எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 29, 2014

திறந்த ஜன்னல் – குறும்படம்

சில வாரங்களாக புதன் கிழமைகளில் குறும்படம் பற்றிய பகிர்வு எழுதுவது நின்று விட்டது. இன்று ஒரு குறும்படம் பற்றிப் பார்க்கலாம்!

சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது Khulli Khidki” என்ற ஒரு குறும்படம் – ஹிந்தி மொழியில் பார்த்தேன்.  அதாவது “திறந்த ஜன்னல்!என்பது தான் குறும்படத்தின் தலைப்பு. இது உண்மைச் சம்பவத்தினை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்.


ப்ரேர்ணா என்ற ஒரு பெண் – தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அன்றொரு நாள் – எங்கள் இல்லத்தின் ஜன்னல் கதவு திறந்தது. திறந்த ஜன்னல் வழியே என் கணவர் எப்போதும் வரும் ஜீப்பின் ஒலிப்பான் வெகுதூரத்தில் ஒலிப்பது எனக்குப் புரிந்தது. நான் அவருக்காகக் காத்திருந்ததால் வெளியே ஓடினேன். என் கணவர் – மேஜர் ப்ரசீன் சிங் ராதோர். அவருக்கு அப்போது நாகலாந்து மாநிலத்தில் தான் பணியில் நியமனம் செய்திருந்தார்கள்.


இப்படி ஆரம்பிக்கும் கதை நிகழ்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் மாறி மாறி பயணிக்கிறது.  நாமும் பயணிக்கிறோம் – கதை கூடவே.


நாகலாந்து – அருமையானதோர் ஊர். எங்களது ஊராம் ராஜஸ்தானிற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த ஊர்.  அந்த மலைப்பிரதேசத்திற்குச் சென்றவுடன் எனது மனதில் அமைதி குடிகொள்ளும். மலை உச்சியில் தான் எங்கள் வீடு.  அங்கே சின்னச்சின்னதாய் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். ப்ரசீன் கோல்ஃப் நன்றாக விளையாடுவார்.  எனக்கென்னமோ இந்த விளையாட்டு வயதானவர்களுக்கானது என்று தோன்றும். ஆனாலும் ப்ரசீன் இந்த விளையாட்டில் இருக்கும் சிறப்பைச் சொல்லுவார். தனக்குத் தானே ஒரு இலக்கினை நிர்ணயித்து அதை அடைவது இந்த விளையாட்டின் சிறப்பு என்பார்.

நான் துக்கமாக இருக்கிறேனா? வருத்தத்தில் மூழ்கிவிட்டேனா? எப்படிச் சொல்வேன். தெரியவில்லை. என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.

அன்று சமைத்த உணவு மிக நன்றாக இருந்தது. நான் எப்போதும் அவரை மதிய உணவினை எடுத்துச் செல்லும்படி வற்புறுத்துவேன். அதுவும் அன்று சமைத்தது அவரல்லவா. அதனால் மிகவும் நன்றாகவே இருந்தது.  

நான் கனவில் ஒரு நாள் அவரைக் கண்டேன்.  அவரைப் பார்க்க முடிகிறது. எப்போதும் என்னை ஏ பெண்ணே என அழைத்து கிண்டல் செய்வார். ஆனால் அவரது குரல் எனக்குக் கேட்பதில்லை. வெளியே இருக்கும் சத்தத்தில் பல சமயங்களில் எனக்குக் கேட்பதில்லை. இப்போதெல்லாம் அவர் எனது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் குரல் மட்டும் இன்றைய தினம் முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அறையில் இருக்கிறாரோ, இல்லை எனது நெற்றியில் வைக்கும் பொட்டில்?

அன்றும் இப்படித்தான் நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு நதி அழகாய் சுழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே அவரது ஜீப் வரும் சத்தம். அந்த நதியின் அருகில் வரும் போது ஒரு பெரிய வெடிச் சத்தம். அந்த வெடி வெடித்ததில் ஒரு 27-28 வயது இளைஞர் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் யாரோ தெரியாத ஒருவரின் இறப்புச் செய்தியை எனக்கு ஏன் சொல்கிறார்கள். என் ப்ரசீன் என்னுடன் இன்று கூட இருக்கிறாரே...... 


இப்படி முடிகிறது இந்த குறும்படம். ப்ரேர்ணாவும் இந்திய ராணுவத்தில் தான் பணி புரிகிறார். ஆதித்ய ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பின்னால் இருக்கும் இசை மிகச் சிறப்பாக இருக்கிறது.  ஹிந்தி என்பதால் இங்கே அவர்கள் பேசிய வசனங்களை மொழிபெயர்த்து தந்திருக்கிறேன் – ஹிந்தி தெரியாதவர்களின் வசதிக்காக.  ஹிந்தி புரிந்தவர்கள் இன்னும் இந்த படத்தினை ஆழமாக அனுபவிக்க முடியும் என நம்புகிறேன்.

நீங்களும் பாருங்களேன் இந்த குறும்படத்தினை....மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. உணர்வுகளைக் கடத்தும் குறும்படமாக இருக்கும் என்று தெரிகிறது. சாதாரண இந்தியாக இருந்தால் புரிஞ்சுக்குவேன் வெங்கட். கவிதை கலந்த இலக்கண ஹிந்தியாக இருந்தால் ஙே... தான்! இதை பாத்து ரசிக்கிறேன். நலலதொரு பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒன்றும் கடினமான ஹிந்தி அல்ல இந்த குறும்படத்தில் இருப்பது. உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 2. கதை மாறி மாறி சுவாரஸ்யமாகவே உள்ளது... மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. நேரம் கிடைப்பின் : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி தனபாலன். படிக்கிறேன்.

   Delete
 4. மனம் நெகிழ்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 5. இந்த மொழி பெயர்ப்பு தாங்கள் பண்ணியதா...? மிகவும் அருமை...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
  Replies
  1. இதுக்குன்னு மண்டபத்துல இருந்து ஒரு ஆளையா கூட்டிட்டு வர முடியும். நாந்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.

   Delete
 6. தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பில் கணவனை இழந்த பெண்ணின் உணர்ச்சிக் குவியல் .திறந்த ஜன்னலில் தெரிந்தது !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 7. எனக்கு லிங்க் ஒப்பன் ஆகவில்லை, ஸோ விமர்சனம் மனதை வலிக்க செய்கிறது...!

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் யூ கொஞ்சம் படுத்துகிறது.

   இந்தச் சுட்டி மூலம் பாருங்கள்.... https://www.youtube.com/watch?v=0iN5nUejw8o

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 8. நல்ல வேலை (மொழிபெயர்ப்பு) செய்தீர்கள்.. நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.. பார்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 9. குறும்படத்தை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. மொழி புரியாவிடினும் உங்கள் வரிகளும் ஆங்கில வரிகளும் புரியவைத்தது அந்தப் பெண்ணின் அழுகையின் பின்னே இருந்த ஆழத்தை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 11. கதையை எங்களை மாதிரி ஹிந்தி தெரியாதவர்களுக்காக மொழிப் பெயர்த்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. மொழிபெயர்ப்பு இருந்திருக்காவிட்டால் எதுவுமே புரிந்திருக்காது. நன்றி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 13. உங்கள் விமரிசனம் படம் எவ்வளவு நெகிழ்ச்சியானது என்று புரிகிறது. படத்தை பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 14. வணக்கம்
  ஐயா.

  குறும்படம் பற்றிய பதிவை படித்தேன்.. படத்தையும் இரசித்தேன்.. வாழ்த்துக்கள் ஐயா.
  நீண்ட நாட்கள் தங்களின் பதிவை படிக்கமுடியவிலை.உடனுக்கு உடன் மனசில் ஒரு கவலைதான் சுற்றுலா சென்றாதால் சில மணி நேரந்தான் வரமுடிந்தது..ஐயா த.ம 6வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 15. Kadhai thamizhil translate panniyirundhadhal rasikka mudindhadhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 16. இதைபோல எத்தனை பெண்களோ என்று படம் பார்க்கும் போது மனது தவித்துவிட்டது. உங்கள் மொழிபெயர்ப்புதான் புரிந்து கொள்ள உதவியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....