எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 15, 2014

ஓவியக் கவிதை – 13 – திருமதி ஸ்ரவாணிடிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதிமூன்றாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திருமதி ஸ்ரவாணி அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் எனும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வரும் திருமதி ஸ்ரவாணி அவர்கள் தனது வலைப்பூவில் மிகச் சிறப்பாக பல கவிதைகளை எழுதி வருகிறார். இதுவரை இவரது பதிவுகளை படிக்காதவர்கள் படிக்கலாமே!

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திருமதி ஸ்ரவாணி அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

அந்தி மாலைகள் !

அந்தி மயங்கும் வேளையிலே அடர்வனத்தினிலே
ஆரணங்கு ஒருத்தி  இடை வளைத்து
ஒய்யாரமாய் அமர்ந்திருப்பது என்ன
என் மதி மயக்குவது என்ன
உன் கருவண்டு விழிகளே எங்களை விட அழகு
என கருவண்டுகள் சொல்லி ரீங்காரமிட்டு
திரும்பிப்  பறக்கின்றன
வீசு தென்றலும் உன் மேகலை கலைத்து
என் வைர நெஞ்சத்தையும்  கலைக்கின்றன
உன் காலின் தண்டையை மெல்ல ஒலி எழுப்பி
என்னை அருகில் இழுப்பதேன்
அருகில் வந்ததும் இந்த கண் வாள் வீச்சும் தான்
ஏனோ பூவையே
நெஞ்சம் போர்க்களமானது
அருகில் வாராய் பூங்கொடியே
கொஞ்சம் பூச் சூடித் தான் விடுகிறேன்
பைங்கிளியே !

அந்தி மயக்கத்திலே இந்த ஆரணங்கின் அழகினிலே
மதி மயங்கிய மன்னவனே
பூச்சூட அழைப்பதென்ன அடுத்து
தோள் சாய நினைப்பதென்ன ஏகாந்தமோ
என்ன மோகமோ
என் விழி வீச்சும் உனக்கு வாள் வீச்சோ
காதல் களமும் உனக்குப் போர்க்களமோ
நான் நாணத்தால் தலை குனியவில்லை
உன் வீர உள்ளம் கண்டு தலை வணங்குகிறேன்
உன் மத யானை நடை கண்டு மமதை கொள்கிறேன்
மகிழ்வாய்ப் பூச்சூட்டு
போரில் வெற்றிச் சங்கம் முழங்கிய பின்
மா வீரன் உனக்கு நான்  வாகை மாலை சூட்டிய பின்
மணமாலை தான் தப்பாமல்  எனக்கு சூட்டு
என் நாயகரே

என் ஆசை நாயகியும் நீதானடி
என் அந்தபுரத்து அழகியும் நீதானடி
என் பட்ட மகிஷியும் நீதானடி
அணி தான் கேட்டனையோ அன்றி
அரியணை தான் வேண்டினையோ
பகைவரை வெற்றி கொள்ளச் சொன்ன
உன் சிந்தையும் அழகு தானடி
என் உள்ளம் தான் மீண்டும் ஒருமுறை
கொள்ளை போனதடி
சூடுவேன் வாகை மாலை உன் கரங்களால்
இடுவேன் மணமாலை என் கரங்களால்
உன் தோளில் விரைவினிலே
அந்நாளிற்குக் காத்திரு அதற்கு
அச்சாரமாய்  இப்போது
என் தோளில் சாய்ந்து விடு !

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதிமூன்றாம் கவிதை இது. கவிதை படைத்த திருமதி ஸ்ரவாணி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:
46 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 2. திருமதி ஸ்ரவாணி அவர்கள் கவிதை மிக அருமை.
  வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 3. ஸ்ரவாணி அவர்களின் கவிதை பொறுத்தமாய் உள்ளது .வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 4. அழகான கவிதை... திருமதி ஸ்ரவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அருமையான கவிதை. சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 6. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 7. கவிதை படத்தின் பொருளை அழகுற விளக்கியது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 8. அருமை. இது மாதிரி நீளமான கவிதைகள் எழுதும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நானெல்லாம் நாலுவரி எழுதி என்டர் தட்டித் தட்டி மடக்கி மடக்கிப் போட்டு கவிதைன்னுடுவேன். :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   எண்டர் கவிதை :))

   Delete
 9. முத்தாரம் ஒன்றுதான் முன்னதாய்க் கேட்டிட்டான்
  பித்தாகிப் போகான் பெருவீரன்! சத்தான
  சிந்தனை தாரளமாய்ச் சீரிணைத்துக் கொத்தாகத்
  தந்தனை தேன்கவி! தையலேவாணி! வாழ்கநீ!

  மிக அருமையான சிந்தனைச் சிறப்புக் கவிதை ஸ்ரவாணி!...

  வியப்புத்தான்.. எம் இருவர் சிந்தனையும் சென்ற பாதை ஒன்றே!
  அருமையான சொல்லாடல், கவிநயம். மிகச்சிறப்பு உங்கள் கவிதை வாணி! என் சார்பிலும் மலர்கொத்து மகிழ்வுடன் தருகிறேன்!.. வாழ்த்துக்கள்!

  சகோதரரே!.. உங்கள் பணிச் சிறப்பு அளவிட முடியாதது.

  அற்புத ஓவியமும், அகம் மகிழச் சொற்களுக்கடங்காத கவித்துவக் கவிஞர்களின் படைப்பையும் சேர்த்து இங்கு எமக்குத் தந்து கவிஞர்களை ஊக்குவித்து, மகிழ்விக்கும் உங்களின் உன்னத மனப்பாங்கிற்கு என் உளமார்ந்த நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் சகோ!...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 10. ;) படைப்பாளிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  வெளியிட்டுள்ள தங்களுக்கும் நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. திருமதி ஸ்ரவாணி அவர்களின் கவிதையை மிகவும் ரசித்தேன். திருமதி ஸ்ரவாணி குடும்பத்தினருக்கும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!.

   பொங்கல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. ஸ்ரவாணி அவர்களின் கவிதை ரசிக்கவைத்தது! அருமை! பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பொங்கல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 13. அற்புதமான கவிதை
  மிகவும் ரசித்தேன்
  கவிதாயினி ஸ்ரவாணிக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. Replies
  1. தமிழ்மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

   Delete
 16. வணக்கம்
  ஐயா
  கவிதை சிறப்பு திருமதி ஸ்ரவாணிக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 17. வந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும்
  வாய்ப்பளித்த நல்ல உள்ளத்திற்கும்
  என் வணக்கங்களும் நன்றிகளும் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 18. பகைவரை வெற்றி கொள்ளச் சொன்ன
  உன் சிந்தையும் அழகு தானடி

  கவிதையும் அழகுதான்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 19. கவிதை அருமை!! ஸ்ர்வாணி அவர்களுக்குப் பாராட்டுக்கள்! பகிர்ந்ததற்கு உங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 21. நல்ல கவிதை! சுவை, தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 22. தலைவன் தலைவி என உருவகப் படுத்தி கவிதை யாத்த சரவாணிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....