்தும் வழி மொழிகிறோம். ஆம் நம் அலைபேசி எண்கள் இணையத்தில் பகிர வேண்டிய கட்டாயத்தில் அது போல் மின் அஞ்சல் தேதிகள் இவை எல்லாமே பாதுகாப்பானது இல்லை என்பது எங்களுக்கும் நிரூபணம். நாம் வேண்டுமென்று பதிவதில்லை என்றாலும்...இணையம் பாதுகாப்பானது இல்லை என்பது உறுதி..

  நல்ல பதிவு வெங்கட் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி!

   Delete
 8. ஹஹஹ் தேன் குரல்!!! மதுரைத் தமிழன் இருந்திருனால் இதற்கு அவர் பாணியில் கமென்ட் கொடுத்து சிரிக்க வைத்திருப்பார்...என்பது நினைவுக்கு வருகிறது...ஹஹஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நமக்கு எல்லாம் இப்படி ஒரு போன் வந்தால் வள்ளுன்னு கத்தி இருப்போம் ஆனால் வெங்க்ட்ஜி தேனை குழைத்து அந்த பெண் பேசியதால் அதை நினைவுகூர்ந்து அந்த பெண்ணிற்காக இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். ஆமாம் வெங்க்ட் ஜி அந்த நம்பரை சேமித்து வைத்திருக்கிறாரா இல்லையா? இனிமேல் அந்த கால் வந்தால் அது அந்நிய காலாக இருக்காதுன்னு நினைக்கிறேன்

   Delete
  2. ஆஹா இதோ வந்தாச்சு மதுரைத் தமிழன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
  3. ஆஹா.... இதோ வந்துட்டாரே மதுரைத் தமிழன் - தன்னுடைய குறும்பான பதிலோடு!

   உங்கள் தகவலுக்கு - அந்த நம்பரை சேமிக்கவில்லை! சேமிக்கப் போவதும் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. ஸாரி... மதுரைத் தமிழன் வந்திருந்தால்....டைப்போ எரர் இருந்திருந்தால் என்று வந்துவிட்டது...வருந்துகிறேன்...மன்னிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் இப்படி தவறாக வந்துவிடுகிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. கவுண்டமணியின் பேமஸ் டயலாக் ஞாபகம் வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. இப்படிலாம்கூட பிசினெசை டெவலப் பண்ணுறாங்களா?!

  ReplyDelete
  Replies
  1. எல்லாவற்றிலும் அரசியலும், வியாபாரமும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 12. என் அபிப்ராயம். நல்ல வாய்ப்பைத் தவற விட்டு விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.....

   Delete
 13. இப்படித்தான் பலவும் நடக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....

   Delete
 14. பிறந்த நாட்களில் கடந்து வந்த பாதையை அசைபோடலாம் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலலாம் அதை என்றுவேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும் ஒருகுறிப்பிட்ட நாளாக பிறந்தநாள் இருப்பது தவறில்லையே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.....

   Delete
 15. நம்மைப் பற்றி நாம் அறிந்ததை விட
  பிறர் அதிகம் அறிந்திருப்பார்களோ
  என அச்சம் கொள்ளும் அளவு
  தனி மனிதத் தகவல்கள்
  வீதி எங்கும் சிதறிக் கிடக்கிறது
  அருமையான பயனுள்ள பகிர்வும்
  தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. ”நம்மைப் பற்றி நாம் அறிந்ததை விட, பிறர் அதிகம் அறிந்திருப்பார்களோ என அச்சம்!” அதே தான் எனக்கும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 16. அன்பின் வெங்கட்..

  கேக் வெட்டுவதாகட்டும்.. நாம் பிறருக்கோ அல்லது பிறர் நமக்கோ அந்தக் கேக் துண்டினை ஊட்டுவதாகட்டும்...

  அதில் எல்லாமே இரசாயன கலப்பு என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றார்கள்?..

  எப்படியோ - அவரவரும் சிந்திப்பது நல்லது!..

  ReplyDelete
  Replies
  1. இரசாயன கலப்பு - அதைப் பற்றி பெரும்பாலானவர்கள் அக்கறை கொள்வதே இல்லை என்பது வருத்தமான விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete

 17. இந்த வருஷம் கேக்கு வாங்கலையா என்று கேட்ட அந்த பெண் அடுத்த வருஷம் கேக்கை தனது பரிசாக அனுப்பிவைத்தாலும் வைக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்படி நடந்தாலும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 18. நானும் வருஷா வருஷம் ரண்டு மூணு பிறந்த நாள் கொண்டாடுறேன். ஒரு தேன்குழ(ர)லியாவது கேக் வேணுமான்னு கேக்கிறாங்களா?

  ReplyDelete
  Replies
  1. வருஷா வருஷம் ரண்டு மூணு பிறந்த நாள் - ஒரு தேன்குழ[ர]லியாவது! ஹை நல்ல ஆசை தான் உங்களுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 19. நமக்கெல்லாம் டாலரிலே பணம் தான் கொட்டும்! அலைபேசி எஸ் எம் எஸ் மூலம், மின்னஞ்சல் மூலம்! இல்லைனா தொலைபேசி அழைப்பில் உங்களை இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கோம். இந்த நடிகரோடு சாப்பிடலாம். அதுக்கு நீங்க முன் பணமா இது கட்டணும் என்று சொல்வாங்க! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....