டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில்
ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி
வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த
வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி
இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது எட்டாம் கவிதை.
ஓவியம் எழுத அழைப்பு விடுத்து,
வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.
இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு
இராய செல்லப்பா அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:
செல்லப்பா தமிழ் டைரி எனும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வரும் திரு
இராய செல்லப்பா அவர்கள் எங்கள் ஊர் தில்லியில் சில காலம் இருந்தவர் எனத் தெரிந்த
போது மகிழ்ச்சி. வெகு விரைவில் அவரது
சிறுகதைத் தொகுப்பு ”தாத்தா தோட்டத்து
வெள்ளரிக்காய்” புத்தகமாக வெளிவர இருக்கிறது –
அகநாழிகை வெளியீடாக. சமீபத்தில் நடந்த சென்னை பதிவர் சந்திப்பில் இவரைப்
பார்த்திருந்தாலும் பேசவில்லை. அடுத்த சென்னை பயணத்தின் போது சந்திக்க வேண்டும்.
மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திரு இராய
செல்லப்பா அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....
வண்டே ஓடி மறைந்திடு!
பூவினும்
மெல்லிய பூ இவள்! – இந்தப்
பொய்கையின்
வண்டுகள் சூழ்வதோ?
பூந்தேன்
உண்ணும் போக்கிலே – இவள்
பூவுடல்
தீண்டுதல் நியாயமோ?
செந்தா
மரைமுகம் ஏந்தியே - இரு
செவ்விள
நீர்களும் தாங்கியே
கொண்டா
டும் விழி நாணியே – இவள்
கொஞ்சிடும்
போதுன் தொல்லையோ?
காதல்
என்பது போர்க்களம்- இந்தக்
கன்னியின்
மஞ்சமோ பூக்களம்! – பிறர்
பார்த்திடக்
காதல் செய்வதோ? - பூ
வண்டே
ஓடி மறைந்திடு!
-
- கவிஞர் இராய
செல்லப்பா, சென்னை
என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களா? இந்த ஓவியத்திற்கான எட்டாம் கவிதை இது. கவிதை
படைத்த திரு இராய செல்லப்பா அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!
டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே. ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்துவிட்டேன். ஆகையால் ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிற அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே எல்லா கவிதைகளும் வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
படத்திற்கு பொருத்தமான கவிதை அருமை.
பதிலளிநீக்குதிரு. கவிஞர் இராய செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குதமிழ் மணத்தில் சேர்த்து வாக்கும் அளித்து விட்டேன்.
பதிலளிநீக்குதமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி கோமதிம்மா....
நீக்குஓவியக் கவிக்கான
பதிலளிநீக்குஅற்புதமான கவி ஓவியம்
மிகவும் ரசித்தேன்
கவி வடித்த கவி ராய,செல்லப்பன் அவர்களுக்கும்
பதிவாக்கித் தந்த தங்களுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 1
பதிலளிநீக்குதமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குமிக மிக அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகிய நடையை ரசித்தேன்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
நீக்குஇளமையானக் கவிதை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குரசிக்க வைக்கும் களம்...!
பதிலளிநீக்குதிரு. கவிஞர் இராய செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குரசிக்கவைக்கும் பூக்களக்கவிதை..பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குரசிக்கவைக்கும் பூக்களக்கவிதை..படைத்தவருக்குப் பாராட்டுக்கள்..! ;)))))
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குகாதல்கவிதை மிக அருமை.
பதிலளிநீக்குதிரு. இராய/ செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஅருமையான கவிதை எழுதிய கவிஞர் இராய செல்லப்பாவுக்கும் அதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குபூவை முகமோ புலவருக்குத் தாமரை!
பதிலளிநீக்குதேவையெனத் தேடிய தேன்சுவை! - பாவையின்
பார்வையைக் கண்டு படைத்த..பா செல்லப்பா!
கூர்மையைக் கண்டேன் குளிர்ந்து!
மிக மிக அருமையாக இருக்கிறது ஐயா இராய செல்லப்பா அவர்களின் கவிதை!
மிகவே ரசித்தேன்! மனமுவந்த வாழ்த்துக்கள் ஐயாவுக்கு!
அதே சமயம்.. சகோதரரே!..
கலையை ரசிக்கும் - மதிக்கும் அற்புதமான உங்கள் பண்பினால் இப்படி அழகிய படங்களைத் தேடித்தந்து அதற்கு ஏற்ற அருமையான கவிதைகளை - கவிஞர்களைச் சேகரித்துப் பதிவிடும் இந்த நற் செயலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! நல்ல முயற்சி!
பல கவிஞர்களுக்கும் நல்ல ஊக்குவிப்பு! அருமை!
மிக்க நன்றியுடன் சிறப்பு வாழ்த்துக்களும் சகோதரரே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஇரசித்தேன் நண்பரே! நன்றி! கவிஞருக்கு என் பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குNalla kavidhai.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குகவிதை நன்று! செல்லப்பா அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குபடத்திற்கேற்ற பாடல் ,அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.
நீக்குஓவியர் ராஜன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகவிதைப் போட்டி வைத்த தங்களுக்கும் நன்றிகள்.
படத்திற்குப் பொருத்தமாய் வார்த்தைகளையிட்டுக், கவி படைத்த செல்லப்பா ஐயாவுக்கு வாழ்த்துகள்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை ஒவ்வொரு கவிதைப் பதிவிலும் வெளியிட்டால் ஜனவரி 10ஆம் நாள் வரையிலும் கவிஞர்கள் தங்கள் கவிதையை அனுப்பிக் கொண்டேயிருப்பார்களே, ஆவண செய்யுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முகம்மது நிஜாமுத்தீன்.
நீக்குமுந்தைய பதிவுகளில் எனது மின்னஞ்சல் கொடுத்திருக்கிறேன். இனி வரும் பதிவுகளிலும் இருக்கும்......
சிறப்பான கவிதையைப் படைத்த கவிஞருக்கும் அதைப் பகிர்ந்து கொண்ட
பதிலளிநீக்குஅன்புச் சகோதரருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
கவிதை மிக அழகாக உள்ளது. கவிதை படைத்த செல்லப்பா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அழகாகதொகுத்து பதிவாக அமைத்த தங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குதிரு. கவிஞர் இராய செல்லப்பா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
செல்லப்பா பாடல் செழுந்தேன் அடையென்று
சொல்லப்பா நாளும் சுவைத்து
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.
நீக்குகவிஞர் ராய செல்லப்பா! நல்ல கவிராயரப்பா!
பதிலளிநீக்குபுவிகேட்கச் சொல்லிடுவோம் நல் வாழ்த்துப்பா!
அப்பப்பா! அவர் கவிதை அருமையப்பா!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்கு