எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 25, 2014

ஓவியக் கவிதை – 17 – திரு பரதேசி @ நியூயார்க்டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினேழாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய பரதேசி @ நியூயார்க் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

பரதேசி @ நியூயார்க் எனும் வலைப்பூவில் எழுதி வரும் நண்பர், தனது தளத்தில் அவர் செய்த பயணங்கள் குறித்து சிறந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். சில மாதங்களாகத்தான் அவரது பதிவுகளைப் படிக்கிறேன் – நண்பர் மதுரைத்தமிழன் அவர்கள் அவரது தளத்தில் அறிமுகம் செய்த பிறகு.  சமீபத்தில் அவர் எழுதிய போர்ட்டரிக்கோ பயணம் [மொத்தம் 11 பகுதிகள்] எனக்கு மிகவும் பிடித்தது. தற்போது காரைக்குடி பயணம் பற்றி எழுத ஆரம்பித்து இருக்கிறார். இதுவரை இவரது பதிவுகள் படிக்காத நண்பர்கள் படிக்கலாமே.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு நண்பர் பரதேசி@நியூயார்க் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

தலைவன் -     பூவைச்சூடிய பூவையே
                        தொடாமல் மலர்ந்த பாவையே, நான்
                        தொட்டாலும் வெட்கம், தொடாமல்
                        விட்டாலும் துக்கம் !
                        என்னிடம் ஏனடி நாணம்?

தலைவி -        எங்கே போனீர் இத்தனை நாள்?
                        மறந்து போனீரோ எந்தனை நீர்,
                        பேரிகை சத்தம் கேட்டு சென்ற நீர், இந்தக்
                        காரிகை மறந்து போனதென்ன நியாயம்?

தலைவன் -     போருக்குப் போனது என் கடமை, ஆனால்
                        சொல்லாமல் போனது என் மடமை !
                        வெற்றி நோக்கி சென்றது என் உடல், உன்னையே
                        சுற்றி வந்தது எப்போதும் என் உள்ளம்!.
                       
                      நான்
                      வாளெடுத்து வீசும் போது , உன்
                        மீன்விழி பேசும் ஞாபகம் !
                        அம்பெடுத்து சுழற்றும் போது, உன்
                        புருவங்கள் மிரட்டும் ஞாபகம்!
                        கட்டாரி உருவும் போது, வளைந்த உன்
                        கட்டழகுப்பருவம்தான் என் ஞாபகம்
                        ஆக என்னோடுதான் நீ வந்தாய்.
                        வெற்றிக்கனியை நீயேதான் தந்தாய்.
                        போர்க்களத்தில் வெற்றி சூடிய எனக்கு உன்
                        மார்க்களத்தில் என்றும் தோல்விதான்.

தலைவி -        மன்னவனே
                     வார்த்தையில் கூட வேண்டாம் உனக்கு தோல்வி
                        வந்துவிட்டேன் நடத்தும் காதல் வேள்வி.

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினேழாம் கவிதை இது. கவிதை படைத்த நண்பர் பரதேசி@நியூயார்க் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!

 பட உதவி: கூகிள்.

டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:40 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  சிறப்பான கவிதை...பரதேசி@நியூயார்க் ..அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. கவிதை அருமை...

  எனது ஊர் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்...

  தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி.

   Delete
 3. கவிதையும் அறிமுகமும் அருமை
  நன்றி ஐயா
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. எந்தனை நீர் என்பது எனை நீர் என்றிருக்கலாம் என்று தோன்றியது! ரசிக்கும்படி இருக்கிறது கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. "இத்தனை நாள்" என்பதற்கு இணையாக
   ஒலிக்கும்படிதான் "எந்தனை நீர்",என்று அமைத்தேன். நன்றி .

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரதேசி.

   Delete
 5. பூக்களாய் மலர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. ரசிக்க வைத்த கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 7. 'அவளை' நினைத்து உரலை ...இல்லை இல்லை ..எதிரியை வீழ்த்தி தள்ளிய தலைவனை அறிமுகம் செய்த அவர் பரதேசியாய் இருக்க வாய்ப்பில்லை கலாரசிகராய்தான் இருப்பார் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. அருமையான காதல் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 9. அன்பின் வெங்கட் ..
  தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_25.html
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 10. பகிர்வு அருமை சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 11. சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 12. நல்லா இருக்கு கவிதை. அது சரி, பொற்கிழி உண்டா இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 13. அருமையான ஒரு காதல் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

 16. வணக்கம்!

  போர்க்களம் சென்று புகுந்தாடும் வன்மறவன்
  மார்க்களம் கண்டு மயங்குகிறான்! - சீா்வளம்
  கொண்டு திகழும் குளிர்தமிழைக் கண்ணினிக்கக்
  கண்டு தொடுத்தேன் கவி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

   Delete
 17. Replies
  1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

   Delete
 18. Super அருமையான கவிதை. பரதேசி@நியூயார்க் ..அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  Delhi Vijay

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 19. Nice to be visiting here. Great job Alfi!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி NRIGirl. உங்கள் முதல் வருகை. மகிழ்ச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....