வெள்ளி, 25 ஜனவரி, 2019

காஃபி வித் கிட்டு – தமிழகம் நோக்கி – கணவரின் அன்பு – அம்மா – மனைவி - ஓவியம்காஃபி வித் கிட்டு – பகுதி – 20

தமிழகம் நோக்கி:
சில மாதங்களுக்குப் பின்னர், இதோ இன்றைக்கு மீண்டும் தமிழகம் நோக்கி ஒரு பயணம். இந்த முறை இரண்டு வாரங்கள் மட்டும் திருவரங்கத்தில் இருக்க உத்தேசம். நடுவே முடிந்தால் திருச்சியை அடுத்த சில ஊர்களுக்கு ஒரு நாள் பயணம் செல்லவும் திட்டம் உண்டு. அங்கே சென்ற பிறகு தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டு வாரங்கள் திருவரங்கத்தில் இருப்பேன். அச்சமயத்தில் திருவரங்கம் வருவதற்கு நண்பர்கள் எவருக்கேனும் வாய்ப்பு இருந்தால் தெரிவிக்கலாம். சந்திக்கலாம்.

ரோஷ்ணி கார்னர் – மகள் வரைந்த ஒரு பென்சில் ஓவியம்:

மகள் சமீபத்தில் வரைந்த பென்சில் ஓவியம் ஒன்று…இந்த வாரத்தில்… – முகநூலில் இருந்து:

கவலைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதனை நிரந்திரமாக்குவதும், தற்காலிகமாக்குவதும் உன் கையில் தான் இருக்கிறது. நிரந்தரமாக்கினால் நீ நோயாளி. தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி.

ரசித்த காணொளி – மனைவி Vs அம்மா:

நல்லதொரு குறும்படம். பாருங்களேன்.
படித்ததில் பிடித்தது – கணவரின் அன்பு:

ஒரு நாள் மாலையில் வாக்கிங் முடித்துக் கொண்டு, ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால், இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென மழைச் சாரல் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தை வந்தடைந்தார். மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி கயிற்று பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு மின்னலும், இடியும், சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள். அவள் கணவனோ திரும்பியே பார்க்கவில்லை. அவளுக்கு அழுகையாய் வந்தது. இப்படி பயந்துபோய் அழைக்கிறேன், என்ன மனிதர் இவர்? திரும்பி கூட பார்க்கவில்லையே என மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல,மெல்ல பாலத்தை கடந்தாள். பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்.

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள் - அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை மிகுந்த சிரமப்பட்டு தனி ஆளாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் மட்டும் தாங்கி பிடிக்காமல் விட்டிருந்தால், பாலத்தோடு அவர் மனைவியும் பள்ளத்தில் வீழ்ந்து மாய்ந்திருப்பாள். அதை பார்த்த அவள் கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள். சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும். ஆனால்
உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு தான் இருப்பார். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும். அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அளப்பரிய அன்பு நமக்கு தெரியவரும்.

இதே நாளில் – பின்னோக்கிப் பார்க்கலாம்:

நான் ரசித்த ஓவியம் ஒன்றைத் தந்து அதற்காக நண்பர்களை கவிதை எழுதி அனுப்பச் சொல்லி இருக்கிறேன். அப்படி ஒரு ஓவியத்திற்கு நியூயார்க் பதிவர் பரதேசி அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இதே நாளில் 2014-ஆம் வருடம் வெளியிட்டு இருக்கிறேன். அதே பதிவின் சுட்டி இதே நாளில்….


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  ஓ தமிழகம் வரீங்கல்லியா....வேறொரு தளத்திலும் சொல்லியிருந்த நினைவு!!

  பதிவு பார்த்துட்டு வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி. பன்னிரெண்டு நாட்கள் தமிழகத்தில்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. ரோஷினிகுட்டியின் பென்சில் ஓவியம் சூப்பர்....ஓவியம் வரைவதில் மேலும் மேலும் முன்னேறுகிறாள்...வாழ்த்துகள் பாராட்டுகள்.

  முகநூல் கருத்து ரொம்ப அழகான கருத்து.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. படித்ததில் பிடித்தது சூப்பர்!!!

  காணொளி அப்புறம் பார்க்கிரேன் ஜி.

  பின்னோக்கிப் போய் பார்க்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. குட்மார்னிங். மறுபடியும் கொஞ்சகாலம் தாய் மண் நோக்கியா? வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   ஆமாம் - இரண்டு வாரம் இங்கே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ரோஷ்ணியின் ஓவியம் மிக நன்று. பாய்ச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாய்ச்சல்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. காணொளி பின்னர்தான் பார்க்கவேண்டும். அந்தக் கணவன் மனைவி கதை படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி முடிந்த போது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. முந்தைய பதிவில் என் கமெண்ட் கண்டேன்! அப்புறம்.... பின்னோக்கி என்றுஒருபதிவர் இருந்தாரே நினைவிருக்கிறதோ?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னோக்கி - நினைவில் இருக்கிறது. அவரது சில பதிவுகள் படித்து இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. அன்பு வெங்கட் நல்வரவு. சற்றே இளைப்பாருங்கள்.
  தில்லி குளிரிலிருந்து விடுதலை இரண்டு வாரத்துக்கு.
  பாலக்கதை கண்ணீர் வரவழைத்தது. எத்தனை உண்மை.

  ரோஷ்ணியின் சித்திரம் மிக அருமை. தெளிவும் கூட.
  வீடியோ படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா. இரண்டு வாரம் குளிரில் இருந்து தப்பிக்க முடிந்தது.

   காணொளி முடிந்த போது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 9. கணவரின் அன்பு, ஓவியம் உட்பட அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 10. காணொளி நன்றாக இருக்கிறது. கணவன் இரு பக்கமும் பேலன்ஸ்டாக இருந்தால் பிரச்சனைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேலன்ஸ்டாக இருப்பது தான் நல்லது.ஆனால் பலர் அப்படி இருப்பது இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 11. காணொளி அருமை.
  கணவரின் அன்பு கதை மிக அருமை.
  ரோஷ்ணியின் ஓவியம் அழகு.
  அனைத்தும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 12. இன்றைய பதிவு அருமை...

  தங்கள் அன்பு மகளின் கை வண்ணம் அழகு..

  சின்னஞ்சிறு கதை அருமை..
  இந்தக் காணொளியை முன்பே பார்த்திருக்கிறேன்...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 13. மகிழ்ச்சி ..பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

   நீக்கு
 14. வெங்கட்ஜி உங்கள் தமிழ்நாட்டுப் பயணம் இனிதே அமையட்டும்.

  ரோஷிணி வரைந்திருக்கும் ஓவியம் மிக அழகாக இருக்கிறது வாழ்த்துகள்!

  படித்ததில் பிடித்தது அருமை.

  முகநூலில் இருந்து பகிர்ந்ததும் நல்லதொரு கருத்து.

  காணொளி பின்னர்தான் பார்க்க முடியும்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 15. மகள் வரைந்த ஓவியத்தின் ஒரிஜினல் போட்டோ நீங்கள் எடுத்து இங்கு பகிர்ந்திருந்தீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பகிர்ந்தது இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 16. கதையும் ஓவியமும் காணொளியும்
  அருமை அதை விட தங்கள் வருகைச்
  செய்தி மிக மிக அருமை
  தேதியைத் குறிப்பிட்டிருந்தால்
  வாய்ப்பிருந்தால் வந்து சந்திக்க
  நினைப்பவர்களுக்கு வாய்ப்பாய் இருக்கும்
  இல்லையா வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வரை தமிழகத்தில் இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

   நீக்கு
 17. மகளை ஓவியம் வரைவதற்காகப் பாராட்டுங்கள் / பாராட்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 18. மகளின் ஓவியம் அழகு...

  கணவன் மனைவி கதை அருமை. எல்லாரும் சேர்ந்ததே குடும்பம்.

  தமிழ்நாட்டு பயணம் சிறக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  தங்களது தமிழக பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  தங்கள் மகளின் பென்சில் ஓவியம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவிக்கவும்.

  முகநூலிலிருந்து வந்த செய்தி அருமை. ரசித்தேன்.

  காணொளி நன்றாக உள்ளது. அம்மா, மனைவி இருவரையும் விடாமல் அனுசரித்து சரிசமமாக நடத்தும் ஒரு மனிதர் கிடைக்க இருவருமே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  கணவன் மனைவி மதை அருமை. கணவரின் அளப்பரியா அன்பினை புரிந்து கொண்டால், மனைவிக்கு என்றுமே கவலைகள் அண்டாது.

  இதே நாளில் பின்னோக்கி பார்த்தது... மிகவும் மகிழ்வினை தந்தது. மிக்க நன்றி.
  இந்த வார ஃகாபி வழக்கம் போல நன்றாக ருசித்தது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பகுதியையும் ரசித்து படித்து கருத்து சொன்னதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 20. காணொளி மிகவும் அருமை. அந்த மகனுக்கு ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 21. ரோஷ்ணி பென்சில் வரைபடம் அருமை. காணொளி நல்ல கருத்தை வலியுறுத்துகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 22. ஸ்ரீரங்கம் வந்தாச்சா? போன வாரம் பானுமதி வந்தப்போ விசாரிச்சாங்க! அப்போ நீங்களும் வந்திருந்தால் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தி இருக்கலாம். :)))) முடிஞ்சா வீட்டுப் பக்கமும் வாங்க! ரோஷ்ணியின் ஓவியத் திறமை அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்தக் கணவன், மனைவி பற்றி வாட்சப்பில் சுற்றிக்கொண்டே இருந்தது. காணொளி பின்னர் தான் பார்க்கணும். இது மாதிரி நிறையக் காத்திருப்பில் இருக்கு! இஃகி, இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீரங்கம் வந்தாச்சு. உங்க வீட்டிற்கு வரும் முன்னர் அழைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 23. காணொளி இப்போத் தான் பார்த்தேன். அந்தப் பையர் ரொம்பவே பாலன்ஸ்ட்! வாழ்த்துகள்! :)))) ஆனால் அம்மா இதை ஏத்துக்கிறாங்களே! அதையும் சொல்லணும்! பிடிவாதமா மருமகளையே குத்தம் சொல்லறவங்களும் இருக்காங்க! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....