எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 13, 2014

ஓவியக் கவிதை – 12 – திருமதி இளமதிடிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பன்னிரெண்டாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திருமதி இளமதி அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

இளைய நிலா எனும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வரும் திருமதி இளமதி அவர்கள் அவரது வலைப்பூவில் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அவர் ஒவ்வொரு பகுதியிலும் பகிரும் க்வில்லிங் படங்கள் மிக அழகு.  சில காலமாகத் தான் இவரது வலைப்பூவினை படிக்கிறேன். பழைய பகிர்வுகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டும்.  இதுவரை இவரது பதிவுகளை படிக்காதவர்கள் படிக்கலாமே!

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திருமதி இளமதி அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

நினைவேந்தி இருப்போம்!
**********************************

அன்புடன் அருகில் அமர்ந்தென்னை - உன்னுடன்
அள்ளி அணைந்திட ஆவல்கொண்டாய்!
இன்புடன் சிந்தை இன்றில்லை - என்னவரே
இருளில் உறைபவரை எண்ணுகிறேன்!

வண்டுகளை விரட்டுவதோ நின்திறமை - வதைத்து
வல்லூறுகள் கொல்கிறதே சோதரிகளை!
தொண்டுகள் மிகவுண்டு தூயவரே! - எங்கள் 
தொன்மையை அழியாது காத்திடுவீர்!

சின்ன வண்டுகள் தீங்கல்ல! - உம்கவனம்
சிதற வேண்டாம் இங்கென்பேன்! 
பெண்மை சிறக்க அவர்வாழப் - புரிந்திடும்
பெரிதாய்ப் புவியோர் உமைப்போற்ற!

சென்று வருக மன்னவரே! - எதிரியை
வென்று வருக விருந்துவைப்பேன்!
நன்றுவர நன்னாள் நம்வசமே! - அதுவரை
நலமாய் இருப்போம் நினைவேந்தி!

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பன்னிரெண்டாம் கவிதை இது. கவிதை படைத்த திருமதி இளமதி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:54 comments:

 1. அழகான கற்பனை. இளமதி அவர்களின் கற்பனையும்
  என் கற்பனையும் ஒத்து இருக்கக் கண்டு மகிழ்ந்தேன்.
  என் சார்பிலும் அவர்களுக்கோர் பூங்கொத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 3. இளைய நிலாவின் ஒளிவீசும் கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. #வண்டுகளை விரட்டுவதோ நின்திறமை#
  சிந்தனையை மாற்று ,சிங்கத்தை அடக்கி வா என்கிறாரோ தலைவி ?
  +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. அருமையான கவிதை... திருமதி இளமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. தோழி இளமதியின் சிறப்பான வரிகளுக்கு வாழ்த்துக்களும் பகிர்ந்துகொண்ட
  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பளடியாள்.

   Delete
 7. திருமதி. இளமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். கவிதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 8. //நன்றுவர நன்னாள் நம்வசமே! - அதுவரை
  நலமாய் இருப்போம் நினைவேந்தி!//

  மிகவும் அருமையான முடிவுடன் கவிதை எழுதி முடித்துள்ள என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய, மிகச்சிறந்த கவிதாயினி திருமதி இளமதி அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றியோ நன்றிகள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  இதை வெளியிட்ட வெங்கட்ஜிக்கு நன்றிகள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பொங்கல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. இளமதி அவர்களின் கவிதைகளை நானும் படிக்கிறேன். இந்தக் கவிதையும் வழக்கம்போல நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. கவிதை அருமையாக இருக்கிறது ரசித்தேன்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 11. மிக்க மகிழ்ச்சி சகோதரரே!

  எனது கவிதையையும் இங்கு பிரசுரித்து
  அழகிய பூங்கொத்துதனை தந்தமைக்கும்,
  கூடவே எனது வலைத்தளத்தில்
  கவிதை பிரசுரித்த தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கும்
  உளம் நிறைந்த நன்றி சகோ!

  இங்கு என்னை வாழ்த்திய, வாழ்த்தும் அனைவருக்கும்
  என் இதயம் நிறைந்த மகிழ்வுடன் இனிய நன்றியும் உறவுகளே!...

  ReplyDelete
  Replies
  1. தங்களது கவிதையை எனது தளத்தில் பகிர்ந்து கொள்ள தந்தமைக்கு நன்றி இளமதி.

   இன்னும் பல கவிதைகளை சிறப்பாக எழுதிட வாழ்த்துகள். இக்கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுகள்.....

   Delete
 12. சென்று வருக மன்னவரே! - எதிரியை
  வென்று வருக விருந்துவைப்பேன்!/
  /அருமை சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 13. வணக்கம்
  ஐயா.

  கவிதை மிக அருமை திருமதி இளமதி(சகோதரிக்கு) வாழ்த்துக்கள்.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 16. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 17. இளமதியின் கவிதை வழக்கம்போல அருமை! நானும் தருகிறேன் ஒரு பூங்கொத்து!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 18. கவிதை அருமை.... கவிதையின் ஆசிரியருக்கு பாராட்டுக்கள்...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 19. அருமையான சொல்லாடல் கவிதையில். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 20. வணக்கம்
  தமிழ்மணம்! 9

  இனமேந்திக் காக்கும் இளமதி பாக்கள்!
  நினைவேந்திக் காக்கும் நிலைத்து!


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

   Delete

 21. வணக்கம்!

  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
  திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

  பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
  உங்கள் இதயம் ஒளிர்ந்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழைச் சமைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா....

   Delete
 22. வணக்கம் சகோதரர்
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பாண்டியன்.

   Delete
 23. ரசித்துப் படித்தேன். இளமதி எழுதுவாரென்று எதிர்பார்த்தது வீணாகவில்லை.
  சின்ன வண்டுகள் தீங்கல்ல.. துள்ளும், ரசமான கற்பனை. இன்னும் வளர்த்திருக்கலாமோ?
  நன்று இளமதி. நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 24. கவிதை யாத்த இளமதிக்கும் பகிர்ந்த உமக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 25. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இனிய சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணா ரவி.

   Delete
 26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  இளமதி கவிதை முழுமதி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 27. இளமதி அவர்களின் கவிதை வாசகர்க்கு நல்ல வெகுமதி. வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....