இந்த வார செய்தி:
நேற்று இணையத்தில் உலா வந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றவே, ஃப்ரூட் சாலட்-ன் இப்பகுதியில்
பகிர்ந்து கொண்டுள்ளேன். இது போல இன்னும்
நிறைய செல்வராஜ் தம்பதிகள் நமது நாட்டிற்கு தேவை...... தமிழ் நாளிதழான தி இந்து வின் இணைய தளத்தில் வந்த
செய்தியை நீங்களே படிங்களேன்!
ஏழைக் குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் லாரி ஓட்டுநர்
-கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையே என வருத்தப்பட்டேன். ஆனால், எனது பள்ளியில் படிக்கும் 80 குழந்தைகள், தாத்தா.. தாத்தா.. என அழைக்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது எனக் கூறுகிறார் கல்வி மையம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்.மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள சேங்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி. செல்வராஜ் (54). முன்னாள் லாரி ஓட்டுநரான இவர், தற்போது கரடிப்பட்டி கிராமத்தில் நேதாஜி கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் சிறப்பு பயிற்சி மையத்தின் நிர்வாகி.10 மையங்கள்தமிழகத்தில் 2002-ம் ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், பள்ளியில் இருந்து இடைநின்ற 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். இந்த இயக்கத்தின்கீழ், மதுரையில் 10 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கரடிப்பட்டியில் இயங்கிவரும் நேதாஜி கல்வி அறக்கட்டளை உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையமும் ஒன்றாகும்.நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையில் 3 கி.மீ. சென்றால் கரடிப்பட்டி என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்தான் நேதாஜி கல்வி அறக்கட்டளை உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.அந்த மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் சேர்த்து பண்பும் கற்றுத் தரப்படுகிறது என்பதை பள்ளிக்குச் சென்றதும் உணரலாம். அங்கே மதிய வேளையில், சமையல் வேலை செய்து கொண்டிருந்த எஸ்.பி. செல்வராஜ் என்பவரை தாத்தா என்றும், அவரது மனைவி மயிலை பாட்டி என்றும் குழந்தைகள் பாசமாக அழைத்துக் கொண்டிருந்தனர்.வெளி நபர்கள் சென்றால் வரவேற்று வணக்கம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு சிலம்பாட்டமும் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. அந்தப் பள்ளியின் நிர்வாகியான செல்வராஜிடம் பேசினோம்.80 பேர் படிக்கின்றனர்நான் லாரி ஓட்டுநராக இருந்தேன். எனது மனைவி தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு குழந்தை கிடையாது. அந்த வருத்தம் எனக்கு இருந்தது. இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில்தான் சமுதாயத்தில் தாய், தந்தை இல்லாமல் சிரமப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கத்தின் மூலம், குழந்தைகளுக்காக இங்கே ஒரு மையத்தைத் தொடங்கினேன்.ஆரம்பத்தில் இந்த மையத்தில் 17 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். தற்போது 80 பேர் படிக்கிறார்கள். இதில், 51 பேர் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். 29 பேர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். இந்த மையத்தில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக அரசு சார்பில் நிதி தருகிறார்கள். ஆனாலும், குழந்தைகளின் பிற தேவைகளுக்காக வெளியில் நன்கொடை பெற்றுத்தான் இந்த மையத்தை நடத்தி வருகிறேன். சில நாள்களுக்கு முன் இந்த பள்ளிக் கட்டிடத்தை எழுப்பினேன்.8 ஆம் வகுப்புக்கு மேல் வெளியில் வேறு பள்ளிகளில் படிக்கும் 29 மாணவர்களுக்கும் வெளியில் சிரமப்பட்டு நிதி திரட்டியே செலவழித்து வருகிறேன். இந்த அறக்கட்டளையில் இன்னும் 2 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூலித் தொழிலாளிகள் தான்.ஒரு குழந்தை இல்லை என்று வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், இப்போது எங்களுக்கு 80 குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் தாத்தா, பாட்டி என அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் மனைவி அனைத்து வேலைகளையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்கிறார். இந்தக் குழந்தைகளின் ஆடைகளை நாங்கள்தான் தினமும் துவைப்போம். நானும், எனது மனைவியும் படிக்காதவர்கள்தான். ஆனால் பலரது கல்விக் கனவை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் செல்வராஜ்.சிறப்பாக செயல்படுகிறதுஅந்த மையத்தில் 1 முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையும் கற்றுத் தரப்படுகிறது. சேவை நோக்கோடு குறைந்த ஊதியத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த கற்பகதேவி என்பவரும், முதுகலை பட்டப்படிப்பு முடித்த சிவபாலன் என்பவரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள்.மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலர் பார்வதி கூறியதாவது: 14 வயது வரையுள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில், மதுரையில் 10 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கரடிப்பட்டி நேதாஜி அறக்கட்டளையின் மூலம் பயிலும் மாணவர்கள், வெள்ளை பாறைப்பட்டி பள்ளியில் பதிவு பெற்றுள்ளார்கள். கரடிப்பட்டி பள்ளியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள் என்றார்.நன்றி – தி இந்து.
சிறப்பான செயல் புரிந்து
வரும் திரு செல்வராஜ் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது
துணைவிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.....
இந்த வார முகப்புத்தக இற்றை:
IF A MAN
EXPECTS HIS WOMAN TO BE AN ANGEL IN HIS LIFE, THEN HE SHOULD FIRST CREATE A
HEAVEN FOR HER……
இந்த வார குறுஞ்செய்தி:
EXPECT MORE FROM YOURSELF
THAN FROM OTHERS – BECAUSE EXPECTATIONS FROM OTHERS HURT A LOT, WHILE
EXPECTATIONS FROM YOURSELF INSPIRE YOU A LOT!
இந்த வாரத்தின் புகைப்படம்:
சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது 25-வது திருமண நாளைக் கொண்டாடினார். அங்கே
வந்திருந்த ஒரு குழந்தை கண்ணைக் கவரவே அக்குழந்தையினை என் கேமராவிற்குள் சிறை
பிடித்தேன். அக்குழந்தையின் படம் இங்கே உங்கள் ரசனைக்கு......
ரசித்த பாடல்:
இந்தியன் படத்திலிருந்து நான் ரசித்த இந்த பாடல், உங்கள்
ரசனைக்கு......
ரசித்த காணொளி:
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை விளக்கும் அருமையான
காணொளி. பார்த்து ரசிக்க இங்கே...
படித்ததில் பிடித்தது!:
ஒரு இல்லத்தரசியின் புத்தாண்டு விருப்பங்கள்!
தண்ணீர் பஞ்சம் தொலைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்
அழுகை இல்லா சீரியல் வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்
வாரா வாரம் அவுட்டிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்
சண்டை போடாத சர்வண்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்
வாக்கிங் இன்றி மெலிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்
தொடர்பு விட்ட தோழிகள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்
மயக்கம் இல்லா மசக்கை வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்
மளிகைச் செலவு குறைய வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்
வேண்டும் வேண்டும் இறைவா – என்
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
புன்னகை ததும்பும் வாழ்வை – நீ
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!
- மிஸஸ்.
எக்ஸ்....
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வெங்கட்.
புது தில்லி.
முதல் செய்தி என் கண்ணிலும் பட்டு பாஸிட்டிவ் பகுதிக்கு தேர்ந்து வைத்துள்ளேன்!
பதிலளிநீக்குஇற்றை 'சுடும் விரலால்' வரிகளை நினைவு படுத்துகிறது.
குறுஞ்செய்தியும் டாப்.
பாடலும், புகைப்படமும் ஜோர் ஜோர்.
அந்த இல்லத்தரசியின் சின்னச் சின்ன ஆசைகளும் ஜோர்.
எல்லாப் பகுதிகளையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபழக்கலவை சுவையாக இருந்தது.இரசித்து சுவைத்தேன். நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
பதிலளிநீக்குஅற்புதமான புரூட் சால்ட்
பதிலளிநீக்குமுதலில் சொன்ன பாஸிடிவ் செய்தியும்
பழமொழியும் காணொளிகளும்
முடிவாக வேண்டிக் கொண்ட நியாயமான
அவசியமான வேண்டுதல்களும் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஃப்ரூட் சாலட்-ஐ மிகவும் ரசித்தேன். மிகவும் அருமை.
பதிலளிநீக்குதிரு செல்வராஜ் அவர்களுக்கும், அவர் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்.
காணொளி, பாடல் பகிர்வு, இல்லத்து அரசியின் ஆசை அனைத்தும் அருமை.
வாக்கும் அளித்து விட்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குஎல்லாமே அருமை! கல்விக்கண் திறப்பவர் மிகவும் பாராட்டப் படவேண்டியவர்! வேண்டுதல்களை இரசித்தேன்! பகிர்விற்கு நன்றீ நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குசெல்வராஜ் தம்பதிகள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள்... அழகான செல்லம்... அருமையான பாடல்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குpappa photo super
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.
நீக்குசெல்வராஜ் - பெயரால் மட்டும் செல்வரல்ல. உண்மையான மனதாலும் செல்வம் நிறைந்த ராஜ். வாழ்க பல்லாண்டு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஅனைத்தும் வழக்கம் போல சுவையாக இருந்தன....என்றும் திகட்டாத சாலட்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குசெல்வராஜ் தம்பதியரும் அவருக்குத் துணை நிற்கும் மற்றவரும் பாராட்டுக்குரியவர்கள். குழந்தை கொள்ளை அழகு.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குமுத்தான முதற் செய்தியுடன் அத்தனையும் மிகச் சிறப்பே!
பதிலளிநீக்குஅருமை! வாழ்த்துக்கள் சகோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குபாப்பா ஃபோட்டோ சூப்பர். ரசித்த பாடலும், வீடியோவும் சூப்பர். லாரி ட்ரைவருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குதிரு செல்வராஜிற்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குரொம்பவும் பிடித்தது இல்லத்தரசியின் ஆசையில் 'வாக்கிங் இன்றி மெலிய வேண்டும்' என்பதுதான்.
குழந்தை வெகு அழகு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குசிறப்பான செயல் புரிந்து வரும் திரு செல்வராஜ் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது துணைவிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.....
பதிலளிநீக்குகாணொளி ரஸிக்கும் படியாக உள்ளது. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஃப்ரூட் சாலட் சுவை நன்றாக இருந்தது. அதிலும் அந்தக் குழந்தை......... தூக்கிக் கொஞ்சணும் போல!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குkuzhandhai padam AZHAGU. Kavidhai varigal SIRAPPU. Paadal thandhadhu manadhirku MAGIZHVU.Moththathil kidaiththadhu MANANIRAIVU.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குVery beautiful as usual . And inspiring. thanks Venkat.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....
நீக்குஃப்ரூட் சலாட் சுவையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குஃப்ரூட் சாலட் செமை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.
நீக்குலாரி ஓட்டுனரின் சேவை அளப்பரியது. பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எலி முயற்சி படம் மனதை கொள்ளை கொண்டது. இல்லத்தரசியின் விருப்பங்கள் அனைத்தும் நியாயமானவையே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஅருமை அருமை.. செல்வராஜுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅணில் பல்லைப் பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குகல்விக்கண்ணைத் திறந்து வைத்த தம்பதிகள் போற்றுதலுக்குரியவர்கள். கள்ளங்கபடமற்ற குழந்தையின் சிரிப்பு அழகு. பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பங்களை கவிதையா, அழகா சொல்லிட்டாங்க. மொத்தத்தில் சாலட் நல்லாருந்துச்சுங்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குதிரு செல்வராஜ் அவர்களுக்கும், அவர் துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை
த.ம.9
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
பதிவு சிறப்பாக உள்ளது எலிகளின் அட்டகாசம் மிக அருமையாக இருந்தது சாப்பிட முடியாத உணவை எப்படி சாப்பிடுகிறது.. எலிகள் வாழ்த்துக்கள்.ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குதிரு. செல்வராஜ் அவர்களின் தொண்டு போற்றப்பட வேண்டியது. அதனை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு"//ஒரு இல்லத்தரசியின் புத்தாண்டு விருப்பங்கள்!//" - இது ஒரு இல்லத்தரசியின் விருப்பங்களா? அல்லது தங்களின் இல்லத்தரசியின் விருப்பங்களா?!!!!
எனது இல்லத்தரசியின் விருப்பங்கள் இல்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.